லைசென்ஸ் விமர்சனம்

பெண்கள் கையில் துப்பாக்கி கொடுக்கலாமா கொடுக்க கூடாதா?

எங்கே தப்பு நடந்தாலும் ஒரு குடும்பத் தலைவி குடும்பத்தை மறந்து விட்டு சமுதாயத்திற்காக அதை தட்டி கேட்கலாமா கேட்கக் கூடாதா?

ஒரு சட்டத்துறை அமைச்சர் கோர்ட்டுக்கு வந்து சாமானிய மக்களுக்கு துப்பாக்கிக்கான லைசென்ஸ் கொடுக்கலாம் கொடுக்க வேண்டாம் என்று எடுத்துரைக்க வருவாரா வரமாட்டாரா?

பாடகி ராஜலட்சுமி முதன்முறையாக கதாநாயகி வேடத்தில் ஜெயித்திருக்கிறாரா இல்லையா?

அறிமுக இயக்குனர் இந்த படத்தில் சொல்ல வந்த கருத்தை துணிச்சலாக சொல்லி இருக்கிறாரா இல்லையா?

என்ன சொல்கிறது இந்த லைசன்ஸ் படம் வாங்க பார்க்கலாம்

: அறிமுக இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில், சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “லைசென்ஸ்”.

சிறு வயது குழந்தை முதல் பல் போன பாட்டி வரை பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்படும் மோசமான சூழல் உழவும் இந்தக் காலகட்டத்தில், இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயன்றிருக்கும் அந்த முயற்சியினாலும் சிறப்பான நடிப்பினாலும் கவனம் ஈர்க்கிறது “லைசென்ஸ்” திரைப்படம்.

பெண்களின் பாதுகாப்பு என்று சொல்லப்படும் இந்த படத்தில் 75 சதவீதம் பாலியல் பற்றியே பேசுவது கொஞ்சம் நெருடலை ஏற்படுத்துகிறது.

பள்ளி பருவத்தில் இருந்தே தனக்கோ தன் சுற்றத்தாருக்கோ நடக்கும் பாலியல் அத்துமீறல்களை தட்டிக் கேட்கும் துணிச்சலான பெண்ணான பாரதி, தவறுகளை தட்டிக்கேட்டு தண்டிக்கும் பணியை செய்யும் நாயகி
அதற்காக இப்படியே குடும்பத்தை மறந்து விட்டு சமுதாய சேவைசெய்ய புறப்படுவார்

தவறே செய்யாத இளம் சமுதாயத்தை உருவாக்கும் ஒப்பற்ற பணி ஆசிரியர் பணி என்பதை தன் தந்தை மூலமாக உணர்ந்து, தன்னை ஒரு ஆசிரியையாக மாற்றிக் கொள்கிறார். மேலும் சமூகப்பணிகளையும் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் பாரதி, ஒரு கட்டத்தில் தன் பள்ளியில் படிக்கும் சிறுபெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, அந்த குற்றவாளியை சட்டம் தண்டிக்காத நிலையைக் கண்டு வெம்பி, 18 வயது நிரம்பிய பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்களுக்கு துப்பாக்கி கொடுக்கப்பட வேண்டும் என்கின்ற பொதுநல மனுவை போடுகிறார். அதன் முடிவு என்ன ஆனது..?
இயக்குனர் சொல்லிவிட்டார் பெண்களிடத்தில் துப்பாக்கி கொடுக்கக் கூடாது என்று ம்அது சரியான முடிவு என்று தோன்றுகிறது கணவன் மனைவி சண்டை வந்தால் கூட பெண்கள் பொசுக்கென்று துப்பாக்கியை தூக்கி விடுவார்கள் வன்முறை கலாச்சாரத்தை ஏற்படுத்தும் பெண்கள் கையில் துப்பாக்கி இருந்தால் குழந்தைகள் பள்ளிக்கு துப்பாக்கி எடுத்து செல்வார்கள் இப்படி பேராபத்து இருக்கிறது என்பதை பொறுப்புடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் வெல்டன்

முதல் படத்திலேயே எடுத்துக் கொண்ட கதைக்கருவுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் இயக்குநர் கணபதி பாலமுருகன். சமூகத்திற்கு மிகவும் தேவையான ஒரு கருத்தை எடுத்துக் கொண்டதோடு அதை ஒரு மிகச்சிறந்த கதையாகவும் படமாகவும் மாற்றி வெற்றி பெற்றிருக்கிறார். குறைந்த பட்ஜெட்டில் அதிக அனுபவம் இல்லாத நடிகர்களையும் புதுமுக நடிகர் நடிகைகளையும் வைத்துக் கொண்டு ஒரு நல்ல திரைப்படத்தை கொடுத்திருக்கும் இயக்குநரின் முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இவரின் சமுதாயப் பொறுப்பு பாராட்டத்தக்கது அதற்காக தேர்வு செய்த நடிகர் நடிகைகள் பாராட்டத்தக்கவர்கள் தயாரிப்பாளர் அரசாங்க வக்கீலாக வந்து கடைசியில் கொடுக்கிறார் பாருங்கள் ஒரு டிவிஸ்ட் சூப்பர்

