நடிப்பு இளவரசி நயன்தாராவின் 75ஆவது திரைப்படமாக ‘அன்னபூரணி. வந்துள்ளது
புதுமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன் . ஜெய், சத்யராஜ், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் குமார், அச்யுத் குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
தமன் இசையமைத்துள்ளார். அன்னபூரணியாக பெரிய சமையல் கலைஞராக வேண்டும் என்று ஆசைப்படும் நயன்தாரா, தனது பெற்றோரிடம் எம்பிஏ படிக்கப் போவதாக சொல்லிக் கொண்டு சமையல்கலை படித்து வருகிறார்.
அவர் ஆனாரா இல்லையா ஆணாதிக்க சமூகம் அவரை விட்டதா? இல்லையா?
அவரது ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு தெரிய வர அதன்பிறகு
அந்த குடும்பம் என்ன முடிவெடுத்தது
அது அன்னபூர்ணிக்கு சாதகமாக இருந்ததா? பாதகமாக இருந்ததா?
அந் த சவாலை
அவர் எதிர்கொண்டு வெற்றி பெற்றாரா? இல்லையா?
இது தான் அன்னபூரணி யின் ஒன் லைன்
அசைவ உணவுகளையே விரும்பாத உயர்சாதி என சொல்லப்படும் குடும்பப் பெண்ணாக வரும் அன்னபூரணிக்கு (நடிகை நயன்தாரா) இந்தியாவின் தலைசிறந்த சமையல் கலை நிபுணராக வேண்டும் எனும் லட்சியம் இருக்கிறது. தனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறி அவர் தனது லட்சியத்தை அடைந்தாரா இல்லையா?
என்பதை அருமையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்
இந்தப் படத்தை இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார்
இவர் இயக்குனர் ஷங்கர் உதவி இயக்குனராக பணியாற்றியவர்
.
ஆரம்ப காட்சிகளில்
திருச்சியைச் சேர்ந்த பிராமணக் குடும்பப் பெண்ணாக வரும்(சின்ன வயதில் நயன்தாரா)அந்த குழந்தை க்கு வாழ்த்துக்கள். சிறு வயது முதலே உணவை ருசி அறிவதில் விசேஷ திறமை இருக்கும் அன்னபூரணிக்கு சமைப்பதில் அவ்வளவு ஆர்வம். எனினும் கோயிலில் பிரசாதம் தயாரிக்கும் தனது தந்தைக்கு அசைவம் பிடிக்காது என்பதால் அவருக்குத் தெரியாமல் கல்லூரியில் படிக்கிறார்
அவருடன் ஜெய் கிங்ஸ்லி என எல்லோரும் ஒன்றாக படிக்கிறார்கள் சைவம் அசைவம் என்று மாறி மாறி சமையல் கலைஞராக படிக்கிறார் அது அவருடைய தந்தைக்கு தெரிய வர விஷயம் பெரிது ஆகிறது இஸ்லாமியரான ஜெயுடன் காதல் செய்யும் நயன்தாரா என்று கோணத்தில் கதை போகும் என்று நினைத்தால் இந்த கதை அப்படி பட்ட தல்ல என எங்கும் விலகாமல் அதன் இலக்கை நோக்கி பயணிக்கிறது. படம் ஒரு சின்ன பெண் அடிக்கடி மலையேறுவது போல் காட்டுவது படத்தின் கதையை விவரிக்கிறது.
