மூன்றாம் மனிதன்’ திரைப்பட விமர்சனம்

Castin. கே. பாக்யராஜ் சோனி யாஅகர்வால், Srinath, Ramdev, Prana, Madurai Gnanam, Soodhu Kavvum Sivakumar மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Directed By : Ramdev

Music By : Venu Sankar and Dev G

Produced By : Ramdev Pictures – Ramdev

கள்ளக்காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை மூன்றாம் மனிதன் கணவன் மனைவி இருவருக்குள் அந்த மூன்றாம் மனிதன் நுழைந்து விட்டால் குடும்பம் என்ன ஆகும் என்பதை அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். ராம்தேவ் போடியை சேர்ந்தவர் வெற்றிகரமான பல படங்களில் பணியாற்றியவர் அழகான கதையை செதுக்கியிருக்கிறார் ஒவ்வொரு குற்றத்தின் பின்னணியில் ஒரு விஷயம் இருக்கிறது என்பதைதத்துவமாக சொல்லி இருக்கிறார்

மருத்துவமனை ஊழியரான சோனியா அகர்வாலின் கணவர் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலையை புலன் விசாரணை செய்யும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாக்யராஜ், பல அதிர்ச்சிகரமான உண்மைகளை கண்டுபிடிக்கிறார். அது என்ன? என்பதை பரபரப்பான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக மட்டும் இன்றி தம்பதிகளுக்கு ஏற்ற நல்ல மெசஜாகவும் சொல்வது தான் ‘மூன்றாம் மனிதன்’ படத்தின் கதை.
இயக்குனர் ராம்தேவ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் தன் மனைவியின் மீது அன்பு வைத்திருக்கும் இவருக்கு குடிப்பழக்கம் வந்த பிறகு அந்த குடும்பம் என்ன ஆகிறது என்பதை எதார்த்தமாக சொல்லியிருக்கிறார்
முதல் காட்சியில் பள்ளி மாணவர் அதிக மதிப்பெண் வாங்க அவர் தந்தை மது குடிக்கும் காட்சியில் எதுவும் நடக்கப் போகிறது என்று சிம்பிளாக காட்டுகிறார்கள்

போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் கே.பாக்யராஜின் அனுபவம் வாய்ந்த நடிப்பு கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது. கதையின் மையக்கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரிஷிகாந்த் பிரணா, முதல் படத்திலேயே பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். சோனியா அகர்வால் ஆரம்பத்தில் கவனம் ஈர்த்தாலும், அதன் பிறகு அவரது கதாபாத்திரத்திற்கு பெரிய வேலை இல்லாமல் போகிறது. இருந்தாலும், அவருக்கு கொடுக்கப்பட்ட குறைவான பணியை நிறைவாக செய்திருக்கிறார்.

பிராணாவின் கணவர் வேடத்தில் நடித்திருக்கும் இயக்குநர் ராம்தேவ், மதுவுக்கு அடிமையானவர் வேடத்தில் நடித்திருந்தாலும், அறிவுப்பூர்வமான வசனம் பேசி ரசிகர்களிடம் கைதட்டல் பெறுகிறார். அவர் பேசும் ஒவ்வொரு வசனத்திற்கும் தியேட்டரில் கரவொலி

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவனுக்கு ஆட்சியர் பரிசு வழங்குகிறார். அந்த நிகழ்வுக்காக வரும் அந்த மாணவரின் தந்தை, பள்ளியில் உள்ள கழிவறைக்கு சென்று அங்குள்ளா தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடித்து மது அருந்துகிறார். இப்படி ஒரு அறிமுக காட்சியை வைத்து ரசிகர்களின் கவனத்தை ஆரம்பத்திலேயே ஈர்த்துவிடும் இயக்குநர் ராம்தேவ், அதன் பிறகு கொலை மற்றும் அதன் புலன் விசாரணையை தொடங்கி, படத்தை வேகமாக பயணிக்க வைத்து ரசிகர்களை படத்தோடு ஒன்றிவிட செய்துவிடுகிறார்.
நல்ல பெண் மணி பிரணா எப்படி மெல்ல மெல்ல கள்ளக்காதலில் விழுகிறார் குடும்ப சூழ்நிலையை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை காட்டிய விகிதம் நன்றாக உள்ளது

கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் கதை நகர்ந்தாலும், குடும்பங்களுக்கு ஏற்ற பல விசயங்களை மிக நேர்த்தியாக சொல்லியிருப்பதோடு, ஆண்களின் குறை மற்றும் நிறையோடு, பெண்களின் குறை மற்றும் நிறையை தெளிவாக பேசியிருக்கும் இயக்குநர் கணவன் – மனைவி என்ற இருவர் உறவில் மூன்றாம் மனிதன் எப்படி நுழைகிறான், என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
கார்த்திக், ராஜ் என்ற 16 வயது சிறுவர்கள் எப்படி குற்றவாளி கூண்டில் சிக்குகிறார்கள் அதற்கு அவர்களது அம்மா தான் காரணம் அவரது கள்ளக்காதல் தான் காரணம் என்று அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் கள்ளக்காதல் செய்யும் அம்மாக்கள் திருந்துவார்கள் பிரியாணி கடைக்காக குழந்தையை கொன்ற நிஜ சம்பவம் போல் இதில் கணவனை கொள்ளும் சம்பவம் நடக்கிறது. இதையெல்லாம் மிக எதார்த்தமாக பதிவு செய்து இருக்கிறார்கள்.

இயக்குநர் ராம்தேவ் திரைக்கதை மற்றும் காட்சிகளை தொய்வில்லாமல் நகர்த்தி செல்வதோடு, வசனங்கள் மூலமாகவும் கைதட்டல் பெறுகிறார். குறிப்பாக பெண்களை மையப்படுத்திய வசனங்களும், ஆண்மைத்தன்மை பற்றிய வசனங்களும் கைதட்டல் பெறுகிறது. அதே சமயம், பல இடங்களில் மேலோட்டமாக அல்லது மறைமுகமாக சொல்ல வேண்டிய விசயங்களை வெளிப்படையாக பேசியிருப்பது நெருடலாக இருக்கிறது.

மணிவண்ணனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது. வேணு சங்கர் மற்றும் தேவ்.ஜி ஆகியோரது இசையில், ராம்தேவ் வரிகளில் பாடல்கள் கேட்கும்படியும், புரியும்படியும் இருக்கிறது. பின்னணி இசையிலும் குறையில்லை.

ஒரு பெண் நினைத்தால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் என்பது போல், ஒரு குடும்பம் மட்டும் அல்ல அந்த குடும்பத்தின் எதிர்காலமே ஒரு பெண்ணின் கையில் தான் இருக்கிறது என்பதை விட, அவள் வாழும் முறையில் தான் இருக்கிறது, என்ற கருத்தை பாடம் சொல்வது போல் அல்லாமல், நல்ல விறுவிறுப்பான கிரைம் திரில்லர் படம் பார்த்த அனுபவத்தை கொடுக்கும் விதத்தில் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் ராம்தேவ்.

மொத்தத்தில், ‘மூன்றாம் மனிதன்’ தவறான பாதையில் செல்லும் மனிதர்களை நல்வழிப்படுத்தும் நல்ல முயற்சி.
இன்று சமுதாயத்தில் நடக்கும் அத்தனை குற்றங்களுக்கும் மது மற்றும் கள்ளக்காதல் இவைகள் தான் பிரச்சனை என்பதை கதைக்களமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது . குடும்பத்தைப் பற்றி கவலைப்படாமல் அரை மணி நேர சுகத்துக்காக அடுத்தவனுடன் சல்லாபிக்கும் இளம் மனைவிகளுக்கு இப்படம் ஒரு பாடம் மது குடித்துவிட்டு மனைவியிடம் தினமும் சண்டை செய்யும் ஆண்களுக்கு இப்படம் ஒரு பாடம் காவல்துறை அதிகாரியாக இருந்து கொண்டு அடுத்தவன் மனைவி மீது ஆசைப்படும் அதிகாரிகளுக்கு இப்படம் ஒரு பாடம் மொத்தத்தில் இந்த மூன்றாம் மனிதன் நமது நெருக்கத்தில் இருப்பவன் அன்றாடம் நாம் காணும் மனிதர்களாக நம்முள்ளே இருப்பவன் வித்யாசமான கதைகளம் பாராட்ட வேண்டிய படம்

இப்படத்தின் தயாரிப்பாளர் ஆடிட்டர் போலீசாக நடித்திருக்கிறார் அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது இனியும் மேலும் தொடரலாம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்டுள்ள படம் நிச்சயம் வெற்றி பட்டியலில் இடம் படும் மிஸ் பண்ணிடாதீங்க மூன்றாம் மனிதன் எல்லா அம்சங்களும் நிறைந்த ஜனநாயகமான படம்