கேப்டன் மில்லர் படத்தின் திரைவிமர்சனம்

பொங்கல் படங்களில் பிளாக்பஸ்டர் படமாக வந்திருக்கும் கேப்டன் மில்லர் படத்தின் திரைவிமர்சனம் பார்க்கலாம் வாங்க

நமது இந்திய நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன் நடக்கும் கதை .கேப்டன் மில்லர். அறுநூறு வருடங்களாக அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்களின் தலைவனாக கேப்டன் மில்லர்
தன் தாயின் மரணத்திற்கு யார் காரணம் என்று விடை தேடும் கேப்டன் மில்லர்
1930 களிலேயே பட்டியலின மக்கள் கோவிலுக்குள் செல்லக்கூடாது என்ற தடை இருந்தது
அதை உடைக்கும் கேப்டன் மில்லர் இன்று 2024 கூட அது நீடிக்கிறது 100 வருடங்களை நெருங்கும் போது கூட இந்த கொடுமையை என்னவென்று சொல்வது அந்த கொடுமைக்காக அன்றே துப்பாக்கி ஏந்தி போராடியவர் கேப்டன் மில்லர் மரியாதை வேண்டும் என்று ஆங்கிலேயனின் பட்டாளத்தில் [ராணுவம்] சேர வேண்டும் என ஆசைப்படுகிறார் கதாநாயகன் தனுஷ்[ஈசன்]. ஆனால், ஆங்கிலேயனை எதிர்த்து தனுஷின் அண்ணன் சிவராஜ்குமார் போராடி கொண்டிருக்கிறார்.

ஒரு பக்கம் வெள்ளைக்காரர்கள் கொடுமை, மறுபக்கம் ராஜ குடும்பத்தினர்கள் தன்னையும் தன் மக்களையும் தீண்டாமையில் நடத்தும் விதம் என வேதனையில் வாடும் தனுஷ், ஆங்கிலேயனின் பட்டாளத்தில் சேருகிறார். அதன்பின் அங்கு துப்பாக்கி சுடுதல் போன்ற விஷயங்கள் கற்றுக் கொண்டு, ஒரு சிறந்த சிப்பாயாக தேர்ச்சி பெறுகிறார்.
ஆனால் அங்கு நடக்கும் அநியாயங்கள் கண்டு துவண்டு போகிறார் தனுஷ்

தேர்ச்சி பெற்ற சிப்பாய்களை வைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடும் இந்திய மக்களை கொள்ள தனுஷுக்கு உத்தரவு வருகிறது. முதலில் அதிர்ச்சியில் குறைந்துபோகும் தனுஷ், பின் கண்களை மூடிக்கொண்டு சூட துவங்குகிறார்.

தனது மக்களை கொன்று விட்டோமே என்ற எண்ணத்தில் இருக்கும் தனுஷ், இனி இதை செய்ய கூடாது என முடிவு செய்கிறார். இதற்கு காரணமாக இருந்த, தனக்கு உத்தரவு கொடுத்த ஆங்கிலேய தலைமை வீரரை கொன்று, வெள்ளைக்காரர்கள் அங்கிருந்து தப்பித்து கொள்ளையர்கள் கூட்டணியில் சேருகிறார் தனுஷ் இப்போது தனுசுக்கு வெள்ளையர்களை எதிர்ப்பது சுலபமாகிவிடுகிறது அவர்களை குருவி போல சுட்டு தள்ள ஆயுதம் இருக்கிறது தனக்கென்று ஒரு கூட்டம் இருக்கிறது தன் இன மக்களை அழிக்கும் அந்த வெள்ளையர்களை ஆட்டம் ஆடி பாட்டு பாடி கொள்வது ஒரு வகை

