வெற்றி படமாக வந்திருக்கிறது லவ்வர்” இந்த படத்தின் திரைவிமர்சனம் பார்க்கலாம் வாங்க
சென்னை: லிவ்வின் வெப்சீரிஸ் மூலம் பிரபலமான பிரபுராம் வியாஸ் நீண்ட போராட்டத்திற்கு பிறகு இந்த லவ்வர் படத்தை இயக்கி உள்ளார். குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் பிலிம்ஸ் நிறுவனம் மீண்டும் மணிகண்டனை வைத்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். மணிகண்டன், ஸ்ரீகெளரி பிரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம் என பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இசை படத்தின் இன்னும் ஒரு ஹீரோ என்றால் அது மிகையல்ல!
!
கடந்த ஆண்டு வெளியான குட் நைட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்நிலையில், அதே அளவுக்கு வெற்றியை லவ்வர் படம் பெறும் என்பது மக்கள் கருத்து .
லவ்வர் படத்தின் கதை:
. ஒரு பெண்ணை காதலிக்க என்னவெல்லாமோ குரங்கு வித்தைக் காட்டும் இளைஞர்கள் அதே ஒரு பொண்ணு ஓகே சொல்லி விட்டால் அவளை அதை செய்யக் கூடாது, இதை பண்ணக் கூடாதுன்னு அவங்க அம்மாவை விட அதிகமாக டார்ச்சர் செய்யும் சூழலில் இன்றைய இளைஞர்களின் காதல் எப்படி மாறி இருக்கிறது. இது எப்படி இருக்க வேண்டும் என்பதை பாடமாக நடத்தாமல் அருண் (மணிகண்டன்) மற்றும் திவ்யா (ஸ்ரீகெளரி பிரியா) இருவரையும் நடிக்க வைத்து படமாக எடுத்திருக்கிறார் பிரபுராம் வியாஸ் மணிகண்டன் ஸ்க்ரீனில் தோன்றும் போதெல்லாம் ஒரு ஹீரோ வரும் ஃபீலே கொடுக்காமல் வந்துட்டான்டா அந்த பொண்ணை டார்ச்சர் பண்ண என நினைக்க வைக்கும் அளவுக்கு மணிகண்டன் இந்த படத்தில் பர்ஃபார்மன்ஸை பர்ஃபெக்ட்டாக கொடுத்திருக்கிறார். குட் நைட் படத்தில் குறட்டை பிரச்சனையாக இருந்தாலும், அன்பையும் காதலையும் அழகாகவும் ஆழமாகவும் சொல்லி ரசிக்க வைத்தனர். ஆனால், யதார்த்தம் கலந்த காதலர்களுக்குள் பிரச்சனை எப்படி வருகிறது. அதற்கு பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் முறை எப்படி காரணமாக அமைகிறது என்பதை சீன் பை சீனாக படத்தில் செதுக்கி உணர வைக்கிறார் இயக்குநர்.
நாயகன் மணிகண்டன் இடமிருந்து நாயகி எப்படியாவது தப்பித்து விட மாட்டாரா? என்று படம் பார்ப்பவர்கள் ஏங்கும் அளவுக்கு மணிகண்டன் கதாபாத்திரத்தை வன்மமாக சித்தரித்திருக்கிறார் இயக்குனர் அது அந்த கதாபாத்திரத்திற்கு கிடைத்த வெற்றி!
சுதந்திரம் பொதுவானது: நமக்கு ஒரு பெண் ஓகே சொல்லி விட்டாலோ கழுத்தை நீட்டி விட்டாலோ அதன் பின்னர் அவள் நமக்கு அடிமை இல்லை. அவளுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்யலாம். யாருடன் பேச வேண்டுமோ பேசலாம், யாருடன் பழக வேண்டுமோ பழகலாம், யாருடன் என்ன செய்ய வேண்டுமோ செய்யலாம். அது அவளது தனிப்பட்ட சுதந்திரம். ஆணித்தரமாக சொல்லி காதலர்களுக்கு உண்மையிலேயே காதல்னா என்ன என்பதை புரிய வைக்க முயற்சித்து இருக்கிறார்.
முதல் பாதி செம ஜாலியாகவும் இரண்டாம் பாதி காதலின் ஆழத்தை உணர வைக்கவும் முயற்சி செய்துள்ளார் இயக்குனர்.
படத்தில் பிக்னிக் போகும் போது ஒரு சீனில் மணிகண்டன் உன் ஆளை எங்க வேணா ஜாலியா போக விடுறப்போல என கேட்க அந்த நபர், அவங்களோட ஃப்ரீடம்ல தலையிட நாம யாருன்னு செருப்பால அடிப்பது போல சொல்லும் வசனம் வேறலெவல்.
