லால் சலாம் விமர்சனம்

பிளாக் பஸ்டர் படமாக வந்திருக்கிறது லால் சலாம் இந்த படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க

மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை” – ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்
: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ படம் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம், ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிட்டு உள்ளது .

ஊரில் நடக்கும் தேர் திருவிழாவில் பிரச்சினை நடக்கிறது. அதையொட்டி கிரிக்கெட் போட்டிகளும் காட்டபடுகின்றன. ‘கூட்டம் சேர்க்கிறவன் விட, யார் பின்னாடி கூட்டம் சேருதோ அவன் ரொம்ப ஆபத்தானவன்’ வசனத்துக்குப் பிறகான மொய்தீன் பாயாக ரஜினியின் என்ட்ரி மாஸூக்கு உத்தரவாதம் தருகிறார்
உள்ளூரில் நடைபெற்று வரும் கதை ஒரு கட்டத்தில் பம்பாயை நோக்கி நகர்ந்து செல்கிறது. இந்த இரண்டுக்குமான கனெக்ஷன், கதையில் ரஜினியின் பங்கு, கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் இவையெல்லாம் எந்த புள்ளியில் ஒன்றிணைகிறது
.

செந்திலின் கதாபாத்திரம் படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது ‘எந்த ஊர் சாமியா இருந்தாலும், யார் கும்புட்ற சாமியா இருந்தாலும், சாமி சாமிதான்’, என்ற வசனமும் இறுதியில் ரஜினி பேசும், ‘மதத்தையும், நம்பிக்கையையும் மனசுல வை, மனித நேயத்த அதுக்கு மேல வை. அதான் இந்த நாட்டோட அடையாளம்’ வசனமும் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. ‘பம்பாய்ல பாய் ஆளே வேறடா’ என சொல்லும்போது மீண்டும் ‘பாட்ஷா’வுக்குப்பிறகு பம்பாயில் ரஜினி அடையாளம் கவனிக்க வைக்கிறது. விக்ராந்த் கதாபாத்திரத்துக்கான காட்சிகள் பெரிய அளவில் பேசப்படும்
ஒரு அரசியல் கட்சி அந்த ஊரில் வாழும் இஸ்லாமியர்கள் ஓட்டை வாங்குவதற்காக செய்யும் சூழ்ச்சியும் அதற்கான மாய வலையையும் மக்களை பிரித்தாலும் சூழ்ச்சியும் அந்த சூழ்ச்சியை முறியடித்து மக்களை ஒற்றுமைப்படுத்தும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கதாபாத்திரம் இமயமலை உயர்ந்து இருக்கிறது அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக இருக்கிறது குடும்பத்தில் பாசம், காட்டும் போதும், எதிரிகளிடம் வீரம் காட்டும் போதும்,
நண்பனிடம் நட்பை காட்டும் போதும், மகனிடம் தனது இலக்கை இந்திய கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று தன்னம்பிக்கையோடு பேசும்போதும், கிளைமாக்ஸில், சூப்பர் ஸ்டார் செய்யும் ஒவ்வொரு செயலும் படத்திற்கு மிகப்பெரிய பலம். அவர் கதாபாத்திரமும் சரி அவர் நடிப்பும் சரி படத்தை தூக்கி நிறுத்துகிறது.

விளையாட்டை மையமாக வைத்து கருத்து சொல்லியிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தன் முதல் படமான 3ல் சில காட்சிகளை ஐஸ்வர்யா திரையில் காட்டிய விதம் அருமையாக இருந்தது. அதை லால் சலாம் படத்திலும் செய்திருக்கிறார்.
அருமையான இயக்கம் சொல்ல வந்த கருத்தை நெற்றிப்போட்டில் அடித்தார் போல் பலமாக அடித்திருக்கிறார். ஒரு பெண் இயக்குனர் கத்தி மேல் நடக்கும் கதையை கையில் எடுத்துக் கொண்டு யார் மனதையும் புண்படுத்தாமல், கவனமாக கையாண்டு ,படம் எடுத்திருப்பது சிறப்பு. வெல்டன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

பேட்ஸ்மேனான தன் மகனுடன் மொய்தீன் பாய் (ரஜினி) விளையாடும் காட்சி படத்தின் சில இலகுவான காட்சிகளை நினைவூட்டுகிறது.


மதபிரச்சனை, இந்து-முஸ்லீம் இடையேயான பிரிவை தான் லால் சலாம் படத்தில் முக்கியமான விஷயமாக காட்டியிருக்கிறார் பிரச்சனையை கையாண்ட விதத்தை பாராட்டியே ஆக வேண்டும்.

காதல், ஆக்ரோஷம், குற்றவுணர்வு எனத் தேவையான நடிப்பைத் தன் பாத்திரமறிந்து வழங்கியிருக்கிறார் நாயகன் விஷ்ணு விஷால். மற்றொரு நாயகனான விக்ராந்திற்கு இன்னும் அழுத்தமான காட்சிகளைக் கொடுத்திருக்கலாம். ஆனாலும், நடிப்பில் குறையேதுமில்லை. விஷ்ணு, விக்ராந்த் இருவருமே கிரிக்கெட் ஆடும் காட்சிகளில் ஷாட்கள், ஃபுட் ஒர்க்குகள் நேர்த்தியுடன் ரசிக்க வைக்கின்றன.
சூப்பர் ஸ்டார் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தில் ரஜினி இடம்பெறும் காட்சிகள் சுமார் 40 நிமிடங்கள் இருப்பதாகவும், நிமிடத்திற்கு அவர் ரூ. 1 கோடி என்ற கணக்கில் ரூ. 40 கோடி பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தேர் திருவிழா தான் படத்தின் முக்கிய கதை தம்பி ராமையா, செந்தில், நடிகை ஜீவிதா, நிரோஷா, இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், என எல்லோரும் கச்சிதமாக நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

இசை ஏ ஆர் ரகுமான் படத்திற்கு மிகப்பெரிய பலம் பாடல்களிலும் இனிமை சூப்பர் சாரை காட்டும் போது அறிமுக பாடல் ரசிக்க வைக்கிறது
தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.
இப்படி ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுத்த இயக்குனருக்கு
அவருக்கு பாராட்டுக்கள். குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது
மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது..

படத்தில் இரண்டு நாயகர்கள், விஷ்ணு விஷால் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. சூப்பர் ஸ்டார் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டலாம் .
விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.

சரியான நேரத்தில் மக்களுக்கு படிப்பினை ஊட்ட வந்திருக்கும் படம் ஒரு பெரிய நடிகரின் மூலம் மத ஒற்றுமையை சொல்லி இருப்பது, பாராட்டுக்குரியது, இதையே ஒரு சின்ன நடிகர் சொல்லி இருந்தால் ரசிகர்கள் கடந்து போயிருப்பார்கள் சூப்பர் ஸ்டார் பேசியிருப்பது மக்களை கூர்ந்து கவனிக்க வைக்கிறது மனிதம் தான் முக்கியம் என்று அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தியேட்டரில் கரவொலி! மொத்தத்தில் இந்த லால் சலாம் சலாம் போட வைக்கிறது. ரசிக்க வைக்கிறது . வெற்றி வாகை சூடி இருக்கிறது. இயக்குனருக்கு வாழ்த்துக்கள்