டிக்கிலோனா’ படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.
இப்படம் கடவுள் மீது உள்ள நம்பிக்கைக்கும், பகுத்தறிவுக்கும், விளக்கம் சொல்லும் படமாக வந்துள்ளது. 1960 இல் ஆரம்பிக்கும் இப்படம் அப்போதைய சந்தானம் சின்ன வயதில் சில புத்திசாலித்தனமான கேள்விகளை கேட்கிறார் நான் ஏழையாக இருக்கிறேன் ஏன் என்னை கடவுள் காப்பாற்றவில்லை என்று கேட்கிறார் அதற்கு அவர் அம்மா கடவுளை இப்படி சொல்லாதே என்கிறார் அப்போது நடக்கும் கலாபரத்தில் தன் பானையை திருடிக் கொண்டு ஓடும் திருடன் ஒருவனிடம் இருந்து நகை குவியல் கிடைக்கிறது அதை எப்படி தனக்கு சாதகமாக மாற்றுகிறார் வடக்குப்பட்டி ராமசாமி தன் புத்திசாலித்தனத்தின் மூலம் எப்படி அந்த ஊரில் பக்தியை வியாபாரம் செய்கிறார் என்பதை மிகவும் விறுவிறுப்பாடு காமெடியோடும் சொல்லியிருக்கிறது இந்த படம்
இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார்.
படத்தில் அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் பல கேள்விகளும் பலரையும் சிந்திக்க வைக்கிறது. புத்திசாலித்தனமான கதையின் நாயகனாக நன்றாக நடித்துஇருக்கிறார் காமெடியோடு கருத்தும் சொன்னால் மக்களிடம் வெற்றி பெறலாம் என்ற சித்தாந்தத்தை புரிந்து கொண்டு ந கொடுத்து இருக்கிறார் ஓபனிங் சாங் ஒன்று பாடி இருக்கிறார் நன்றாக இருக்கிறது அவருக்கு எது நன்றாக வருமோ அதை கையில் எடுத்துக் கொண்டு படம் முழுக்க டைமிங் காமெடியில் சேசுவை கலாய்ப்பது, மாறனை கலாய்ப்பது, மொட்டை ராஜனை கலாய்ப்பது, கூல் சுரேஷ் கலாய்ப்பது, நபி மரியாவை கலாய்ப்பது, ஜான் விஜயை கலாய்ப்பது, ஊர் மக்களை களைப்பது ,என ஒவ்வொரு காட்சியிலும் கைதட்டு வாங்குகிறார். மெட்ராஸ் என்ற கண் வியாதியை எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்தி அதை வியாபாரம் ஆக்கு கிறார் தாசில்தார் ஆக வரும் இயக்குனர் தமிழ் அவரிடம் இவர் சவால் விடுவதும், அதில் வெற்றி பெற போராடுவதும், ஊர் மக்களின் சண்டை வராமல் பார்த்துக் கொள்வது, பிரசாந்த் தன் காதலியுடன் ஓடும் போது தடுப்பது, இப்படி ஒவ்வொரு காட்சியும், சந்தானத்துக்கு கை கொடுத்திருக்கிறது தாடியும் அந்த கெட்டப்பும் வடக்குப்பட்டி ராமசாமிக்கு பலத்த கரகோஷத்தை கொடுத்திருக்கிறது. சந்தானம் நின்று விளையாடுகிறார் வென்றும் காட்டி இருக்கிறார்.
இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.
கிராமத்தில் பிறந்து சென்னையில் கண் மருத்துவராக பணிபுரியும் இவர் படத்தில் மூடநம்பிக்கையில் மூழ்கிக் எடுக்கும் மக்களை திருத்த முயற்சி செய்கிறார் இவர் வரும் காட்சிகள் படத்திற்கு கதை ஓட்டத்திற்கு ஒன்றிப் போகிறது
ஜான் விஜய்,
வடக்குப்பட்டி வில்லங்கமான மனிதரில் இவரும் ஒருவர் ரவி மரியா உடன் இவர் மோதல் காட்சிகள் ஆகட்டும், தனக்கு டென்ஷன் வரும்போது ,எல்லாம் பரதநாட்டியம் ரசிப்பதாகட்டும், மனுஷன் பின்னி இருக்கிறார் 1974 கெட்டப்பு அந்த மீசையும் ரசிக்க வைக்கிறது. கண்ணாடிக்கு கருப்பு பெயிண்ட் அடித்து இருப்பது தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு இவர் செய்யும் லூட்டிகள் செம ஜாலி தன் மகள் வீட்டை விட்டு ஓடி போக பரதநாட்டியமாட சேசுவின் நிலை கண்டு இவர் திகைப்பது, சந்தானத்திடம் மாட்டிக் கொண்டு விழிப்பது, எனது ஜான்விஜய் ஸ்கோர் செய்துள்ளார்.
