பைரி படத்தின் திரைவிமர்சனம்

வெற்றி படமாக வந்திருக்கிறது “பைரி இப்படத்தின் திரைவிமர்சனம் பார்க்கலாம் வாங்க

புறா பந்தயத்தைப் பின்னணியாக வைத்து தனுஷின் ‘மாரி’ படம் வெளியானதைப் போல, இப்போது புதுமுகங்களின் நடிப்பில் ‘பைரி’

படத்தின் இயக்குநர் ஜான் கிளாடி, ‘நாளைய இயக்குநர் சீஸன் 5’ இல் பங்கேற்றவர். குறும்படமாக இருந்த ‘பைரி’ அதே பெயரில் இப்போது படமாகியுள்ளது. புறாக்கள், புறா பந்தயம் குறித்த ஆச்சரியமான தகவல்கள் தந்து இருக்கிறார் ஜான் கிளாடி.

”ஒரு அம்மாவுக்கும் பையனுக்கும் இடையேயான பாசப் போராட்டங்கள்தான் படத்தின் கதை. பந்தயப் புறா வளர்ப்பின் பின்னணியில் ஆக்‌ஷனும் எமோஷனுமாக சொல்லியிருக்கிறார்கன்னியாகுமரி மாவட்டம் முழுக்கவே பல கிராமங்களில் தொன்றுத் தொட்டே பந்தயப் புறாக்களை வளர்க்கும் குடும்பங்கள் இருக்கிறார்கள். அதுல அறுகுவிளை கிராமத்தில், அதிகமான புறாக்கள் உண்டு. கதைப்படி, தலைமுறை தலைமுறையா புறா வளர்ப்பினால், தங்கள் குடும்பத்தில் பாதிப்பு ஏற்படவே, தன் பையனாவது அதில் ஈடுபடாமல் நல்ல வேலைக்கு போகணும்னு நினைக்கிறாங்க அம்மா. அந்த அம்மாவின் கனவு பலித்ததா? என்பதே படம்.
அந்தப் பந்தயத்தால் ஏற்படும் பகை அந்த பகையால் ஏற்படும் உயிர் சேதம் அந்த உயிர் சேதத்தால் ஏற்படும் உறவுகளின் வலி அந்த வலியை கொடுக்கும் இந்த புறா பந்தயம் தேவையா ?என்று மகனிடம் மன்றாடி கேட்கிறார் சரஸ்வதி மகனுக்கோ, அம்மாவின் கோரிக்கையை விட புறா பந்தயம் தான் முக்கியம் என்று தெரிகிறது அதில் அவர் வெற்றி பெற்றாரா ?அந்த பகை அவரை வாழ விட்டதா? நண்பர்கள் நட்பு எத்தகைய விபரீதத்தை ஏற்படுத்துகிறது! நான்கு வருடமாக காதலிக்கும் சாரோன் என்னும் அந்த அழகு பதுமை இவரை காதலித்தாரா ?இப்படி படம் முழுக்கவே எதார்த்தமாக சொல்லி இருக்கிறது பைரி
ஒவ்வொரு காட்சிகளும் பரபரப்பு, ஒரு அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை கிளைமாக்ஸ் காட்சி பார்ப்பது போல் இருக்கிறது அதுவும் இன்டெர்வல் பிளாக்கில் வரும் சண்டைக்காட்சி அவ்வளவு பரபரப்பு மொத்தத்தில் இந்த பைரி சுழன்று சுழன்று பறந்து எதிரிகளை வீழ்த்தி வெற்றி கண்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

புறாக்களை வேட்டையாடும் குணம் கொண்ட கழுகு இனம்தான் ‘பைரி’னு சொல்வார்கள்.

