சரக்கு எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்

இயக்குனர் வேலு பிரபாகரன் அவர்கள் இடம் பணி புரிந்தவர் தற்போது மன்சூர் அலிகான் கதை எழுதி நடித்த சரக்கு படத்தை இயக்கி உள்ளார்
சரக்கு எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்.

– இயக்குனர் ஜெயக்குமார் ஜே இயக்கத்தில் நடிகர் மன்சூர் அலிகான் நாயகனாக நடித்து தானே தயாரித்துள்ள திரைப்படம். இப்படத்தில் இவருடன் இணைந்து கே எஸ் ரவிக்குமார், பாக்யராஜ், யோகி பாபு, ராஜேந்திரன் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.

ஜனரஞ்சகமான படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் மற்றும் மகேஷ் டி ஆகிய இருவரும் ஒளிப்பதிவு பணிகளை செய்ய, படத்தொகுப்பாளர் தேவராஜ் எஸ் எடிட்டிங் செய்துள்ளார்.
நடிகராக
தமிழ் சினிமாவில் கலக்கி வந்த மன்சூர் அலிகான் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதரித்துள்ளார்.
மதுஅருந்துவதால் ஏற்படும் மது பிரியர்களின் நிலை மற்றும் கஷட – நஷ்டங்களை பற்றி இப்படம் பேசியுள்ளது. அரசாங்கத்தை எதிர்த்து பல கருத்துக்களை இப்படத்தின் மூலம் பல சமூக பிரச்சனைகளை இப்படத்தின் பேசியுள்ளனர், படக்குழுவினர்.
வழக்கறிஞர்கள் சிலர் மன்சூர் அலிகானுக்கு எதிராக கொதித்தெழுந்த விவகாரம் எல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது

மன்சூர் அலிகான் “நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ஹீரோயினாக வலினா பிரின்ஸ் நடித்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத், மொட்டை ராஜேந்திரன், வினோதினி, கிங்ஸ்லி, ரவி மரியா, லொள்ளுசபா மனோகர், மதுமிதா, லியாகத் அலிகான், பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனைவரும் நடிப்பும் நன்றாக இருக்கிறது ஒவ்வொரு கேரக்டரின் கதை கதையும் வித்தியாசமாக சொல்லப்பட்டுள்ளது வழக்கமான தமிழ் சினிமா என்றாலும் கலகலப்பாக படம் போகிறது மன்சூர் அலிகான் வரும் இடமெல்லாம் செம கலகலப்பு பூமாலை நான் தான் உன் இளங்கால என்று அவர் சொல்லும் போதெல்லாம் தியேட்டரில் கர ஓலி கிளைமாக்ஸ் காட்சியில் மதுவால் ஏற்படும் தீமைகளை மன்சூர் அலிகான் சொல்லும் பொழுது கைதட்டல் பறக்கிறது அதே போல அம்மன் பாடலும் பெண்கள் எழுந்து ஆடுகிறார்கள்

இந்த படமானது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையேதிருப்பி போடும்

சரக்கு படத்தில் அட்வகேட் தொழிலை கொச்சைப்படுத்துவது போலவும், மார்க்கெட்டிங் தொழில் செய்வது போலவும் கேரக்டர்கள் உள்ளது. மன்சூர் அலிகான் நல்ல நடிகராக இருந்தாலும், வழக்கறிஞர் தொழிலை தவறாக சித்தரிப்பதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என தெரிவித்தனர்.
அவர் அப்படி ஒன்றும் தவறாக காட்டவில்லை இன்று நிறைய வழக்கறிஞர்கள் வழக்கு நடத்துவதற்காக எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பதை நாசுக்காக காட்டி இருந்தார் வீடு வீடாக சென்று கேசு கேசு என்று சொல்வது போல அந்த காட்சி அமைப்பு இருந்தது நிஜத்தில் நடப்பதை தானே காட்டி இருந்தார் அரசியல் கட்சியினர் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்பது போல தானே இவரும் காட்சி வைத்திருந்தார் இதற்கு எதற்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கொதிக்க வேண்டும்
குலியும் மேடுமான
சாலைகளை சீர் செய்ய முடியவில்லை ஆனால் ஹெல்மெட் போடாமல் போனால் பாய்ந்து வந்து பிடிக்கிறார்கள் தெருவுக்கு தெரு டாஸ்மார்க் கடைகளை திறந்து வைத்துவிட்டு வண்டியில் சென்றால் பிடிக்கிறார்கள் இதெல்லாம் மன்சூர் அலிகான் கேட்பது என்ன தவறு இருக்கிறது
இன்று எத்தனை குடும்பங்கள் குடியால் அழிந்து கொண்டிருக்கிறது ஐடியில் வேலை செய்யும் இளைஞர்கள் சனி இரவு பப்புக்கு சென்று பெண்ணும் ஆணும் ஆட்டம் போடுவதும் போதையில் காரை எடுத்துக் கொண்டு வந்து பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் அப்பாவி மக்கள் மீது ஏற்றுவதும் நடந்து கொண்டு தானே இருக்கிறது.

