ஈமெயில் திரை விமர்சனம்

SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார்.
இந்த படத்தின் திரை விமர்சனம் பார்க்கலாம் வாங்க

ஒரு வெற்றி படத்துக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக தந்துள்ளார் இயக்குனர் .
கவர்ச்சி ஆக்ஷன் காமெடி எல்லாம் கலந்து கொடுத்துள்ளார்
இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை படம் அவ்வளவு விறுவிறுப்பாக இருக்கிறது.
இப்படத்தில் அசோக் குமார்,
நாயகனாக நடித்திருக்கிறார் அவர் வரும் காட்சிகள் நன்றாக இருக்கிறது ஸ்டைலிஷ் ஆக நடித்திருக்கிறார் அதே சங்கம் கதைக்கு தேவையான ஒரு புள்ள கதாபாத்திரம் அவர் கதாபாத்திரம் இருந்தது அதை இப்போது சொன்னால் கிறிஸ்து உடைந்து போகும் எனவே அவருக்கு வாழ்த்துக்கள் இப்படம் மூலம் மேலும் வெற்றி அவருக்கு வந்து சேரும்

ராகினி, நல்ல உயரம் கல்யாணமுகம் துருதுருப்பான நடிப்பு அஸ்தல் சண்டை காட்சிகள் என படம் முழுவதும் ராகினியின் ராஜாங்கம் தான்

ஆதவ் பாலாஜி
நடிப்பு சிறப்பாக இருக்கிறது.
பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அவர்கள் எல்லோர் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது படத்திற்கு கதைக்கு என்ன தேவையோ உணர்ந்து நடித்திருக்கிறார்கள்

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜூபின் மற்றும் அவினாஷ் கவாஸ்கர் இணைந்து இசையமைத்துள்ளனர்
பாடல் காட்சிகள் சிண்ட்ரெல்லா பாடல் இனிமை பின்னணி இசை படத்திற்கு பலமாக இருக்கிறது
படத்தை எஸ்.ஆர்.ராஜன் தயாரித்து இயக்கியுள்ளார்.
ஒரு நல்ல கதைக்கரு எடுத்துக் கொண்டு
அதற்கு திரைக்கதை அமைத்து நல்ல நடிகர்களை தேர்வு செய்து சரியான லொகேஷன்களில் படத்தை ரிச் ஆக எடுத்திருக்கிறார் பார்ப்பதற்கு கண்களுக்கு உரிமையாகவும் ரசிப்பதற்கு இனிமையான கதையாகவும் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் அள்ளி தெளித்து இருக்கிறார் இயக்குனருக்கு பாராட்டுக்கள்

அசோக் குமார் பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி கணவன் மனைவியாக இருவரும் வரும் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது காதல் செய்தவர்களுக்கு துரோகம் செய்தால் என்ன நடக்கும் இந்த படம் ஒரு படிப்பினை அந்த கடற்கரை ஓரத்தில் காதல் காட்சி கண்களுக்குள் நிற்கிறது அப்பார்ட்மெண்டில் வில்லன்களுடன் அசோக் நாகினி இருவரும் போதும் அந்த காட்சி அனல் பறக்கும் காட்சி

மனோபாலா,
கைலாச ரியல் எஸ்டேட் என்ற பெயரில் புறம்போக்கு இடத்தை விற்பனை செய்து கும்மாங்குத்து வாங்கும் இடம் காட்சிகள் கலகலப்பு படம் முழுக்க அடி வாங்குவதற்கு என்று வடிவமைக்கப்பட்ட காட்சி மனோபாலா வரும் காட்சிகள் எல்லாம் தியேட்டரில் சிரிப்பொலி

லொள்ளு சபா மனோகர்
கைலாச போவதற்காக பாஸ்போர்ட் விசா வோடு வந்து மனோபாலாவிடம் வேலை செய்யும் பணி பெண்ணிடம் ஜொல்லுவிடும் காட்சி கலகலப்பாக இருக்கிறது
. அவினாஷ் கவாஸ்கர் இசையமைத்துள்ள நிலையில், ஜூபின் பின்னணி இசையமைத்துள்ளார். இருவருக்கும் வாழ்த்துக்கள்

ஆன்லைன் விளையாட்டு மோசடியை அம்பலப்படுத்தும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இ இ-மெயில் தற்போதைய காலக்கட்டத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் டைட்டில். எல்லாருக்கும் இ-மெயில் என்றால் என்பது தெரியும். ஒரு படத்துக்கு கவர்ச்சிகரமான டைட்டில் .
படத்தின் கதை பார்ப்பவர்களுக்கு நெருக்கமாக இருக்கிறது இப்படி எல்லாம் நடக்குமா? என்று கேள்வி கேட்க வைக்காமல் இப்படியும் நடக்கும் எச்சரிக்கையோடு இருங்கள் என்று சொல்கிறது இந்த படம்.