பொதுவாகவே பந்தயப் புறாவைப் பொறுத்தவரைத் தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலுமே பெரியளவில் வளர்க்கிறார்கள். சென்னையில் பந்தய புறாக்களுக்கான கிளப்புகள் நிறைய இருக்கு. ‘ஹோமர்’ பந்தயம் என்று சொல்வார்கள். கிளப்பில் உள்ள உறுப்பினர்கள், பந்தய தினத்தன்று புறாக்களைக் கிளப்புக்குக் கொண்டு வந்து விடுவார்கள் அங்கே புறாக்களுக்கு டேக் போட்டு, நம்பர் கொடுத்துட்டு வார்கள்
100 கிலோ மீட்டர், 200 கிலோ மீட்டர், 1000 கிலோ மீட்டர் தூரம்னு புறாவைப் பறக்க விடுவார்கள். எந்த புறா வீடு வந்து சேருகிறதோ, அதை ஜெயிச்சதா அறிவிப்பார்கள்.
வளர்ப்பு புறாக்களுடன்..
சென்னையில் இன்னொரு புறா பந்தயமும் பிரபலம். ‘மாரி’ படத்தில் பார்த்திருப்போம். கரண புறா பந்தயம். அந்த புறா பல்டி அடிக்கும். அந்த புறா எத்தனை பல்டி அடித்தது என்பதை வைத்து, வெற்றியை அறிவிப்பார்கள்.
அது போல தான்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாதா புறா அல்லது வளர்ப்பு புறா பந்தயம் இப்ப பிரபலமாகிடுச்சு. டிப்ளர் ரேஸ்னு சொல்வார்கள். இந்த பந்தயத்தில், போட்டியின் நடுவர்கள் அதிகாலை ஆறு மணிக்கே நாம புறா வளர்க்கிற இடத்துக்கு வந்திடுவாங்க. அந்த புறா காலில் சீல் அடித்து (முத்திரை) பறக்க விடுவார்கள்.

அப்படிப் பறக்க விடும் புறாக்களுக்கு ஒரு நிபந்தனை இருக்கிறது. எத்தனை மணி நேர பந்தயமென்றாலும் ஒவ்வொரு 20 நிமிஷத்துக்குள்ளும் அந்த புறா, தன்னுடைய கூட்டுக்கு மேல் பறந்து போயிருக்கவேண்டும். அதை ரெஃப்ரிக்கிட்ட, நம்மளோட புறாதான் என்பதை காண்பிச்சிடணும். காலையில் அல்லது மாலையில் இருட்டினதுக்குப் பிறகு புறாவைப் பறக்க விடுவார்கள். ஒவ்வொரு 20 நிமிஷத்துக்கு பிறகும், புறாவைப் பார்க்க வரும் மக்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கும். எவ்வளவு மணி நேரம் அது அதிகமா பறக்கிறது என்பதை வைத்து, வெற்றியை அறிவிப்பார்கள். குறைந்த பட்சம் 20 மணி நேரம் பறந்தால் தான் அது வின்னிங் ஏரியாவிலேயே கால்பதிக்க முடியும். இந்த டிப்ளர் ரேஸைதான் இந்த ‘பைரி’யில வைத்து கதை சொல்லி இருக்கிறார்கள்

‘நாளைய இயக்குநர்’ சீஸன் 5ல இயக்குனர் கலந்துகொண்டபோது, ஆக்‌ஷன் ரவுண்ட்ல ஒரு படம் பண்ணனும்னு அவருக்கு ஒரு டாஸ்க் கொடுத்துட்டாங்க. உடனே அவருக்கு தோன்றிய ஒரு விஷயம் கன்னியாகுமரிக்கு பக்கத்தில் உள்ள அறுகுவிளை கிராமத்தில் பந்தய புறா வளர்ப்பினால், ஒரு பெரிய சம்பவம் தான் நினைவுக்கு வந்ததாம்
அப்படி உருவானது தான் அந்த குறும்படம் அதுதான் இன்று பியூச்சர் படமாக வெளிவந்திருக்கிறது