அரசு பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தரும் பணத்தை தனக்கு கொடுக்கவில்லை என்று குடித்துவிட்டு வந்து தன் மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது குடிபோதையில் எத்தனை ஆண்கள் தன் ஆண்மை இழந்து விட்டு மனைவியிடம் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் இது எல்லாம் சகஜமாக காட்டியிருக்கிறார் இது எல்லாம் இல்லை என்று சொல்வாரா உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

இதற்கு படக்குழுவினர் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். “யாரும் படத்தை கொச்சைப்படுத்தவில்லை, படத்தை பற்றியெல்லாம் கேள்வி கேட்காதீர்கள். மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது. படத்தை படமாக பாருங்கள்” என தெரிவித்தனர். அப்போது தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தலைவர் செல்ல பாண்டியன் அந்த வழக்கறிஞரிடம் நேரடியாக சண்டைக்கு சென்றார்.
செல்ல பாண்டியன் மது முன்பெல்லாம் ஒரு கட்டிங் அடித்தால் போதை ஏறிவிடும் இன்று ஆப் அடித்தால் கூட போதை ஏறம் இருக்கிறது காரணம் தமிழக அரசே மட்டமான சரக்கை விற்கிறது என்ற கருத்தை கூறியிருந்தார் அதை தானே மன்சூர் அலிகான் படத்தில் காட்டி இருக்கிறார் இதில் என்ன தவறு இருக்கிறது குற்றமுள்ள நெஞ்சில் குறுகியிருக்கிறது
மன்சூர் அலிகான் முறைப்படி சென்சார் பண்ணி தான் திரையிட்டு ள்ளார் அது தவறு என நினைத்தால் நீங்கள் கோர்ட்டுக்கு போங்கள் நீங்கள் ஏன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறீர்கள் என்று பொதுமக்கள் கேட்கிறார்கள்.

இப்படத்தில் மன்சூர் அலிகான் வரும் காட்சி எல்லாம் கலகலப்பாக இருக்கிறது அவர் மனைவி வலினா நடிப்பு நன்றாக இருக்கிறது குழந்தைகள் நடிப்பு நன்றாக இருக்கிறது ஆண் முட்டை பெண் முட்டை என்று அவர் தத்துவம் சொல்ல மனைவி தலையில் அடித்துக் கொள்ளும் அந்த காட்சி ரசிக்க வைக்கிறது மொட்டை ராஜேந்திரன் நடிப்பு நன்றாக இருக்கிறது கடைசி சண்டைக்காட்சியில் விக்கைமாட்டிக் கொண்டு ஆள் மாறாட்டம் செய்யும் அந்த காட்சி ரசிக்க வைக்கிறது கிளைமாக்ஸ்ஸில் சண்டைக் காட்சிகளுக்கு நடுவே பழைய பாடலை போடும்போது செம ரசிக்க வைக்கிறது படத்தில் கவர்ச்சிகளுக்கும் பஞ்சமில்லை கருத்துக்களுக்கும் பஞ்சமில்லை ஒவ்வொரு காட்சியிலும் புரட்சியான வசனம் மூலம் வெடி வைக்கிறார் மன்சூர் அலிகான் மத்திய அரசையும் மாநில அரசையும் அவர் விட்டு வைக்கவில்லை கடைசியில் கூட மது ஆன்லைன் மூலம் கிடைக்கும் என்ற பஞ்சு வைத்து முடிக்கிறார். பாடல்கள் ரசிக்க வைக்கிறது கானா பாலா பாடியுள்ள பாடலும் யோகி பாபு நடனமும் மன்சூர் அலிகான் நடனமும் ரவி மரியாவின் கண்டிப்பும் ரசிக்க வைக்கிறது கிங்ஸ்லி அவர் மனைவியிடம்
மாட்டிக் கொண்டு விழிப்பதும் அடிவாங்கி ஓடுவதும் செம கலகலப்பு

இயக்குனர் இன்றைய காலகட்டத்திற்கு எது தேவையோ அதை உணர்ந்த படம் ஆக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கச்சிதமாக படமாக்கி உள்ளார் இசையமைப்பாளர் ஜனரஞ்சக மான இசை கொடுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர்
இரண்டு மணி நேரம் 30 நிமிடம் என்பதை ஒரு 15 நிமிடம் கொடுத்திருக்கலாம் இருந்தாலும் ரசிக்க வைக்கிறது ஆர்ட் டைரக்டரின்
அந்த அம்மன் சிலை வடிவமைப்பும் சிறைச்சாலை வடிவமைப்பும் நன்றாக இருக்கிறது காஸ்ட்யூமர் மேக் அப் மேன் அனைவரும் தங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள் மன்சூர் அலிகான் தவிர இப்படி ஒரு புரட்சிகரமான படத்தை வேறு யாராலும் கொடுக்க முடியாது நீதிபதிகளாக வரும் வியாகத் தலைவன் கே எஸ் ரவிக்குமார் பழ கருப்பையா இவர்கள் நடிக்கும் நன்றாக இருக்கிறது பயில்வான் ரங்கநாதன் வழக்கறிஞராக வந்து சிறப்பாக நடித்திருக்கிறார் மொத்தத்தில் இந்த “சரக்கு” மிடுக்கு