தி ரோடு விமர்சனம்

திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள ரோடு படத்தின் விமர்சனம் பார்க்கலா ம் வாங்க

திரிஷாவின் ” ரோடு ‘ தமிழ் , தெலுங்கு , ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாகும் ஃபான் இந்திய படம். இத் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறார் திரிஷா

மேலும் சந்தோஷ் பிரதாப் , ஷபீர் கல்லரக்கல் , வேல ராமமூர்த்தி , விவேக் பிரசன்னா மற்றும் எம்.எஸ். பாஸ்கர் போன்றவர்கள் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். அருண் வசீகரன் திரைப்படத்திற்கு கதை எழுதியும் இயக்கியும் உள்ளார். திரைப்படத்தினை ஏஏஏ சினிமா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிப்பு செய்துள்ளது. சாம் சிஎஸ் இத் திரைப்படத்திற்கு இசை அமைத்து இருக்கின்றார்.

இப்படத்தின் கதை களம் என்ன?

NH 44 என்பது இந்தியாவையும் ஸ்ரீநகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை. இந்த நெடுஞ்சாலையில் மட்டும் அடுத்தடுத்து விபத்துகள் நடக்கின்றது. விபத்துகளில் சிக்குபவர்கள் அனைவரும் இறந்து விடுகின்றனர்.

இந்த விபத்துகளில் திரிஷாவின் மகனும் கணவன் இறந்து போக . விபத்துகளும் , மர்மங்களும் இந்த சாலையில் நிறைந்து இருக்கின்றது. அதை கண்டு பிடிக்க வேண்டும் என்று களத்தில் இறங்கி போராடுகிறார் திரிஷா.

விபத்திற்க்கான காரணம் என்ன என்று தேடும் முயற்சியில் திரிஷா ஈடுபடுகின்றார். அப்போது விபத்துகளுக்கு பின்னால் ஏதேனும் குற்ற சம்பவங்கள் செய்யும் குழு இருக்கின்றதா என்பதை கண்டு பிடிக்கின்றார்.

அந்த கும்பலை எப்படி கண்டு பிடித்தார் நெடுஞ்சாலையில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படாமல் திரிஷா தடுத்தாரா என்பதே திரைப்படத்தின் கதை

தி ரோடு திரைப்படத்தின் இயக்குனர் அருண் வசீகரன் இவருக்கு இத் திரைப்படம் முதல் திரைப்படம் தான்.

உண்மை சம்பவத்தினை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. மதுரைக்கு அருகில் நடந்திருக்கும் இந்த உண்மை கதை என்ன என்பது இவருக்கு தெரியும்

மேலும் இந்த சம்பவம் செய்திகளில் எப்படி வெளியானதை என்பதை நேரடியாக பார்த்து படமாக்கி உள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு இயக்குனர் மூன்று ஆண்டுகள் தகவல்களை சேகரித்து க்கொண்டு தற்போது இயக்கியுள்ளார்‘ என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த 20 ஆண்டுகளுக்கு பின் திரிஷா மதுரை வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். மே மாதத்தில் தான் பெரும்பாலான படப்பிடிப்பு நடத்தப்பட்டு உள்ளது. படப்பிடிப்பின் போது இருந்த வெயில் , நெடுஞ்சாலை பரபரப்பு இவைகளில் திரிஷா மிகவும் அர்ப்பணிப்பாக திரைப்படத்தில் நடித்துள்ளார். முக்கியமாக கதாநாயகியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது பழிவாங்குதல் மற்றும் திரில்லர் என இப்படம் வந்து உள்ளது

திரிஷா தன் மகன் கணவருடன் சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் பிறந்த நாளுக்காக மகனையும் கணவனையும் காரில் அனுப்புகிறார் திரிஷா மாதமாக இருப்பதால் அவரால் காரில் பயணம் செய்ய முடியாது என்பதால் தவிர்த்து விடுகிறார் மதுரை அருகே திரிஷாவின் கணவரும் மகனும் சென்ற கார் விபத்துக்குள்ளாகிறது

இருவரும் அந்த விபத்தில் மரணம் அடைகிறார்கள் திரிஷா முடங்கிப் போய் விடுகிறார்

மற்றொருபுறம் கல்லூரியில் பரபரப்பாக இருக்கும் ஷபீரை பிரியா என்ற மாணவி ஒருமனதாக காதலித்து அது நிறைவேறாமல் போக ஷபீர் மீது பழி சுமத்தி அவமானப்படுத்தி அந்த கல்லூரியை விட்டு அனுப்புகிறார்
ப்ரியா

வேலா ராமமூர்த்தி தன் மகனுக்காக கடன் மேல் கடன் வாங்கி படிக்க வைக்கிறார் கடன் கொடுத்தவர்கள் வேலா ராமமூர்த்தியும் ஷபீரையும் அவமானப்படுத்த நொந்து போகிறார்கள்

இந்த நிலையில் பிரொபஷர் வேலையும் பறிபோக முடங்கிப் போகிறார் ஷபீர்
அப்போது வேலராமூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள ஷபீர் பாதிக்கப்பட்டு ஒரு குடிசை வீட்டில் போய் வாழ்கிறார்

இப்பொழுது திரிஷாவின் கணவர் குழந்தை இறந்ததற்கும் இந்த புரபசர் குடிசையில் போய் வாழ்வதற்கும் என்ன சம்பந்தம் சரியான முடிச்சு போட்டு இயக்கியிருக்கிறார் இயக்குனர்

காட்சிகள் ஒவ்வொன்றும் றெக்கை கட்டி பறக்கிறது விறுவிறுப்பாக போகிறது அடுத்து என்ன அடுத்து என்ன என்று ஆவலை தூண்டுகிறது.

