சைத்ரா மூவி விமர்சனம்

மார்ஸ் பிரொடக்க்ஷன்ஸ் ( MARS PRODUCTIONS) நிறுவனம் சார்பில் K. மனோகரன் மற்றும் T. கண்ணன் வரதராஜ் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாரர் படத்திற்கு ” சைத்ரா ” என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர். .

இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், மணிகண்டன், விஜய லட்சுமி ஆகியோரது வரிகளுக்கு பிரபாகரன் மெய்யப்பன் இசையமைத்துள்ளார்
பொட்டு படத்திற்கு எடிட்டிங் செய்த எலிஷா இந்த படத்திற்கும் பணியாற்றியுள்ளார்.

இந்த படம் 24 மணிநேரத்தில் நடக்கும் கதை இது.பீட்சா , டீமாண்டி காலணி மாதிரியான வித்தியாசமான திரைக்கதையை வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர்

இதுவரை யாரும் பார்த்திராத பரபரப்பான சம்பவங்களுடன் முழுக்க முழுக்க திரில்லர் கலந்த ஹாரர் படம் இது.

படப்பிடிப்பு முழுவதும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல் கிணறு பகுதியில் படமாக்கியுள்ளனர்

படத்தை PVR பிக்சர்ஸ் நிறுவனம் தமிழங்கமெங்கும் வெளியிடுகிறது .

சரி
: படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்

யாஷிகா ஆனந்த் மனநலம் பாதித்தவராக நடித்திருக்கிறார் அவரது கணவராக கதிர் என்ற கதாபாத்திரத்தில்
சக்தி மகேந்திரா நடிதிருக்கிறார்

யாஷிகா ஆனந்த் தோழி
மதுமதி அவரது கணவரும்
ஒரு விபத்தில் இருந்து விட யாசிகா ஆனந்த் அதை நேரில் பார்த்து விடுகிறார் இதனால் யாஷிகா ஆனந்த் வீட்டுக்கு இறந்து போனவர்கள் அடிக்கடி வருகிறார்கள் இதனால் யாசிகா மனநலம் பாதிக்கப்பட்டு நான் சாகப் போகிறேன் என்று பால்கனியில் நின்று அடிக்கடி மிரட்டுகிறார். இதனால் அவரது கணவர் பயந்து போய் என்ன செய்வது என்று புரியாமல் விழிக்கிறார் கதிரின் நண்பன் சிவா டிடெக்டிவ் வாக வேலை செய்யும் திவ்யா வை விரும்புகிறான்
அவளுக்கு லவ் ப்ரோபோசஸ் செய்ய ஒரு கிப்ட் வாங்க நண்பன் கதிரை அழைக்கிறான் யாஷிகா ஆனந்தை தனியாக விட்டுவிட்டு கதிர் நண்பனுக்கு கிப்ட் வாங்க போகிறான் அப்பொழுது யாஷிகா ஆனந்த் வீட்டில் இருந்து ஒரு மொபைல் அழைப்பு வருகிறது

கதிர் யாஷிகா ஆனந்த் தான் பேசுகிறார் என்று நினைக்கும் பொழுது அந்த போனில் வந்தது இறந்து போன மதுமதி உடனே அலறி அடித்துக் கொண்டு கதிர் வருகிறான் வீட்டுக்கு அப்பொழுது நண்பன் சிவாவிடம் நீ ஆனைமலை சாமியாரை அழைத்துக் கொண்டு என் வீட்டுக்கு வந்து விடு என்று சொல்லிவிட்டு கதிர் புறப்படுகிறார் சிறிது நேரம் கழித்து திவ்யாவுக்கு ஒரு போன் கால் வருகிறது அவருடைய காதலன் சிவா போனில் பேசுகிறான் எனக்கு ஆபத்து என்று சொல்லிவிட்டு போனை கட் செய்து விடுகிறான் திவ்யா தன் அண்ணனுக்கு போன் செய்து இந்த போன் காலை தொடர்பு கொள்ள சொல்கிறாள் அந்த போன் கால் கதிர் வீட்டில் இருந்து தான் வந்தது என்பது காவல்துறையான திவ்யா அண்ணன் சொல்ல திவ்யா உடனே ஆனைமலை சாமியாரை பார்க்க போகிறார் அங்கு அவர் இல்லாததால் அவர் சிஷ்யன் மட்டும் இருக்கிறார் சாமியார் சிஷ்யன் வெற்றிலையில் மை போட்டு உன் காதலன் சிவா கதிர்வீட்டில்தான் இருக்கிறான் என்று சொல்கிறான் திவ்யா கதிர் வீட்டுக்கு வருகிறாள் அப்பொழுது யாஷிகாவின் தோழி மதுமதியும் அவளது கணவனும் அங்கிருக்கிறார்கள் எல்லோரும் கதவை திறந்து உள்ளே போக சிவா கத்தியோடு தலையில் அடிபட்டு படுத்து கிடக்கிறான் திவ்யாவின் அண்ணனும் அங்கு வர சிவாவை ஆஸ்பத்திரிக்கு அனுப்ப திவ்யாவும் சிவா வோ டு
ஆஸ்பத்திரிக்கு போகிறாள் திவ்யா