இரண்டாம் பாதியில் விபத்துக்குப் பிறகு அவர் தடுமாறும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
தன்னால் ருசி சுவைக்க முடியாது இனி எப்படி சமையல் கலைஞராக பரிமளிப்பது என்று அவர் அழுவதும் துடிப்பதும் இயங்குவதும் ரசிக்க வைக்கும்
மீண்டும் ராஜா ராணி ஜெய்
நடிகர் ஜெய் நன்றாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
படத்தின் இறுதி வரை அவர் நயன்தாரா வுக்கு ஆதரவாக வருகிறார் ரசிக்கும் படி இருக்கிறது அவரின் கதாபாத்திர வடிவமைப்பு. இறுதிக்காட்சியில் ஏதாவது காதல் வசனங்களையாவது அவருக்குக் கொடுத்து விடுவாரோ என்ற பயம் நல்ல வேளை அப்படி நடக்கவில்லை
அது எதார்த்தத்தை புரிந்து கொள்ள முடிகிறது
சத்யராஜின் அல்வா அசத்தல் நடிப்பு
சத்யராஜ்,
ஆனந்த் என்ற செப் கதாபாத்திரத்தில்அச்சு அசலாக பொருந்தி போயிருக்கிறார்
தன் மகனுக்கு ஆதரவு தராமல் தீங்கு செய்த அவனை புறக்கணித்துவிட்டு நயன்தாராவுக்கு ஆதரவு தருவது நேர்மையான நல்ல கதாபாத்திரமாக தெரிகிறது படத்தின் வெற்றிக்கு சத்யராஜின் பங்கு பெரிய உதவி செய்திருக்கிறது
மீண்டும் ரவிகுமார்
கே.எஸ்.ரவிக்குமார்
ஸ்ரீரங்கத்தில் சமையல்காரர் ஆக வந்து நயன்தாராவுக்கு உதவி செய்யும் கதாபாத்திரம் அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது
காமெடி கிங் ஸ்லீ
, ரெடின் கிங்ஸ்லி,
அவ்வப்போது காமெடிகளை அள்ளித் தெளித்து நயன்தாராவை கலாய்க்கிறார் அவர் வரும் காட்சிகளில் காமெடி
நெற்றியில் நாமம் நயன் மீது பாசமாக இருக்கும் அப்பா
அச்யுத் குமார்,
இவர் நயன்தாராவுக்கு சரியான அப்பா நடிப்பு நன்றாக இருக்கிறது சத்யராஜிடம் சவால் விடும் போதும் சரி கிளைமாக்ஸ்சில் ஹானஸ்ட்டாக வெளியே போகும்போது அவரின் கதாபாத்திரம் மனதில் பதிகிறது ஆர்ப்பாட்டம் இல்லாத அப்பாவாக அசத்தியிருக்கிறார்
இவரின் கதாபாத்திரம் நம்பும் படி இருக்கிறது எந்த அப்பாவும் இப்படித்தானே செய்வார்
அக்ரஹாரத்து அம்மா
ரேணுகா,
நயன்தாராவின் அம்மா ஸ்ரீரங்கத்து மாமி நயன்தாராவுக்கு சப்போர்ட் பண்ணாமல் கணவருக்கும் விட்டுக் கொடுக்காமல் நடுநிலையாக இவரின் கதாபாத்திரம் அமைக்க பட்டிருக்கிறது மாமியாக அசலாக பொருந்தி இருக்கிறார் மற்றும்
சாதகமான பாட்டி
சச்சு கதையின் ஆணிவேர் அவ்வப்போது வந்து சிக்ஸர்அடிக்கும் சாதகமான பாட்டி சந்தோஷமான பாட்டி
சுரேஷ் சக்கரவர்த்தி, குமாரி சஞ்சு என பலர் நடித்துள்ளனர்.
