பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ஹனுமான்.
இப்படத்தை
பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளனர் இதில், நடிகர் தேஜா சஜ்ஜா நடித்துள்ளார். இப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானீஸ் உள்ளிட்ட உலக மொழிகளிலும் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார்.. இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், அனுதீப் தேவ், ஹரி கௌர, ஜெய் கிரிஷ், கிருஷ்ணா சௌரப்லு ஆகியோர் சேர்ந்து இப்படத்திற்கு இசை அமைத்துள்ளனர்.
இந்தப் படம் ராம பக்தர்களை கவர்ந்ததா? அனுமானுக்கு சிறப்பு சேர்த்ததா? இந்த படத்தில் நடித்த நாயகனுக்கு சூப்பர் ஹீரோ அந்தஸ்து கிடைத்ததா ?இந்த படம் மூலம் சொல்ல வந்த கருத்துக்கள் என்ன?
ஹனுமான் படத்தின் முதல்பாதி சூப்பரா இருக்கு. அதே போல VFX, விஷூவல் மற்றும் சூப்பர் ஹீரோ கதை சொல்லிய விதம் அருமை
தேஜ சஜ்ஜா, வரலட்சுமி மற்றும் கெடப் ஸ்ரீனு காமெடி ஹைலைட் என பதிவிட்டுள்ளார்.
மாஸ கிளைமாக்ஸ் 30 நிமிடத்தை மீண்டும் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அந்த அளவிற்கு அந்த கிளைமாக்ஸ் காட்சி இருந்தது. மேலும், விஎஃப்எக்ஸ், பின்னணி இசை என அனைத்தும் படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கிறது ஹனுமனாக நடித்த தேஜ சஜ்ஜாவின் நடிப்பு சூப்பர், ஒவ்வொருவரும் அவர்களின் கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளனர் வரலட்சுமி நடிப்பு அருமையாக இருக்கிறது வினை மிரட்டி இருக்கிறார் நாயகி பாடலுக்கு மட்டுமில்லாமல் நடிக்கவும் செய்திருக்கிறார். ஒளிப்பதிவு பின்னணி இசை காஸ்ட்யூமர் என எல்லாமே கலந்து கட்டி படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள்.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒவ்வொரு காட்சியும் இருக்கையின் நுனியில் அமரவைத்து விட்டனர் .
தியேட்டர் மொத்தமும் ஜெய் ராம் கோஷம் ஒலித்ததை கேட்கும் போது, கூஸ்பம்ஸ் என்று தான் சொல்லவேண்டும்.இப்படி ஒரு தரமான படத்தை கொடுத்த இயக்குநர் பிரசாந்த் வர்மாவுக்கு வாழ்த்துக்கள்.
மற்றும் VFX, விஷூவல், வரலட்சுமி சரத்குமாரின் நடிப்பு என எதையுமே குறை சொல்லும்படி இல்லை, அனைத்தும் ரசிக்கும் படி உள்ளது .இப்படத்தின் கதை என்ன?
அனுமந்து (தேஜா) அஞ்சனாத்ரி என்ற கிராமத்தில் தனது சகோதரி அஞ்சம்மாவுடன் (வரலட்சுமி) ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழுந்து வருகிறார்.
ஒரு ஸ்மால் திருடன். இந்த கிராமம் வளர்ச்சியடையாததாகவும், கிட்டத்தட்ட உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டதாகவும், இயற்கை மற்றும் அதைச் சுற்றி ஒரு பெரிய அனுமன் சிலை இருப்பதாகவும் காட்டுகிறார்கள். தனது வாழ்க்கையில் இன்னும் நிறைய செய்ய அனுமதிக்கும் ஒரு டோட்டெமைக் கண்டுபிடிக்கும்போது, அது மைக்கேல் (விஜய்) மற்றும் அவரது நண்பர் சிரி (வெண்ணிலா கிஷோர்) ஆகியோரின் கவனத்தை ஈர்க்கிறது. தொடர்ச்சியான நிகழ்வுகள் அஞ்சனாத்ரியையும் உலகத்தையும் சிக்கலில் ஆழ்த்துகின்றன, மேலும் அனுமந்து சவாலை எதிர்கொள்கிறார்
காகிதத்தில் நீங்கள் அனுமேனைப் பார்க்கும்போது, அது உங்கள் குக்கீ கட்டர் சூப்பர்ஹீரோ மூலக் கதையைத் தவிர வேறு எதையும் உணர்ந்து இருக்கமாட்டார்கள். ஒரு அடிமட்ட வீரர் இருக்கிறார். அதை நிரூபிக்கும் வரை தன் நண்பனுக்கு சூப்பர் பவர் இருக்கும் என்பதை நம்ப மறுக்கும் ஒரு நகைச்சுவைக்கார நண்பன் (கெட்டப் ஸ்ரீனு). பங்குகள் உயரும் வரை அனைத்தும் வேடிக்கையாகவும் விளையாட்டுகளாகவும்காட்டப்படுகிறது, இயக்குனர் பிரசாந்த் அதையெல்லாம் நன்றாகச் சிந்தித்து செயல்ப்பட்டு இருக்கிறார்.
மொத்தத்தில் இந்த படம் கற்பனை கெட்டா காட்சிகளையும் வீர தீர சாகசங்கள் புரியும் ஒரு சூப்பர் ஹீரோவையும் அவருக்கு துணை நிற்கும் ஒரு அக்காவையும் இயற்கை அழிக்க நினைக்கும் வில்லன்களான வினை மற்றும் அவர் கூட்டாளிகளையும் நன்றாகவே படம் பிடித்துக் காட்டி இருக்கிறது.
அனுமன் என்றாலே வீரம் புத்திசாலித்தனம் பொதுவுடமை பிறருக்கு சேவை செய்வது என்ற கதாபாத்திரம் நான் எனக்கு நன்றாக புரிந்து இருக்கிறது 12 கோடி ரூபாய் பட்ஜெட் எடுக்கப்பட்ட படம் தெலுங்கில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது தேஜாவுக்கு பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது வரலட்சுமி இன்னொரு முகத்தை நாம் காணலாம் மொத்தத்தில் இருந்து அனுமன் ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஸத்தோடு வெற்றியிலக்கை ஏற்றி இருக்கிறார்
