புளு ஸ்டார் திரை விமர்சனம்

அரக்கோணம் பகுதி தான் கதை களம்

: கிரிக்கெட்டே வாழ்க்கையாகக் கருதும் இரு அணிக்கும் பொதுவாக ஒரு பிரச்னை வருகிறது. அப்பிரச்னை அவர்களின் வாழ்க்கையிலும் சமூகம் குறித்த பார்வையிலும் தாக்கத்தையும் மாற்றத்தையும் எப்படி ஏற்படுத்துகிறது. இறுதியில் இரு அணிகளும் அப்பிரச்னையை எப்படி அணுகி, அதிலிருந்து மீண்டார்கள் என்ற கேள்விக்குப் பதில் சொல்கிறது
அறிமுக இயக்குநர் எஸ்.ஜெயக்குமாரின் ‘
இயக்கிய புளு ஸ்டார்

படம் முழுக்க ஹீரோ ரஞ்சித்தின்(அசோக் செல்வன்)காதல் டிராக்கை மட்டும் காட்டவில்லை ஜெயகுமார். பிற கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உள்ளார்
அதுதான் இப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி திரைக்கதைகளம் வித்தியாசம்

. பகவதி பெருமாளின் பிளாஷ்பேக் தியேட்டரில் இருப்பவர்களை கவர்கிறது
இப்படத்தில் அசோக் செல்வன், ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படத்தின் ரைட்டிங் சூப்பர். சொல்ல வந்த விஷயத்தை தெள்ளத்தெளிவாக கூறியுள்ளனர். திரைக்கதை எந்த வகையிலும் சொல்ல வந்த விஷயத்தில் இருந்து வெளியே செல்லவில்லை
அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு இருவருடைய நடிப்பும் பர்ஃபார்மென்ஸ் குட். .

வழக்கமான ஹீரோயின் போல் இல்லாமல் மாறுபட்ட வேடத்தில் அசத்தியுள்ளார் கீர்த்தி பாண்டியன். கிரிக்கெட் இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. அதில் அரசியல் பார்வையை பற்றியும் பேசியுள்ளனர்.
இயக்குனர் பா ரஞ்சித்தின் தயாரிப்பு என்றாலும் அவருடைய பட சாயலில் தான் ப்ளூ ஸ்டார் படம் அமைந்திருக்கிறது. சாதிய அரசியல் பேசும் படமாக தான் ப்ளூ ஸ்டார் வெளியாகி இருக்கிறது. படத்தின் கதாநாயகன் அசோக்செல்வன் ரஞ்சித் என்ற கதாபாத்திரத்தில் ப்ளூ ஸ்டார் என்ற கிரிக்கெட் அணியில் இருக்கிறார்.

அவருக்கு எதிர் அணியாக சாந்தனு ராஜேஷ் என்ற கதாபாத்திரத்தில் ஆல்ஃபா பாய்ஸ் என்ற அணியில் இருக்கிறார்கள். பொதுவாகவே இரண்டு கிரிக்கெட் அணிகள் இருந்தால் அவர்களுக்குள் என்ன பிரச்சனை நடக்கும் என்பதை எதார்த்தமாக இயக்குனர் கூறியிருக்கிறார்.
இந்த படத்தை பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் தயாரித்திருக்கிறது

கதைக்களம்:
கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து இயக்குனர் கதைக்களத்தை கொடுத்திருக்கிறார். ஊர் தெரு மற்றும் காலனி தெரு மக்களுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை குறித்து தான் படத்தில் பேசப்பட்டிருக்கிறது. அதோடு ஊர் தெரு மற்றும் காலனி தெரு மக்கள் இணைந்தால் என்ன நடக்கும்? என்பதையும் இயக்குனர் படத்தில் காண்பித்திருக்கிறார். குறிப்பாக, படத்தில் காதல் காட்சிகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது.

படத்தின் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை இயல்பான காட்சிகளே தான் இருக்கிறது. செயற்கைத் தனமாக எந்த காட்சிகளும் இல்லை. நகைச்சுவையும் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. படத்தின் பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. கோவிந்த் வசந்தனின் பின்னணி இசை கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது. மேலும், கிரிக்கெட் மீது ஆர்வம் உள்ள அனைவரும் ரசிக்கும் படியாக இந்த படத்தை இயக்குனர் கொடுத்து இருக்கிறார்.

கிரிக்கெட்டில் இருக்கும் அரசியலையும் இயக்குனர் காண்பித்து இருக்கிறார். அதுவும் பெரிதாக பாதிக்காத வகையில் கொடுத்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. ஊர் தெரு மற்றும் காலனி தெரு மக்களிடையே ஏற்படும் அரசியல்கள், காலனி தெரு மக்களுக்கு ஏற்படும் அவமானங்களை படத்தில் தெளிவாக காண்பித்து இருக்கிறார்கள். படத்தில் இறுதியில் வரும் காதல் காட்சிகள் எல்லாம் படத்தினுடைய அழுத்தத்தை குறைக்கும் வகையில் இருக்கிறது. காலனி தெரு பையனாக அசோக் செல்வனும், ஊர் தெரு பயனாக சாந்தனுவும் நடித்திருக்கிறார்கள். இருவருடைய நடிப்பும் சிறப்பாக இருக்கிறது.
ஒரு வெற்றி படத்துக்கு தேவையான எல்லா அம்சங்களும் இந்த படத்தில் இருக்கிறது காதல் மோதல் கலகலப்பு அவமானம், நட்பு, அண்ணன் தம்பி அம்மா மகன் அப்பாவின் உருக்கம் ஊர் மக்களின் எதிர்பார்ப்பு இப்படி எல்லாம் கலந்த கலவையாக இந்த ப்ளூ ஸ்டார் வந்திருக்கிறது அசோக் செல்வன் வேறு ஒரு தளத்தில் காண்பிக்கப்பட்டிருக்கிறார் சாந்தனு இந்த படத்தின் மூலம் மீண்டும் நடிப்பில் புதிய பரிமாணம் காட்டியிருக்கிறார் கீரீத்தி காதல் காட்சிகளை கவனம் செலுத்தி இருக்கிறார் அம்பயராக வருபவர் மற்றும் கிரிக்கெட் நண்பர்கள் கோபால் நடித்திருக்கும் பைனான்சியர் குமரவேல்
அம்மா, இப்படி எல்லோருமே படத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறார்கள் இளைஞர்கள் மட்டுமல்ல , குடும்பத்தோடு, பார்க்கக்கூடிய படமாக இந்த ப்ளூ ஸ்டார் வந்திருக்கிறது உனக்கெல்லாம் கிரிக்கெட் விளையாட என்ன தகுதி இருக்கு போன்ற வசனங்கள் கவனம் பெறுகிறது எல்லா வகையிலும் ரசிக்கும் வண்ணம் இந்த ப்ளூ ஸ்டார் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜெயக்குமார் முதல் படத்திலேயே சிக்ஸர் எடுத்திருக்கிறார்.