இயக்குநர் ஜான் கிளாடி
அந்த பந்தயப் புறா பின்னணியில் உணர்வுப்பூர்வமான ஒரு விஷயத்தையும் சேர்த்து சொல்லலாம்னு இந்த கதை எழுதியுள்ளார் குறும்படத்தின் போது, இந்தப் படத்தோட ஹீரோ சையத் மஜீத் அறிமுகம் கிடைத்ததாம். வேற ஒரு இயக்குநரின் படத்துல அவர் நடித்திருந்தார். ‘பைரி’ குறும்படம் அவருக்கு பிடித்திருந்தது. அந்த கதையின் மீதிருந்த நம்பிக்கையால், குறும்படத்தைப் பெரிய படமா பண்ணலாம்னு அவரும் விரும்பி இருவரும் சேர்ந்தே, தயாரிப்பாளர்கள் தேடியுள்ளனர் இப்ப படமாகவும் கொண்டு வந்துள்ளனர்
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

ஹீரோவா மஜீத் , ஹீரோயின் மேக்னா எலன், விஜி சேகர், சரண்யா ரவிச்சந்திரன்னு நிறைய பேர் நடித்திருக்கிறார்கள். நிஜ பந்தயப் புறா வளர்க்கிற ஆட்களும் இதில் நடிகர்களா அறிமுகம்பந்தயம் குறித்து சில திரைப்படங்களில் கூறியிருந்தாலும், முழுக்க முழுக்க புற பந்தையத்தை மையமாக வைத்தும், புற பந்தயத்தின் தீவிரத்தையும், அதில் ஈடுபடுபவர்களின் வாழ்வியலையும் முழுமையாக பேசும் ஒரு படமாக ‘பைரி’
வந்து உள்ளது
இந்த படத்தின் படப்பிடிப்பு
குமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலும், நடத்தி இருக்கிறார்கள் அதன் சிறப்புகளும் அனைவரும் அறிந்ததே. ஆனால், 100 ஆண்டுகளுக்கு மேலாக நாகர்கோவில் நகரில் நடந்த புறா பந்தயங்கள் பற்றி பெரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், பலருக்கும் இது குறித்து தெரியாமலேயே இருந்திருக்கும்
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, நாகர்கோவில் நகரில் மிகத் தீவிரமாக நடைபெற்று வந்த புறா பந்தயத்தை மையமாக வைத்து, நடந்த பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் உருவாக்க பட்டுள்ளது.

டி.கே. புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி.துரைராஜ் தயாரித்துள்ளார்
இப்படி ஒரு நல்ல படத்தை தயாரிக்க முடியும் என முன் வந்த அவருக்கு வாழ்த்துக்கள்

இப்படத்தை ஜான் கிளாடி இயக்குகியுள்ளார். இவர் நாளைய இயக்குநர் சீஸன் 5 – ல் கலந்துக் கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்ததோடு, அந்நிகழ்ச்சியில் ‘நெடுஞ்சாலை நாய்கள்’ என்ற குறும்படத்திற்காக சிறந்த வசனகர்த்தா விருது பெற்றவர் ஆவார். சஞ்சீவ் உள்ளிட்ட சில இயக்குநர்களிடம் உதவியாளராகப் பணியாற்றிய இவர், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
முதல் படத்திலேயே அதிக ரிஸ்க் எடுத்து புது முக நாயகனை வைத்து நல்ல தரமான படைப்பு தந்திருக்கிறார் அம்மா மகன், பாசம் அளவிட முடியாது நண்பர்கள் பாசம், அதைவிட உயர்வானது இதையெல்லாம் ஒன்று சேர்த்து இயக்குனர் தந்து இருக்கிறார் அவருக்கு பாராட்டுக்கள்

கதாபாத்திரங்களும் அதற்கேற்ற தேர்வு படத்தின் வெற்றிக்கு கைகோர்த்துள்ளது

வட்டார வழக்கு பேச்சு நடை உடை எல்லாமே பொருந்தி போகிறது

நாளைய இயக்குநர் சீஸன் 3-ல் முதல் பரிசு வென்ற ‘புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ உள்ளிட்ட பல குறும்படங்களை தயாரித்து, 25 க்கும் மேற்பட்ட குறும்படங்களில் கதாநாயகனாக நடித்த சையத் மஜீத், இப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
அவரின் உழைப்பு வீண் போகவில்லை ஒரு அதிரடி ஆக்சன் நாயகனாக இந்த படம் மூலம் உயர்ந்து நிற்கிறார்

