எப்போதும் ராஜா. ( பாகம் 1 ) விமர்சனம்

உலகில் முதல் முறையாக வாலிபால் விளையாட்டை வைத்து வரும் படம் எப்போதும் ராஜா. ( பாகம் 1 )
படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க
அண்ணன் தம்பியாக விண்ஸ்டார் விஜய் முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆறு பாடல் காட்சிகள், ஆறு சண்டை காட்சிகள் சிரிப்பு செண்டிமெண்ட் பாசம் என மக்களுக்கு பிடித்துள்ள ஜனரஞ்சகமான படமாக அமைந்துள்ளது.

விண்ஸ்டார் விஜய்யுடன் ஜோ மல்லூரி, பி.சோம சுந்தரம், லயன்குமார், பிரியா,டெப்ளினா, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா மற்றும் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டுள்ளது.

எப்போதும் ராஜா பாகம் 1 படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர் விண்ஸ்டார் விஜய் இரு வேறுபட்டவேடத்தில் நடித்திருக்கிறார் வாழ்த்துக்கள் உலகிலேயே முதன்முறையாக கைப்பந்து விளையாட்டை கதைக்களமாக கொண்டு தயாரிக்கப்பட்டிக்கிறது.இந்தபடம்

இந்த படத்தில் சாதாரண மனிதன் சாதனை படைக்க போராடுவது தான். படத்தின் திரைக்கதை ஆரம்பத்தில் தமிழ்நாடு வாலிபால் சாம்பியன் ஆக அறிமுகம் ஆகி இந்திய அளவிலான போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற முயற்சி செய்கிறார் நாயகன் இதில் பல பிரச்சனைகளை சந்தித்து எப்படி வெற்றி பெற்றான் என்பதே படத்தின் கதை
வின்ஸ்டார் விஜய் இந்த படத்தில் இரட்டைவேடத்தில் இன்ஸ்பெக்டர் ஆகவும் வாலிபால் விளையாடும் வீரனாகவும் நடித்திருக்கிறார் இவர் இளமை துடிப்புள்ள போலீஸ் அதிகாரியாக முதல் காட்சியிலேயே எதிரிகளைப் பந்தாடி கைதட்டல் வாங்குகிறார் பத்திரிக்கை பெண் நிருபரை காப்பாற்றும் அந்த காட்சி மாசாக இருக்கிறது அதன் பிறகு வாலிபால் போட்டியில் இந்திய அளவில் வெல்ல வேண்டும் என்று முனைப்போடு செயல்படுகிறார் இனிய காதலியுடன் டூயட் பாடுகிறார் அம்மாவிடம் பாசம் காட்டுகிறார் அண்ணனிடம் அன்பு காட்டுகிறார் 100 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார் தெருவில் போகும் பெண்களை கிண்டல் செய்தால் அடித்து நொறுக்குகிறார் எல்லோருக்கும் அட்வைஸ் செய்கிறார் கர்மவீரர் காமராஜர் புகழ் பாடுகிறார் புரட்சித்தலைவர் எம்ஜிஆரை வணங்குகிறார் சண்டை காட்சிகளில் எதிரிகளை துரத்திக் கொண்டே இருக்கிறார் தனது நண்பா செல்வா வை கொலை செய்தவர்களை பழிக்கு பழி வாங்குகிறார் தன் அண்ணன் ஆக்சிடென்ட் டில் அடிபட்டு மருத்துவமனையில் இருக்கும் பொழுது அண்ணனை நினைத்து கண்கலங்குகிறார் இந்திய அளவில் கிரிக்கெட் விளையாட செல்லும் பொழுது டெல்லியில் மும்பையில் டானாக இருக்கும் கும்தாஜ் காதல் வலையில் வீழ்த்தி காம களியாட்டம் போடுகிறார் அவரை எப்படியாவது வாலிபால் போட்டியில் போகாமல் செய்துவிட வேண்டும் என்று துடிக்கும் அந்த வில்லியிடம் மண்ணுக்கு போற உடம்பு தானே பொண்ணுக்கு போனாவேணான்னு சொல்வேனா? என்று அவர் காம இச்சையை தீர்க்கிறார். காதலி அமெரிக்காவில் இருந்து வருகிறார் இசை ஆராய்ச்சிக்காக அவர் இசை ஆராய்ச்சி செய்கிறாரோ இல்லையோ வகஸ்டார்விஜயை நன்றாக ஆராய்ச்சி செய்து அவர் மனதில் இடம் பிடித்துக் கொள்கிறார் அவருடன் இரண்டு மூன்று டூயட் பாடுகிறார் அப்பொழுது நான்கு காஸ்டிம்களில் என் மக்களுக்காக நான் டூயட் பாட போகிறேன் என்று சுற்றிலும் கலர் கலர் பல்புகளை பார்க்க விட்டு டூயட் பாடுகிறார் அடுத்து தன் தங்கையை கடத்திப் போனவர்களை பழி வாங்குகிறார் இப்படி எதார்த்தமான நடிப்பை வழங்கி இருக்கிறார் படம் முழுக்க எதார்த்தமாக இருக்கிறார் எல்லா காட்சிகளிலும் நடிப்பு என்று சொல்லாத அளவுக்கு மிகைப்படுத்தாமல் நடித்திருக்கிறார் முதல் படத்திலேயே இரட்டை வேடத்தில் நடித்து கதை வசனம் இயக்கம் எழுதி தயாரிப்பாளராக எல்லோரையும் நடிக்க வைத்திருக்கிறார் ஐந்து வருட போராட்டத்திற்கு பின் வெளிவந்திருக்கும் இந்த படம் கமர்சியல் மசாலாக வந்துள்ளது செல்வா வாக நடித்திருக்கும் மக்கள் தொடர்பாளர் செல்வா நடிப்பு நன்றாக இருக்கிறது காதலி அழகு பதுமையாக வந்து போகிறார் வில்லி வரும் காட்சிகளில் மிரட்டலாக இருக்கிறது சண்டைக்காட்சி நன்றாக இருக்கிறது டூயட் பாடலுக்காக தேர்வு செய்த லொகேஷன் காட்சிகள் நன்றாக இருக்கிறது இசை நன்றாக இருக்கிறது ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது படமாக்கப்பட்ட விதம் இரண்டு மணி நேரம் சலிப்பில்லாமல் போகிறது அதுவே படத்துக்கு கிடைத்த வெற்றி. விஜய் தொடர்ந்து நடித்து புகழ் பெற வேண்டும் என்பது நமது ஆசை இன்னும் சரியான கதைக்களம் எடுத்து இன்னும் கொஞ்சம் காட்சிகளுக்கு உயிரூட்டி நிதானமாக கேமராவை பார்த்து பேசி நல்ல கதைகள் எடுத்திருந்தால் இன்னும் பாராட்டு பெற்று இருக்கலாம் மற்றும் பத்திரிகையாளர்கள் நிறைய பேர் நடிக்க வைத்திருக்கிறார் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் இந்த படம் நிச்சயமாக பி அன் சி சென்ட்ரலில் கவர் செய்யும் வின்ஸ்டார் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என பன்முகத்தோடு களமிறங்கியுள்ள இவர் மேலும் மேலும் வெற்றி பெறுவார் என்று குறைகள் இல்லாத சினிமா கிடையாது ஆனால் குறைகளை சொல்லாமல் நிறைவாக பாராட்டி இந்த முயற்சிக்கு வாழ்த்தலாம் வாழ்த்துக்கள்