டெவில் திரை விமர்சனம்

டெவில் படத்தின் திரை விமர்சனம் பார்க்கலாம் வாங்க

– இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா, சுபா ஸ்ரீ, த்ரிகுன் என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திகில் – திரில்லர் திரைப்படம்.
டெவில்…
, தமிழ் திரைப்பட பிரபல முன்னணி இயக்குனராக மிஸ்க்கின் இப்படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

திகில் – திரில்லர் திரைக்கதையில் சுவாரஸ்யமாக உருவாகியுள்ள டெவில் படத்திற்கு ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் விதார்த் வீடு அலுவலகம் எதிர் நாயகனின் வீடு அந்த இருட்டான ரோடு மிஷ்க்கினை காட்டும் போது அந்த திகில், விதார்த் இறந்த பிறகு சடலமாக மிரட்டுவது, என ஒவ்வொரு காட்சியிலும் ஒளிப்பதிவு மேக்கிங் கண்ணுக்கு விருந்தாக அமைந்துள்ளது, நம்பர் ஒன் ஹீரோ என்றால் ஒளிப்பதிவாளர் தான் வாழ்த்துக்கள்.

படத்தொகுப்பாளர் இளையராஜா எஸ் எடிட்டிங் செய்துள்ளார்.
கச்சிதமாக 2 மணி நேரத்துக்குள் படத்தை முடித்து இருப்பது விறுவிறுப்பாக இருக்கிறது

டெவில் படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது.
ஆபாசமான காட்சிகளோ இரட்டை அர்த்த வசனங்களோ படத்தில் இல்லை ஆனால் சொல்ல வந்த கரு யுஏ சான்றிதழ் வாங்கி கொடுத்துள்ளது
சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் தேவி பாரதி எழுதிய “ஒளிக்குப் பிறகு இருளுக்கு அப்பால்” என்னும் நாவலைத் தழுவி உருவாகியிருக்கும் திரில்லர் திரைப்படமான டெவில்.
ஹெச் பிக்சர்ஸ் ஹரி, டச் ஸ்கிரீன் ஞானசேகர் ஆகியோர் தயாரிப்பில், சவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா, அருண், மிஷ்கின் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும்
இப்படத்தின் இசையமைப்பாளர் பற்றி சொல்லியே ஆக வேண்டும்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின். சித்திரம்பேசுதடி படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்த அவர், தன்னுடைய ஒவ்வொரு படங்களுக்கும் வித்தியாசமான கதைக்களத்தை அமைத்து அதனை வணிகரீதியாகவும் வெற்றி பெற வைத்தவர். மிஷ்கினின் கதைக்களத்தை ரசிப்பதற்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவர் இயக்கத்தில் வெளியான அஞ்சாதே படம் பெரும் வெற்றியை பெற்றது. நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு மற்றும் துப்பறிவாளன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது ஆண்டிரியா நடிப்பில் பிசாசு 2 படத்தை இயக்கியிருக்கிறார்
எனவே இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ள அவருக்கு வாழ்த்துக்கள்

– இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில்
இப்படம் புதிய சிந்தனையை கொண்டு வந்துள்ளது தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் அவர்களை விடாது. விதி ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், ஒழுக்கம் மிக முக்கியம் என்ற கதை கருவோடு இரண்டு ஆண்டுகள் சிரமப்பட்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார் படத்தின் முடிவு எழுந்து நின்று கைதட்ட வைத்திருக்கிறது. சவரக்கத்தி படத்துக்கு பிறகு இயக்குனருக்கு மீண்டும் ஒரு வெற்றிப் படம் கிடைத்திருக்கிறது வாழ்த்துக்கள் ஆதித்யா.

விதார்த்,
அலெக்சாண்டர் கதாபாத்திரத்தில் கம்பீரமாக வந்து போகிறார். வழக்கறிஞராக, ஸ்டைலாக வரும் காட்சியாகட்டும் கள்ளக் காதலியின் வீட்டில் விழுந்து கிடப்பதாகட்டும் கள்ளக்காதலை உதாசீனப்படுத்திய பிறகு மனம் வருந்தி மனைவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதாகட்டும், மனைவியின் நடத்தையை கண்டு கொதிப்பது, என ஒவ்வொரு காட்சியிலும் எதார்த்தம் மிரட்டி இருக்கிறார்

பூர்ணா, படத்தின் மிகப்பெரிய பலம் இவர்தான் கண்களாலே நடித்திருக்கிறார் சோகமான முகம் கணவன் கண் முன்னாலே இன்னொரு பெண்ணை கட்டி அணைப்பது கண்டு, என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்பது ,தன்னை அறியாமலே இன்னொரு ஆடவரிடம் , மனம் மயங்குவது ,என பூர்ணா ஒவ்வொரு நடிப்பிலும் ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர், செய்துள்ளார் . அழகும் இளமையும் ததும்பும் பூர்ணா படத்தின் மிகப்பெரிய டெவில் .இவர்தான் மிகப்பெரிய கடவுளும் இவர்தான் படத்தை காப்பாற்றி இருக்கிறார். விதார்த் இறந்த பிறகு அந்த சடலத்தின் முன் படுத்து உறங்கும் அந்த ஒரு காட்சி போதும் இவர் சிறந்த நடிகை என்று நிரூபிப்பதற்கு அழகான நடிகை வாழ்த்துக்கள் பூர்ணா
மிரட்டும் கண்கள் மிரண்டு போய் நிற்கும் விழிகள் விரிய பூர்ணா

