சூரகன் திரை விமர்சனம்

தேர்ட்ஐ சினி கிரியேஷன்ஸ் சார்பில் உருவான சூரகன் எதிரிகளை சூரசம்காரம் செய்தானா இல்லையா என்பது ஒன் லைன்

கார்த்திகேயன் இவர் வழக்கறிஞர் இவர் தான் நாயகனாக நடித்துள்ளார்

இவருக்கு ஜோடியாக
சுபிக்ஷா கிருஷ்ணன்,
நடித்திருக்கிறார் ஆனால் இவர் அதிக வேலை இல்லை மரத்தைச் சுற்றி டூயட் பாடுவது போல் தான் இவரது கதாபாத்திரம்

சுரேஷ் மேனன், பாண்டியராஜன் , ரேஷ்மா பசுப்புலேட்டி,
என்ன நிறைய பேர் நடித்திருந்தாலும் மிக முக்கியமாக நம்மை கவருபவர்

வின்சென்ட் அசோகன்,
அவரின் உடையும் அவரின் கெட்டப்பும் ஆங்கில பட வில்லன் போல அஸ்தி இருக்கிறார் என்ன நேரமும் துப்பாக்கியும் கையுமாக எதிரிகளை தேடி தேடி கொள்ளும் அந்த லாவகமும்
முகபாவமும் ரசிக்க வைக்கிறது

மன்சூர் அலிகான், வினோதினி வைத்தியநாதன், நிழல்கள் ரவி, மிப்பு சாமி
நடித்துள்ளனர் ஆனால் அதிக வேலை இல்லை மன்சூர் அலிகான் காமெடி நடிகராக வருகிறார்

ஜேசன் வில்லியம்ஸ் உடன் சேர்ந்து திரைக்கதை எழுதி, சதீஷ் கீதா குமார் ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம்.சூரகன்
நாயகனுக்கு ஒரு ஆக்சிடென்ட் டில் தலையில் அடிபட அவர் போலீஸ் பதவிக்கு லாயக்கில்லை என்று சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் இருந்தாலும் அவருக்கு ஒரு வியாதி

தலைகீழாக நின்றால்தான் எல்லா காட்சிகளும் சரியாகத் தெரியும் என்ற ஒரு பார்வைக் குறைப்பாட்டுக்கு ஆளானவர்
அந்த பிரச்னை காரணமாக ஒரு சம்பவத்தில் தவறுதலாக ஒரு பெண்ணை சுட்டு விட, பணி நீக்கம் செய்யப்படுகிறார் .

அக்கா (வினோதினி மாமா ( பாண்டியராஜன் ) உடன் இருக்கும் அவர், ஒரு காரில் இருந்து சாலையில் எறியப்படும் பெண்ணைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார்
ஆனால் அந்தப் பெண் இறந்து விடுகிறார் அது நிழல்கள் ரவி யின் பேத்தி இதற்காக நிழல்கள் ரவி தன் பேத்தியை கொண்றவரை
பழிவாங்க சீக்ரெட் துப்பு துலக்கும் அதிகாரியாக கார்த்திகேயனை நியமிக்கிறார் அப்போது

.
நண்பன் ஒருவன் பணியாற்றும் மதுபான பார் ஒன்றில் அந்தப் பெண் இருந்தது தெரியவர, அவளோடு உடன் இருந்த பெண்கள் பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார்.
அங்குதான் அவருக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது இந்த கொலைகாரன் யார் அந்த பெண்ணை காரில் இருந்து தூக்கி எறிந்தவர்கள் யார்?
என ஒவ்வொன்றாக துப்பு துலக்க
முடிவில்

ஒரு கொடூரமான நபர்தான் ( வின்சென்ட் அசோகன்) காரில் இருந்து பெண்ணை உருட்டி விட்டது என தெரிய வர, இன்னொரு பெண் அந்தக் கொடூர நபரால் கொல்லப்பட, ஒளிந்து இருக்கும் இன்னொரு நபரைக் கண்டு பிடிக்க, அது ஒரு அமைச்சர் , மற்றும் தொழிலதிபர்களின் பாலியல் வீடியோ கொலை முயற்சியில் போய் முடிகிறது .

அப்போது வின்சென்ட் அசோகன் நாயகனை கொல்ல வர, அடுத்து
அவரை அழிக்க மன்சூர் அலிகான் துணையோடு வில்லன்களை பழிவாங்க புறப்படுகிறார் சூரகன்

உலகமே தலைகீழாகத் தெரியும் ஒரு அபூர்வ நோயுடன் நாயகன் என்ன செய்ய போகிறாரோ என்ற பதட்டம் நமக்கு ஏற்படவில்லை என்பதே உண்மை

.
நாயகன் சண்டைக் காட்சிகளில் கடுமையாக உழைத்திருக்கிறார்
நன்றாக நடனமாடுகிறார் ஒரு சில காட்சிகளில் தளபதி விஜய் ஞாபகப்படுத்துகிறார் அடுத்தடுத்த படங்களில் நிச்சயம் முன்னேற்ற பாதைக்கு செல்வார் என்பது உறுதி இந்த படம் சூரகன் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்க வேண்டும்

மக்களுக்கு நெருக்கமான கதையை தேர்வு செய்து இருக்க வேண்டும் திவ்யா என்ற ஒரு பெண்ணின் மரணம் மட்டுமே இந்த கதைக்கு போதாது

படிக்கச் செல்லும் ஏழை பெண்கள்ஏழை வீட்டுப் பெண்கள் கடத்தப்பட்டு அதை மீட்க ஒரு போலீஸ் அதிகாரி போராடுவது போல் காட்டி இருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும் திவ்யா ஒரு தவறான பேர்வழி எனஅவரது தாத்தா நிழல்கள் ரவியே அவரைப் பற்றி தவறாக சொல்கிறார் அதற்காக படம் முழுவதும் நாயகன் ஓடிக்கொண்டே இருப்பது திரை கதைக்கு பலம் சேர்க்க வில்லை.

மொத்தத்தில் இந்த சூரகன் கமர்சியல் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் ஒரு துப்பறியும் இன் வெஷ்டிகேஷன் கதை
நிச்சயம் பிடிக்கும் மொத்தத்தில் இந்த படம் ஒரு தரமான ஒரு திரில்லர் படம் பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது முதல் படத்திலேயே ஒரு ஆக்சன் நாயகனுக்கான அத்தனை அம்சங்களும் கார்த்திகேயன் பெற்றுவிட்டார் முதல் காட்சியிலேயே சட்டையை கழட்டி விட்டு ஜிம்மில் இவர் கும்மென்று பயிற்சி செய்வதும் சுறுசுறுப்பாக கொலைகாரனை தேடுவதும் ரசிக்க வைக்கிறது அடுத்தடுத்த படங்களில் இவர் நிச்சயம் வெற்றி கோப்பையை ஏந்துவார்