சர்வ தேசஅளவில் பாராட்டுக்களைக் குவித்த கிடா (Goat) திரைப்படம் !! ஒரு அற்புதமான மனிதம் சார்ந்த திரைப்படம் கண்களை பல காட்சிகள் குளமாக்கி விடுகின்றது
கிளைமாக்ஸ் காட்சியில் எழுந்து நின்று கைதட்ட வைத்து விடுகிறது இந்த படத்தின் கதை
ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி இப்படத்தை தயாரிக்க
கிடா திரைப்படம் உலகளவில் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாரட்டுக்களை குவித்துள்ளது. இப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. மேலும் சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட்டப்பட்டது குறிப்பிடதக்கது. இப்படத்திற்கு கிடைத்த வெற்றி
இப் ப்படத்தில் பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்
மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது
பூ ராமு, அவரது கிராமத்து வெள்ளந்தியான மனிதரின் நடிப்பு படத்திற்கு மிக பலமாக இருக்கிறது ஆயிரம் மரம் ஏறி சம்பாதித்துக் கொண்டிருந்தவர் வருமானம் இல்லாமல் தடுமாறும் சூழ்நிலை ஒரு தீபாவளிக்கு பேரனுக்கு புது துணி கூட எடுத்துக் கொடுக்க முடியவில்லையே என்று கலங்கும் அந்த கதாபாத்திரம் மனதில் அப்படியே நிற்கிறது சொந்த பந்தங்களிடம் கடன் கேட்டு அவமானப்பட்டு கூனிக் குறுகும் போதும் சரி பேரனிடம் கடைக்கு போகலாம் என்று பொய் சொல்லும் போதும் சரி மனிதர் நடிப்பில் பிச்சு உதறி விடுகிறார்
படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும் அந்த கதாபாத்திரம் பேரனுக்கு துணி எடுத்துக் கொடுத்தாரா இல்லையா என்பதை கிளைமாக்ஸ்ல் சொல்லி இருக்கிறார்கள்
வெல்டன்
காளிவெங்கட், கறிக்கடையில் வேலை செய்யும் கதாபாத்திரம் குடித்துவிட்டு வேலைக்கு தாமதமாக செல்லும் பொழுது கறிக்கடை பாய் மகனுக்கும் அவருக்கும் ஏற்படும் பிரச்சனை
அதற்கு பிறகு அவர் வீம்பாக உனக்கு எதிராக நானும் கறிக்கடை போடுகிறேன் என்று ஊர் மக்களிடம் பணம் வசூலித்து தீபாவளி இரவு கறி போடுவதற்காக பூ ராமிடம் ஆட்டுக்குட்டியை பேசி அல்ல படும் அந்த கதாபாத்திரம் அற்புதமான கதாபாத்திரம் கிளைமாக்ஸ்ல் மனுஷன் உருக்கி எடுத்து விடுகிறார்
மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். அனைவரும் நடிப்பு இயல்பாக இருக்கிறது கிராமத்து மனிதர்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் நடத்தியுள்ளார்கள் படம் அவ்வளவு குளுமையாக இருக்கிறது ஒவ்வொரு காட்சியும் கண்களுக்கு விருந்தாக இருக்கிறது பூ ராமவின் வீடு அமைந்திருக்கும் அந்த பாறை மேடாகட்டும் அவர் கடந்து செல்லும் பாதையாகட்டும் பேரனுக்கு பதில் சொல்ல முடியாமல் சோலையில் படுத்து கிடப்பதாகட்டும் எல்லா காட்சிகளும் அருமையாக வந்துள்ளது
