இயக்குனர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், நமிதா பிரமோத், அஸ்வின், ரெபா மோனிகா என பலர் நடித்திருக்கும் திரைப்படம
இப்படத்தினை தயாரிப்பாளர் ஸ்ரீஜித் தயாரிக்க, 4 மியூசிக் இசைக்குழு இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் கள்
நமிதா பிரமோத் சைஜ் குரூப் இருவரும் கணவன் மனைவி இருவரும் காரில் வந்து கொண்டிருக்கும்போது டீசல் தீர்ந்து விடுகிறது மனைவி காலிலே இருக்க வைத்துவிட்டு சைஜ் டீசல் வாங்க ஆட்டோவில் வருகிறார் டீசல் வாங்கிக்கொண்டு வரும் வழியில் ஒரு ஆட்டோ கருணாகரன் தான் அந்த ஆட்டோவைஓட்டி வருகிறார் அதில் ஒரு பெண் இருக்கிறார் இவரும் ஏறிக்கொள்ள கார் அருகே வந்து இறங்கும் பொழுது அந்த பெண் சைசுவை காரின் மேலே வைத்து குத்தி கொலை செய்கிறார் இதனால் அதிர்ச்சி அடைகிறார்
நமிதா பிரமோத் அந்த வழியே வந்த கல்லூரி இளைஞர்கள் நமீதாவை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்க்கிறார்கள் தம்பி ஜெயராம் காளிதாஸ் இவர் தன் அக்காவுக்கு நடந்த கொடுமைக்கு காவல்துறையிடம் நியாயம் கேட்கிறார் காவல்துறை கண்டுபிடிக்கிறேன் என்று இழுத்தடிப்பதை பார்த்து இவரே களத்தில் இறங்குகிறார் நடந்தது என்ன என்ற பாணியில் துப்பு துலக்குகிறார
ஜெயராம் காளிதாஸை ஒரு பெண் மறைவில் நின்று கவனிக்கிறாள் அது யார் என்று தவிக்கிறார் காளிதாஸ் அந்த பெண்ணை பின் தொடர்ந்து யார் என்று கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார் போலீஸ ஒரு பக்கம் துப்பு துலக்குகிறது நமீதா பிரமோ த் ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு வந்த பிறகு அவரை கொலை செய்யும் எண்ணத்துடன் அந்த மர்ம உருவம் அவர்களை துரத்துகிறது அந்த மர்மஉருவம் யார் அது ஆணா பெண்ணா அமானுஷ்ய சக்தியா என்ன என்று கண்டுபிடிக்கும் பொழுது மிகப்பெரிய ஆச்சர்யம் ஏற்படுகிறது .
படத்தில் மிகப்பெரிய பிரச்சனையை சொல்லி இருக்கிறார்கள் இன்று திருநங்கைகளுக்கு ஏற்படும் அநீதியை இந்த படம் சொல்கிறது அந்த களம் மனதை தொடுகிறது
பூராமு பிளாஷ்பேக் கட்சியை சொல்லும் பொழுது மனம் உருகி விடுகிறது அந்த உருவம் யார் என்பதை ஜெயராம் கண்டுபிடிக்கும் பொழுது நமக்கும் ஆச்சர்யம் ஏற்படுகிறது
படத்தின் கிளைமாக்ஸ்சை சொல்லிவிட்டால் சுவாரசியம் போய்விடும் என்பதால் இதற்கு மேல் கதை சொல்ல முடியாது படம் முழுவதும் பரபரப்பாக விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் எந்த இடத்திலும் படம் லேக்காகவில்லை கதையை விட்டு வேறு எங்கும் நகர வில்லை கருணாகரன் தன் ஆட்டோவில் அந்த உருவத்தை ஏற்றுக் கொண்டு சென்று எங்கெங்கு விடுகிறாரோ அங்கெல்லாம் போலீஸ்காரரான ரமேஷ் கண்ணா துப்பு துலக்குவது கலகலப்பு அதுவும் அந்த விபச்சார விடுதியில் கருணாகரன் எல்லா பெண்களின் பெயரையும் மனப்பாடமாக சொல்ல ரமேஷ் கண்ணா அவரை கலாய்ப்பது சுவர ராசியம்
ஜெயராம் இடைவேளைக்கு முன் 20 நிமிடங்கள் அந்த உருவத்தை பின்தொடர்ந்து யார் என்று கண்டுபிடிக்கும் பொழுது அங்கு வேட்டை நாய்கள் அவரை துரத்தும் போது பெரிய பரபரப்பு இன்டர்வல் பிளாக் அற்புதமாக இருக்கிறது
ஆரம்பக் காட்சியும் அசத்தலானஒரு கொலையில் இருந்து படம் ஆரம்பிக்கிறது
