மெரி கிறிஸ்துமஸ் விமர்சனம்

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து வெற்றி படமாக அமைந்த “மெரி கிறிஸ்துமஸ் ‘எப்படி இருக்கிறது வாங்க பார்க்கலாம்.

ஒரு இரவு அதுவும் கிறிஸ்துமஸ் இரவு
ஊரெல்லாம் விழாக்கோலம் விஜய் சேதுபதி வருகிறார் அவர் யார் ஏழு வருடங்களாக எங்கு சென்றார் என்பது சஸ்பென்ஸ்

வீட்டுக்கு வந்து அம்மா இறந்து போன துக்கத்தை படுக்கையில் படுத்து ஞாபகப்படுத்துகிறார் அம்மாவின் கண்ணாடியை பார்த்து கலங்குகிறார்

அடுத்து ராஜேஷை சந்திக்கிறார் அவர் கொடுக்கும் உரிமை கொடுக்கிறார் பின் ஓட்டலுக்கு செல்கிறார் அங்கு ஒரு திருப்பம் ஏற்படுகிறது.
அது என்ன?

ஒருவர் விஜய் சேதுபதியிடம் நான் அவசர வேலையாக வெளியே செல்கிறேன் அதை கத்ரீனாவிடம் சொல்லிவிடுங்கள் என்று கூறுகிறார். விஜய் சேதுபதியும் அவரிடம் இந்த விஷயத்தை சொல்கிறார்.முதல் சந்திப்பிலேயே விஜய்சேதுபதிக்கு கத்ரீனாவை பிடித்துபோய் விடுகிறது.
இது காதலா? அன்பா? நட்பா? என்று திரைக்கதை அப்போதுதான் நீல்கிறது!

இதையடுத்து விஜய் சேதுபதி கத்ரினாவை பின் தொடர்கிறார். இருவரும் அந்த ஒரு இரவில் நண்பர்களாகி நெருக்கமாக பழகுகின்றனர்.
எங்கே அது காமத்தில் முடிந்து விடுவோம் என்ற பயம் ஏற்படுகிறது அப்படி நடக்கவில்லை.

அப்போது கத்ரீனா தன் குழந்தையை தூங்க வைத்துவிட்டு விஜய்சேதுபதியுடன் வெளியே செல்கிறார். இருவரும் சந்தோஷமாக அன்றிரவு கழித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்க்கும் பொழுது கத்ரீனாவின் கணவர் இறந்த நிலையில் கிடக்கிறார்.அது எப்படி நடந்ததுஅஙகே ஒரு டிவிஸ்ட்!

இறுதியில் கத்ரீனாவின் கணவரை கொன்றது யார்? இந்த கொலை எதற்காக நடந்தது?
விஜய் சேதுபதி யார்? நல்லவரா? கெட்டவரா? அவரின் நடத்தை கரீனாவுக்கு எந்த அளவுக்கு பயத்தை ஏற்படுத்தியது

அவர் துபாயில் இருந்து வந்தது உண்மையா? என்பதை சொல்லும் இடம் அங்கே ஒரு டூவிஸ்ட்!

நடிகர்கள்விஜய் சேதுபதி எப்போதும் போல் தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிக்க வைத்துள்ளார்.
தனது முன்னாள் காதலி ரோசியை பற்றி சொல்லும்போதும் அம்மாவை பற்றி சொல்லும் போதும் கத்திரினா வை காப்பாற்றும் போதும் விஜய் சேதுபதி இமயமலை அளவுக்கு அவர் நடிப்பில் உயர்ந்து நிற்கிறார் இந்தியில் இனி கொடிகட்டி பறப்பார் விஜய் சேதுபதி.

கதாநாயகியான கத்ரீனா கைஃப் தாயாகவும் காதலியாகவும் கவர்கிறார். திரையில் அழகாக தோன்றி ரசிகர்களை கவர்ந்துள்ளார். கத்ரீனாவின் வாய் அசைவிற்கு ஏற்ற தமிழ் டப்பிங் செய்து ஒரு முழுமையான தமிழ் படம் பார்த்த திருப்தியை ஏற்படுத்தியுள்ளனர்
கவர்ச்சியாகவே பார்த்து வந்த நாயகி கத்ரீனா இந்த படத்தில் நடிப்பின் மூலம் வியக்க வைக்கிறார்.

.போலீஸ் அதிகாரிகளாக வரும் ராதிகா சரத்குமார், சண்முக ராஜன் இருவரும் படத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்
அதுவும் அந்த கிளைமாக்ஸ் காட்சி செம பரபரப்பு சண்முகராஜா ஒன்று சொல்ல ராதிகா ஒன்று சொல்ல கடைசியில் அந்த குழந்தை ஒன்று சொல்ல என்ன நடக்கப்போகிறது என்று பரபரப்பு

’மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தை கிரைம் த்ரில்லர் பாணியில் இயக்கியுள்ளார் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன்.
அருமை ஹாலிவுட் பாணியில் அசத்தி இருக்கிறார்
இயக்குனர் ராம்கோபால் வருமாவின் உதய உதவியாளர் அவருடைய சாயல் இல்லாமல் மென்மையான பாணியில் ஒரு புலனாய்வுத் துறை கதையை அருமையாக கொடுத்திருக்கிறார்

யார் கொலை செய்தார்கள் என யூகிக்க முடியாதவாறு காட்சிகளை இயக்கியுள்ளார். முதல் பாதி சற்று மொதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் மிரட்டியுள்ளார். கிளைமேக்ஸ் காட்சியை மிகவும் அழகாக காட்சிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார்.இசைகிரைம் த்ரில்லர் படத்திற்கு ஏற்றார் போல் இசையமைத்துள்ளார் ப்ரீதம். பின்னணி இசையில் ஸ்கோர் செய்துள்ளார்.
படத்தின் இசை உயிரோட்டமாக இருக்கிறது முற்றிலும் ஹாலிவுட் பனி 70 80களில் கேட்ட அந்த இசைநையும் திகில் படத்துக்கு இன்னும் பலம்

ஒளிப்பதிவுமது நீலகண்டன் ஒளிப்பதிவு கதையுடன் நம்மையும் பயணிக்க வைக்கிறது.படத்தொகுப்புபூஜா லதா சுர்தி படத்தொகுப்பில் அசத்தியுள்ளார்.காஸ்டியூம்அனிதா ஷ்ராஃப் அடாஜானியா மற்றும் சபீனா ஹல்தார் கதாபாத்திரத்திற்கு ஏற்ற காஸ்டியூமை டிசைன் செய்துள்ளனர்.புரொடக்‌ஷன்டிப்ஸ் பிலிம்ஸ் லிட் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.

ஒரு வெற்றி படத்துக்கு தேவையான எல்லா அம்சங்களும் பொருந்தி இருக்கிறது காதல் காமம் ஆகவில்லை நட்பு விரசமாகவில்லை அன்பு கலங்கப்படுத்தவில்லை ஒரு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை இரண்டு இதயங்கள் எப்படி பரிமாறிக் கொண்டனர் என்று அருமையான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் அவருக்கும் அற்புதமான நடிப்பில் மிரட்டியிருக்கும் மக்கள் செல்வனுக்கும் நமது வாழ்த்துக்கள்