சிங்கப்பூர் சலூன் திரை விமர்சனம்

வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கும் சிங்கப்பூர் சலூன் திரை விமர்சனம் பார்க்கலாம் வாங்க…

கனவு காணுங்கள் என்று சொன்னார்”ஐயா” ‘அப்துல் கலாம் அவர்கள் . அப்படி
காணும் கனவு பெரிதாக இருக்க வேண்டும் அதற்காக முயற்சி செய்ய வேண்டும் அதையே உயிராக நினைத்து வாழ வேண்டும் என்ற தத்துவத்திற்கு ஏற்ப சின்ன வயதில் ஹேர்ஸ்டைலிஸ்டராக வர வேண்டும் என்று ஆசைப்படும் நாயகன் அதை அடைந்தாரா? இல்லையா ?என்பதை தன்னம்பிக்கையோடு சொல்லும் படம் சிங்கப்பூர் சலூன்.

எத்தனை தடைகள் வந்தாலும் அதை உடைத்து மனம் தளராமல் இறுதியில் வெற்றி காணலாம் என்பதை சொல்லும் படம் சிங்கப்பூர் சலூன்.

முதல் பாதியில் காமெடியாகவும்
இரண்டாம் பாதியில் எமோஷனல் ஆகவும் படத்தின் முடிவில் தன்னம்பிக்கை ஜெயிக்கும் என்று சொல்லி இருக்கிறது இந்த படம்.

ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், லால், மீனாட்சி சவுத்ரி, தலைவாசல் விஜய் நடித்துள்ளனர். தன்னுடைய கனவை நனவாக்க முயற்சிக்கும் ஆர் .ஜே பாலாஜி அவர் சந்திக்கும் போராட்டங்களை கதைக்களமாக வைத்து இந்தப் படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் கோகுல். காமெடி என்டர்டெயினராக வந்துள்ளது
அதேசமயம் கருத்தாழமிக்க படமாகவும் வந்துள்ளது.

அருமையாக நடித்திருக்கிறார் சத்யராஜ்
படத்தில் அதிகமாக ஸ்கோர் செய்வது சத்யராஜ்தான். கஞ்சத்தனம் மிகுந்த மாமனாராக அவர் செய்யும் அலப்பறைகள் காமெடி தனி ரகம் அதிலும் இடைவெளிக்கு முந்தைய பத்து நிமிடங்கள் செம லூட்டி! அவர் என்ட்ரி லேட்டாக இருந்தாலும் அவரது நகைச்சுவைதான் முதல் பாதியின் ஹைலைட்.

படத்தின் ஆரம்பத்தில் அரை மணி நேரம்
சிறுவயது காட்சிகளில் நகைச்சுவையைச் சரியான அளவில் சேர்த்து ஜாலியாக நம்மை சிரிக்க வைத்திருப்பதில் வெற்றிகாண்கிறார் இயக்குநர்
அவருக்கு நமது பாராட்டுக்கள்:
பஷீர், கதிர் இருவரின் நட்பு கடைசி வரை பிரியாமல் இருப்பது
நட்பின் ஒற்றுமையை காட்டுகிறது.

வாழ்க்கையில் தனக்கு விருப்பமான வேலையில் முன்னேறத் துடிக்கும் ஆர் ஜே பாலாஜி ஒரு கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து பெரிய ‘ஹேர் ஸ்டைலிஸ்ட்’ ஆக விரும்பும் ஒரு இளைஞன் என்னவெல்லாம் பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதை சொல்லியிருக்கிறார்
இயக்குனர்.

வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்
கோமாளி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் வரிசையில் மீண்டும் ஒரு வெற்றிப் படம் வேல்ஸ் கம்பெனி கொடுத்திருக்கிறது
தன்னம்பிக்கையை மையமாக வைத்து,

இதுவரை தமிழ் சினிமாவில்
தன்னம்பிக்கை சார்ந்த கதைக்களம் நிறைய அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், முதல் முறையாக முடி திருத்தம் செய்யும் தொழிலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் சிங்கப்பூர் சலூன்.தான்
வித்தியாசமாக யோசித்து இருக்கிறார் இயக்குனர் அதுவே படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.

