மதி மாறன் திரை விமர்சனம்

தமிழக போலீசாரை மட்டம் தட்டுகிறதா? இந்த மதிமாறன்

உயரம் குறைந்த ஒரு மனிதரைப் போற்றுவதற்காக ஒட்டுமொத்த காவல்துறையை கேலி செய்கிறதா இந்த மதிமாறன்?

வீட்டை விட்டு காதலனுடன் ஓடிச் சென்ற பெண்கள் அனைவரும் இன்று துன்பப்படுகிறார்கள் என்று சொல்கிறதா இந்த மதிமாறன்?

சென்னையை விட கிராமம் தான் பெரிது என்று முடிவில் சொல்கிறார் இயக்குனர் சென்னையில் எல்லா வசதிகளோடும் வாழும் ஒரு பெண்ணை கிராமத்தில் கொண்டு போய் விடுவது நியாயமா?

இப்படி பல கேள்விகளை எழுப்பி கதை சொல்கிறது மதிமாறன்

மதி மாறன் திரை விமர்சனம் பார்க்கலாம் வாங்க

திருநெல்வேலியை சேர்ந்த இயக்குனர்
மந்த்ரா வீரபாண்டியன்
இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணி புரிந்திருக்கிறார் அவர் என்ன சொல்கிறார் வாங்க பார்க்கலாம் ஒருவரின் உயரம், நிறம், பருமன் போன்ற அங்க அமைப்புகள் பற்றிக் கேலி பேசுவது சரியில்லை என்பது பலருக்கு புரிபடுவதில்லை. உருவக் கேலியை வளர்த்தெடுத்ததில் கணிசமான பங்கு நம் திரைப் படங்களுக்கு உண்டு. பிறர் மனம் நோகுமே என்ற அடிப்படை நாகரீகம் கூட இல்லாமல் அவர்களை உருவ கேலி செய்து சிரிப்பது வன்முறைக்கு ஒப்பாகும் என்பதை சுட்டிக் காட்டுவதுடன் உடற்குறைபாடு கொண்டவர்கள் எதையாவது சாதித்தால் மட்டுமே கொண்டாடுகிற, இயல்பான வாழ்க்கை வாழும் போது கேவலப்படுத்துகிற சமூகத்தின் மீது கோபத்தைக் கொட்டி இருக்கிறது மதிமாறன் என்ற சினிமா.
ப்ளூ சட்டை மாறன் கூட அஜித்தை சேட்டு போல இருக்கிறார் என்று கிண்டல் செய்து விமர்சனம் செய்திருந்தார் இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் இயக்குனர் இக்கதையை எழுதி இருப்பார் போலும் தன்னுடைய நிறம் கருப்பு தான் இன்ஜினியரிங் படித்து இருக்கிறேன் இருந்தாலும் என்னை பார்ப்பவர்கள் ஒரு மாதிரியா தான் பார்க்கிறார்கள் அந்த உணர்வில் தான் இந்த கதையை எழுதினேன் என்கிறார் இயக்குனர் சரி வாங்க படத்தின் கதையை பார்ப்போம்