அந்த கொலைகாரன் யார் எந்த மோட்டிவேட்டிக்காக கொலை செய்தார் அதற்கான காரணம் என்ன என்ற படத்தை திரைக்கதையின் மூலம் டெம்போ ஏற்றி இயக்கியிருக்கிறார்
அவள் பெயர் ரஜினி என்பதற்கிணங்க ரஜினி ரசிகராக வருபவர் ரஜினிக்காக தியேட்டரில் கொடி கட்டுவது பேனர் வைப்பது ரஜினி படத்தை பார்த்து முத்தமிடுவது என்று பட முழுக்க ரஜினி ரசிகராக வந்திருக்கிறார் படம் முடியும் பொழுது கூட ரஜினியின் போட்டோவை பார்த்து மனம் நிம்மதி அடைகிறார்
நமிதா பிரமோத் நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார் கணவன் கொலை செய்யப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அதிலிருந்து மீள முடியாமல் அவர் தவிக்கும் தவிப்பு படத்தின் கடைசி வரை அவர்களை நன்றாக நடித்து வைத்திருக்கிறார் இயக்குனர்
ஜெயராம் காளிதாஸ் விக்ரம் படத்திற்கு பிறகு இப்படத்தில் நல்லதொரு கதாபாத்திரம் அவருக்கு அக்காவுக்காக கொலையாளியை தேடி பயணம் செய்யும் தம்பியாக நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார் ஒரு துப்பறியும் நிபுணரைப் போல் ஒவ்வொரு விஷயமாக கண்டுபிடித்து கண்டுபிடிக்க படத்தின் விறுவிறுப்பு கூடிக் கொண்டே போகிறது கிளைமாக்ஸ் காட்சியில் பூராமுஉடன் பேசும்போது
உருகிப் போகும் நடிப்பு சூப்பர்
ரமேஷ் கண்ணா போலீஸ்காரராக வந்து கலகலப்புக்கு விருந்து வைக்கிறார்
இன்ஸ்பெக்டராக வரும் அஸ்வின் குமார் கொலையாளியை கண்டுபிடிக்க பல வியூகங்களை அமைத்து தேடுகிறார் அவ்வளவு நடிப்பும் நன்றாக இருக்கிறது
ஆட்டோ டிரைவராக வரும் கருணாகரன் வரும் காட்சிகளில் கலகலப்பு மீன் சிக்கலில் மாட்டி விட்டோம் என்று அவர் விழிப்பதும் கொலை காரணை தேடி அலைவதும் கருணாகரன் நடிப்புக்கு தீனி
மல்லிகா என்ற கதாபாத்திரம் இந்த கதையில் மிக முக்கியம் என்று காட்டுகிறார்கள் ஆனால் கதையில் அது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துகிறது கதைக்கு பக்க பலமாக இருக்கிறது அந்த மல்லிகாவை போலீஸ் வலைக்குள் சிக்க வைக்கும் காட்சி மிக விறுவிறுப்பாக இருக்கிறது
விஷ்ணுவின் ஒளிப்பதிவு இரவு நேர காட்சிகளில் திகிலையும் அந்த பிளாட்டுக்குள் நடக்கும் பொழுது பளிச்சென்று ஒளிப்பதிவையும் வழங்கி இருக்கிறது ஒளிப்பதிவுக்கு ஒளிப்பதிவாளருக்கு பாராட்டுக்கள்
திபு ஜோசப்பின் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது இரண்டு மணி நேர படம் தான் இரண்டு மணி நேரமும் விறுவிறுப்பு பரபரப்பு என காட்சிகளில் ரெக்க கட்டி பறக்கிறது இந்த அவள் பெயர் ரஜினி
நல்ல ஒரு கிரைம் திரில்லர் படத்தை
எப்படி கொடுத்தாள் ரசிகர்களுக்கு பிடிக்குமோ அதேபோல நன்றாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் நல்ல கிரைம் திரில்லர் படம் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் ரசிகர்களுக்கு இப்படம் திகட்ட திகட்ட திகட்டாத ஒரு நல்ல படைப்பு அவள் பெயர் ரஜினி ஒரு வெற்றிப் படைப்பாக வந்திருக்கிறது மலையாளத்தில் இப்படம் ரஜினி என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது இப்படம் வெளியாகும் இடங்கள் எல்லாம் நல்ல வெற்றிவாகை சூடும் என்பது உறுதி அவள் பெயர் ரஜினி விறுவிறுப்பான திரில்லர் திரைப்படம் மறக்காமல் பாருங்கள்