காட்டுக்குள் இருக்கும் கொலைகார கும்பல் பலர் ஒன்று கூடி காரை ஆக்சிடென்ட் செய்து பணத்தை திருடுகிறார்கள் அவர்களுக்கு பின்னால் இருப்பது யார் இதுதான் த்ரிஷாவின் கேள்வி

போலீஸ்காரர் எம் எஸ் பாஸ்கர் உடன் சேர்ந்து அந்த கும்பலையும் இந்த கார் விபத்து பற்றி ஆராய்கிறார் அப்போது அவருக்கும் திரிஷாவின் தோழி மியா ஜார்ஜ் உதவ இருவருக்கும்உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது
அப்படி உயிர் ஆபத்து ஏற்படுத்தும் அந்த படுபாவிகள் யார் திரிஷா கண்டுபிடித்தரா
தன் மகனையும் கணவரையும் கொன்ற அந்த பாவிகளை பழிவாங்கினாரா அந்த ரோடுகளில் நடக்கும் மர்மமான கொலைகளுக்கு பின்னணியில் இருக்கும் அந்த மனிதனை வெளிச்சத்தை கொண்டு வந்தாரா இதுதான் ரோடு படத்தின் கதை

இசை நன்றாக இருக்கிறது மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது திகில் விடும் அந்த இரவு காட்சிகள் பரபரப்பாக இருக்கிறது த்ரிஷாவின் நடிப்பு சொல்லவே வேண்டியது இல்லை அழகாக இருக்கிறார் அம்சமாக வந்து போகிறார் குற்றத்தின் பின்னணி ஆராயும் போது துருது றுஎன விறுவிறுப்பாக
கொண்டு செல்கிறார்
மியா ஜார்ஜ் நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார் திரிஷாவின் கணவராக வரும் சந்தோஷ் பிரதாப் ஓரிரு காட்சிகள் வந்தாலும் அம்சமாக நடந்து கொள்கிறார்
வேலராமமூர்த்தி

கிராமத்து மனிதராக அற்புதமாக நடித்திருக்கிறார் ஷபீர் அவரின் நடிப்பும் நன்றாக இருக்கிறது மொத்தத்தில் இந்த ரோடு எல்லோரையும் கவரும் அற்புதமான படைப்பு
“AAA சினிமா பிரைவட் லிமிடெட்”கம்பெனி க்கு பாராட்டுக்கள்

“டான்சிங் ரோஸ்” ஷபீர் படத்தின் பலம்

சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், விவேக் பிரசன்னா, M.S. பாஸ்கர், வேலராமமூர்த்தி அனைவரும் நடிப்பும் பாராட்டுத்தது.

எழுத்து & இயக்கம் – அருண் வசீகரன், DFT. இயக்குனர் வித்தியாசமான முறையில் இல்ல தரமான படத்தை கொடுத்திருக்கிறார் வாழ்த்துக்கள்

இசை -சாம் CS பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது

ஒளிப்பதிவு -KG.வெங்கடேஷ் DFT. இரவு நேர ஒளிப்பதிவு திகில் ஊட்டுகிறது படத்திற்கு ஒளிப்பதிவு பலம்

படத்தொகுப்பு – A.R.சிவராஜ் M.sc,DFT சரியான முறையில் படத்தை தொகுத்து இருக்கிறார் படம் விறுவிறுப்பாக போகிறது.

கலை -சிவாயாதவ் திரிஷா வீடு காட்சிகளிலும் சரி சபரியின் பங்களாவிலும் சரி ஆர்ட் டைரக்டர் உழைப்பு கடுமையாக இருக்கிறது

சண்டை பயிற்சி -ஃபீனிக்ஸ் பிரபு திரிஷா போடும் சண்டைக் காட்சி விறுவிறுப்பை கூட்டுகிறது

ஒப்பனை -S. ரவி திரிஷாவை அழகாக காட்டியிருக்கிறார் ஒப்பனையாளர் படத்தில் நடித்த அனைவருக்கும் ஒப்பனை அற்புதமாக இருக்கிறது

ஆடை வடிவமைப்பு -சைதன்யா ராவ் திரிஷாவின் உடை இந்த கொலைகாரர்களின் ஆடை அமைப்பு பிரபொஷராக வரும் சபீரின் உடை அவரை காதலிக்கும் பிரியாவின் உடை என எல்லாமே கச்சிதமாக புரிந்து கொள்கிறது

மக்கள் தொடர்பு -டைமண்ட் பாபு

அனைவரின் பங்கும் சிறப்பாக இருப்பதால் ரோடு ஹை ஸ்பீடாக இருக்கிறது றெக்கை கட்டி போகிறது விறுவிறுப்பாக இருக்கிறது நிச்சயம் காண வேண்டிய படம் தி ரோடு