கபில் ரிட்டன்ஸ் விமர்சனம்

தனலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும். கபில் ரிட்டன்ஸ் இப்படத்தை பேராசிரியர்.ஸ்ரீனி சௌந்தரராஜன் இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்தில் நிமிஷா ரியாஸ்கான்,சரவணன், வையாபுரி, மாஸ்டர் பரத், மாஸ்டர் ஜான்,
பேபி ஷர்ஷா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

கிரிக்கெட் பவுலரை மையப்படுத்தி உருவாகியுள்ள கதையில்

ஒளிப்பதிவு-ஷியாம் ராஜ்
பாடல்கள் –
கவிஞர் சினேகன்,
கவிஞர் பா.விஜய்
கவிஞர் அருண்பாரதி
இசை –
ஆர்.எஸ்.பிரதாப் ராஜ்

நிர்வாகத் தயாரிப்பு-
ஏ.ஆர்.சூரியன்

கதை திரைக்கதை வசனம் இயக்கம்-
பேராசிரியர்.ஸ்ரீனி சௌந்தரராஜன்

– வெங்கட் பி.ஆர்.ஓ. பணி புரிந்து உள்ளார்

சரி இந்த படம் சொல்லும் செய்தி என்ன வாங்க பார்க்கலாம்.

40 வயதுக்கு மேல் கிரிக்கெட் துறையில் சாதிக்க முடியுமா? வித்தியாசமான கதைகளம்
இன்றைய கிரிக்கெட் வீரர்கள் 30 வயதிலேயே ஓய்வு பெற்று வருகிறார்கள் அதற்கு காரணம் அவர்கள் உடலில் போதிய வலு இல்லாமல் போகலாம் எலும்புகள் தேய்ந்து போகலாம் என்ற உடல் பிட்னஸ் தகுதி காரணமாக சொல்லப்படுகிறது

அதை எல்லாம் மீறி ஒருவர் கிரிக்கெட் துறையில் 40 வயதுக்கு மேல் எப்படி சாதித்தார்
என்ன நடந்தது அவருக்கு ஏற்பட்ட மாற்றம் என்ன
சின்ன வயதில் அவர் ஆசைப்பட்டு நடக்க முடியாமல் போனதுஎன்ன ? தன் மகனை ஏன் கிரிக்கெட் விளையாட கூடாது என்று சொல்கிறார் கிரிக்கெட் மீது ஏன் வெறுப்பாக இருக்கிறார் அவர் வீட்டிலே கார் வைத்திருந்தாலும் தினமும் வையாபுரியுடன் ஏன் ஆட்டோவில் செல்கிறார் ஒரு பய உணர்வில் இருக்கிறார் நள்ளிரவில் திடீர் என்று கண்விழிக்கிறார் கிச்சாவை கொன்று விட்டார் அசோக் என்று சொல்கிறார் அந்த அசோக் யார்
கிச்சா யார் தன் மனைவியிடமே நடந்த சம்பவத்தை மறைக்க வேண்டிய கட்டாயம் என்ன?
தன் மகனுக்காக போன இடத்தில் நாயகனுக்கு ஏற்பட்ட திடீர் திருப்பம் என்ன? அவரை கிரிக்கெட் டீமுக்கு ள்
நுழைவிடாமல் சதி செய்யும் அந்த சதிகாரர்களின் சதி வென்றதா? இல்லையா வளரும் குழந்தைகள் மீது தாத்தா கலெக்டராகவும் அம்மா டாக்டராகவும் தந்தை இன்ஜினராகவும் ஆக வேண்டும் என்று என்று கட்டாயப்படுத்துவது முறையா? அல்லது மகனின் விருப்பத்திற்கே அவனை வளர விடுவது தான் முறையா? இப்படி எல்லா வகையிலும் திருப்பம் வைத்து ஒரு படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் சௌந்தர்ராஜன்

இந்த படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்

நாயகன் ஐடி துறையில் வேலை செய்கிறார் அவருக்கு ஒரு மகன் நல்ல மனைவி நல்ல மாமனார் நண்பராக வையாபுரி இப்படி போகும் அவர் வாழ்க்கையில் சின்ன சின்ன திருப்பங்கள்

தன்னுடைய வீட்டை விற்பதற்காக பருத்திவீரன் சரவணன் பேரம் பேசும் போது
புரோக்கர் செய்யும் துரோகம் எங்கே அந்த வலைக்குள் சிக்கி விடுவாரோ நாயகன் என்று நம் மனம் பதபதக்கிறது ஆனால் நாயகன் சாமர்த்தியமாக எனக்கு பிளாக் மணி வேண்டாம் ஒயிட் மணி தான் வேண்டும் என்று தப்பித்து விடுகிறார் பாராட்ட வேண்டிய காட்சிகள்

அதன் பிறகு காய்கறி கடையில் ஒரு சண்டைக்காட்சி ரவுடிகளுடன் தன் பட்டா பத்திரங்களை இழக்கிறார்