ஒரு படம் வெற்றி அடைய வேண்டும் என்றால் அதன் கதைகளும் மக்களுக்கு நெருக்கமானதாக இருக்க வேண்டும் அந்த கதாபாத்திரங்கள் மக்களுக்கு பரிச்சையப்பட்டவராக இருக்க வேண்டும் அப்படி இந்த படத்தில் எல்லா கதாபாத்திரமும் நமக்கு மிக நெருங்கிய வர் கள் இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுத்துகிறது
அதுவும் ரசிக்கும் படி இருக்கிறது

சக்திவேல் பிலிம்ஸ் சார்பாக சக்திவேலன் படத்தை வெளியிடுகிறார் அவர் ஒரு படத்தை வாங்கி வெளியிட்டாலே வெற்றிக்கு உத்தரவாதமாக அமைகிறது

பிரான்சிஸ் கிருபாவின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள பத்தினிபாறை கிராமம் ஆகும். அவரின் சகோதரர்களுக்கு திருமணமாகிவிட்டது. பிரான்சிஸ் கிருபாவின் அப்பாவுக்கு 100 வயது. அவர், படுத்தபடுக்கையாக வீட்டில் இருக்கிறார். அப்பாவையும் சகோதரர்களையும் சந்திக்க கிருபா செல்வார். நாகர்கோவிலில் இலக்கிய வட்டாரத்தில் பிரான்சிஸ் கிருபாவுக்கு தொடர்பு உள்ளது. அழகர்சாமியின் குதிரை, வெண்ணிலா கபடிகுழு, குரங்கு பொம்மை என 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். பைரி படத்தில்கூட கவித்ரன் உடன் பிரான்சிஸ் கிருபாவும் இணைந்து பாடல் எழுதியுள்ளனர்

நாயகன்
Syed Majeed –

ராஜலிங்கம் ஆக வாழ்ந்து இருக்கிறார் மனுஷன் என்ன கோபம் என்ன வெறித்தனம் 14 ஆண்டுகளாக முயற்சி செய்து இப்போதுதான் நாயகனாக முதல் முயற்சியில் வெற்றி கண்டுள்ளார் அதற்காக இந்த படத்திற்கு அவர் உழைத்த உழைப்பு கொஞ்சம் நெஞ்சம் அல்ல காதலிலும் சரி, கோபத்திலும் சரி, தாயிடம் பேசும் போதும் தந்தையிடம் கத்தும் போதும் நண்பர்களிடம் நட்பு பாராட்டும் போதும், வில்லன்களிடம் சவால் விடுவதாகட்டும் பண்ணையார் மகனிடம் பணிந்து போவதாகட்டும் நடிப்பில் உயர பறந்து இருக்கிறார்

நாயகி
Meghana Ellen –

ஷாரோன் என்ற கதாபாத்திரத்தில் அழகு பதுமையாக வருகிறார் நான்கு வருடமாக தன்னை ஒரு தலையாக காதலித்து வரும் நாயகனை ஏறெடுத்து பார்க்காமல் நான்கு வருடங்களுக்குப் பிறகு முகநூலில் அழைப்பு விடுக்கும் அழகு மங்கைக்கு அதிக வேலை இல்லை என்றாலும் இரண்டாம் பாகத்தில் இவருக்கு அதிக வேலை இருக்கும் என்று தெரிகிறது

