இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி,கீர்த்தி சுரேஷ், யோகிபாபு, அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரகனி உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் வெளியாகியுள்ள சைரன் (Siren) படத்தின் விமர்சனம்
தான் செய்யாத தவறுக்கு 14 ஆண்டுகள் சிறையில் இருக்கும் நாயகன் 14 நாட்கள் பரோலில் வெளியில் வந்து தன்னுடைய இந்த நிலைமைக்கு காரணமானவர்களை எப்படி பழி வாங்குகிறார் என்பதே இந்த படத்தின் ஒன் லைன்
இந்த 14 நாட்களில் என்ன என்ன நடந்தது தந்தை மீது கோபம் கொண்டுள்ள மகள் பேசினாரா ?சொந்த பந்தங்கள் திலகரை வரவேற்றார்களா? போலீஸ் ஏன் அவர் மீது சந்தேகம் கொள்கிறது
அவர் மனைவிக்கு என்ன நடந்தது அவர் ஏன் பழிவாங்க துடிக்கிறார்?
என்பது சுவாரசியமான எபிசோட் .
. படத்தின் நாயகன் ஜெயம் ரவி (திலகன்) ஒரு ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்து வருகிறார். தனது மனைவி மற்றும் மகளுடன் வாழ்ந்து வரும் ஜெயம் ரவி தான் செய்யாத தவறுக்காக 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கிறார்.
பின்னர் பரோலில் 14 நாட்கள் பரோலில் வெளியில் வரும் ஜெயம் ரவியால் அவரது குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால், பள்ளி செல்லும் வயதில் இருக்கும் அவரது மகள் மட்டும் அவரது வருகையை எண்ணி கோபப்படுகிறார். அதற்கு காரணம் தன்னுடைய தந்தை சிறைக்கு சென்றதால் பள்ளியில் அவர் கேலிகளையும் அவமானங்களையும் எதிர்கொண்டது தான். சிறையில் இருந்து பரோலில் வெளியில் வந்த ஜெயம் ரவி தன்னுடைய குடும்பத்தைக் காணத்தான் வெளியில் வந்திருக்கிறார் என்று பலரும் நினைக்கிறார்கள்.
ஆனால் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய மூவரை பழிவாங்கவே ஜெயம் ரவி வெளியில் வருகிறார். அவரை கண்காணிக்கும் ஒரு போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவியுடனே பயணிக்கிறார் யோகி பாபு. ஆனா,ல் ஜெயம் ரவி பழிவாங்கத்தான் வெளியில் வந்திருக்கிறார் என்பதை உறுதியாக நம்பும் போலீஸ் அதிகாரியான கீர்த்தி சுரேஷ். அவரை தொடர்ந்து கண்காணித்து, அவர் ஏதாவது தவறு செய்தால் கையும் களமாக பிடிக்க காத்துக் கொண்டிருக்கிறார். இறுதியில் ஜெயம் ரவியின் இந்த நிலைக்கு யார் காரணம்? கீர்த்தி சுரேஷ்ஷை மீறி தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய நபர்களை ஜெயம் ரவி பழி வாங்கினாரா? இல்லையா? என்பதை படத்தின் மீதிக் கதை.
திரை க்கதை விறுவிறுப்பாக இருக்கிறது.
ஹீரோ திலகனை ஆம்புலன்ஸ் டிரைவராக காட்டியிருப்பது படத்திற்கு பிளஸ் பாயிண்ட். திலகனின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் மாற்றி மாற்றி காட்டிய விதம் படத்தை சுவாரஸ்யமாக்குகிறது. பரோலில் வரும் திலகன் தன் வீட்டில் காலடி எடுத்து வைக்கும்போது முன்னதாக திருமணம் முடிந்து அவரும், மனைவியும்(அனுபமா பரமேஸ்வரன்) சேர்ந்து வரும் காட்சியை காட்டுகிறார்கள்
மகளைக் காண துடிக்கும் போது அந்த பழைய பிளாஷ்பேக் காட்சி வருவது சிறப்பு ஒவ்வொரு காட்சியிலும் இளமையான ஜெயம் ரவி முதுமையான ஜெயம் ரவி என கலந்து காட்டி இருப்பது கதாபாத்திரத்தின் மீது அனுதாபம் கொள்ள வைக்கிறது அற்புதமாக நடித்திருக்கிறார் ஜெயம் ரவி.
சமுத்திரக்கனி, அழகம் பெருமாள், அஜய் ஆகிய மூன்று கொடூர வில்லன்களை பழிக்கு பழி வாங்குகிறார் .