மகனின் திறமை கண்டு பள்ளியிலிருந்து கிரிக்கெட் கோச்
அவரை கிரிக்கெட் டீமில் சேர்த்து விடுங்கள் என்கிறார் ஆனால் நாயகன் கிரிக்கெட் வேண்டாம் என்கிறார் அதன் பிறகு நாயகரின் மனைவி தன் தோழி மருத்துவரிடம் உதவி கேட்கிறார் நாயகனின் ஆழ் மனதில் ஏதோ ஒன்று இருக்கிறது அதை கண்டுபிடிக்க வேண்டும் அதை அழித்தால் தான் அவருக்கு முன்னேற்றம் ஏற்படும் பதட்டம் குறையும் என்கிறார் அதன்படி மனைவி அவர் ஆழ்மனதில் இருக்கும் விஷயங்களை கேட்டு அதிர்ச்சி அடைகிறார் அந்த கிச்சாவை கொன்றது யார் என்று தேடும் பணியில் ஈடுபட்டு அவர் உயிருடன் இருக்கிறார் என்று தன் கணவரை காப்பாற்றுகிறார் மனைவி

இதற்கிடையில் நாயகன் தன்னுடைய பிளாஸ்பேக் கட்சியை கூறும் பொழுது நன்றாக இருக்கிறது படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது அந்த கிச்சாவை அவர் தேடி கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையும் சரியான பொருத்தமாக வைத்திருக்கிறார் இயக்குனர்

கிரிக்கெட் பற்றி உனக்கு ஒன்றுமே தெரியாது என்று மகன் அவமானப்படுத்தும் போதும் சரி கிரிக்கெட் டீமில் உள்ள கோச் அவரை அவமானப்படுத்தும் போது ம். சோகம் அனுதாபங்களை அள்ளிக் கொள்கிறார் இயக்குனர்

படத்தில் தன் மகன் டாக்டர் ஆக வேண்டும் இன்ஜினராக வேண்டும் கலெக்டராக வேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர்கள் தன் மகனுக்குள் இருக்கும் கனவு என்ன? அவன் லட்சியம் என்ன? என்று கேட்கத் தொடங்காமல் இவர்களை தங்களுக்குள்ள ஆசை வெளிப்படுத்திக் கொண்டு அவருடைய எதிர்காலத்தை சிதைப்பது தவறு என்று கருத்தையும் சொல்கிறார் இயக்குனர்

இந்த படம் ஏ சென்டர்க்கான படமா பிசென்டர் க்காண படமா அல்லது சீ சென்டருக்கு ஆனபடமா? என்று கேட்டால் கிரிக்கெட் இன்று எல்லா தரப்பிலும் எல்லா வயதினரும் விளையாடுகிறார்கள்தெருவில் நின்று கொண்டு பேட்டை வைத்துக்கொண்டு சின்னஞ்சிறு இளைஞர்கள் கிரிக்கெட் மட்டையை சுழற்றுவது பார்க்க முடிகிறது. நம் இந்திய அணி கிரிக்கெட் விளையாடினால் குடும்பமாக அமர்ந்து அதை கண்டு ரசித்து இந்தியாவுக்கு உற்சாகத்தை ஊட்டுகிறார்கள். நம் இந்திய மக்கள்

எனவே இது அனைவருக்கும் பொதுவான படம். இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்று தன்னம்பிக்கையை சொல்கிற படம் ஆட்டோ ஓட்டுகின்ற ஏழை நண்பனும் ஐடியில் வேலை செய்யும் பணக்காரன் நண்பனும் பணக்காரன் ஏழை என்ற பேதம் இல்லாமல்
பழகும் காட்சிகள் அவ்வளவு ரசிக்க வைக்கும் படம்

படம் முடியும்போது இயக்குனர் ஒரு டிவிஸ்ட் வைத்திருக்கிறார்
அது கூட புத்திசாலித்தனமாக இருக்கிறது அவர் மனைவியின் சைக்காலஜித்தனத்தை காட்டுகிறது

மதுரைக்கு கிரிக்கெட் விளையாட செல்லும் பொழுது ஏற்படும் சம்பவம் நாயகனின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை அருமையாக சொல்கிறது அந்த காட்சிகள் மதுரையில் இருந்து திருச்சிக்கு கையில் காசு இல்லாமல் எப்படி வருகிறார் நாயகன் அந்த காட்சிகளும் பரிதாப பட வைக்கிறது
குடும்பத்தோடு தரமாக ஒரு படம் பார்க்கலாம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் படமாக வந்திருக்கிறது இளைஞர்கள் கையில் எதிர்காலம் எனவே இளைஞர்கள் இந்த படத்தை ரசிக்கலாம் கொண்டாடலாம்

கதை திரைக்கதை வசனம் இயக்கம் நடிப்பு என்று எல்லா வகையிலும் ஒரு சிறந்த தேர்ச்சியான சினிமா கலைஞராக பரிமளிக்கிறார் ஸ்ரீ னி சௌந்தர்ராஜன்
அழகான முகம் அழகான நடிப்பு கதைக்கேற்ற உடல் அமைப்பு டயலாக் டெலிவரி என எல்லாமே ரசிக்க வைக்கிறது