டை கேம் ஆன்லைன் விளையாட்டின் விபரீதத்தை உணர்த்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளது. குறிப்பாக பெண்கள் ஆக்‌ஷன் பண்ணியிருப்பது அதிரடி தான்
.
படத்தின் கதை
என்ன வாங்க பார்க்கலாம்

ராகினி திவேதி, மற்றும் நாலு பெண்கள் ஒரு அப்பார்ட்மெண்டில் வாடகைக்கு குடியிருக்கிறார்கள் இதில் ராகினி சின்ன வயதில் கோடீஸ்வரர் குடும்பத்தில் பிறந்து தாயை இழந்தவர் அவர் சொத்துக்களை அங்கு வேலை செய்யும் வேலைக்காரர்களே ஏமாற்றி விடுகிறார்கள்.
இதனால் இவர் அனாதை இல்லத்தில் தங்கி படித்து ஆளாகிறார்.
சக தோழிகளுடன் தங்கி இருக்கும் இவருக்கு வாடகை கூட கொடுக்க முடியவில்லை இவர் மனோபாலா நடத்தும் கைலாசா ரியல் எஸ்டேட்டில் பணிபுரிகிறார்
மனோபாலாவிடம் தினமும் திட்டு வாங்கும் இவருக்கு வேலை செய்யும் இடத்திலும் பிரச்சனை, தோழிகளுடன் தங்கும் பிரச்சினை, என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி இருக்கும் போது,
நாயகன் அசோக்கை பார்த்து அவரிடம் மனதை பறிகொடுக்கிறார். அவரும் இவர் அறைக்கு பக்கத்திலேயே தங்கி இருக்கிறார். அப்போது திடீரென நாயகி ராகினிக்கு ஈமெயிலில் டை கேம் என்ற ஆன்லைன் விளையாட்டுக்கான மெசேஜ் வருகிறது அதில் அவர் சேர்ந்தவுடன் இவருக்கு ஒரு லட்சம் கொரியரில் வருகிறது.
அதை கண்டவுடன் தோழிகளுடன் குத்தாட்டம் போடுகிறார். ஷாப்பிங் போகிறார் தொடர்ந்து ,அந்த ஆன்லைன் விளையாடும் போது இவருக்கு பணம் வந்து கொண்டே இருக்கிறது வறுமையில் இருந்த இவரின் சூழ்நிலை பளபளப்பாக மாறிவிடுகிறது. அதன்பின் அசோக்கை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இப்படி முதல் பாதி மிகவும் ஜாலியாகவும் கவர்ச்சி கலந்த காட்சிகளுடனும் போகிறது
அதன் பிறகு ராகினி க்கு
ஒரு ஆர்டர் வருகிறது மூன்று பேரை காட்டி அதில் ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்று முதலில் அவர் மறுப்பதால் பத்து லட்சம் கைக்கு வராமல் போக, இரண்டாவது ஆர்டர் வரும்போது இந்த முறை மிஸ் பண்ண கூடாது என்று, ஒருவரை கொலை செய்யப் போகிறார்
அங்கு என்ன நடந்தது சஸ்பென்ஸ்,

அடுத்த நாள் கொரியரில் இவர் கொலை செய்யப் போகும் அந்த காட்சிகளும் அந்த நபர் இறந்து கிடக்கும் போட்டோ வருகிறது .
அந்த ஆன்லைன் கேம்ல இருந்து நாயகி மீண்டு வந்தாரா? இவரை சூழ்ந்திருக்கும் அந்த ஆபத்தான மேகங்கள் என்ன ?
என பல கேள்விகளுக்கு ட்விஸ்ட் வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர்

முதல் பாதி விறுவிறுப்பாக செல்லும் இப்படத்தில் இரண்டாம் பாதியில் ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் அளித்து இருக்கிறார்
அது எதிர்பாராத அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.