இயக்குநர் பிரபுராம் வியாஸ் திரைக்கதை மற்றும் வசனத்தை சிறப்பாக எழுதி இயக்கியிருப்பது இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். அதே போல படத்தின் இடைவேளை காட்சி மற்றும் கிளைமேக்ஸில் அவர் செய்திருக்கும் விஷயமும் படத்தை கண்டிப்பாக பார்க்க வைத்து விடுகிறது. மணிகண்டனை தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஸ்ரீகெளரி பிரியா ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளுகிறார். ஹீரோயின் கதாபாத்திரத்தை ஸ்ட்ராங்காக எப்படி எழுத வேண்டும் என்பதை மற்ற இயக்குநர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு தேவையான பலத்தை கொடுத்திருக்கிறது. அம்மாவாக நடித்துள்ள கீதா கைலாசம் போர்ஷனும்
அருமை
குழப்பத்தில், டாக்ஸிக் மனநிலையில் இருக்கும் காதலர்களுக்கு இந்த படம் பிடிப்பதை விட ஒரு தெளிவை கட்டாயம் கொடுக்கும். எதிர்பாராத கிளைமேக்ஸ்..
அதுதான் சரி அவ்வளவு நடந்த பிறகும் இருவரும் ஒன்றாக சேர்ந்து பயணிப்பது ஒத்து வராது என்பதை இயக்குனர் கச்சிதமாக படம் பிடித்து இயக்கி இருக்கிறார்.
நிகழ்கால இளம் வயதினருக்கிடையே இருக்கும் காதல், மோதல், எதிர்பார்ப்பு, ஏமாற்றம் என அனைத்தையும் கலந்து கட்டி சொல்லியுள்ளது “லவ்வர்” படம்.
தனது துணை மீதான அழகான அன்புக்கு பதில் அவர்கள் மீது பயம் வந்தால் உறவுக்குள் ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன என்பது குறித்து பேசியுள்ளது இப்படம்.
ஆடவன் தன் காதலிக்கும் பெண்ணின் மீது சந்தேகப்பட்டால் முடிவு என்னவாக இருக்கும்
என்பதையும் தெளிவாக சொல்கிறது லவ்வர்.
மணிகண்டன் கதாபாத்திரம்..
கல்லூரி முடித்து விட்டு சுய தொழில் செய்ய வைத்திருந்த பணத்தையும் இழந்து வாழ்ந்து வரும் அருணுக்கு (மணிகண்டன்), தொழில் தொடங்க முடியாத விரக்தி, அவரை முன்கோபக்காரனாக மாற்றுகிறது.
அந்த கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி இருக்கிறார் மணிகண்டன் அழுவது, ஏங்குவது, அம்மாவிடம் கோவிப்பது, அப்பாவை திட்டுவது, நண்பர்களிடம் சண்டை போடுவது, என ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்திருக்கிறார் மணிகண்டன்.
(ஶ்ரீ கௌரி பிரியா) மீது காதல். தன்னுடைய விரக்தியை செல்லும் இடமெல்லாம் பிரச்சினை, இருக்கிற கோபத்தை எல்லாம் காதலி மீது காட்டுவதால் காதலை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்த முடியாத நிலை எழுகின்றன
மேலும் அந்தக் காதல் பயமாகவும் மாறுகிறது. இதனால் பல எதிர்பாராத சம்பவங்களும் நடைபெறுகிறது. இப்படியான நிலையில் இந்தச் சூழலை அருண் சிறப்பாக கையாண்டு தன் காதலில் வெற்றி பெற்றாரா ?என்பதே லவ்வர் படத்தின் அடிப்படைக் கதையாகும்.
நடிப்பு எப்படி?
மணிகண்டன், கௌரிப் பிரியா,கண்ணா ரவி, நிகிலா ஷங்கர், ஹரிஷ் குமார், ஹரிணி உள்ளிட்ட குறிப்பிட்ட கேரக்டர்களை சுற்றி லவ்வர் படம் நகரும் நிலையில், அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்கள். குறிப்பாக இக்கால காதலர்களை மணிகண்டன் – கௌரி பிரியா கேரக்டர்கள் கச்சிதமாக பிரதிபலிக்கிறார்கள். இருவருக்கும் பாராட்டுக்கள்.
இன்றைய சூழலில், இப்படியான ஒரு உறவுச் சிக்கல் கதையை கையில் எடுத்து, தனது அறிமுகப் படத்தின் மூலம் கவனிக்க வைக்கிறார் இயக்குநர் பிரபு ராம் வியாஸ். அது மட்டுமல்லாமல் கெஞ்சுவதும், விட்டுக் கொடுத்துக் கொண்டே செல்வது மட்டும் காதல் அல்ல. காதல் என்றைக்கும் காதல்தான். அதன் புரிதல் தான் எந்த வகையான காதல் அது என்பதை வெளிப்படுத்துகிறது என்பதை சரியான கிளைமேக்ஸ் காட்சியாக வைத்துள்ளார்.