பிரதாப் ராஜ் இசையில் கவிஞர் சினேகன் பா விஜய் மற்றும் கவிஞர் அருண் பாரதி எழுதியுள்ள பாடல்கள் தன்னம்பிக்கை ஊட்டுகிறது ரசிக்க வைக்கிறது அதுவும் அப்பா பாடல் சிந்திக்க வைக்கிறது ரசிக்க வைக்கிறது

ஷியாம் ராஜ் ஒளிப்பதிவு
காட்சிகளை அழகாக நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் ஒவ்வொரு காட்சியும் பரபரப்பை ஏற்படுத்துகிறார் ஒளிப்பதிவாளர் படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக ஒளிப்பதிவு இருக்கிறது ஒவ்வொரு காட்சியும் ரசிக்க வைக்கிறது வெல்டன் ஒளிப்பதிவாளர்

ரியாஸ் கான் கோச்சராக வந்து வெறுப்பை சம்பாதித்தாலும் முடிவில் மனம் மாறி நாயகனுக்கு உதவி செய்கிறார்.
அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது

பருத்திவீரன் சரவணன் சில காட்சிகளே வந்தாலும் மனதில் அழுத்தமாக பதிகிறார் வில்லனாக கொடூரமாக இருப்பார் என்று பார்த்தால் அவரும் மனம் திறந்து நாயகனுக்கு உதவி செய்வது ரசிக்க வைக்கிறது
நிமிஷா நடிப்பு நன்றாக இருக்கிறது
தன்னம்பிக்கையோடு அவர் செயல்படுவது படத்திற்கு மிக பலமாக இருக்கிறது

மாஸ்டர் பரத் மாஸ்டர் ஜான் பேபி ஷர்ஷா
நடிப்பு நன்றாக இருக்கிறது அவர்கள் வரும் காட்சிகள் துருதுறுப்பாக இருக்கிறது மாஸ்டர் பரத் கிரிக்கெட்டில் ஆர்வத்தோடு இருப்பது போல் படத்தில் காட்டப்பட்டாலும் நிஜத்திலும் அவர் ஒரு கிரிக்கெட்டராக வலம் வருவார் என்றே தெரிகிறது
குழந்தை நட்சத்திரங்கள் மூவரும் நன்றாக நடித்துள்ளார்கள்

படத்தின் இன்னொரு பலம் வையாபுரி ஆட்டோ ஓட்டுநராக வந்து அவ்வப்போது காமெடி செய்து கலகலப்பு ஊட்டுகிறார் கோச் வேல் முருகன் சூது நடிப்பு நன்றாக இருக்கிறது.

நாயகனின் மாமனாராக வருபவரும் சரி நாயகனின் அலுவலகத்தில் நாயகனுக்கு சூது செய்வதாக இருந்தாலும் சரி எல்லோருமே சிறப்பாக நடத்தி இருக்கிறார்கள்

உண்மையான கிச்சா யார் என்று தெரியும் பொழுது நமக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்படுகிறது

தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான முதலீடு போட்டு வெட்டு குத்து ஆபாச நடனம் குடும்பம் குழந்தைகளோடு பார்க்க முடியாத சூழ்நிலையில் இன்று படம் வருகிறது ஆனால் இந்த படம் குடும்பம் குழந்தைகளோடு போய் பார்க்கலாம் தன்னம்பிக்கையை ஊட்டும் படம் சாதிப்பதற்கு வயது ஒரு தடை அல்ல என்று சொல்லும் படம் கருத்தாழமிக்க தரம் ஒன்று இதன் ஆதாரம் என்று சொல்லலாம் பணம் எடுத்து சம்பாதிக்க வேண்டும் என்றால் மலிவான ஆபாச காட்சிகளையும் கத்தி வெட்டு குத்து போன்ற படங்களையும் எடுத்து சம்பாதிக்கலாம். ஆனால் இயக்குனர் தரமான படம் தந்துள்ளார் தமிழ் சினிமாவில் இது போன்ற குறிஞ்சி மலர்கள் அவ்வப்போது பூத்தால் தமிழ் சினிமா தழைக்கும் தமிழ் சினிமா மேலும் வளரும் எல்லா வகையிலும் சிறந்த படமாக வந்திருக்கும் இந்த கபில் ரிட்டன்ஸ் படத்தை தமிழ் சினிமா கொண்டாட வேண்டும் தமிழக அரசு வரிவிலக்கு தந்து ஊக்குவிக்க வேண்டும் விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் மாண்புமிகு உதயநிதி அவர்கள் இந்த படத்தின் மூலம் இளைஞர்களை மேலும் ஊக்கப்படுத்தலாம் இப்படிப்பட்ட படங்கள் வெளிவரும் வரும்போது தமிழக அரசு சிறந்த கவனம் எடுத்துக்கொண்டு படங்களை தேர்வு செய்து வரி விலக்கு கொடுப்பதன் மூலம்
இன்னும் நல்ல படங்கள் வருவதற்கு வாய்ப்பு நிறைய இருக்கிறது இதில் நடித்த நடிகைகள் நடிகர்கள் குழந்தைகள் டெக்னீசியன்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்