நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மிஷன் சாப்ட்டர்
படம் எப்படி இருக்கு? வாங்க திரைவிமர்சனத்தில் பார்க்கலாம்.
இயக்குனர் விஜய் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை எமி ஜாக்சன் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் நிமிஷா சஜயன், பரத், இயல் போப்ன்னா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
படம் முழுக்கவே ஆக்ஷன் காட்சி அசத்தியிருக்கிறதா அலுப்பை தட்டுகிறதா?
லண்டன் மாநகரம் ஜொலிக்கிறதா? அல்லது சிறைச்சாலை திகில் ஊட்டுகிறதா?
அருண் விஜய் கதாபாத்திரத்துக்கு பொருந்தி போகிறாரா? அல்லது மிரட்டி இருக்கிறாரா?
ஹாலிவுட் படம் பார்த்த திருப்தி இருக்கிறதா? அல்லது சராசரி தமிழ் படமா? வாங்க பார்க்கலாம்.
கதைக்களம்:
பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி இருக்கிறார்கள்
என்று ஆரம்பக் காட்சியிலேயே மிரட்டலாக சொல்லி இருக்கிறார்.
இவர்களுடைய நோக்கம் இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டினை தடுக்க வேண்டும் என்பதுதான். அடுத்து அருண் விஜய் தன் குழந்தையை காப்பாற்றுவதற்காக 30 லட்சம் ரூபாய்க்காக தன்னுடைய காரை தன்னிடம் இருக்கும் நகைகளை எல்லாம் விற்றுக் கொண்டிருக்கிறார். தீவிரவாதம் ஒரு பக்கம் மும்முரமாக போய்க்கொண்டிருக்கிறது. அருண் விஜய் ஒரு பக்கம் பணத்தை புரட்டிக் கொண்டிருக்கிறார்.
இயக்குனர் அங்கே ஒரு ட்விஸ்ட் வைக்கிறார் இந்த ஆரம்ப கால காட்சிகள் அருமையாக போகிறது.
அடுத்து தீவிரவாதிகள் தங்களுடைய கூட்டாளிகளை மீட்க இந்தியாவில் இருந்து வெளியேறி லண்டனுக்கு செல்கிறார்கள்.
கதைக்களம் லண்டன் செல்கிறது அருண் விஜய் தன்னுடைய குழந்தை ஆபரேஷனுக்காக லண்டன் போகிறார் தீவிரவாதிகளும் லண்டனிலே அருண் விஜய் லண்டன் போகிறார் என்ன நடக்கப் போகிறது என்று பரபரப்பு தொற்றிக் கொள்கிறது.
குழந்தைக்காக மருத்துவமனையில் அருண் விஜய் அட்மிட் செய்துவிட்டு ஹவாலா பணத்தை மாற்றுவதற்காக பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போது அங்கு பணத்தை பறிக்க வரும் கும்பல் கூட்டம்
விஜயுடன் மோதும் அந்த சண்டை காட்சி ஹாலிவுட் தரம்.
ஒருவர் அருண் விஜய் பர்ஸைதிருட பார்க்கிறார். இதை அருண் விஜய் தடுக்க நினைக்கிறார். இதனால் திருடர்களுடன் சண்டையில் அருண் விஜய் ஈடுபடுகிறார். பின் அருண் விஜயை போலீஸ் தீவிரவாதிகள் அடைக்கப்பட்ட சிறையில் அடைக்கின்றார்கள்.
இன்னொரு பக்கம் சிறையில் இருக்கும் தீவிரவாதிகளை மீட்க சிறை முழுவதும் ஹாக் செய்யப்படுகின்றது. அப்போது ஜெயிலில் இருக்கும் குற்றவாளிகளும் தீவிரவாதிகளும் தப்பிக்க முயற்சி செய்கிறார்கள். இது அருண் விஜய்க்கு தெரிய வருகிறது. இவர்களை தடுக்க அவர் முயற்சி செய்கின்றார். இறுதியில் தீவிரவாதிகள் தடுக்கப்பட்டார்களா? அருண் விஜய் குழந்தைக்கு ஆபரேஷன் செய்யப்பட்டதா? அருண் விஜய் விடுதலை செய்யப்பட்டாரா? தீவிரவாத கும்பலால் அருண் விஜய்க்கு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.
ஜெயிலராக வரும் எமி ஜாக்சன் அவரது காதலராக வரும் அந்த லண்டன் சூது போலீஸ் சிறைச்சாலைக்குள் இருக்கும் பஞ்சாப்பை சேர்ந்த இந்தியராக வரும் நடிகர் நாசர் அவர்களின் மகன் அருண் விஜய் இவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து தீவிரவாத கும்பலின் சதித் திட்டத்தை முறியடித்தார்களா?