வில்லேஜ் ஒன்றில் போஸ்ட்மேன் எம் எஸ் பாஸ்கர். இவருக்கு இரட்டைக் குழந்தைகள். அதில் ஒருவர் தான் வெங்கட் செங்குட்டுவன் (நெடுமாறன்), மற்றொருவர் இவானா (மதி). நெடுமாறன் உயரத்தில் வளர்ச்சி குறைவாக இருக்கிறார். இதனால், பலரும் அவரை கேலியும் கிண்டலும் செய்து வருவதை எதிர்த்துக் கேட்டு கோபபடுவர்.. அதே சமயம். தனது திறமையை படிப்பிலும், அறிவிலும் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே வருகிறார். இவருக்கும் கல்லூரி தோழியான ஆராத்யாவிற்கும் காதல். ஒரு சந்தர்ப்பத்தில் திருநெல்வேலியில் நடந்த அரசியல்வாதி கொலை துப்பு துலக்குகிறார் நெடுமாறன் அப்போது அந்த ஊரில் எஸ்.பி யாக இருக்கும் நரேன் நெடுமாறனின் புத்தி கூர்மையை கண்டு வியக்கிறார்.
இது கதையின் பின்பகுதியில் எப்படி முடிச்சு போடுகிறது என்பது ஹைலைட் இதற்கிடையில் ஒரு காதல் ஹீரோவின் சிஸ்ட்ரான , இவானா தனது கல்லூரி பேராசிரியரோடு ஓடி போய்விட்டார் என்ற செய்தியறிந்து வீட்டில் அனைவரும் உறைந்து போகின்றனர். இதனால் அப்செட்டான எம் எஸ் பாஸ்கரும் அவரது மனைவியும் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து விடுகிறார்கள். உடைந்து போகிறான் நெடுமாறன் அவனுடைய கோபம் எல்லாம் தன்னுடைய அக்கா மதிமீது மதி மட்டும் இப்படி செய்யாமல் இருந்தால் அப்பா அம்மாவை இழந்திருக்க மாட்டோம் என்று வன்மம் கொள்கிறான்
அந்த வண்மம் படம் பார்ப்பவர்களுக்கு நியாயமாகப்படுகிறது கோபத்தோடு தனது சகோதரியை காண சென்னை பயணப்படுகிறார். அதே சமயம், சென்னையில் தொடர்ச்சியாக இளம்பெண்கள் கற்பழித்து கொல்லப்படுகின்றனர். அந்த கொலைகளுக்கு காரணம் யார் கொல்லப்பட்ட பெண்கள் யார் என்று போலீசே கண்டுபிடிக்க முடியாத அந்த கற்பழிப்பு குற்ற பின்னணியையும், குற்றவாளியையும் கண்டுபிடிக்கிறார் என்பதே மதிமாறன்படத்தின் கதை.

நிஜமாகவே உயரம் குறைவாக உள்ள வெங்கட் செங்குட்டுவன், குட்டையன் கேரக்டருக்கு ஃபர்பெக்டாக செட் ஆகி விடுகிறார்.. உருவ கேலிக்கு ஆளாகும்போதெல்லாம் ஆவேசமாவது, அப்பா அம்மாவை காப்பாற்ற முடியாமல் போகும்போது கதறித் துடிப்பது, மதி நிறைந்த மாறனாகி நடக்கும் கொலைகளுக்கான காரணத்தை துப்பறிந்து கண்டுபிடிப்பது, காவல்துறைக்கு ஆலோசனை வழங்கி வழிநடத்துவது என சுற்றிச் சுழன்றிருக்கிறார். அப்ப்டி அவர் செய்யும் விஷயங்களில் லாஜிக், நம்பகத்தன்மை எல்லாம் இல்லை என்றாலும் ஒரு அனுபவ நடிகர் என்ன நடிப்பைக் கொடுப்பாரோ அந்த நடிப்பைக் கொடுத்து காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார். அவரின் தீர்க்கமான பார்வை உருக்கமான நடிப்பு தன்னை கேலி செய்பவர்களை வெறுக்கும் தன்மை அவர்களுக்கு அவர் பதிலால் சவுக்கடி கொடுக்கும் அந்த தன்மை எல்லாமே அவர் மீது பரிதாபத்தையும் கம்பீரத்தையும் ஏற்படுத்துகிறது வெல்டன் செங்குட்டவன்

’லவ் டுடே’ போன்ற ஒரு படத்தின் மூலம் இளசுகளை கவர்ந்த இவானா, இப்படி ஒரு வேடத்தில் நடித்தது ஆச்சரியம் தான். இளம் நடிகைகள் நிராகரிக்கும் ஒரு வேடத்தில் நடித்த அவரது தைரியத்தை பாராட்டினாலும், அவருடைய கதாபாத்திரத்திற்கு முதல் பாதியுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படுவதால் அவரும் அவருடைய நடிப்பும் மனதில் நிற்கவில்லை. முதல் பாதியில் துரு துரு என்று படம் பார்ப்பவர்களை வசீகரம் செய்த இவானா இடைவேளைக்கு பிறகு செய்வது அறியாது நடிப்பில் மட்டுமல்ல கதாபாத்திரத்திலும் கோட்டை விடுகிறார் தம்பியின் வெறுப்புக்கு ஆளாகி செய்வதறியாது நிக்கிறார் வெங்கட் செங்குட்டுவனின் கல்லூரி தோழியாகவும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராகவும் நடித்திருக்கும் ஆராத்யா அழகிலும், அளவான நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார். போலீஸ் வேடமான பிரபாவதி மேடத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் தன் சமகால போலீசை எதிர்த்து கேட்க முடியாமல் தன் காதலன் செங்குட்டுவனுக்கு
பரிந்து பேச முடியாமல் அவர் தவிக்கும் நடிப்பு சூப்பர்! இடைவேளைக்கு பிறகு நாயகனுக்கு உதவி செய்யும் போலீசாக உயர்ந்திருக்கிறார் காதல் அழகைப் பார்த்து வரவில்லை அறிவைப் பார்த்து வருகிறது என்று அவர் சொல்லும் உதாரணம் சூப்பர்