சமீபகாலமாக தொடர்ந்து வன்முறைக்களமாக இருக்கும் தமிழ் சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எளிமையான உணர்வுகளை, அழகாக சொல்லும் அற்புதமான வாழ்வியல் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. பாராட்டுக்கள்
ஒரு மாறுபட்ட சினிமா அனுபவத்தை தருகிறது இந்த படம்
மனிதம் சார்ந்த கதை என்பதால் நன்றாக இருக்கிறது
படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம் தீபாவளிக்கு முதல் நாள் இரவு பூ ராமு தன் பேரனுக்கு ஒரு புது துணி எடுத்து கொடுக்க முடியவில்லை என்ற கலக்கத்துடன் அமர்ந்திருக்கிறார் அவரது பேரன் மாஸ்டர் தீபனும்கருப்பு என்கிற ஆட்டுக்குட்டியை வளர்த்து வருகிறார் அதை காளி வெங்கட்டுக்கு விற்றுவிட்டு அந்த பணத்தை வாங்கி தன் மகனுக்கு புது துணி எடுக்கலாம் என்று கனவில் இருக்கிறார்
காளி வெங்கட்டும் பணத்தோடு வருகிறார் இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஆட்டுக்குட்டியை சில கயவர்கள் திருடிக் கொண்டு போகிறார்கள்
அதன் பிறகு தான் படத்தின் பிளாஷ்பேக் உதயமாகிறது
தாய் தந்தை ஒரு விபத்தில் இறந்து போக தன் பேரனை அன்போடு வளர்த்து வருகிறார் பூ ராமு அடுத்து
காளி வெங்கட் ஒரு கறிக்கடையில் வேலை செய்து வருகிறார் தினமும் குடித்துவிட்டு வருவதால் கறிக்கடை ஓனர் மகனுக்கும் காளி வெங்கட்டுக்கும் சண்டை ஏற்படுகிறது இதனால் காளி வெங்கட் நான் புதிதாக ஒரு கடை ஆரம்பிக்கிறேன் என்று வீராப்பாக சொல்லிவிட்டு வருகிறார்
காளி வெங்கட்டின் மகனும் அவரது சொந்தக்காரப் பெண்ணும் காதலிக்கிறார்கள் அந்த காதலை இருவீட்டாரும்
ஏற்றுக் கொள்ள மறுப்பதால் தீபாவளிக்கு முதல் நாள் ஊரை விட்டு ஓடி விட திட்டமிடுகிறார்கள் அந்த திட்டம் என்ன ஆனது இதற்கிடையில் நான்கு கொள்ளையர்கள் கிராமத்தில் இருக்கும் இரும்பு களையும் மற்ற பொருட்களையும் திருடிவிட்டு ஜாலியாக குடித்துவிட்டு கும்மாளம் அடிப்பது அவர்கள் வாடிக்கை அந்த வகையில் இந்த ஆட்டுக்குட்டியை திருடியதும் அவர்கள் தான் அந்த ஆட்டுக்குட்டி அய்யனாருக்கு நேர்ந்து விட்ட கிடா அது கறிக்கடைக்கு சென்றதா?
அல்லது அன்பாக நேசிக்கும் அந்த பேரனிடம் சேர்க் க்கப்பட்டதா?
பூ ராமுவின் பேரனுக்கு தீபாவளிக்கான புது துணி கிடைத்ததா? காதலர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதை மனிதம் சார்ந்த கதையாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் வெங்கட்
மனிதர்கள் யாரும் தீயவர்கள் இல்லை சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் அவர்களை அப்படி மாற்றுகிறது என்பதை எதார்த்தமாக இயல்பாக சொல்லி இருக்கிறார் மாஸ்டர் தீபன் நடிப்பு நன்றாக இருக்கிறது பாட்டியாக வரும் பாண்டியம்மாள் நடிப்பு நன்றாக இருக்கிறது
கலை இயக்கம் : K.B.நந்து அந்த குடிசையாகட்டும் கறிக்கடை ஆகட்டும் எல்லாம் இடங்களிலும் ஆர்ட் டைரக்டரில் கைவண்ணம் நன்றாக தெரிகிறது