நாயகன் அம்மா
Viji Sekar – சரஸ்வதி வேடத்தில் இவர் கதாபாத்திரம் எல்லோரும் பாராட்டும் படியாக அமைந்திருக்கிறது தன் மகன் படித்து நல்ல வேலைக்கு போக வேண்டும் என்று என்ஜினியரிங் கல்லூரியில் படிக்க வைத்தால் அவன் புறா பந்தயத்தில் ஈடுபட்டு குஸ்தியிலும் சண்டைகளும் ஈடுபடுவது எந்த அம்மாவுக்கு ஏற்படும்படியாக இருக்கும் அவரின் கோபம் அவர் நடிப்பு அவரின் டயலாக் டெலிவரி அம்மாவுக்கு உரிய அந்த பாசம் தன் மகன் நண்பர்களால் தான் கெட்டுப் போறான் என்று அமல் என்ற நண்பனிடம் காட்டும் கோபம் மகனை கோபித்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே செல்வது இப்படி படம் முழுக்க ஒரு ராஜங்கம் செய்திருக்கிறார் இந்த விஜிசேகர் இனி திரை உலகம் இவரை கொண்டாடும் அம்மா கதாபாத்திரத்திற்கும் அக்கா கதாபாத்திரத்திற்கும் இவர் அதிகம் வலம் வருவார் என்று நம்பலாம்

John Glady – அமல் என்ற கதாபாத்திரத்தில் நாயகன் நண்பனாக வருகிறார் இவர் சிரிப்பும் இவர் நடிப்பும் வில்லனைக் கண்டு பயந்து நடுங்குவதும் வில்லனை முதுகில் குத்திவிட்டு உயிருக்கு பயந்து ஓடுவது நண்பனுக்காக எதையும் செய்ய ஏற்றுக்கொண்டது இப்படி அமல் ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் ஜெயித்திருக்கிறார்

Saranya Ravichandran – சித்ரா என்ற வேடத்தில் நாகர்கோவில் பெண்ணாகவே அச்சு அசலாக பொருந்தி இருக்கிறார் நாயகன் மீது ஒருதலையாக காதல் கொண்டு நாயகன்அம்மாவுக்கு பரிந்து பேசுவது இரவு 12 மணிக்கு நாயகனுக்காக கேக் வெட்டி பர்த் டே கொண்டாடுவது பாசமழை பொழிவது நாயகனுடன் செல்பி எடுப்பது என சரண்யா வாழ்ந்து இருக்கிறார்

Ramesh Arumugam – ரமேஷ் பண்ணையார் ஆக நடித்திருக்கிறார் அற்புதமான நடிப்பு அவர் கண்கள் பேசுகிறது தன்னுடைய ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் சண்டையில் குதித்து விடக்கூடாது என்று பொறுமையாக அவர்களுக்கு எடுத்து சொல்வது அமலை காப்பாற்ற அரசியல்வாதிகளிடம் ஒவ்வொருவராக சென்று பேசுவது நாயகன் பொறுமை காக்க மன்றாடுவது இப்படி அவர் வரும் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மற்றும் ஒரு நல்ல நடிகராக வலம் வருவார்

Vinu Lawrence – சுயம்பு என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டி இருக்கிறார் அவர் உடல் அமைப்பும் அவர் உறுமி கொண்டு நிற்பதும் என் முதுகில் குத்திய அவனை நான் மன்னிக்க வேண்டும் என்கிறீர்களா? அவ்வளவு நல்ல மனுஷன் நானில்லை என்று அவர் சொல்வதும் அட்டகாசம் அட்டகாசம்

Thirumal (rajalingam Appa)

அதிகம் பேசாத மகனிடம் அடங்கிப் போகும் கதாபாத்திரம் நன்றாக நடித்தி ருக்கிறார்

Karthick Prasanna – வில்லியம் என்ற கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்

Francis Kiruba இவர் ஒரு இலக்கியவாதி படத்திற்காக கெட்டப்பை மாற்றி நாகர்கோவில் மனிதராகவே வாழ்ந்திருக்கிறார் நல்ல நடிப்பு–

ravichandran (Chithra Appa) இவர் அமைதியாக வந்து போகிறார்
Rajan – அமல் அப்பாவாக வருகிறார் மகனுக்காக உருகுவது மாதாவிடம் வேண்டுவது இப்படி இவர் வரும் காட்சிகள் ஜீவன் உள்ள காட்சிகளாக இருக்கிறது