ரசிக்க வைக்கும் வசனங்கள்
நடிகர் ஜெய் மூலமாக உணவு உரிமை குறித்த வசனத்தை வைத்து சாமர்த்தியமாக தப்பித்திருக்கிறார்
திரைக்கதையில் மாயாஜாலம் வசீகரிக்க வைக்கிறது
“பெண்களுக்கு தங்களது தவறுகளை ஏற்றுக் கொள்ளும் உரிமைகூட இருப்பதில்லை”, ”உன் உணவு உன்னோட உரிமை” ஆகிய வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. சென்னை, திருச்சி என வெறும் தூரக் காட்சிகளை மட்டும் வைத்து கவனம் பதிக்கிக்கிறார் இயக்குனர வசனம் பளீச்
இனிமையான இசை
பின்னணி இசை பெரிதாக கைகொடுத்தது என்று சொல்லலாம்
நயன்தாரா ஒவ்வொரு கட்டமாக முன்னேறும் போது அந்த அன்னபூரணி பாட்டு அம்சமாக இருக்கிறது கிளைமாக்ஸ் காட்சியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை உயிரோட்டமாக சொல்லி இருக்கிறார் தமன்
கேமராவும், படத்தொகுப்பும் விறுவிறுப்பைக் கூட்டி யுள்ளது
ஒவ்வொரு காட்சியிலும் கேமரா காணும் ரசிக்க வைக்கிறது அழகாக கண்களுக்கு குளுமை தெரிகிறது
திரை கதை யின் மாயாஜாலம்
உணவின் மேல் காதல் பொங்க வளரும் குழந்தை அன்னபூரணி. ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சமையல் சேவை புரியும் ‘ஆச்சார’ பிராமண குடும்பத்தில் பிறந்தவரான அன்னபூரணிக்கு நாடு போற்றும் செஃப் ஆக வேண்டும் என்பது கனவு. அவரின் அப்பாவோடு கையைப் பிடித்துக் கொண்டு சின்ன வயது பூரணியாக நடந்து போவது ரசிக்க வைக்கிறது டிவியில் படம் பார்ப்பது சத்யராஜையும் மனதில் வைத்து பதிய வைத்துக்கொண்டு கனவை வளர்த்துக் கொள்வது எல்லாம் ரசிக்க வைக்கும் காட்சிகள்
ஆச்சாரகுடும்பத்தில் பிறந்த அக்ரஹாரத்துப்பின் ஆம்பூர் பிரியாணி செய்து தங்கப்பதக்கம் வாங்குவது வித்தியாசமான கதைக்களம் இதெல்லாம் திரைக்கதையில் மாயாஜாலம் செய்த இயக்குனர்
‘அன்னபூரணி நயன் எப்படி?
பிராமண குடும்பபெண்ணாக செஃப் ஆக வேண்டும் என தூக்கத்திலும் விடாமல் துரத்தும் கனவுடன் வடிவமைக்கப்பட்டுள்ள அன்னபூரணி கதாபாத்திரம், ஒற்றை ஆளாக நம்மை ஒன்ற வைக்கிறது.வெல்டன் நயன் தாரா
சாதிக்கும் துடிப்புடன் கரண்டி பிடிக்கும் நயன்.. அறுசுவை விருந்து படைத்த. அன்னபூரணி யாக ரசிக்க வைக்கிறார்
அற்புதமாக இந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தி போகிறார்.
ஒன் லைன்
எம்பிஏ படிக்கப் போவதாக வீட்டில் சொல்லிவிட்டு சமையல் கலை கற்றுக்கொள்ள போகிறார்.நயன்
அதன் பின் அந்த சவாலில் வெற்றி பெறுவது தான் தன்னுடைய கனவுகளை இலக்குகளை விடாமல் பிடித்துக் கொண்டு முன்னேறும் கதாபாத்திரம் அன்னபூரணி திருமணத்துக்கு ஒத்துக்கொண்டு ரெடியாகும் பொழுது ஜெய் சரியான திருப்பு முனையை ஏற்படுத்துகிறார் அதற்கு துணையாக நயன்தாராவின் பாட்டி ஒத்துழைக்கிறார் சென்னை வந்த பிறகு தோழிகளுடன் அடுத்த இலக்கை நோக்கி புறப்படுகிறார் அங்கு சத்யராஜை சந்திக்கிறார் சத்யராஜ் அவர் வாழ்க்கையில் மீண்டும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகிறார் அதற்கு தடையாக