அந்த மூவரும் ஜாதி வெறி பிடித்த கொடூர முகம் கொண்ட மனித மிருகங்களாக காட்டப்பட்டிருப்பது அவர்களை கொலை செய்வது தப்பே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்களின் ஜாதி வெறி ஒரு குடும்பத்தையே சீரழித்து சித்ரவதை செய்து கொலை செய்கிறார்கள் அதனால் அவர்கள் கொலை செய்யப் படவேண்டும் என்ற எண்ணம் நமக்கு வருகிறது.அது உண்மை
மனைவி, மகள் சென்டிமென்ட், பழிவாங்குவதல் ஆகியவற்றை எதிர்பார்த்து தியேட்டருக்கு செல்வோருக்கு சைரன் நிச்சயம் பிடிக்கும்.
இறுதியாக ஜெயம் ரவி நாயகனாக நடித்த பூமி, அகிலன், இறைவன் ஆகிய மூன்று படங்களும் தோல்வியை சந்தித்தது. இப்படி ஒரு நிலையில் தற்போது இவர் நடித்துள்ள ‘சைரன்’ படம் வெற்றி பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப்பிட்ட தக்கது.
அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் ஒரு இயக்குனராக முதல் படத்திலேயே வெற்றி பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் எப்படி கதை சொன்னால் மக்களுக்கு பிடிக்கும் என்ற மாயாஜாலகத்தை அவர் அறிந்து வைத்திருக்கிறார் ஜெயம் ரவியை சிறையில் காட்டும் போதும், அவர்கள் நண்பர்கள் பேச முடியாமல் சைகை செய்து, ஜெயம் ரவி கடவுளாக சொல்லும் போதும், கீர்த்தி சுரேஷ் காட்சிக்கு காட்சி ஜெயம் ரவியை சந்தேகப்படும் போதும் , ஜெயம் ரவி நான் கொலை செய்யல என்று சொல்லும் பொழுது, காட்சிகளில் உயிர் துடிப்பு ,மகள் மீது பாசம் ,மனைவி இழந்த சோகம், 14 நாட்களுக்குள் தான் செய்ய வேண்டிய காரியத்தை கச்சிதமாக செய்துவிட்டு ,மீண்டும் சிறை செல்ல போகும் திலகரின் கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறது எல்லா கதாபாத்திரத்தையும், யோகி பாபு உட்பட சீராக கச்சிதமாக எழுதி வடிவமைத்திருக்கிறார் இயக்குனர். பாராட்டுக்கள்
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
கடமை தவறாத போலீஸ் அதிகாரியாக குற்றவாளியை கண்டுபிடிக்க துடிப்பதும், சமுத்திரக்கனியிடம் வாங்கி கட்டிக் கொள்வதும் , அவரையே காப்பாற்ற துடிப்பது என அச்சு அசலாக பொருந்தி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ் இன்னும் கொஞ்சம் சதை போட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இவரை தொடர்ந்து படத்தில் அனுபமா பரமேஸ்வரன்,
ஜெயம் ரவியின் மனைவியாக வந்து பேச முடியாத மாற்றுத்திறனாளியாக அவர் மீது பரிதாபம் ஏற்பட்டு நம் மனதில் நிற்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.வெல்டன்.
யோகி பாபு,
ஜெயம் ரவிக்கு பாதுகாவலராக வந்து பின்னர் அவரோடு நட்பு பாராட்டி, பழகிவிட்டு அவரும் குற்றவாளி கூண்டில் நிற்கும் போதும், யோகி பாபு அனுதாபம் கொள்ள வைக்கிறார் .
சமுத்திரக்கனி,
நாகலிங்கம் என்ற கதாபாத்திரத்துக்கு டிஎஸ்பியாக சாதி வெறியராக கச்சிதமாக பொருந்தி போகிறார் அந்த கம்பீரமீசையும் கீர்த்தி சுரேஷை வறுத்தெடுக்கும் போது ஜெயம் ரவிக்கு 10 நிமிடத்தில் திகில் காட்டுகிறேன் என அந்தக் காட்சியில் சமுத்திரக்கனி சபாஷ் வாங்குகிறார்
வீரம் யுவானா, ஜெயம் ரவியின் மகளாக வந்து மனதில் இடம் பெறுகிறார் .அவர் அப்பாவை கோபத்துடன் பார்க்கும் காட்சிகள் ஆகட்டும் கீர்த்தி சுரேஷிடம் அப்பாவை பற்றி புகார் சொல்லும் போதும் பலே!