கதைக்களம்

கிராமத்தில் முடி திருத்தம் செய்யும் சாச்சா-வை பார்த்து முடி திருத்தம் செய்யும் வேலையின் மீது ஹீரோ ஆர்.ஜே. பாலாஜிக்கு ஆசை ஏற்படுகிறது. அவரிடம் முடி திருத்தம் செய்யும் வேலையை கற்றுக் கொள்கிறார்.
ஒரு மனம் நலம் குன்றியவரை முடி திருத்தம் செய்து அழகாக மாற்றியதைக் கண்டு முடி திருத்தம் மூலம் ஒரு மனிதனை மாற்றலாம் என்பதை உணர்கிறார்
ஆர். ஜே பாலாஜி
தந்தையின் கனவுக்காக இன்ஜினியரிங் படிக்கும் அவர் நல்ல வேலை கிடைத்ததும் கூட அதை உதறிவிட்டு முடி திருத்துபவராக வர வேண்டும் என்ற ஆசையில் கனவு காண்கிறார்.

படித்த முடித்தவுடன் சிங்கப்பூர் சலூன் என தன்னுடைய சொந்த சலூனை துவங்க வேண்டும் என ஆசைப்படும் ஆர். ஜே. பாலாஜி, கஷ்டப்பட்டு தனது சொந்த சலூனையும் ஆரம்பிக்கிறார்.
அந்த சலுகை ஆரம்பிக்க மூன்று கோடி ரூபாய் தேவை மாமனார் சத்யராஜ் இடம் கேட்க 300 ரூபாய் கொடுக்கிறார் அது எப்படி மூன்று கோடியாக மாற்றுகிறார்
என்பது சுவாரசியமான எபிசோட் அந்த இடத்தில் ரோபோ சங்கரும் சத்யராஜ் அடிக்கும் லூட்டி தியேட்டரே குலுங்கி குலுங்கி சிரிக்கிறது.

நினைத்தபடி சிங்கப்பூர் சலூன் என்ற பெயரில் சலூனை துவங்கும் ஆர்.ஜே. பாலாஜிக்கு அதன்பின் பல சோதனைகள் வர தொடங்குகிறது.
சோதனை அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மிக மோசமாக அமைகிறது.

இந்த சோதனைகளை எல்லாம் அவர் எப்படி எதிர்கொண்டார், இதன்பின் என்ன நடந்தது? இறுதியில் தனது சிங்கப்பூர் சலூனை பெரிய அளவில் கொண்டு வந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
ஆர் ஜே பாலாஜி படத்துக்கு படம் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார் இந்த படம் இளைஞர்களை ஊக்கப்படுத்தும்.
விதமாக உள்ளது
இளைஞர்கள்
நன்றாக படியுங்கள் படித்து முடித்த பிறகு உங்களுக்கு தேவையான விருப்பமான தொழிலை முடிவு செய்து கொள்ளுங்கள்
என்று புரட்சிகரமான கருத்தை கூறும் கதை களம் மிக நயமாக இருக்கின்றது.
ஆர். ஜே. பாலாஜி இதுவரை நடித்த படங்களில் இருந்து சற்று மாறுபட்ட நடிப்பை இப்படத்தில் காட்டியுள்ளார். குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். படத்தின் முதல் பாதியில் பட்டையை கிளப்பும் சத்யராஜ், இரண்டாம் பாதியில் அமைதியாகி விடுகிறார் கதை படி

லால் கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை அவர் அழகாக திரையில் வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல் படத்தின் இறுதி வரை ஆர்.ஜே. பாலாஜிக்கு துணை நின்று நண்பனாக வரும் கிஷன் தாஸ், நம்முடைய வாழ்க்கையில் நமக்காக இருக்கும் நண்பனை நினைவூட்டுகிறார்.

நாயகி
மீனாட்சி சவுத்ரி, ரோபோ சங்கர், தலைவாசல் விஜய், ஜான் விஜய் நடிப்பும் ஓகே. லோகேஷ் கனகராஜ், அரவிந்த் சாமி மற்றும் ஜீவாவின் கேமியோ இவர்கள் நடிப்பு ரசிக்க வைக்கிறது.

கோகுல் தான் எடுத்துக்கொண்ட கதைக்களத்தை அழகாக திரையில் காட்டியுள்ளார். முதல் பாதி நகைச்சுவையாக செல்ல, இரண்டாம் பாதி முழுக்க எமோஷனலாக பயணிக்கிறது
கதை நம்முடைய வாழ்க்கை நடக்கும் சம்பவங்களை ஞாபகப்படுத்துகிறதுநம்மால் ஒன்றி போக முடிகிறது.