எம்.எஸ்.பாஸ்கர்,
பார்வையற்றவராக தத்துவம் பேசி கடவுள் கண்ணாத்தாவிடம் சரணடையுங்கள் என்று சொல்லும் இவரின் நடிப்பு நன்றாக இருக்கிறது.
ரவி மரியா, அடடா இவர் நடிப்பின் உச்சம் தொட்டுள்ளார் என்று சொன்னால் மிகையில்லை youtubeபர்பிரசாந்த் மீது அளவற்ற பாசம் அவர் சுமந்து கொண்டே இருப்பது தனது போட்டியாளர் ஜான் விஜய் யுடன் மோதுவது கருப்பு கண்ணாடியில் இருட்டாகி கண் தெரியாத லூட்டி இப்படி ஒவ்வொரு காட்சியிலும் அருமையாக காமெடியில் கலக்கி இருக்கிறார் ரவி மரியா, அருமையான காமெடி கூட்டணியில் நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.
மாறன், படத்தின் மிகப்பெரிய பலம் இவர்தான் படம் முழுக்க சந்தானத்துடன் வருகிறார் .இவர் எடுக்கும் நடவடிக்கைகளும் சரி டைமிங் காமெடியும் சரி ஒவ்வொரு காட்சிகளும் கைதட்ட வைக்கிறது.
மாறன் கடவுள் பக்தியோடு இருக்கும் மக்களிடம் ஏமாற்றி பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டி சந்தானத்துக்கு உதவுவது, மெட்ராஸ் ஐ இதன் மூலம் மக்களை நம்ப வைப்பது சந்தானத்துக்கு வலதுகரமாக வந்து படத்தின் வெற்றிக்கு மிகவும் உதவி இருக்கிறார் மாறன் .
மொட்ட ராஜேந்திரன்,
கிளைமாக்ஸ் காட்சிக்கு கொஞ்ச நேரம் முன்னால் தான் வருகிறார் படத்தில் அவர் வரும் காட்சிகள் அவ்வளவு அட்டகாசம் தண்ணீருக்குள் இறங்க தாசில்தாரின் உதவியாளர் வழிகேட்டு,முழங்கால் அளவு தான் என்று அவர் சொல்ல தப்பித்தவறி கரையேறி வந்து அவரை தேடும் காட்சி ஆகட்டும் நிழல் ரவியிடம் கன்னிவெடிக்குள், மாட்டிக் கொண்டு சகாக்களோடு அவரும் தவிப்புக் காட்சிகள் ஆகட்டும் பிரசாந்த்யையும் அவரது காதலியும் கடத்தல் காட்சிகள் ஆகட்டும் எல்லா வகையிலும் மொட்டை ராஜேந்திரன் படத்திற்கு பெரிய பங்கு வகித்திருக்கிறார் அவர் வரும் காட்சிகள் அருமையாக இருக்கிறது.
நிழல்கள் ரவி, படத்தின் இன்னொரு தூண் என்றே சொல்லலாம் எக்ஸ் மிலிட்டரி மேனாக வந்து அவர் தன் உதவியாளர் க்கு கொடுக்கும் தண்டனையும் சரி மெட்ராஸ் ஐ யால் பாதிக்கப்பட்டு கலாட்டாவால் அரண்டு போவதும் சரி வடக்குப்பட்டிஊருக்கு வந்து அந்த ஊரிலே சிக்கிக் கொண்டு ஒவ்வொரு காட்சியிலும் மக்களை சிரிக்க வைத்திருக்கிறார்.