புறா பந்தயத்தை ஆராய்ச்சி செய்து அதை சிறப்பாக படமாக்கிய கதைகளம் ரசிக்க வைக்கிறது

Written and directer – John Glady புறா பந்தயத்துக்காக மெனக்கெட்டு ஆராய்ச்சி செய்து நாகர்கோவில் மக்கள் அந்த இளைஞர்கள் எப்படி இருப்பார்களோ அவர்களை வைத்து கதை எழுதி இருக்கிறார் ஒவ்வொரு காட்சிகளும் எதார்த்தம் இருக்கிறது லாஜிக் மீறாமல் கதையை சொல்லி இருக்கிறார் அருமையான இயக்கம் 2024 புது இயக்குநற்கான விருது நிச்சயம் ஒரு காத்திருக்கிறது

DOP – A.V. வசந்த குமார் புறாக்களை வைத்து பந்தயம் நடத்தும் கும்பல்களை காட்டி அசத்தியிருக்கிறார் புறாக்கள் அந்தந்த நேரத்துக்கு வந்து காட்ட வேண்டும் என்று பந்தயம் வைப்பதும் அதற்காக மெனக்கெட்டு படம் ஆக்கி இருக்கிறார் காதல் காட்சிகள் ஆகட்டும் சண்டை காட்சிகளிலும் கேமரா
புகுந்து விளையாடி உள்ளது
Music director – Arun Raj
பின்னணி இசை அருமை அந்த வானம் பாடல் அருமை பேக்ரவுண்ட் இசையில் அசத்தியிருக்கிறார் இசையமைப்பாளர்

Editor – R.S.Sathish Kumar
அருமையான கச்சிதமான படத்தொகுப்பு படத்தை இரண்டு மணி நேரம் 20 நிமிடத்தில் எவ்வளவு சீராக காட்ட முடியுமா அதை படத்தொகுப்பாளர் நேர்த்தியாக செதுக்கி படத்திற்கு பலம் செய்திருக்கிறார்

Fight master – விக்கி
கிராமத்து இளைஞர்கள் எதார்த்தமாக சண்டை போட்டுக் கொள்வது போல் படத்தின் சண்டைக் காட்சிகளை அருமையாக அமைத்திருக்கிறார் ஸ்டண்ட் இயக்குனர் ஒவ்வொரு காட்சியிலும் சண்டை காட்சியும் உச்சம் தொடுகிறது

Art directer – அனீஸ்
புறா கூண்டுகளை கூண்டுகளை அமைத்த விதம் நாயகனின் வீடு வில்லனின் வீடு அந்த பன்றிகளின் கூடாரம் இப்படி எல்லா காட்சியிலும் ஆர்ட் டைரக்டர் கைவண்ணம் மிளிர்கிறது

Costume design – தினேஷ் எல்லா கதாபாத்திரங்களுக்கும் ஏற்றவாறு வகை வகையான காஸ்டியூம் இருக்கிறது கதாபாத்திரங்களை கண் முன் நிறுத்தும் காஸ்டியூம்
அதுவும் அமல் கதாபாத்திரத்தின் காஸ்டியூம் கவனம் பெறுகிறது வில்லன் சுயம்புவின் காஸ்டியூம் கவனம் பெறுகிறது பண்ணையார் காஸ்டியூம் கவனம் பெறுகிறது நாயகியின் காஸ்டியூம் கவனம் பெறுகிறது

மற்றும் இப்படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்கள்

Makeup – Kumaresan
VFX – Sekar Murugan
Lyrics – Karthik Netha, Mohan Rajan, Pon manoban
DI – Get in dream studios
Co Director – Ganga Ram,
Associate Director – S. Panneer Selvam,
First Assistants – Mahesh Casber, Jaiso’n.
Executive producer – Pon Manoban, Dinesh Kumar
stills – A.J.J jovieh
Designs – Design point
Lyric video – Fix it in post Promotion
Production Manager – S.Mariyappan
அனைவரின் பங்களிப்பும் அருமையாக இருக்கிறது ஒரு வெற்றி படத்திற்காக கடுமையாக உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள்