பாடல்கள் : ஏகாதசி அன்பை போதிக்கும் அந்த பாடல் நன்றாக இருக்கிறது
எடிட்டர் : ஆனந்த் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது எந்த இடத்திலும் லேக் ஆகவில்லை இரண்டு மணி நேரம் சிறப்பாக தொகுத்து இருக்கிறார் எடிட்டர்
இசை : தீசன் பின்னணி இசை பாடல்கள் ரசிக்க வைக்கிறது
ஒளிப்பதிவு : M.ஜெயப்பிரகாஷ் படத்திற்கு மிகப்பெரிய பலம் ஜெய்பிரகாசின் ஒளிப்பதிவு தான்
வாழ்த்துக்கள்
தயாரிப்பு : ஸ்ரவந்தி ரவி கிஷோர்
இப்படி ஒரு படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கும் வாழ்த்துக்கள்
இயக்கம் : ரா. வெங்கட் இயக்குனர் இந்த காலகட்டத்திற்கு வன்முறை தான் ஜெயிக்கும் என்று நம்பாமல்
குத்து துப்பாக்கி கலாச்சாரத்திற்கு விடை கொடுக்கும் அளவிற்கு அன்பு மனித உதவி
மனிதம் சார்ந்த
கதையோடு
விலங்குகள் மீது பாசம் தாத்தா பேரன் உறவு உண்மையான காதல் கிராமத்து மனிதர்களின் முகங்கள்
வேஷம் இல்லாத முகங்கள் இப்படி எல்லா வகையிலும் ரசிக்க வைக்கும் படமாக கொடுத்து இருக்கிறார்
படத்தின் நிறைகள். பூ ராமு பாண்டியம்மாவும் பேரன் மீது காட்டும் பாசம்
தீபாவளிக்கு தனக்கு புது துணி கிடைக்காது என்று பேரன் தன் அப்பா அம்மா படத்தை வைத்துக்கொண்டு கண் கலங்கி அழும் அந்த காட்சி எத்தனை பேர் இருந்தாலும் அப்பா அம்மாவைப் போல் வருமா என்று காட்டுகிறது அற்புதமான காட்சி.
அடுத்து அந்த ஆட்டுக்குட்டிக்கும் இந்த பேரனுக்கும் இருக்கும் அன்பு
ஒரு மைல் தூரத்திற்கு அப்பால் இருந்து கூப்பிட்டாலும் கூட ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும் அந்த ஆட்டுக்குட்டியை கிளைமாக்ஸ் வரை தாத்தாவுடன் சேர்ந்து தீபனும்தேடுவது போல் நடிப்பது படத்தின் நல்ல ட டுவிஸ்ட்
. கறிக்கடையில் பாய் மகனுடன் காளி வெங்கட் வீம்பாக சண்டை போட்டுக் கொண்டு வந்து விட்டு தீபாவளிக்கு எப்படியாவது கறிக்கடை போட வேண்டும் என்று போராடி எல்லோரிடமும் ஆட்டுக்கிடாய் கேட்கும்பொழுது யாருமே கடன் கொடுக்காமல் அவரை எள்ளி நகையாடும் அந்த காட்சியில் அவர் கண் கலங்குவதும் மனைவி சொல்லும் ஆறுதலும் நன்றாக இருக்கிறது
காளிவெங்கட்டின் நண்பர் பணம் பத்தாயிரம் ரூபாய் திரட்ட ஒரு யோசனை சொல்லும் அந்த யோசன
தீபாவளிக்கு முன் பணம் வாங்கி ஊர் மக்களுக்கு 100 ரூபாய் குறைவில் கரி கொடுக்கலாம் என்று சொல்லும் அந்த திட்டம் இயல்பாக இருக்கிறது
நம்ப முடிகிறது லாஜிக் மீறல்கள் இல்லாமல் இருக்கிறது
அது ஒரு அற்புதமான திட்டமாக அமைந்துள்ளது
அடுத்து திருட்டு கும்பலில் இருக்கும் அந்த நால்வரில் ஒருவர் போதுண்டா அஞ்சு குட்டி திருடி விட்டோம் இதை வைத்து தீபாவளி ஜாம் ஜாம் என்று கொண்டாடலாம் பேராசை வேண்டாம் என்று சொல்லும் போது மற்ற மூவரும் அவர் பேச்சை கேட்காமல்