சூப்பர் சிங்கர் போட்டியின் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்த இராஜலட்சுமி இப்படத்தின் மூலம் தன்னால் எப்படி சிறப்பாக பாட முடியுமோ, அதே அளவிற்கு சிறப்பாக நடிக்கவும் முடியும் என்பதை ஆணித்தரமாக நிருபித்திருக்கிறார். ஏற்றுக் கொண்ட பாரதி என்னும் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் ஆளுமையுடனும் துணிச்சலுடன் நடித்து பாராட்டுகளை அள்ளுகிறார்
தவறு செய்பவர்களை கண்டால் கோபம் கணவன் மீதும் கோபம் தந்தை மீது கோபம் குப்பைத்தொட்டியில் குப்பை போடாவிட்டால் கோபம். சிறுமியை பலாத்காரம் செய்தவன் மீது கோபம். காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மீது கோபம் இப்படி கோபக்கார லட்சுமி யாக எனநடித்திருக்கிறார் கணவரிடம் ஒரு ஊடல் கூடல் குழந்தைகளுடன் கொஞ்சம் கொஞ்சல் மாமியாரிடம் ஒரு தாஜா இப்படி பலவிதமான நடிப்புகளை தரவில்லை இந்த வீராப்பும் கோபம் நன்றாக வந்திருக்கிறது

. அது போல் மூத்த நடிகர் டத்தோ ராதாரவியின் நடிப்பும் மெச்சும்படி அமைந்திருக்கிறது.
வெள்ளாளப்பட்டியில்
நடக்கும் அந்த சம்பவம் சூப்பர்

ராஜலட்சுமி என்று இல்லை. பாரதி கதாபாத்திரத்தில் வேறு வேறு வயதில் நடித்திருக்கும் அபி நட்சத்திரா மற்றும் இன்னொரு சிறுவயது பெண்ணும் கூட நடிப்பில் மெச்சும்படி செயல்பட்டு இருக்கின்றனர் என்பதே உண்மை.
அபி நட்சத்திரா சூப்பர்

இவர்கள் தவிர்த்து பழ.கருப்பையா, நடராஜன் ஜீவாநந்தம், விஜய் பாரத், ஜீவா ரவி, நமோ நாராயணா, தான்யா அனன்யா, கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

பஜூ ஜோசப் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசை சூப்பர் காசி விஸ்வநாதனின் கேமராவும் கேமரா கோணங்களும் படத்திற்கு என்ன தேவையோ அதை கச்சிதமாக படம் பிடித்து வந்திருக்கிறது. வெரோனிக்கா பிரசாத்தின் எடிட்டிங் கச்சிதம். JRG புரொடெக்‌ஷன்ஸ் சார்பாக ஜீவானந்தம் தயாரித்திருக்கிறார்.

இந்த வழக்கை விசாரிக்கும் பெண் நீதிபதி நடக்கின்ற நிகழ்வுகளைப் பார்க்கும் போது, பச்சை குழந்தைகள் கைகளில் கூட துப்பாக்கியைக் கொடுத்துவிடுவோமா என்று தோன்றுகிறது என்று கூறுவார். இந்த சூழலைப் பார்த்து ஆதங்கப்படும் ஒவ்வொருவரின் மனக்குமுறலும் கிட்டத்தட்ட அதுவாகத்தான் இருக்கிறது என்பதே இப்படத்தின் வெற்றிக்கு சான்று.

இப்படத்தைப் பார்க்கும் போது பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் இன்னும் பதைபதைப்போடு அவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்துவார்கள் என்பது சர்வநிச்சயம். அதே நேரம் ஆண் குழந்தைகளைப் பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் பெண் குழந்தைகளையோ பெண்களையோ அவர்களின் உரிமையின்றி தொடுவது தவறு என்னும் எண்ணத்தை விதைப்பார்களா..? என்பது சந்தேகமே… அப்படி விதைத்தால் தான் பெண்களுக்கான குழந்தைகளுக்கான பாதுகாப்பை நாம் எதிர்காலத்திலாவது அறுவடை செய்யமுடியும்.

இதை ஒரு பேசுபொருளாக மாற்றிய காரணத்திற்காகவே “லைசென்ஸ்” திரைப்படத்தை எவ்வளவு பாராட்டினாலும்
தகும்
சட்ட அமைச்சராக வருகிற பழ கருப்பையாவின் பகட்டான நடிப்பு, நீதிபதியாக வருகிற கீதா கைலாசத்தின் இயல்பான நடிப்பு படத்துக்கு பலம்!