இதை புரிந்தவர்கள் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள் இன்றைய காதலர்களுக்கு இந்த படத்தின் கிளைமாக்ஸ் ஒரு பாடம்.
மற்றவர்களுக்கு இது படம்
நிறைகுடம் தழும்பாத ஒரு கதை
படம் பார்க்கும்போதும் இன்றைய இளைய தலைமுறையினர் ஒவ்வொருவருக்கும் தங்களை அந்த கேரக்டர்களாக பொருந்திப் பார்க்கத் தோன்றும் அளவுக்கு, படம் முழுக்க ஒரு பதற்றத்தையே ஏற்படுத்தி, அதில் வெற்றியும் கண்டுள்ளார்.இயக்குனர் படத்தில் கௌரி பிரியா, மணிகண்டனின் அம்மாவிடம் பேசும் காட்சிகள், கண்ணா ரவி தன்னுடைய முறிந்து போன காதல் பற்றியும் மற்றும் ஹரிஷ் குமார் தனது சந்தோசமான காதல் பற்றியும் பேசும் இடம் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
. ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் பாடல்கள் ரசிக்க வைக்கிறது வானம் என்ற பாடல் இனிமை பின்னணி துள்ளல்
ஸ்ரேயா கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் கவனிக்க வைக்கிறது.
எல்லா இடமும் ரிச்சாக இருக்கிறது இரண்டாம் பகுதியில் வெளியிடங்களுக்கு கேமரா சென்று
வளைத்து வளைத்து படமாக்கி இருக்கிறார்கள் கண்களுக்கு குளுமை
தங்களுக்குள் பிரச்சினை எழும்போது காதலர்கள் முடிவெடுக்க தவறும் இடத்தில் விளைவுகள் வேறுவிதமாக இருக்கும். அதனை செய்யாமல் சரியான கிளைமேக்ஸோடு படத்தை முடித்துள்ளார்கள். ஆக மொத்தம், லவ்வர் படத்தை காதலிப்பவர்களும் சரி, சிக்கலான காதலில் இருப்பவர்களும் சரி தாராளமாக பார்க்கலாம்
இந்த படத்தின் பிளஸ்
ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் திவ்யா(ஸ்ரீகௌரி ப்ரியா) கடற்கரையோரம் அமர்ந்து தான் அருணை( மணிகண்டன்) காதலிப்பது குறித்து சகாக்களிடம் கூறுவது
. அருணை முதல் முறையாக சந்தித்ததை பற்றி பேசும்போது திவ்யா முகத்தில் அப்படியொரு சந்தோஷம்.
திவ்யாவும், அருணும் எப்படி நெருக்கமாகிறார்கள் என்பதை அழகாக காட்டியிருப்பது
திவ்யா பேசிக் கொண்டிருக்கும்போதே ஒரு போன் அழைப்பு வருகிறது. அருண் தான் அழைக்கிறார். ஆனால் செல்போனில் அருணின் பெயரை பார்த்ததும் திவ்யா முகத்தில் இருந்த ஸ்மைல் காணாமல் போய்விடுகிறது.
அந்த இடம் அருமை
போன் அழைப்பை எடுக்கத் தயங்குகிறார் திவ்யா. பின்னர் ஒருவழியாக போனை எடுத்து தான் ஒரு விழாவில் இருப்பதாக அருணிடம் பொய் சொல்கிறார்.
சமாளிக்கும் இடம் அருமை
அதை நம்பாமல் அருண் கேள்வி கேட்கிறார். தன் தோழி ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்துவிட்டு தான் அருண் கேள்வி கேட்பதை உணர்கிறார் திவ்யா.
பயப்படும் காட்சி Good 👍
திவ்யாவின் அபார்ட்மென்ட்டுக்கு வந்து சண்டை போடுகிறார் அருண். அருணிடம் கெஞ்சுகிறார் திவ்யா. பின்னர் அவர் குடிப்பதை கண்டிக்கிறார். உறவை முறித்துக்கொள்வேன் என மிரட்டுகிறார் திவ்யா. அருண் கோபத்தில் கத்துகிறார், திட்டுகிறார். இறுதியில் இருவரும் சாரி சொல்லி சமாதானம் ஆகிவிடுகிறார்கள்.