பேராசையோடு செயல்படும் விதம் இன்றைய மனிதர்களின் பேராசைகளை கோடிட்டு காட்டுகிறார் இயக்குனர்
காதலர்கள் இருவரும் வீட்டுக்கு பயந்து கொண்டு ஓட திட்டமிடுவதும் அதற்கான சூழ்நிலை அமையாமல் தவிப்பதும் சிறப்பாக இருக்கிறது
அடுத்து பூ ராமு தன் சொந்த பந்தங்களை நேரில் சந்தித்து கடன் கேட்பதும் அவர்கள் தட்டிக் கழிப்பதும் பேரனுக்கு நம்மால் தீபாவளிக்கு ஒரு புது துணி எடுத்து கொடுக்கு முடியவில்லையே ? என்று மருகுவதும் ரசிக்க வைக்கும்
பேரனின் பாட்டி பாண்டியம்மாள் தன் பேரனுக்காக தன் உறவுக்கார பெண்மணியிடம் போய் கேட்கும் பொழுது அவர் தன் கையில் வைத்திருக்கும் 500 ரூபாய் எடுத்துக் கொடுத்து நாளைக்கு உன் பேரனை கூட்டிக் கொண்டு வா இங்கு பலகாரம் சாப்பிடலாம் என்று சொல்லும் அந்த காட்சி மனித நேயத்தை ஏற்படுத்தும் காட்சி அடுத்து கறிக்கடை பாய் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் அந்த அற்புதமான காட்சிகளில் கண்கள் குளமாக்கி விடுகிறது
அடுத்து ஜவுளிக்கடை ஓனர் பாண்டியம்மாவிடம் காட்டும் மனிதநேயம் கடைசியில் காளி வெங்கட் மனித நேயம் இப்படி ஒவ்வொருவரும் உதவுவதானே வாழ்க்கை என்று பூ ராமசு சொல்வதும் படத்திற்கு ஹைலைட் ஆக அமைந்துள்ளது
இப்படி எல்லா காட்சிகளும் நிறைவாக இருக்கிறது இந்த கிடா திரைப்படம்
குறைகள்
பிரபலமான நடிகர்கள் குறைவாக இருப்பது எல்லோரும் புதுமுகம் என்பது கொஞ்சம் மைனஸ்
இருந்தாலும் அவர்கள் நடிப்பு எல்லாவற்றையும் மறக்கச் செய்து வருகிறது
கிளைமாக்ஸ் காட்சியில் பஞ்சாயத்து தலைவர் தன்னுடைய குட்டிகளை மட்டும் எடுத்துக் கொண்டு பூராமு காளி வெங்கட் இருவரையும் அம்போ என்று விட்டுவிட்டு போவது அந்த காட்சிகள் ஒரு தலைவரா இப்படி என்று கேட்க வைக்கிறது
காளி வெங்கட்டின் மனைவியாக நடித்த அந்த பெண்மணி நடிப்பு நன்றாக இருக்கிறது
மற்ற துணை நடிகர்கள் அனைவரும் படத்தில் வெற்றிக்கு உதவி இருக்கிறார்கள்
இயக்குனர் வெங்கட் அவர்கள் இனிப்பு மிட்டாய்கள் செய்யும் கடை அதிபராக வருகிறார் சிறிது நேரமே வந்தாலும் அவரும் இளம் பெண்களிடம் மனிதநேயத்துடன் நடந்து கொள்வது இதமாக இருக்கிறது
எனவே இந்த கிடா திரைப்படம் அனைவரும் காண வேண்டிய படம் அற்புதமான படைப்பு தீபாவளி திருநாளுக்கு ஏற்றப்படம்
தீபாவளி திருநாளில் எத்தனை படங்கள் வந்தாலும் இதுதான் ஒரிஜினல் தீபாவளி படம் என்று சொல்ல வைக்கிறது இத்திரைப்படம் நிச்சயம் தமிழ் சினிமா ரசிகர்களையும் கவரும் என்பதில் ஐயமில்லை இந்த படம் வெற்றி பெற்றால் தமிழ் சினிமாவுக்கு இது போன்ற தரமான படங்கள் நிறைய வரும் தமிழ் சினிமாவில் ஒரு குறிஞ்சி பூ இந்த கிடா
காப்பாற்றப்பட வேண்டியவர்கள் மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் தான் என்ற பேரன்பை சொல்லி இருக்கும் இந்த படம் நிச்சயம் வரவேற்க வேண்டிய படம்தான்