PRO – Nikil Murukan
ஒரு படத்தை அதுவும் நல்ல தரமான படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் மக்கள் தொடர்பாளர் கடுமையாக உழைத்து இந்த படத்திற்கு வெற்றி தேடி தந்துள்ளார் பாராட்டுக்கள்

இந்த படத்தின் நிறை என்ன

நாயகனின் அம்மாவாக வரும் விஜி சேகர் அவர் வரும் காட்சிகள் எல்லாம் அவ்வளவு இயல்பாகவும் பாசம் மிகுந்த அன்பான அம்மாவாகவும் கண்டிப்பாக இருக்கிறது
அந்த தாயின் கதாபாத்திரம் அதற்காக அவரை தேர்வு செய்த விதம் இந்த படத்திற்கு மிக சிறப்பாக அமைந்திருக்கிறது

படம் முழுக்கவே வில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லி இருப்பது வித்தியாசமான முயற்சி எல்லோருக்கும் புரிய வைக்கும் எளிய முயற்சி இந்த படம் மூலம் அது நிறைவேறி இருக்கிறது

படத்தில் காதல் இருக்கிறது கண்ணியமாக இருக்கிறது நாயகி நாயகன் நான்கு வருடமாக நாயகி தொந்தரவு செய்து கொண்டிருந்தார் என்ற கேள்வி எழுப்பி அதற்கு பதிலும் சொல்லி இருக்கிறார் இயக்குனர்

இன்றைய இளைஞர்கள் கோபத்தில் எடுக்கும் முடிவு வித்தியாச விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதை அமல் என்ற கதாபாத்திரம் மூலம் அருமையாக உணர்த்திருக்கிறார் இயக்குனர்
ரமேஷ் பண்ணையார் பொறுமையாக இருங்கள் பொறுமையாக இருங்கள் என்று சொல்லும் பொழுது அவர் நடிப்பு உச்சம் தொடுகிறது இன்று இளைஞர்கள் கற்க வேண்டிய பாடம்

புறாக்கள் 20 நிமிடத்திற்கு ஒரு முறை ரெபரிடம் காட்ட வேண்டும் அப்படி காட்டத் தவறினால் பந்தயம் கேன்சல் ஆகிவிடும் அப்படிப்பட்ட ஒரு புதுமையான கதைகளம் இந்த படத்திற்கு பலம்

வில்லன் சுயம்பு ஏமாற்றுகிறான் என்று தெரிந்து அவளிடம் மல்லுக் கட்டிநிற்கும் நாயகன் அதற்குப் பிறகு கதை விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சரசரவென தீப்பற்றி கொள்கிறது

நாயகனின் நண்பர்கள் நட்புக்கு பலகமாக இருக்கிறார்கள் அவர்கள் வரும் காட்சிகள் எல்லாமே சிறப்பாக இருக்கிறது அதேபோல வில்லனின் மச்சான் வரும் காட்சி கொடூரமாக இருக்கிறது என்ன செய்யப் போகிறார்கள் நாயகனை என்ற பத பதப்பை ஏற்படுத்துகிறது

மொத்தத்தில் இந்த பைரி தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது 16 வயதினிலே படம் மூலம் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் தமிழ் சினிமாவை கை பிடித்துக் கொண்டு கிராமத்துக்கு கூட்டி வந்தார் அதன் பிறகு இப்பொழுது இயக்குனர் ஜான் கிளாடி தமிழ் சினிமாவை நாகர்கோவில் பக்கம் அழைத்து சென்று அங்கு இருக்கும் மக்களின் அன்பையும் பாசத்தையும் வீரத்தையும் கோபத்தையும் போட்டியையும் பொறாமையும் வித்தியாசமாக எடுத்துக் காட்டி இருக்கிறார் பைரி அனைவரும் காண வேண்டிய படம் அற்புதமான படம்