கட்டில் திரை விமர்சனம்

மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் ’கட்டில்’ இப்படத்தை இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ளார் ’கட்டில்’.படத்தில் சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடித்துள்ளார்.. இத்திரைப்படம் மலையாளத்திலும் “கட்டில்” என்ற பெயரிலேயே வெளியாகிறது இந்திய கலாச்சாரத்தின் பல்வேறு அடையாளங்களை இத்திரைப்படம் வெளிப்படுத்துவதால் மற்ற இந்திய மொழிகளிலும் கட்டில் உருவாகியுள்ளது.

கட்டில் படத்தில்

மர்ம தேசத்தின் மூலம் உலக தமிழர்களால் அறியப்பட்ட பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தமிழகத்தின் முன்னணி ஓவியரான ஷ்யாம் கதாநாயகனுக்கு அண்ணனாக கட்டிலில் களமிறங்கி இருக்கிறார்.
இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மருமகள் கீதா கைலாசம் உட்பட பல பிரபலங்கள் கட்டிலின் மூலமாக நடிகராக அறிமுகமாகிறார்கள். பி.லெனின் கதை, திரைக்கதை, வசனம், எடிட்டிங் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்றிருக்கிறார். வைட்ஆங்கிள் ரவிசங்கரன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

இ வி கணேஷ்

நடிகர், இயக்குநர், கவிஞர் என்று பண்முகத்திறமை கொண்டவராக தமிழ் சினிமாவில் வலம் வரும் இ.வி.கணேஷ்பாபு தயாரித்து இயக்கி கதாநாயகனாக அருமையான நடிப்பை வழங்கி உள்ளார். வாழ்த்துக்கள் சார்

இப்படத்திற்கு கிடைத்த விருதுகள் பற்றி

பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்ற ‘கட்டில்’ திரைப்படம் பாராட்டுக்களையும் பல விருதுகளையும் குவித்தது, இப்படத்தின் உருவாக்கத்தைப் பற்றி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நூலாக வெளிவந்து பாராட்டு பெற்றது

ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்தை புத்தகமாக வெளியிட்டது இந்திய சினிமாவிலேயே இது தான் முதல் முறை என்ற பெருமையை பெற்றிருப்பதோடு, புனே சர்வதேச திரைப்பட விழாவில் இந்த நூலை பார்த்த பிரபல திரைப்பட பேராசிரியர் சமர் நாட்டக்கே, மூலம் இந்த நூல் உலகின் பல்வேறு திரைப்பட கல்லூரிகளுக்கும் சென்று சேர்ந்தது.பெருமையான விஷயம்

வாஷிங்டன் மேரிலேண்டில் உள்ள அமெரிக்க உலகத் தமிழ்ப் பலகலைக்கழகம் சிறந்த நூல்களுக்கான விருதை ‘கட்டில்’ திரைப்பட உருவாக்க நூலுக்கு வழங்கியுள்ளது. தமிழனுக்கு உலக அங்கீகாரமும் வரவேற்பும் கிடைத்தது மகிழ்ச்சி.

>> கதை, திரைக்கதை, வசனம், படத்தொகுப்பு – B.லெனின்
எதார்த்தமான கதை களம் புதிய பாணி நமது பாரம்பரிய வகைகள் பாதுகாக்க வேண்டும் என்ற கனவில் இப்படம் உருவாக்கியுள்ளார்வாழ்த்துக்கள் லெனின் சார்

>> தயாரிப்பு, இயக்கம் – இ.வி.கணேஷ்பாபு
இப்படி ஒரு படத்தை தயாரித்து இயக்கிய இயக்குனர் பாராட்ட பட வேண்டியவர் நடிப்பு நன்றாக இருக்கிறது நெகிழ்வான சம்பவம் மற்றும் கண்கலங்க வைக்கிறது

>> பாடல் – கவிப்பேரரசு வைரமுத்து, மதன்கார்க்கி
வையவா என்ற பாடல் அந்த குடும்ப பாடல் ரசிக்க வைக்கிறது

>> ஒளிப்பதிவு – வைட் ஆங்கிள் ரவிசங்கர்
மூன்று வகையான காலங்களில் காட்சி படுத்த பட்ட ஒளிப்பதிவு அருமை அந்த பெரிய வீடு
அந்த மில் எல்லாம் ரசிக்க வைக்கிறது.

>> இசை – ஶ்ரீகாந்த் தேவா
அருமையான மெலடி பாடல்கள் தந்து அசத்தியிருக்கிறார் தேவா பிண்ணனி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.