இதன்பின், அவர் ஆங்கிலேயர்களால் தேடப்படும், மில்லர், கேப்டன் மில்லராக மாறுகிறார். அதன்பின் என்ன நடந்தது கேப்டன் மில்லராக தனுஷ் என்னென்ன இன்னல்களை எல்லாம் எதிர்கொண்டார், தன் காதலித்த வேல்மதி அவளின் கணவன் சாவுக்கு காரணமானவர் யார்? தன் அண்ணன் இறந்து போக நான் தான் காரணம் என்று கூறி குறுகி போகிறார் தனுஷ் இப்படி ஒவ்வொரு காட்சியிலும் அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார் தனுஷ்
நடிப்பு அரசன் என்று சொன்னால் தனுஷ் தான்

இயக்குனர்
ராக்கி மற்றும் சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன்
இயக்கி யுள்ளார்

இப்படம் பாதிக்கப்பட்ட மக்களின் வலியை சொல்லியுள்ளார் .
அவர்கள் அனுபவித்த கொடுமை களை சொல்லி இருக்கிறார் ஒரு கட்டத்துக்கு மேல் ஆயுதம் ஏந்தி போராட வேண்டும் என்று நிலைமை ஏற்பட்டால் நிச்சயம் போராடி தான் ஆக வேண்டும் அது ராஜாவாக இருந்தாலும் வெள்ளையர்களாக இருந்தாலும் சரி என்ற வித்தியாசமான கோணத்தில் படத்தை கொண்டு சென்றிருக்கிறார் விறுவிறுப்பாக!

இப்படத்தில் வரும் ஒவ்வொரு ஆக்ஷன் காட்சிகளும் வெறித்தனமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக இடைவேளை சண்டை காட்சி. ப்ரீ கிளைமாக்ஸ் மற்றும் கிளைமாக்ஸ் என முரட்டு சம்பவம் தான் கேப்டன் மில்லர். அதை சரியாக எடுத்துள்ளார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.
கிளைமாக்ஸ் கட்சியில் 700 வெள்ளையர்களை தனுஷின் சிறிய கூட்டம் எதிர்கொள்ளும் விதம் அனல் பறக்கிறது
என்ன செய்யப் போகிறாரோ தனுஷ் என்று பதப்பதைக்க வைத்து எதிரிகளை தூள் தூளாக்கும் அந்த சம்பவம் முரட்டு சம்பவம் தான் எழுந்து நின்று கைதட்ட வைக்கும் கிளைமாக்ஸ்

தீண்டாமை குறித்து பேசிய விஷயமும். எந்த சாமியும் கீழ் சாதி, மேல் சாதி பார்ப்பதில்லை என கூறி தனுஷ் பேசிய வசனமும் சூப்பர். இன்றும் தமிழகத்தில் சாதி பார்த்து பழகுபவர்களுக்கு சரியான செருப்படியாகும் மேலும் கதையை 5 அத்தியாயமாக பிரித்து கூறிய விதம் அழகாக இருந்தது. ஒவ்வொரு சேப்டரும் விருவிருப்பான பரபரப்பான கதையை சொல்கிறது காதலுக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் காதல் காட்சிகளும் இருக்கிறது கம்பீரமான காட்சிகள் இருக்கிறது

அதே போல் தனுஷை மூன்று வேடங்களில் காட்டிய விதமும் ரசிக்க வைத்தது. அவரின் கெட்டப்பு ஒவ்வொன்றும் ரசிக்க வைக்கிறது பட்டாளத்தில் சேரும்போது அப்பாவியாக அம்மாவின் உடன் இருக்கும்போது கொள்ளையர்கள் கூட்டத்தில் சேரும்போது தனுஷின் கதாபாத்திரத்திற்கு அவரது மேக்கப் கை கொடுக்கிறது. ஜி. வி. பிரகாஷின் இசை ஆர்ப்பாட்டம் அதிர வைக்கிறது சண்டைக் காட்சிகளில் ஜிவி போட்டுஇருக்கும் பின்னணி இசை உயிரோட்டமாக இருக்கிறது இடைவேளைக்கு முன் வரும் சண்டைக்காட்சி பின்னணி இசை அதிர வைக்கிறது காட்டுக்குள் ஒவ்வொரு வேனையும் மடக்கி மடக்கி தனுஷ் குறி வைக்க ஜிவி பிரகாஷ்
இசை ஆர்ப்பரிக்க ஹாலிவுட் படம் பார்ப்பது போல் இருந்தது