அப்பொழுது போலீஸ் மட்டும் யாசிகா ஆனந்த் வீட்டில் காவல் இருக்கிறார் அப்போது அந்த வீட்டுக்குள் ஒரு அமானுஷ்யம் இருப்பதாக போலீஸ்காரர். திவ்யா அண்ணண் இடம் போன் செய்து சொல்ல இன்ஸ்பெக்டர் ஆஸ்பத்திரியில் இருந்து விரைந்து வருகிறார் கதிர் வீட்டுக்கு

டாக்டர் சிவாவை பரிசோதனை செய்துவிட்டு அவர் உயிருக்கு ஆபத்து இல்லை அவர் கையில் இருக்கும் கத்தியை பிடுங்க முடியாது நீங்கள்தான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று திவ்யாவிடம் சொல்கிறார் அப்பொழுது திவ்யாவின் அண்ணன் யாஷிகா ஆனந்த் வீட்டுக்குள் கஷ்டப்பட்டு நுழைகிறார் நுழைந்ததும் கதவு சாத்திக் கொள்கிறது அங்கு பேயாக இருக்கிறார் யாஷிகா ஆனந்த்

நடந்தது என்ன சிவாவுக்கு ஏன் அடிபட்டது? ஆஷிகா பேயா உண்மையான பெண்ணா அவரது கணவர் கதிர் எங்கே யாஷிகாவின் தோழி மதுமதியும் அவர் கணவனும் யார் என்ற பல வகையான சஸ்பென்ஸ் களுக்கு விடை சொல்கிறார் இயக்குனர்
ஒரு வித்தியாசமான புது விதமான இதுவரை சொல்லாத பேய் கதை இயக்குனர் சொல்லி இருக்கிறார் ஒவ்வொரு காட்சியிலும் சிவா நல்லவரா கெட்டவரா அவர் உடலில் உயிர் இருக்கிறதா இல்லையா அவர் கத்தியை ஏன் கையில் வைத்துக் கொண்டிருக்கிறார் அவரை தாக்கியது யார் அடிக்கடி மொட்டை மாடியில் நின்று கொண்டு
நான் சாகப் போகிறேன் என்று
யாஷிகா ஆனந்த்
ஏன் மிரட்டுகிறார்
ஆனைமலை சாமியார் என்ன ஆனார் காவல்துறை அதிகாரி திவ்யாவின் அண்ணன் என்ன ஆனார் காவலுக்கு என்ற போலீஸ் அதிகாரி என்ன ஆனார் எங்கே போனார் திவ்யாவின் டிடெக்டிவங மூளை இதை எல்லாம் கண்டுபிடித்ததா இல்லையா
யாஷிகா ஆனந்த் கடைசியில் அந்த பேயிடம் இருந்து தப்பித்தாரா இல்லையா இப்படி ஒவ்வொரு முடிச்சுக்கும் பதில் சொல்லி இருக்கிறார் இயக்குனர்

தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத பேய் கதை படம் முடியும்போது அந்த பேய் உங்க வீட்டுக்கே வரும் என்று விரட்டி அனுப்புகிறார் பலவீனம் உள்ள மனசுக்காரர்கள் இந்த படத்தை பார்த்தால் நிச்சயம் பாதிப்படைவார்கள் அந்த அளவுக்கு மிரட்டி இருக்கிறார் இயக்குனர் இந்த படத்தின் டெக்னீசியன்கள் பத்தி பார்க்கலாம் வாங்க

i: ” சைத்ரா ” படத்தின்

நடிகர், நடிகைகள் :

யாஷிகா ஆனந்த் ( சைத்ரா ) அவிதேஜ் ( கதிர் )சக்தி மகேந்திரா ( திவ்யா ), பூஜா ( மதுமிதா ) கண்ணன் ( இன்ஸ்பெக்டர் ), ரமணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அனைவரும் நடிப்பும் எதார்த்தமாக உள்ளது

தொழில்நுட்ப கலைஞர்கள் :

ஒளிப்பதிவு – சதீஷ் குமார்
கிராமத்தில் நடக்கும் கதையில் பகல் நேரத்திலும் இரவு நேரத்திலும் மிரட்டுகிறது ஒளிப்பதிவு யாஷிகா ஆனந்த் அந்த ரூமுக்குள் பேயாக மாறும் காட்சி திகிலாக இருக்கிறது அந்த வீட்டை விட்டு ஒரு சின்ன வீட்டுக்கு பார்க்கப் போகும் போது அங்கும் திகிலாக இருக்கிறது

இசை – பிரபாகரன் மெய்யப்பன்
பாடல்கள் அதிகமாக இல்லாவிட்டாலும் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்

பாடல்கள் – மணிகண்டன் விஜய லட்சுமி

எடிட்டிங் – எலிஷ
படத்தின் வெற்றிக்கு படத்தொகுப்பாளர் அவரின் உழைப்பும் முயற்சியும் பாராட்டத்தக்கது எல்லா காட்சிகளுக்கும் டுவிஸ்ட் வைத்து படத்தை தொகுத்து இருப்பது திகில்அடைய செய்கிறது

மக்கள் தொடர்பு – மணவை புவன்

தயாரிப்பு மேற்பார்வை – தேக்கமலை பாலாஜி.

இணை தயாரிப்பு – T. கண்ணன் வரதராஜ்.

தயாரிப்பு நிறுவனம் -மார்ஸ் பிரொடக்க்ஷன்ஸ் ( MARS PRODUCTIONS).

தயாரிப்பாளர் – K. மனோகரன்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் M. ஜெனித்குமார். இவர் பொட்டு, கா போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர்
இயக்குனர் குறைந்த பட்ஜெட்டில் தரமான ஒரு பேய் படத்தை கொடுத்திருக்கிறார் பேய் படம் என்றாலே சிஜி ஒர்க் கில் மிரட்டுவார்கள் இந்த படத்தில் சிஜி ஒர்க் இருக்கிறது திகில் ஊட்டும் திரைக்கதை இருக்கிறது அடுத்து என்ன அடுத்து என்ன என்று திரில்லர் சம்பவம் இருக்கிறது படத்தின் இயக்குனர் ஒரு மருத்துவராக நடித்திருக்கிறார் அவரையும் பேய் படவில்லை படத்தின் இறுதியில் அவரையும் போட்டு தள்ளுகிறது எனவே வித்தியாசமான பேய் படம் பிடிக்கும் என்பவர்கள் நிச்சயம் இந்த படத்தை போய் பார்க்கலாம் பேய் படம் என்றாலே பி சி சென்டருக்கு அல்வா சாப்பிடுவது போல் எனவே இந்த படம் கிராம மக்களிடம் போய் சேரக்கூடிய கதை எனவே சைத்ராஉங்களை மிரட்டுவாள் சைத்ரா உங்களை கேள்வி கேட்க வைப்பாள் வித்தியாசமாக ரசிக்க வைப்பாள்
சைத்ரா உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் வித்தியாசமான ஒரு பேய் படத்தை நீங்கள் திரையில் கண்டு களிக்கலாம்