ஸ்ரீ, த்ரிகுன் பூர்ணாவுக்கு வில்லனாக வரும் இவரின் இளமை இவரின் துடிப்பு டயலாக் டெலிவரி எல்லாமே ரசிக்க வைக்கிறது பூர்ணா வைதாயாக நிணைத்து காதலியாக இவர் குழம்பு ம் காட்சிகள் ரசிக்க வைக்கிறது
படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்

அலெக்ஸ் ஹேமா இருவருக்கும் திருமணம் நடக்கிறது முதல் இரவில் அலெக்ஸ் ஒரு போன் கால் வந்து அவசரமாக வெளியேறுகிறார் அது அவரது கள்ளக்காதல் . முதல் இரவில் மனைவியை தவிக்க விட்டு கள்ளக்காதலி வீட்டில் தஞ்சம் அடைகிறார் அலெக்ஸ் அதன்பிறகு ஹேமாவுக்கு அவர் மீது சந்தேகம் வரவில்லை. ஆனால் விதார்த் காதலி சாண்டி என்ற நபருடன் தொடர்பில் இருப்பதைக் கண்டு மனம் உருகுகிறார் அலெக்ஸ்
தன் மனைவிக்கு துரோகம் செய்து விட்டோம் என்று உணர்கிறார்.

அதே சமயம் ஹேமா அலுவலகத்திற்கு கணவருக்கு சாப்பாடு கொண்டு வரும்போது தன் கணவரும் அவரது கள்ளக்காதலியும் முத்தமிட்டு கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காரை ஓட்டிக்கொண்டு போகும்போது ஒரு வாலிபன் மீது இடித்து விடுகிறார் பரிதாபப்பட்டு அந்த வாலிபனுக்கு உதவி செய்கிறார் அதுவே அவருக்கு வில்லங்கமாக வந்து அமைகிறது. விதார்த் ,பூர்ணா. இருவரும் மனம் திருந்தி ஒரு கட்டத்தில் கணவன் மனைவியாக உண்மையான அன்போடு வாழ நினைக்கும் போது விதி அவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறது

அது என்ன அவர்கள் வாழ்க்கையில் நரகம் சூழ்ந்ததா? சாத்தானின் கையில் சிக்கினார்களா? சொர்க்கம் அவர்களுக்கு வழிகாட்டியதா? அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது? என்பதை மிகவும் திருப்முனையோடு சொல்லி இருக்கிறது இந்த படம்.

இன்றைய டெக்னாலஜியில் கள்ளக்காதல் அதிகமாகி விட்டது ஒருவரைஒருவர் புரிந்து கொள்ளாமல் செய்யும் தவறுகளால் நல்ல நிம்மதியான வாழ்க்கை சீரழிந்து போகிறது என்பதை கருவாகக் கொண்டு உருவாகி இருக்கும் படம் எல்லோரும் காண வேண்டிய படம்

மிஷ்கின் கடவுளாக வந்து பூர்ணாவின் வாழ்க்கையை திருத்தி அமைக்கிறார் அந்த காட்சிகள் மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் என்ன நடக்குமோ என்ற பீதியோடும் இருக்கிறது.

படத்தின் கதை கரு அருமை படத்தின் இசை அருமை. படத்தின் ஒளிப்பதிவு அருமை திரைக்கதை விறுவிறுப்பாக இருக்கிறது நடித்தவர்கள் நடிப்பு நன்றாக இருக்கிறது ஒரு வெற்றி படத்துக்கான எல்லா அம்சங்களும் நிறைந்து இருக்கிறது இந்த டெவில் படத்தில் ஆரம்பத்திலேயே இயக்குனர் ஒரு கார்டு போடுகிறார் நரகம்அங்கே காலியாக இருக்கிறது சாத்தான்கள் எல்லோரும் இங்கே இருப்பதால் என்று அது உண்மை. நாம் இன்று எல்லோர் மனதிலும் சாத்தான் குடி கொண்டு இருக்கிறது. மது ,மாது, அடுத்தவன் மனைவியை நேசிப்பது, திருடுவது, பொய் சொல்வது, ஏமாற்றுவது, பிறரை வஞ்சிப்பது, துரோகம் செய்வது ,என மனிதர்கள் மலிவான இச்சையை தேடி போகிறார்கள் அவர்களுக்கு நரகம் காத்துக் கொண்டிருக்கிறது ஒழுக்கம் கடவுள் பக்தி ,நன்றி மறவாமல் பிறரை நேசிப்பது, அன்பு மனிதநேயம் இப்படிப்பட்ட மனிதர்களால் இன்னும் இந்த பூமி தழைத்திருக்கும் இதை ஒரு கதை கருவாக எடுத்துக்கொண்டு படத்தை இயக்கியிருக்கும் இயக்குனருக்கு நமது வாழ்த்துக்கள் டெவில் வெற்றி படம் தான் நிச்சயமாக நீ காண வேண்டிய படம்

.