ஆர்.ஜே. பாலாஜி மற்றும் கிஷன் தாஸின் சிறு வயது பருவத்தில் நடித்த சிறுவர்களும் படத்திற்கு பிளஸ் ஆக அமைகிறது.
இமான் அண்ணாச்சி தன்னிடம் டியூஷன் படிக்க வரும் மாணவர்களுக்கு கொடுக்கும் தண்டனை ஸ்வீட்

பல இடங்களில் ஆர்.ஜே. பாலாஜி பேசும் வசனங்கள் கவனம் பெறுகிறது.

அரவிந்த்சாமி வரும் காட்சி படத்தின் திருப்புமுனை, திருவண்ணாமலையில் இருந்து வரும் அவர் ஆர்.ஜே பாலாஜிக்கு வழிகாட்டி விட்டு செல்கிறார் கிளிகளின் சரணாலயம் சிங்கப்பூர் சலூன் இருந்த இடம் என்று அவர் சொல்லும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது

மேலும், கிளிகளை வைத்து அமைக்கப்பட்ட காட்சிகள் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஓகே. எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

பிளஸ் பாயிண்ட்

ஆர்.ஜே. பாலாஜி நடிப்பு எமோஷன் காட்சிகளில் அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்

சத்யராஜ் நடிப்பு
மீண்டும் பழைய அமாவாசையாக கஞ்சத்தனமான நடிப்பில் கறாராக அருமையாக நடித்து இருக்கிறார்
இரண்டு மாப்பிள்ளையுடன் பாரில் மது அருந்தும் காட்சி செம கலகலப்பு

முதல் பாதி
காமெடியாகவும் இலக்கை நோக்கி போகிறது படம் ரெக்கை கட்டி பறக்கிறது

எமோஷனல் காட்சிகள்
நம்பும்படி இருக்கிறது மனதை தொடுகிறது கடன் தொல்லை ஏற்பட்டு விட்டால் ஒரு மனிதன் எந்த சூழ்நிலைக்கு தள்ளப்படுவான் என்பதையும் காட்டுகிறது குடிசையில் வாழும் கர்ப்பிணி பெண் குழந்தை பெற்றுக் கொள்ள இடம் இல்லாமல் சிங்கப்பூர் சலூனுக்குள் குழந்தை பிறப்பதும் தொப்புள்கொடியை ஆர் ஜே பாலாஜி வெட்டி விடுவது உருக்கமான காட்சி

வசனங்கள்
இன்னார்தான் இந்த தொழில் செய்ய வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறதா என்று பாலாஜி கேட்பதும் சிங்கப்பூர் சலூன் கூடாரத்தைச் சேர்ந்த நடன கலைஞர்கள் தொலைக்காட்சி நிலையத்துக்குள் செல்ல முடியாமல் திரும்புவதும் அதற்கு பாலாஜி வகுக்கும் வழிமுறைகள் ரசிக்க வைத்து கைதட்ட வைக்கிறது

இன்று தொட்டதற்கெல்லாம் சோகம் என்று சொல்லிக்கொண்டு மது அருந்தும் இளைஞர்களுக்கு இப்படம் ஒரு பாடமாக இருக்கிறது

திறமை இருந்தும் முன்னேற முடியாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு இப்படம் ஒரு பாடமாக அமைந்திருக்கிறது

செய்யும் தொழிலை கேவலமாக நினைத்து காதலிக்கும் ஒரு பெண் நம்மை புறக்கணித்து விட்டால் அதற்காக வாழ்க்கை அப்படியே போய்விடாதுமேலும் வாழ்க்கை இருக்கிறது என்று சொல்கிறது இந்த படம்.

கிளைமாக்ஸ் காட்சியில் சோசியல் மீடியாவின் பங்கு எத்தகைய மாற்றத்தை உருவாக்குகிறது
ஒரு அமைச்சரவையே முடிவெடுத்து கட்டடத்தை இடிக்கும் சூழ்நிலை மாற்றி போடுகிறது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

இயக்குனர் கோகுல் இதுவரை எடுத்த படங்களில் இது முத்தான படமாக வெற்றி படமாக அவருக்கு அமைந்திருக்கிறது நல்ல கதைக்களம் நல்ல காமெடி தேவையான எமோஷனல் என்று எல்லா வகையிலும் நம்மை யோசிக்க வைத்திருக்கும் சிங்கப்பூர் சலூன் கொடி கட்டி பறக்கிறது வெற்றி நிச்சயம்

ரெட் ஜெயன்ட் மூவி வாங்கி வெளியிடுகிறது சென்டிமெண்டாக அவர்கள் வாங்கி வெளியிட்டாலே வெற்றி படம்தான் என்பதை இப்படமும் நிரூபித்து இருக்கிறது