>> மக்கள் தொடர்பு – சதீஷ், சிவா (AIM) படத்தை எந்த அளவுக்கு மக்கள் இடம் கொண்டு சேர்க்க வேண்டுமா அந்த அளவுக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.
படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்

ஆரம்பக் கட்சியில் விதார்த் வெளி நாட்டில் இருந்து தன் பூர்வீக வீட்டை அப்பாவை பார்க்க வருகிறார்.
அவர் சின்ன குழந்தையாக இருந்த போது அவரது குடும்பம்
அந்த பெரிய வீடு அதன் முன் அமர்ந்து அந்த வீட்டில் வாழ்ந்த வாழ்க்கை யை பற்றியும் கட்டில் பற்றி சொல் கிறார்

நாயகன் இ வி கணேஷ் தன் மனைவி ஸ்ருஷ்டி டாங்கேவுடன் தன் அம்மாவின் அன்போடு தன் மகனோடு நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

நாயகனின் அண்ணன்கள்,அக்கா எல்லோரும் அந்த வீட்டை விலை பேசி விற்பனை செய்ய வருகிறார்கள்
வீட்டை விற்க மனமில்லாமல் நாயகன் நாயகி அம்மா எல்லோரும் தயங்கி கொண்டே விற்பனைக்கு கையெழுத்து போடுகிறார்கள்.
ஆனால் 250 வருடம் பாராம்பரியம் கொண்ட கட்டில் மட்டும் தர மாட்டேன் என்று சொல்லும் நாயகன் அந்த கட்டிலுக்கு ஒரு பெரிய வீட்டை தேடுகிறார்

இந்த சூழ்நிலையில் அவர் பணி புரியும் தொழிற்சாலையில் போனஸ் பிரச்சனையில் ஸ்ட்ரைக் நடக்கிறது சுருஷ்டிடாங்கே நிறைமாத கர்பினியாக இருக்கும்போது அவரின் மாமியார் குழந்தையை பள்ளிக்கு அழைத்து செல்கிறார் அப்போது ஃபோனை வைத்துவிட்டு போகிறார் அதுவே அவருக்கு விபரீதமாக முடிகிறது. அதன் பிறகு என்ன நடந்தது நாயகனும் நாயகி சுருஷ்டி டாங்கேவுடன்
ஒன்றாக இணைந்தாரா அந்த கட்டிலை. வேறொரு பெரிய வீட்டில் வைத்து அழகு பார்த்தாரா நாயகன் தன் மகன் அந்த கட்டிலிலே படுக்க வேண்டும் என்று விரும்பும் அவன் லட்சியத்தை நிறைவேற்றினாரா என்ன செய்தார் நாயகன் என்பதுதான் இப்படத்தின் மையக்கதை கண்கலங்க வைக்கும் பல காட்சிகள் இப்படத்தில் இருக்கிறது மனைவியை இழந்த பிறகு நாயகன் படும் துயரங்கள் நிச்சயம் பார்ப்பவர்கள் மனதை உருக வைக்கும்

ஒரு நிறைமாத கர்ப்பிணி எப்படி நடித்திருப்பாரோ அதை இயல்பாக அற்புதமாக வெளிக்கொண்டுவந்து பெண்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார் சுருஷ்டி

கீதா கைலாசம் அம்மாவாக வந்து நாயகனுக்கு பக்க பலமாக இருந்து படம் முழுவதும் நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்
மர்மக்கதை எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பாரம்பரிய பொருட்களை பாதுகாக்கும் ஒரு அற்புதமான நடிகராக இதில் நடித்திருக்கிறார் அவர் வரும் காட்சிகளில் பாரம்பரிய இசை வருவது படத்திற்கு சிறப்பு

இ வி கணேஷ் 3 கால கட்டங்களில் வரும் நாயகனின் நடிப்பை அற்புதமாக வழங்கி இருக்கிறார் விருது கொடுத்து கௌரவிக்க வேண்டிய நடிப்பு இயக்கமும் சரி எடுத்துக் கொண்ட கதைக்களமும் சரி அற்புதமாக இருக்கிறது

மொத்தத்தில் இந்த கட்டில் உங்களை உருக வைக்கும் கண் கலங்க வைக்கும் நமது பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க வைக்கும் நமது மண் சார்ந்த கதை என்று மாறு தட்ட வைக்கும் அழகான நடிப்பில் அம்சமான வசனங்களில் நெகிழ்ச்சியூட்டும் நடிப்பில் இந்த கட்டில் உங்களை தாலாட்டும் சீராட்டும் தமிழ் சினிமாவில் இப்படம் ஒரு குறிஞ்சி பூ. இது போன்ற தரமான படங்கள் தமிழ் சினிமாவுக்கு வந்தால் தமிழ் சினிமா தலைக்கும் வெட்டு குத்து படங்களை விட கண்கலங்க வைக்கும் மண் சார்ந்த கதைக்கு வரவேற்போம் கட்டில் படத்தை கொண்டாடுவோம். நாயகன் தோழனாக வரும் செந்தில் குமார் நடி ப்பு நன்றாக இருக்கிறது. குறை என்று பார்த்தால் எழுபத்தி ஐந்து லட்சம் கையில் வைத்துக்கொண்டு பெரிய வீட்டை வாடகைக்கு பார்த்து ஜம் என்று வாழ என்ன தடை என்ற கேள்வி எழாமல் இல்லை ஓகே ஒரு நல்ல படத்தை பாராட்டலாம்