தெனாவட்டுப் பார்வையால் எதிராளியை வெட்டிப் போடுகிற அதே காவல்துறை அதிகாரி வேடம் சேரன் ராஜுக்கு. அதை சரியாய் செய்திருக்கிறார்!

அப்படி வந்து இப்படி போகிற சிறிய பாத்திரம்தான் என்றாலும் வழக்கமான வெட்டி பந்தா ஆசாமியாக, அரசியல்வாதியாக ரசிக்க வைக்கிறார் நமோ நாராயணன்!

விஜய் பாரத், ஜீவா ரவி, தீபா சங்கர், பாண்டியக்கா, தன்யா அனன்யா என இன்னபிற நடிகர், நடிகைகளின் நடிப்புப் பங்களிப்பு நிறைவு!

படத்தின் தயாரிப்பாளர் என் ஜீவானந்தம் முக்கிய வேடத்தில் வருகிறார்.

‘நம்மால ஒரு விஷயம் முடியாதுன்னா அத பத்தி யோசிக்கக்கூடாது, நம்மால ஒரு விஷயம் முடியும்னா எத பத்தியும் யோசிக்கக்கூடாது’, வன்முறைய சகிச்சுக்க சொல்றதும் வன்முறைதான்’… வசனங்களில் அனல் பறக்கிறது.

பைஜூ ஜேக்கப் இசையில், கதையின் நாயகி பள்ளிக் குழந்தைகளோடு ஆடிப்பாடுவதாய் வருகிற ‘குட்டிக் குட்டி கனவுகளே’ பாடலில் உற்சாகம் தெறிக்கிறது. நட்பின் ஆழத்தை சொல்கிற ‘என் நிழலும் நீ, நிஜமும் நீ’ பாடல் மனதுக்கு இதம் தந்து கடந்துபோகிறது.

ஒளிப்பதிவு கச்சிதம்!

படத்தின் பின்பாதி முழுக்க நீள்கிற நீதிமன்ற விவாதக் காட்சிகள் சற்றே சலிப்பு தந்தாலும், நிஜத்தில் நடக்காத விஷயங்களை சினிமாவில் சாத்தியமாக்கிக் காட்டுகிற வழக்கமான பாதையிலிருந்து விலகி உண்மைக்கு நெருக்கமாய் முடித்திருப்பது ஆறுதல் தருகிற சங்கதி!

சில காட்சிகளின் சினிமாத்தனங்களை தவிர்த்துப் பார்த்தால், லைசென்ஸுக்கு ஆதரவு அதிகம்
சின்ன பட்ஜெட் படம் தரமான படம் பெண் குழந்தைகளோடு திரையரங்கு சென்று பார்க்க வேண்டிய படம் குழந்தைகள் பத்திரமாக இருக்கும் சொல்லும் படம் பெண் குழந்தைகளை பெற்ற தாய் தந்தையினர் பார்க்க வேண்டிய படம் உலகம் முழுவதும் இன்று பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் அக்கிரமங்களை தோலுரித்துக் காட்டும் படம் இப்படி எல்லா வகையிலும் சிறந்த படமாக வந்திருக்கிறது லைசென்ஸ் படத்தின் முடிவில் ஒரு பெண் குழந்தை தமிழ் தேர்வுக்கு ஜாமென்ட்ரி பாக்ஸ் கொண்டு போவதாக முடித்திருக்கிறார்கள் அது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது பெண் குழந்தைகளின் கையில் எப்பொழுதும் மிளகாய் பொடியும் ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்ற கூரான ஆயுதமும் இருக்க வேண்டும் என்று துணிச்சலாக சொல்லி இருக்கிறது இந்த படம் தயாரிப்பாளர் ஜீவானந்தம் எப்படி வேண்டுமானாலும் ஒரு கமர்சியல் படத்தை எடுத்திருக்கலாம் ஆபாசத்தை கலந்து இருக்கலாம் பணத்தை சம்பாதித்து இருக்கலாம் அப்படி எல்லாம் இல்லாமல் நல்ல படத்தை பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய படத்தை கொடுத்திருக்கிறார் எந்த இடத்திலும் ஆபாசம் இல்லை தரம் தரம் தரம் இதுவே லைசென்ஸ் படத்தில் ஆதாரம் இதுபோன்ற படங்களுக்கு நாம் ஆதரவு கொடுப்பதால் தமிழ் சினிமா தழைக்கும் பெண் சமுதாயம் தழைக்கும எனவே இந்த லைசன்ஸ் திரைப்படத்திற்கு நல்ல தரமான படம் என்று லைசென்ஸ் கொடுக்கலாம்