படத்தின் முதல் கதாநாயகன் தனுஷ் என்றால், இரண்டாவது கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ் என்று தான் சொல்ல வேண்டும். தனது வெறித்தனமான பின்னணி இசையின் மூலம் தியேட்டர் சீட்டில் அமர்ந்து இருக்கும் ரசிகனை கூட எழுந்து படத்தில் வரும் வில்லனை அடிக்க வைத்துவிடுவார் போல. அந்த அளவிற்கு கேப்டன் மில்லர் படத்திற்காக இசையமைத்துள்ளார். மூன்றாவது கதாநாயகன் படத்தில் ஒலிப்பதிவாளர் பிரமாண்டமான காடுகளை அட்டகாசமாக கண் முன்னிறுத்தி விழிகளை வியக்க வைக்கிறார். ஹாலிவுட் படத்துக்கு நிகரான ஒளிப்பதிவு

மேலும் படத்தின் முக்கிய விஷயம் என்றால் அது கலை இயக்கம் தான். எங்கேயுமே ஒரு குறையும் இல்லாமல் அழகாக கலை இயக்கத்தை செய்துள்ளார் கலை இயக்குனர் ராமலிங்கம். அதற்கு தனி பாராட்டுக்கள்.
அந்த கோயில் செட்டும் குடிசைகள் செட்டும் கண்ணுக்குள்ளே நிற்கிறது
தனுஷ் வழக்கம் போல் நடிப்பில் பட்டையை கிளப்பி விட்டார். அதே போல் கேமியோ ரோலில் நடித்த சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் இருவரும் கிளைமாக்ஸ் காட்சியில் திரையரங்கை தெறிக்க விட்டார். மூவரும் கிளைமாக்ஸில் வெள்ளையருக்கு எதிராக துப்பாக்கி ஏந்தி நிற்கும் போது இந்தியாவின் ஒற்றுமை ஓங்கி ஒலிக்கிறது ரசிகர்களின் கைதட்டல் விண்ணை பிளக்கிறது

அதே போல் நிவேதிதா சதீஷ், பிரியங்கா மோகன், இளங்கோ குமரவேல், மற்றும் வில்லனாக வந்த Edward Sonnenblick நடிப்பில் எந்த ஒரு குறையும் இல்லை. மற்ற அனைத்து நடிகர்களும் திரைக்கதையோடு ஒன்றிப்போகிறார்கள் வெள்ளையர்களாக நடித்திருக்கும் ஒவ்வொருவரின் நடிப்பும் பச்ச வாசல் அப்படியே பொருந்தி போகிறது

ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. சண்டை காட்சிகளை அருமையாக எடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி. ஹாலிவுட் தரத்தில் இருந்தது என்று கூறினால் அது மிகையாகாது. அதே போல் எடிட்டிங் வேற லெவல்.

பிளஸ் பாயிண்ட்

அருண் மாதேஸ்வரன் இயக்கம்

கலை இயக்கம், ஒளிப்பதிவு

சண்டை காட்சிகள்

தனுஷ் நடிப்பு

இளங்கோ குமரவேல், நிவேதிதா சதீஸ், பிரியங்கா மோகன் நடிப்பு

சிவராஜ்குமார் மற்றும் சந்தீப் கிஷன் கேமியோ
சத்தியஜோதி பிலிம்ஸ்க்கு விசுவாசத்துக்கு அடுத்து பொங்கல் வெற்றியில் பெரிதாக கை கொடுத்திருக்கிறது கேப்டன் மில்லர் ஆக்சன் காட்சிகளை விரும்பும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் கேப்டன் மில்லர் தனுஷின் ரசிகர்கள் மட்டுமல்ல வித்தியாசமான கதைகளை விரும்பும் எல்லோருக்கும் பிடித்திருக்கும் கேப்டன் மில்லர்

கேப்டன் மில்லர் காட்டில் வெற்றிக்கொடி பறக்கிறது