இதில் ஒரு பெண் மந்திரியும் ஈடுபட்டு வரதன் என்ற கூலிப்படை தலைவருடன் மோதல் ஏற்பட்டு அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை சுவராசியமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்
இன்று ஆன்லைனில் நடக்கும் மோசடிகள் நிறைய பேர் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள் அப்படி ஆன்லைனில் எந்த ஒரு மெசேஜ் வந்தாலும் யாரும் அதை விளையாடக்கூடாது அப்படி விளையாடினால் வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதையும் எச்சரித்திருக்கிறார் இயக்குனர்

சொல்ல வந்த கருத்துக்களை மெசேஜாக சொல்லாமல் கருத்துக்களாக சொல்லாமல் கவர்ச்சி காட்சிகளுடன் ஜாலியான என்டர்டைன்மெண்டாக காட்டி இருப்பது ரசிக்க வைக்கிறது

படத்தின் பிளஸ் என்ன

ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது அப்பார்ட்மெண்டில் நடக்கும் காட்சிகள் ஆகட்டும் நாயகன் நாயகி டூயட் பாடும் காட்சிகள் ஆகட்டும் வில்லன் மாளிகை ஆகட்டும் எல்லா இடங்களிலும் கேமரா கையாண்ட விதம் நன்றாக இருக்கிறது

நாயகன் அசோக் அவர் கதாபாத்திரம் என்ன ?என்பதை சஸ்பென்சாக கொண்டு சென்று இயக்குனர் அதில் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார் அசோக் அழகான தேர்வு ,அருமையான
நடிப்பு ,நல்ல முன்னேற்றம் வாழ்த்துக்கள் அசோக் சார்

நாயகி ராகினிக்கு இப்படம் மூலம் நிறைய பெண்கள் ரசிகர்கள் கிடைப்பார்கள் அந்த அளவுக்கு தன்னம்பிக்கையான பெண்ணாக நாயகனை நம்பாமல் நாமே அந்த கொலையாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று நான்கு பெண்களுடன் சேர்ந்து இவரும் புறப்படும் போது சபாஷ் போட வைக்கிறது பாரதி கண்ட புதுமை பெண்ணாக காட்சி தருகிறார் ராகினி

வரதனாக வரும் வில்லன் நடிப்பு நன்றாக இருக்கிறது மிரட்டல் காட்சிகள் ராகினிக்கு செக் வைப்பதும் ராகினி அவருக்கு செக் வைப்பதும் விறுவிறுப ப்பான கட்டம்

ஹாட் டிஸ்க் தான்
படத்தின் மையக்களம் அது யார் ?யார் ?கைக்குப் போகிறது என்ன நடக்கிறது ?அந்த ஹார்ட் டிஸ்கில் என்ன இருக்கிறது? என்பதை விறுவிறுப்பாக சொல்லி இருக்கும் திரைக்கதை மாயாஜாலம்!

ராகினியுடன் நான்கு பெண்கள் தங்கி இருக்கும் அந்த நான்கு பெண்களும் கவர்ச்சிக்கு குறை வைக்கவில்லை அழகான கால்கள் தெரிய படம் முழுக்க வந்த அசத்துகிறார்கள் இளைஞர்களுக்கு செம கிக்

இயக்குனருக்கு முதல் படமாம் அது போலவே தெரியவில்லை பல படங்களை இயக்கி அனுபவம் கண்டவர் போல் படத்தை இயக்கி இருக்கிறார் நல்ல ஒரு தரமான படத்தை கதை கரு உள்ள படத்தை தந்ததற்காக பாராட்டலாம்

வசதியான வீட்டில் பிறந்த ராகினியை அவர் அம்மா இறந்தவுடன் அங்கு வேலை செய்யும் வேலைக்காரன் வேலைக்காரி ஏமாற்றி சொத்தை பிடுங்கிக் கொண்டு ராகினியை அனாதை ஆஸ்ரமத்தில் சேர்ந்து
அல்லோகாலப் பட வைக்கிறார்கள் படத்தின் முடிவிலாவது அந்த வேலைக்காரன் வேலைக்காரியையும் பார்த்து ஒரு கும்மாங்குத்து முகத்தில் விடுவார் என்று எதிர்பார்த்தோம் அது நடக்கல சொத்துக்களை ஏமாற்றி வாங்கிய வர்களை சும்மா விடலாமா ?இயக்குனர் அந்த பக்கம் போகாமல் ஆன்லைன் பக்கமே நின்று விட்டார் ஓகே எடுத்துக் கொண்ட கதைகளம் படமாக்கப்பட்ட விதம், திரைக்கதை வசனம் அனைவரின் நடிப்பு எல்லாம் கலந்து ஒரு விறுவிறுப்பான படத்தை தந்து இருக்கிறார் . இயக்குனருக்கு பாராட்டுக்கள்ஈமெயிலில் புதிதாக வரும் மெசேஜ்களை கவனமாக கையாளுங்கள் அதுவும் ஆன்லைன் பக்கம் போகாதீர்கள் அது ஆபத்தானது என்று சொல்லும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்