இருக்கும் சத்யராஜ் அவரது மகன் கார்த்திக் குமார் நயன்தாராவுக்கு ஒரு விபத்தை ஏற்படுத்துகிறார் அந்த விபத்தில் ருசியின் தன்மை அறியாமல் போய்விடுகிறது அதற்கு பின் அவ்வளவு தான் என்று இடிந்து போயிருந்த நயன்தாராவுக்கு மீண்டும் உற்சாகமும் ஊக்கமும் தருகிறார் சத்தியராஜ் அதன் பின் வெகுண்டெழுந்து இந்தியாவின் நம்பர் ஒன் சமையல்காரர் என்ற தங்கப்பதக்கத்தை வாங்குகிறார் அதற்கு அவர் படும் சிரமங்கள் பட்ட பாடுகளும் துன்பங்களும் தான் கதைக்களம்
இது ஒரு டாக்குமெண்ட்ரிபடமாக மாறி இருக்கும் நயன்தாரா மட்டும் இல்லாமல் இருந்தால் இது எல்லாம் இல்லாமல் ஒரு சினிமாவாக தரமான படமாக வந்திருப்பது நயன்தாரா என்னும் ஒரு நடிப்பு ராட்சசி பிரேமுக்கு அவ்வளவு அழகாக இருக்கிறது அவர் நடிக்கும் நடிப்பும் சரி எதார்த்தமாக இயல்பாக இருக்கிறது அப்பாவிடம் பேசும் போதும் ஜெய் உடன் பேசும் போதும் ஜெய் அம்மாவிடம் பிரியாணி வாங்கி சாப்பிட்டுக் கொண்டே இவ்வளவு சுவை எங்கிருந்து வந்தது என்று கேட்கும் போதும் சத்யராஜ் இடம் பேசும் போதும் அப்பா விடம் கடைசியில் கிளைமாக்சில் பேசும் போதும் சரி எல்லா இடங்களிலும் நயன்தாராவின் நடிப்பு கொடிகட்டி பறக்கிறது தனி ஆளுமையாக இந்த படத்தில் ஜெயித்திருக்கிறார் கூட வரும் நடிகர்கள் எல்லாம் நயன்தாராவின் நடிப்பிற்கு முன்னால் ஓரம் கட்டப்பட்டு விட்டார்களோ என்ற ஐயம் எழுகிறது அதில் சத்யராஜ் மட்டும் அவரது நடிப்பு திறமையால் நயன்தாராவுக்கு ஈடு கொடுக்கிறார் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக இருந்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் இன்றைக்கு நாட்டிற்கு தேவையான ஒரு நல்ல கதையாக தேர்வு செய்திருக்கிறார் 5 ஸ்டார் ஹோட்டல்களில் ஆண்கள் மட்டும் உயர் தர செப்பாக இருக்கிறார்கள் ஏன் பெண்களால் முடியாது என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் குடும்பத்தில் ஒவ்வொரு முறையும் பெண்கள் சமையலில் சாதித்தே காட்டுகிறார்கள்.ஏன்ஓட்டல்களில் மட்டும் ஆண்கள். என்ற கேள்விக்கு இந்த படத்தில் நயன்தாரா சாதனையாளராக சாதித்துக் காட்டி இருக்கிறார் அன்னபூரணி என்றால் உணவுக்கு அரசி எனவே இந்த அரசி யின்சாதனை ஊர் உலகம் மெச்சப்படும் அன்னபூரணி மிகப்பெரிய வெற்றி படமாக வந்து உள்ளது வாழ்த்துக்கள்
படத்தில் கார்த்திக் குமார் இவர்தான் நயன்தாராவுக்கு சரியான வில்லன் அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஆழமாக குரூரமாக வில்லத்தனம் செய்யும் அந்த முகபாவம் ரசிக்க வைக்கிறது தன் அப்பா சத்யராஜ் தனக்கு உதவி செய்யவில்லை என்று அவரை காயப்படுத்தும் போதும் நயன்தாராவுக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் போதும் பலே கில்லாடியாக நமக்கு தெரிகிறார் அருமையான கதாபாத்திரம். எல்லாம் மதங்களையும் நேசிக்க வைக்கிறார் அன்னபூரணி எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார் அன்னபூரணி