இல்லையா? என்பது இந்த படத்தின் கதை.
இயக்குனர் ஆக்சன் காட்சிகளில் கவனம் கொண்டு சென்றுபடத்தை இயக்கி இருக்கிறார்.
. படம் முழுக்கவே வில்லன் கேமரா முன் என்று தான் பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய ஆக்ஷன் ஒன்றுமே இல்லை. இறுதி ஒரு சண்டை மட்டும்தான் அவர் செய்கிறார்.
ஆனால் அதுவும் மிரட்டலாக இருக்கிறது அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? என்ற பரபரப்பையும் ஏற்படுத்துகிறது படம். முழுக்க ஒரே இடத்தில் நிறுத்தி வைத்து, ஒரு வில்லத்தனத்தை கொடூரமாக காட்டியிருப்பது வித்தியாசமான சிந்தனை.
எமி ஜாக்சன் லண்டன் போலீசாக வந்து ஜெயிலராக அருண்விஜய்க்கு உதவி செய்கிறார்.
இல்லை இல்லை அருண் விஜய் எமி ஜாக்சனுக்கு உதவி செய்கிறார். தமிழன்டா !இந்திய போலீஸ் டா! என்று அந்த சிறைச்சாலைக்குள் நடக்கும் சண்டைக் காட்சியில், அசித்திருக்கிறார் அருண் விஜய். லண்டன் போலீசுக்கு தண்ணி காட்டியிருக்கிறார் அருண் விஜய் அவ்வளவு அற்புதமான உழைப்பு அருண் விஜய்க்கு
தமிழ் சினிமாவில் ஒரு ஆக்சன் நாயகனாக உயர்கிறார் கம்பீரமான தோற்றம்!
கடுகடுப்பானமுகம்,
குழந்தையிடம் பாசம் என நடிப்பில் அசத்தியிருக்கிறார் அருண் விஜய் அவருடைய நடிப்பு பாராட்டை பெற்றிருக்கிறது. அருண் விஜயின் நடிப்பு ஓகே. கதைக்களம் நன்றாக இருக்கிறதுஅதை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் கவனம் செலுத்தி இருக்கிறார்.. சமீப காலமாக அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த படங்கள் நன்றாக இருக்கும் நிலையில் இந்த படம் அவருக்கு வெற்றிகரமாக அமைந்திருக்கிறது.
ப்ளஸ் என்ன வாங்க பார்க்கலாம்
அருண் விஜய் நடிப்பு ஓகே
அவரின் உடல் மொழி சண்டை காட்சிகள் அதற்காக மிகவும் சிரமப்பட்டு எடுத்த பயிற்சிகள் திரையில் ரசிக்க வைக்கிறது ஒரு ஜெயிலருக்கே உண்டான கம்பீரம்.
திரைக்கதை நன்றாக இருக்கிறது
அருண் விஜய் ஏன் லண்டன் போகிறார்?
தீவிரவாதிகள் முகாம் லண்டனில் செயல்படுகிறது.
எல்லாம் ஒன்று சேர்ந்து திரைக்கதைக்கு மெருகூட்டுகிறது.
படத்தின் ஒளிப்பதிவு லண்டன் காட்சிகள் அழகோ அழகு அந்த இரவு நேர படப்பிடிப்பில் நிமிஷாபாலத்தில் மீது நடப்பது,
லண்டன் பஸ் அந்த மருத்துவமனை, லண்டன் வீதிகள் என எல்லாமே ரசிக்க வைக்கிறது.
தமிழ்நாட்டில் அருண் விஜய் ஜெயிலராக இருக்கும் கோவை மாவட்டத்தில் குண்டுவெடிப்புக்கு பிளான் போடும் தீவிரவாதிகள் அந்த காட்சிகளும் நன்றாக இருக்கிறது.
அப்பாவுக்குத் தான் ஆபரேஷன் என்று நம்பும் அந்த குழந்தை இயல் நடிப்பு நன்றாக இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் வில்லன்கள் அந்த குழந்தையை கடத்தும் பொழுது அருண் விஜய் சொல்லும் அந்த ஒற்றை வசனம்
என் குழந்தைக்கு பாட்டி கதை சொல்லி வளர்க்கவில்லை வீரமான கதை சொல்லி வளர்ந்திருக்கிறேன் என்று சொல்லும் போது குழந்தை தப்பிப்பது புத்திசாலித்தனமான இயக்குனரின் சிந்தனை அந்த காட்சி ரசிக்க வைக்கிறது.
கேரளா வரவாக லண்டன் மருத்துவமனையில் பணிபுரியும் நிமிஷா மனித நேயத்தின் மறுபக்கமாக திகழ்வது ஆறுதலாக இருக்கிறது குழந்தையை காப்பாற்ற துடிக்கும் நிமிசா படத்தையும் காப்பாற்றி இருக்கிறார்.
சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் சில்வா, படத்திற்காக மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார் இடைவேளைக்கு பிறகு அதிரடி ஆக்சன் களம் சிறைச்சாலைக்குள் அத்தனை கூட்டங்களையும் சமாளித்து அற்புதமான ஆக்சன் கட்சியை வடிவமைத்திருக்கிறார்.
ஒளிப்பதிவு அருமை கேமரா மற்றும் ஆக்சன் காட்சிகளில் கவனம் செலுத்தி இருக்கிறார்.
பின்னணி இசை நன்றாக இருக்கிறது. படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது.
காஸ்ட்யூமரின் மெனக்கெடல்
நன்றாகவே தெரிகிறது அருண் விஜய்க்கு பொருந்தி போகிறது காஸ்டியூம் நிமிஷாவுக்கு, தீவிரவாதியான வில்லனுக்கு லண்டன் சிறைச்சாலைக்குள் இருக்கும் அத்தனை கைதிகளுக்கும் சிறப்பாக தேடிப் பார்த்து வடிவமைத்திருக்கிறார் காஸ்ட்யூமர்.
இயக்குனர் ஏ எல் விஜய் இவர் மென்மையான படங்களுக்கு சொந்தக்காரர் நிஜத்திலும் மென்மையாகத்தான் பேசுவார் மென்மையாக நடந்து கொள்வார்.
அவரிடம் இப்படி ஒரு ஆக்சன் படம் எதிர்பாராதது.
காலத்திற்கு ஏற்ப, தமிழ் ரசிகர்களின் ரசனை க்கேற்ப,
கதையை தேர்வு செய்து, அதற்கான நடிகர்களை ஒருங்கிணைத்து,
திரைக்கதையை வடிவமைத்து,
இப்படத்தை வெற்றி படமாக்கி இருக்கிறார் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
படத்திலும் நடிகர்களுடைய கதாபாத்திரத்தை அழுத்தமாகவே சொல்லி இருக்கிறார்
கொஞ்சம் லாஜிக் குறைபாடுகள்
இருக்கத்தான் செய்கிறது அருண் விஜய் சிறைச்சாலைக்குள் போராடிக் கொண்டிருக்கும் பொழுது லண்டன் போலீசார் எங்கே என்ற கேள்வியும் எழுகிறது?
மொத்தத்தில் மிஷன் சாப்டர் 1-
அருண் விஜயின் சண்டைக் காட்சிகளும்,
ஒரு நல்ல பாசமான அப்பாவாகவும்,
நல்ல ஜெயிலராகவும் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
எமி ஜாக்சன் நீண்ட நாட்களுக்கு பின் வந்தாலும் ஒரு நல்ல கடமை தவறாத ஜெயிலராக மனதில் நிற்கிறார்.
நிமிஷா லண்டன் சென்றாலும் மருத்துவமனையில் பணிவு இருந்தாலும் மனித நேயம் மாறாத ஒரு நர்சாக வந்து,
நம் மனதில் இடம் பிடிக்கிறார்
அந்த இயல் குழந்தையின் பாசமான நடிப்பு மனதில் இடம் பிடித்துக் கொள்கிறது.
இயக்குனர் திரைக்கதையை கொண்டு சென்று விதம்,
அது லாஜிக் மீராமல் பார்த்துக் கொண்டது பரபரப்பான படமாக வந்திருக்கிறது.
லைக்கா ப்ரொடக்சன்ஸ்
இந்த படத்தில் இணைந்து இருப்பது படத்திற்கு மேலும் பலத்தை கொடுக்கிறது.
ஜிவி பிரகாஷின் இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது கண்ணே பாடல் ரசிக்க வைக்கிறது.
பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.
ஏ.எல். விஜய் படங்கள் என்றால் டெக்னிக்கலாக ஸ்ட்ராங்காகத்தான் இருக்கும். இந்த படத்திலும் அதில் எந்தவொரு குறையும் இல்லை. மதராசப்பட்டினம் படத்தில் எமி ஜாக்சனை கோலிவுட்டில் அறிமுகப்படுத்திய ஏ.எல். விஜய் மீண்டும் அவரை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்திருக்கிறார். படம் முழுக்க அவரும் அருண் விஜய்யும் செய்யும் ஸ்டன்ட் காட்சிகள் நல்லாவே படமாக்கப்பட்டுள்ளன.
: படத்தின் மேக்கிங், பின்னணி இசை, அருண் விஜய் மற்றும் எமி ஜாக்சனின் நடிப்பு என படத்திற்கு பல பிளஸ்கள் உள்ளன. ஆக்ஷன் விரும்பிகளை கவரும் விதமாக பல சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மொத்தத்தில் மிஷன் சக்சஸ்