இது காதலின் ஆழத்தை உணர முடியும் என்பதை உணர்த்தும் வகையில் காட்சி சூப்பர்
காட்சியின் மாறுபட்ட காட்சிகள் தான் படம் முழுக்க உள்ளது. சண்டை போடுவது, மது அருந்துவது, மிரட்டுவது, எச்சரிப்பது, மன்னிப்பு கேட்பது, மீண்டும் சேர்வது. இது தான் மீண்டும் மீண்டும் நடக்கிறது.
எல்லா அம்சங்களும் பொருந்தி இருக்கிறது.நிஜமான காதலை காதலர் களை பார்த்த உணர்வு
சுயமாக இருக்க விரும்பும் ஒரு இளம் பெண், பொசசிவாக இருக்கும் ஒரு ஆணால் ஒன்றாக இருக்க முடியுமா?. ஒருவர் மீது மற்றொருவருக்கு அக்கறை உள்ளது. ஆனால் இந்த உறவு நிலைக்குமா?
என்ற பரபரப்பையும் ஏற்படுத்துகிறது திரை க்கதை நாயகியின் அட்டகாசமான முகபாவம் அருமையான உள்ளது
பில்ட்அப் எதுவும் கொடுக்காமல் படத்தை எடுத்திருக்கிறார் பிரபு ராம் வியாஸ்.
வெல்டன்
ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா மூலம் படம் பார்க்க பிரமிப்பாக உள்ளது.
படத்தின் பலம்
ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு பெரிய பலம்.

மணிகண்டனும், ஸ்ரீகௌரிப்ரியாவும் போட்டி போட்டுக் கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
20களில் இருப்பவர்களின் மைண்ட்செட்டை படத்தில் அழகாக காட்டியிருக்கிறார்கள். அதை திவ்யாவிடம் காண முடிகிறது. அருணை சின்சியராக காதலித்தாலும் தன் தனித்துவம் போய்விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் திவ்யா. அதை திவ்யாவின் தோழிகளிடமும் பார்க்க முடிகிறது. திவ்யாவை பாதுகாக்க நினைத்தாலும் எந்த ஒரு முடிவையும் அவர் சுயமாக எடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
நல்ல நட்பு
அதை திவ்யாவின் புது டீம்மேட்டான மதனிடம் பார்க்க முடிகிறது. காதலர்களுக்கு இடையே சிக்கிக் கொள்கிறார் மதன்( கண்ணா ரவி). அதை அருணிடமும் பார்க்க முடிகிறது. தன் தவறுகளை உணர்ந்து திருந்த நினைக்கிறார் அருண்.
இது தான் கதையின் முக்கிய நாடி
அருணின் பெற்றோர் சரவணன் மற்றும் கீதா கைலாசத்தை காட்டும்போது இளசுகள் மட்டும் அல்ல பெரியவர்களும் ரிலேஷன்ஷிப் பிரச்சனைகளை கையாள்வதில் திணறுவது தெரிகிறது.
அந்த லைன் நன்றாக இருக்கிறது
படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. இரண்டாம் பாதி சிறிது நேரம் மெதுவாக செல்கிறது. ஆனால் அதிலும் சுவாரஸ்யமான காட்சிகள் நிறைய இருக்கிறது.
மொத்தத்தில் இந்த லவ்வர் காதலுக்கும், இளைஞர்களுக்கு ஒரு பாடம். வேலை வெட்டிக்கு செல்லாமல் காதலியை சந்தேகப்படும் இளைஞர்களுக்கு ஒரு பாடம். எடுத்ததற்கெல்லாம் கோபப்படும் இளைஞர்களுக்கு ஒரு பாடம் காதலியைஅவருடன் பேசாதே இவருடன் பேசாதே அங்கே செல்லாதே இங்கே செல்லாதே என்று கண்டிஷன் போடும் முட்டாள்தனமான காதலனுக்கு ஒரு பாடம் ஒரு ஆனை விரும்பி விட்டால் அவன் சொன்னதை எல்லாம் ஏற்று நடக்க வேண்டும் என்ற கட்டாயம் இங்கில்லை. பாரதி பாடிய சுதந்திர பெண்ணாக துணிச்சல் முடிவெடுக்கும் புரட்சி பெண்ணாக இன்றைய திவ்யாக்கள் வந்து விட்டார்கள் அதனால் காதலிக்கும் இளைஞர்கள் நிச்சயம் திருந்த வேண்டும் ஆதிகாலம் போல் சந்தேகப்பட்டு அடக்கு முறையை கையாண்டால் நிச்சயம் அந்த காதல் ஜெயிக்காது என்பதை அற்புதமாக இயக்கிய இயக்குனருக்கும் படக்குழுவுக்கும் நடித்த நடிகர்களுக்கும் டெக்னீசியன்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
