கடமையை சரியாகச் செய்கிற காவல்துறை அதிகாரி விக்ரம் பிரபு இவர்
ரவுடிகளை, தாதாக்களை FC பதம்பார்க்கப் பாய்கிற அதே பழகிப் போன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
இப்படம் சிவராஜ்குமார் நடித்த ‘தகரு’ கன்னடப் படத்தின் ரீமேக்.
அந்த படத்தை மிஞ்சியதா இல்லை
பெண்களை ரகசிய கேமராக்களால் நிர்வாணமாக வீடியோ எடுப்பதை, பெண்களை காதலிப்பதாக நம்ப வைத்து அந்த விஷயத்துக்கு சம்மதிக்க வைத்து அந்த தருணங்களை வீடியோ எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது ஒரு கும்பல்.
இன்று நகரில் நடக்கும் டிரெண்ட்
அவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
அந்த பாவிகளை என்ன செய்யலாம்
அந்த கும்பலில் இருப்பவர்கள் காபி, டீ சாப்பிடுவதுபோல் மிக சாதாரணமாக கொலைகளையும் செய்கிறார்கள். அவர்களை களையெடுக்க என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டான கதாநாயகன் களமிறங்குகிறார். இதைத்தான் எவ்வளவு சுவராஸ்யமான திரைக்கதை வசனம் இயக்கம் எழுதி இருக்கிறார் இயக்குனர்
… இயக்கம் கார்த்தி
நேர்மையான, துணிச்சலான காவல்துறை உயரதிகாரியாக விரைப்பான நடையோடும், முறைப்பான பார்வையோடும் விக்ரம் பிரபு. குற்றவாளிகளை வளைத்துப் பிடித்து விதவிதமாக தண்டித்து ரசிக்கிற காட்சிகளில் கெத்து காட்டியிருக்கிறார். ஆக்சன் காட்சிகளில் வேகம் கூட்டியிருக்கிறார்.
ஆனால் முதல் பாதியில் ஏன் சுட்டுகிறார் எதற்காக சுடுகிறார்… என்பது புரியவில்லை
வெகுநாள் கழித்து ஸ்ரீதிவ்யாவை பார்க்க முடிகிறது. படத்தின் பின் பாதியில் வந்து ஒருசில காட்சிகளில் மென்புன்னகையோடு ஹீரோவை காதலிக்கிறார், அவரோடு டூயட் பாடலில் அசைந்தாடுகிறார். கொஞ்ச நேரம் வந்தாலும் தென்றலாய் வருடும் திவ்யா
ஸ்ரீதிவ்யாவின் தங்கையாக வருகிற அனந்திகாவின் இளமையும் துறுதுறுப்பும் மனம் கவர்கிறது.
கோவில் நடக்கும் அந்த சம்பவம் சூப்பர்
மூன்று கொலைகளைச் செய்துவிட்டு 300 கொலைகள் செய்த அளவுக்கு பில்டப் கொடுக்கிற இயக்குநர் வேலு பிரபாகரன் பெரிதாக ஏதையாவது செய்வார் என்று பார்த்தால் உம்ஹூம்…மனுஷன் வசனம் மட்டும் பேசிவிட்டு விக்ரம் பிரபு கையால் சுடப்பட்டு இறந்து போகிறார்
அவரிடம் தொழில் பழகி பெரிய பெரிய குற்றங்களை பொழுதுபோக்காக செய்கிற ரிஷி ரித்விக்,
அவரின் வில்லத்தனமும் சுமார் ரகம் தான்
செளந்தர்ராஜா, டேனியல் ஆனிபோப் மூவரும் அவர்களால் முடிந்த வில்லத்தனத்தை நல்லபடியாக செய்திருக்கிறார்கள்!
டேனியல் காமெடியில் கலக்கியவர் வில்லனா?
செல்வா, ஜீவா ரவி, ஜார்ஜ் மரியான் என இன்னபிற நடிகர்கள் அவரவர் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள்.
இவர்கள் ஜாடிக்கு ஏத்த மூடி
‘என் கன்(Gun)லேருந்தும் தப்பிக்க முடியாது, கண்லேருந்தும் தப்பிக்க முடியாது’ என கவிதைத்தனமாக வந்துவிழும் இயக்குநர் முத்தையாவின் வசனங்களை சில இடங்களில் ரசிக்க முடிகிறது.
கிராமத்து கதையில் இருந்து நகரத்திற்கு வந்து போகிறார்
ஆக்ஷ்ன் காட்சிகளுக்கு அதிரடியான பின்னணி இசையால் சுறுசுறுப்பூட்டியிருக்கிறார் சாம் சிஎஸ்.
இதன் மூலம் சாம்கேங்ஸ்ட்டர் படத்தை சிறப்பாக கொண்டு செல்கிறார்
மனதை வருட ‘அழகு செல்லம் அம்முக்குட்டி’, உற்சாகமூட்ட ‘ரொம்ப சில்லான பேபி’ என வெரைட்டியான பாடல்கள் அணிவகுக்க ‘என்ட்ட மோதாத காணா போய்டுவ’ பாடல் ஆட்டம்போடத் தூண்டுகிறது;
காட்சிகளின் தரத்தை உயர்த்தியிருக்கிறது கதிரவனின் ஒளிப்பதிவு!
கதை, திரைக்கதையில் தனித்துவம் இருக்கிறது
விக்ரம் பிரபுவின் நடிப்புப் பயணத்தில் இந்த படம் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்திருக்கிறது
நிறைகள்
ஆக்ஷன் காட்சிகள்
விறுவிறுப்பாக இருக்கிறது
நடிகர் நடிகைகள் தேர்வு மற்றும் இசை
விக்ரம் பிரபு செல்வா
திவ்யா நடிப்பு
ஒளிப்பதிவு இசை படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது
குறைகள்
முதல் பாதியில் வரும் காட்சிகள் குழப்பத்தில் இருக்கிறது
பின் பாதி தெளிவாக இருக்க ஆர்டரை மாற்றம் செய்து இருக்க வேண்டும்
படத்தில் இருப்பது போல் அத்தனை ரவுடிகள் நமது தமிழ் நாட்டில் இல்லை அதற்கேற்ப கதையை மாற்றியிருக்க வேண்டாமா
கர்நாடக ரவுடிசம் தமிழ் நாட்டில் இல்லை என்பதாலும் ஒட்ட மறுக்கிறது
வேறு மாநிலங்களில் நடக்கும் கதை களம் உள்ள படங்கள் தமிழ் சினிமாவுக்கு வரும் போது இங்குள்ள சூழல் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்
அப்போது தான் தமிழ் சினிமாவில் நிஜத்திலும் இருக்கும்
மொத்தத்தில் ரெய்டு ஆக்சன் ரசிகர்களை வசப்படுத்தி ரசிக்க வைக்கிறது