சேஷு, நீண்ட நாட்களுக்கு பிறகு அவருடைய நடிப்புத் திறனை காட்ட நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது கிராமத்து பூசாரியாக,அம்மன் கண்ணாத்தாளுக்கு சேவை செய்யும் சேசு
செய்யும் காட்சிகள் லூசுத்தனமாக இருந்தாலும் நடிப்பில் பாஸ் வாங்குகிறார். சாமி வந்து ஆடுவதும், பரதநாட்டியம் ஆடுவதும், சந்தானத்துடன் மெட்ராஸ் ஐ பரப்புவதும் ,என சேசுவரும் காட்சிகள் தியேட்டரில் சிரிப்பலை அடங்க வெகு நேரம் ஆகிறது
பிரசாந்த்,
அப்புவாக வந்து அமைதியாக அடக்கமாக காமெடியில் ரசிக்க வைத்திருக்கிறார்
ஜாக்குலின் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர்.
பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிக்கும் இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள
இப்படத்தின் பாடல்கள் அதிகம் கவனத்தை ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசை நன்றாக இருக்கிறது.
தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
1960 காலகட்டத்தையும் 1974 காலகட்டத்தில் கலர் கலெக்ஷன் மூலம் ஒளிப்பதிவில் கவனம் வைத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பொள்ளாச்சியை சுற்றிலும் பசுமையான காட்சிகள் இருந்தாலும் கதைக்கு தேவை என்பதால்
வடக்குப்பட்டி எப்படி காட்ட வேண்டுமா அப்படி காட்டி கவனம் வைத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் .
சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார்.
இரண்டு மணி நேரம் 25 நிமிடம் படத்தில் எந்த இடத்திலும் கதைக்கு தேவையில்லாத காட்சிகளும் லேக் ஆகும் காட்சிகள் இல்லாமல் நறுக்கு சுருக்கு என்று படத்தை தொகுத்திருக்கிறார் தொகுப்பாளர்.
கூல் சுரேஷ், இப்படத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார் பிக் பாஸ்க்கு சென்று வந்த பிறகு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் ஆகிவிட்டது இவர் நிஜ கதாபாத்திரத்தை சந்தானம் படத்தில் சொல்வது, இவருக்கு நிறைய கைதட்டளை வாங்கி கொடுத்திருக்கிறது. அதிகம் பொய் பேசுவான் இவன் விளம்பர பிரியன் என்று இவரை சந்தானம் கலாய்க்கும் போது நன்றாக இருக்கிறது பிரசாந்தும் காதலியும் தப்பி ஓடும்போது கூல் சுரேஷ் காட்டுக்குள் தேடி வந்து மழையே இல்லை எப்படி இங்கு சேறு வந்தது என்று கேட்கும் காட்சி
ரசிகர்கள் புரிந்து கொண்டு கைதட்டுகிறார்கள் இந்த காட்சி தியேட்டரில் கைதட்டல் அடங்க வெகு நேரம் ஆகிறது
அதேபோல் சந்தானம் காரில் அடிபட்டு பிரசாந்த் கூல் சுரேஷ் கீழே விழ, பன்னிக்குட்டி மோதியது என்று சந்தானம் பொய் சொல்ல அந்த காட்சிகளும் கைதட்டி ரசிக்கிறார்கள் மக்கள் அதன் பிறகு கூல் சுரேஷ் கை ,கால், வராமல் அமர்ந்து கொண்டு வீட்டு வீட்டுக்கு கல்யாண பத்திரிக்கை கொடுக்கும் காட்சி செம அமர்க்களம் காட்சிகள் அவ்வளவு ரசிக்க வைக்கிறது.