வெங்கட் செங்குட்டுவனின் அப்பாவாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் வழக்கம் போல் தனது இயல்பான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். அந்த திருநெல்வேலி பாஷையில் மனுஷன் பிச்சு உதறுகிறார் மகள் ஓடிப் போய்விட்டாள் என்று கலங்கி போய் தூக்கு போடும் இடம் பாசமுள்ள தகப்பனை காட்டுகிறது தன் மகன் குள்ளமென்று ஊரார் கேலி பேச அவர்கள் எல்லாம் பார்த்து என் மகளை நான் பார்த்துக் கொள்கிறேன் உன் மகன் பீடி குடித்துக் கொண்டிருக்கிறான் அவனை போய் கவனி என்று சொல்லும் இடம் பாசமுள்ள தந்தையாக பரிமளிக்கிறார் ஆடுகளம் நரேன், பவா செல்லதுரை, சுதர்ஷன் கோவிந்த், பிரவீன் குமார்.இ என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

பர்வேஸின் ஒளிப்பதிவும், ரசிக்க வைக்கிறது கிராமத்துக்கு ஒரு கேமராவும் நகரத்துக்கு ஒரு கேமராவும் என்று வேறுபடுத்தி ஒளிப்பதிவில் பலம் சேர்த்திருக்கிறார் கார்த்திக் ராஜாவின் இசைதான் படத்திற்கு மிகப்பெரிய பலம் ஒவ்வொரு காட்சிக்கும் இசை உயிரூட்டி உள்ளது கார்த்திக் ராஜா வெல்டன்

உருவ வளர்ச்சி குறைபாடுள்ள ஒருவரின் மனநிலையை வைத்து கதை எழுதி இயக்கியிருக்கும் மந்த்ரா வீரபாண்டியன் தான் சொல்ல வந்ததை உறுதிப்படுத்த மர்ம கொலைகள், கற்பழிப்புகள்,அதை நாயகனே கண்டுபிடிப்பது என்று கொண்டு கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்று இருக்கிறார்.
வெறும் உயரம் குறைந்த கதையை மட்டும் காட்டினால் சலிப்பு ஏற்படும் வெறும் காதல் கதை மட்டும் சொன்னால் சலிப்பு ஏற்பட்டுவிடும் பெண்கள் கடத்தல் கொலை அதை யார் செய்தது என்பதை விறுவிறுப்பாக சொன்னால் இரண்டு மணி நேரம் ரசிகர்களை உட்கார வைக்க முடியும் என்ற தந்திரத்தை உணர்ந்திருக்கிறார்.இயக்குனர் பாலாவின் மேக்கிங் தனம் இவரது கைவண்ணத்தில் தெரிகிறது இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வருவதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது . மொத்தத்தில் இந்த மதிமாறன் உருவத்தை கேலி செய்பவர்களை புரட்டிப் போட்டு இருக்கிறான் ஆள் குள்ளமாக இருந்தாலும் அறிவு நீளமாக இருந்தால் எதையும் ஜெயிக்கலாம் என்று சொல்லி இருக்கிறார் வீட்டை விட்டு ஓடிப் போகும் பெண்கள் தாய் தந்தையை பற்றி கொஞ்சம் ஆவது நினைத்துப் பார்க்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்திருக்கிறார் காதலிக்கும் கல்லூரி பெண்கள் அழகை பார்க்காமல் அறிவை பார்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் படத்தின் இசையும் ஒளிப்பதிவும் படத்தொகுப்பம் கைவண்ணமும் அற்புதமாக ஒத்துழைக்கிறது நிச்சயம் தமிழ் சினிமா கொண்டாட வேண்டிய படம் மதிமாறன் இந்த படம் பார்த்த பிறகு யாரும் உருவகையில் கேலி செய்ய மாட்டார்கள் அறிவைப் பார்த்து மனிதனை எடை போடுவார்கள் என்பது திண்ணம் நல்ல படம் கொடுத்த இயக்குனருக்கு வாழ்த்துக்கள் தமிழ் சினிமா கொண்டாட வேண்டிய படம் மதிமாறன் இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்