அழகம் பெருமாள்,
சாதி வெறி பிடித்த அரசியல் கட்சி தலைவராக அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
மற்றும்
அஜய் துளசி என்று பலர் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி எஸ் பின்னணி இசை கொடுக்க ஜி வி பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார்.
பின்னணி இசை படத்திற்கு மிரட்டலாக இருக்கிறது பாடல்களும் ரசிக்க வைக்கிறது
ஜெயம் ரவி மற்றும் அனுபமாவின் ஜோடி அவ்வளவு அற்புதமான அழகான ஜோடியாக கண் முன்னே நிற்கிறார்கள்
கீர்த்தி சுரேஷின் நடிப்பு ஆங்காங்கே கொஞ்சம் ஓவராக இருந்தாலும் அனாசியமாக துப்புதுலுக்கும் இடத்தில் கெத்து காட்டுகிறார்.
படத்தில் மூன்று வில்லன்கள்
ஒவ்வொருவராக சாகும்போது என்ன காரணத்திற்காக என்று தெரியாமல் சஸ்பென்சாக இயக்குனர் கொண்டு சென்று இருக்கிறார்.
இயக்குனர்.
ஜி,வி பிரகாஷ் இசையில் ஒலிக்கும் பாடல்கள் படத்திற்கு பலம் தான்
படத்தில்
அழுத்தமான வசனங்களாலும், சமீபகாலமாக தமிழ் சினிமா தொடாத கதையை கொண்டு நல்ல சினிமா வாக உருவாகியுள்ளது அந்த வரிசையில் சைரன் படமும் இடம் பெற்ற காட்சிகளும் கதாபாத்திரங்களும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நிறுத்திய இயக்குனருக்குவெற்றி தான் ஒரு சீரியசான கதைக்குள் கௌரவ கொலையை சொல்லி சமுதாயத்திற்கு நல்ல மெசேஜ் சொல்லி இருக்கிறார் இயக்குனர். சமுத்திரக்கனி பேசும் வசனமான ஒரு நாயை வீட்டில் வளர்க்கிறோம் அது நம் மீது படுக்கிறது தவழுகிறது
ஆனால் அதுவும் நாமும் ஒரே தட்டில் வாய் வைத்து சாப்பிடுவோமா என்று கேட்கிறார் ஜாதி வெறி பிடித்த மனிதர்களின் கொடூரமாக சமுத்திரக்கனியின் கேரக்டர் சித்தரிக்கப்பட்ட இருக்கிறது
இயக்குனரிடம் சமூக சிந்தனை !எடுத்துக் கொண்ட கதையை எப்படி விறுவிறுப்பாக சொல்ல வேண்டும் என்று தெளிவான இயக்கமும் ,மிகுந்து காணப்படுகிறது.
ஒரு கதை நேர்க்கோட்டில் விலகாமல் எப்படி கொண்டு போக வேண்டும் என்று தெரிந்து வைத்து இருக்கிறார். இன்வெஸ்டிகேஷன் செய்யும் போலீஸ் அதிகாரி கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் மனதில் நிற்கிறது. ஜெயம் ரவியின் இரட்டை வேட நடிப்பு வயதான முதிர்ந்த நடிப்பு கம்பீரமாக இருக்கிறது. இளமையாக வரும் காட்சிகளில் கலகலப்பாக இருக்கிறார் சண்டை காட்சிகள் கூட காமெடி செய்கிறார் ஜாதி பார்க்காதே என்று சொல்பவனிடம் நீ என்ன ஜாதி என்று கேட்பது நிறுத்துங்கள்
என்று தத்துவார்த்தமாக பேசுகிறார் ஜெயம் ரவி.
மொத்தத்தில் சைரன்
வெற்றி வழி தான் வியாபாரத்திலும் இப்படம் நல்ல சூழலை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது மக்களின் கைதட்டலும், கரகோஸமும், படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு ஜெயம் ரவியின் வித்தியாசமான நடிப்பு படத்தில் மிகப்பெரிய பலம் யோகி பாபுவின் காமெடி ,கீர்த்தி சுரேஷ் நடிப்பு, சமுத்திரக்கனியின் சாதி வெறி நடிப்பு அழகம்ப பெருமாளின் நயவஞ்சக சூது, இப்படி எல்லாம் கலந்த கலவையாக இந்த சைரனின் சத்தம் வெற்றி சத்தம் தான்