இயக்குனர் கார்த்திக் யோகி டிக்கிலோனா படத்துக்கு பிறகு இப்படத்தை இயக்கியிருக்கிறார் 65 நாள் பொள்ளாச்சியில் ஒரே செட்டிலாக முடித்து இருக்கிறார் மிகவும் மெனக்கெட்டு இந்த படத்தை வெற்றி படமாக்க வேண்டும் என்று உழைத்திருக்கிறார் அவர் கண்ட கனவு நிஜமாகி இருக்கிறது எந்தெந்த கதாபாத்திரத்திற்கு யாரை போட்டால் மக்கள் ரசிப்பார்கள் என்று கதாபாத்திர தேர்வு நன்றாக தேர்வு செய்திருக்கிறார். சந்தானத்துக்கு மட்டும் இல்லாமல் எல்லோருக்கும் நடிப்பதற்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறார் கடவுளுக்கும் மூடநம்பிக்கைக்கும் இருக்கும் வேறுபாடுகளை களைத்தெரிய முயற்சி செய்கிறார் இன்னும் மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கும் மக்களை தட்டி எழுப்ப வேண்டும் என்று காமெடியோடு திரைக்கதை எழுதி வெற்றி பெற்று இருக்கிறார் இயக்குனர் சந்தானம் ஆடியோ விழாவில் சொன்னது போல் கார்த்திக் அவர்களிடம் நிறைய திறமை இருக்கிறது அவரை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னது போல இயக்குனர் கார்த்திக் அவர்களிடம் நிறைய திறமைகள் இருக்கிறது இன்னும் நிறைய வெற்றி படங்களை கொடுப்பார் வடக்குப்பட்டி ராமசாமி வெற்றி முகமாகவே தெரிகிறது – கதைக்களம்: படத்தில் 1960களில் காலகட்டத்தில் நடக்கிறது. வடக்குப்பட்டி என்ற ஒரு சிறிய கிராமத்தில் கதை தொடங்குகிறது. இந்த கிராமத்தினுடைய சிறப்பு அனைத்து பக்கங்களிலும் நீர் நிலைகளாலும் சூலப்பட்டு இருக்கிறது. கிராமத்திற்குள் செல்லவும் வெளியே வரவும் ஒரே ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் மட்டும் பாலம் கட்டப்பட்டிருக்கிறது. சின்ன கிராமமாக இருந்தாலும் இங்கு மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது. பின் ஒரு ஆண்டில் வெள்ளத்தால் இந்த கிராமமே பாதிக்கப்பட்டு பல மாற்றங்கள் ஏற்படுகிறது. — அப்போது இவர்களை காவல் தெய்வம் தான் பாதுகாத்து வருவதாக ஊர் மக்கள் நம்புகிறார்கள். இந்த கிராமத்தில் ராமசாமி என்ற ஒரு ஏழை குயவன் தன்னுடைய அம்மாவுடன் வருகிறார். இவர் அப்பா ஏற்கனவே இறந்து விடுகிறார். இவர்கள் இருவருமே வாழ்வாதாரத்தை இழந்து ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். அப்போது ராமசாமியினுடைய பானையை திருடன் ஒருவன் திருடி செல்கிறார். அதை மீட்கும் போது சில சுவாரசியமான விஷயங்கள் நடக்கிறது. பின் மக்கள் கடவுள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை ராமசாமி கண்டுபிடிக்கிறார். இதை வைத்து ராமசாமி மக்களை ஏமாற்றி பணமாக்க நினைக்கிறார். இதனால் ராமசாமி நிறைய பணம் சம்பாதிக்கிறார். பின் கோவில் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து தன்னுடைய வசதியான வாழ்க்கையை வாழ்கிறார். இப்படி இருக்கும் நிலையில் அந்த ஊருக்கு தாசில்தார் வருகிறார். அவர் ராமசாமி செய்யும் பித்தலாட்டத்தை கண்டுபிடித்து மிரட்டுகிறார். – மேலும், அவர் ராமசாமியின் சொத்தில் பங்கு கேட்கிறார். இறுதியில் ராமசாமி சொத்தை முழுவதும் தாசில்தாருக்கு கொடுத்தாரா? தாசித்தாரை எப்படி கையாண்டார்? ராமசாமி உண்மை முகம் மக்களுக்கு தெரிய வந்ததா? என்பதே படத்தின் மீதி கதை.
மொத்தத்தில் இந்த வடக்கு பட்டி ராமசாமி க்கு வெற்றி முகம் படத்தை தயாரித்தவருக்கும், வாங்கி வெளியிட்டவருக்கும், அம்மன் அருளால் வெற்றி முகம். ஒரு நல்ல காமெடி படம் கருத்தாளத்துடன். வழங்கிய இயக்குனருக்கு பாராட்டுக்கள்
