கிளாஸ் மேட்ஸ் திரை விமர்சனம்

குடி குடியை கெடுக்கும்; கூட இருப்பவர்கள் வாழ்வைச் சிதைக்கும்’ என கிளாஸ் எடுக்கும் ‘கிளாஸ்மேட்ஸ்.’படத்தின் திரை விமர்சனம் பார்க்கலாம் வாங்க

குடியினால் இன்று சீரழிந்து வரும் பல குடும்பங்களின் கதை தான் இப்படத்தின் கதையும் சரி கதை என்ன பார்க்கலாம் வாங்க

கதையின் நாயகன், தன் மாமனுடன் சேர்ந்து நாள் முழுக்க குடிக்கிறான். காரில் போகும் போதும் வீட்டில் இருக்கும் போது, டீ குடிக்கும் போது என குடி குடி குடி குடிக்காத நேரம் இல்லை
குடிப்பழக்கம் சந்தேகப்பட்டால் என்ன ஆகும்

கார் டிரைவராக இருக்கும் அவனால் விபத்து நேர்கிற சூழலை சந்தித்து காவல்துறை நடவடிக்கைக்கு ஆளாகிறான். அன்புக்கு இலக்கணமாக இருக்கும் தன் புத்தம்புது மனைவி மீது சந்தேகப்படுகிறான். அதனால் வாழ்க்கையில் நிம்மதி பறிபோகிறது.
குடிப்பழக்கத்தால் வீட்டிலே பிரச்சனை வெளியே பிரச்சனை இப்படி பல பிரச்னைகளை சந்தித்து நாயகனுக்கு படிப்பினை ஏற்படுத்துகிறது. அது என்ன படிப்பினை?

இயக்கம் ‘குட்டிப்புலி’ சரவண சக்தி.அருமை

கதையின் நாயகனாக அங்கையற்கண்ணன். வகைதொகையில்லாமல் குடிப்பவர்கள் என்னவெல்லாம் ஏடாகூடம் செய்வார்களோ அதையெல்லாம் அப்படியே செய்திருக்கிறார்கள் இருவரும்

சம்பாதிக்கிற வேலையை பெரியமனதோடு மனைவிக்கு தூக்கிக் கொடுத்துவிட்டு, செலவழிக்கிற சிரமமான வேலையை தூக்கிச் சுமப்பவராக இயக்குநர் சரவண சக்தி. மாப்பிள்ளையோடு சேர்ந்து குடிப்பதை முழுநேரப் பணியாக வைத்திருக்கிற அவரது அலம்பல் சலம்பல் ஓரளவு ரசிக்க வைத்தாலும், எந்த நேரமும் போதையில் மிதந்து மனைவியின் அந்த’ பசிக்கு தீனிபோட முடியாத, தன் இயலாமை குறித்து சிந்தித்து குற்றவுணர்ச்சிக்கு ஆளாகும் காட்சி கவனம் ஈர்க்கிறது!
அப்போது பேசும் வசனம் சிந்திக்க வைக்கிறது பசி உடம்புக்கு மட்டுமல்ல தேகத்துக்கும் தேவைப்படுகிறது என் மனைவி அப்படி தவறு செய்திருந்தால் கூட சம்மதம் தான் என்கிறார் சரவணன்

நாயகனுக்கு மனைவியாய் வருகிற பிரணா ஹோம்லி லுக்கில் லட்சணமாக இருக்க, படம் முழுக்க அவர் அணிகிற உடைகள் பளீர் வண்ணங்களில் பளபளக்க, கலஃர்புல்லான நைட்டிகளையும் கணக்கு வழக்கில்லாமல் உடுத்திக் கொண்டு திரிகிறார்!
பீர் பாட்டிலால் மண்டை யில் அடி வாங்கும் போது மாமா என்று சொல்லும் போது ஒரு நல்ல மனைவியாய் தெரிகிறார் !

சரவண சக்திக்கு மனைவியாக வருகிறவரின் உடற்கட்டில் இளமை திமிர்கிறது!
அவருடன் கூட வேலை செய்யும் ஆசிரியர் ஒருவர் வீட்டுக்கு வர அவர் காண்டம் வாங்கிக் கொண்டு வந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைவது சரவணன் அங்கையர்கண்ணண்
மட்டும் கிடையாது நாமும் தான் !

அந்த இரு மனைவிகளும், கணவர் எவ்வளவுதான் குடித்துக் கூத்தடித்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், கல்லைத் தூக்கிப் போட்டுக் கொல்லாமல் அவர்கள் மீது அன்லிமிட்டடாய் அன்பைக் கொட்டுகிறார்கள். மாமா மாமா’ என கொஞ்சிக் குலாவுகிறார்கள். அதையெல்லாம் பார்த்தால், அவர்கள் வேற்றுக்கிரக வாசிகளாக இருப்பார்களோ என்ற சந்தேகம் வருவதை தவிர்க்க முடியவில்லை!
இன்று எல்லோரும் கணவன் மீது வெறுப்பை மட்டுமே கொட்டுகிறார்கள் என்பது உண்மை

எந்த நேரமும் பாட்டிலுடன் திரிகிற மாமனுக்கும் மாப்பிள்ளைக்கும், ஏதேனும் ஒரு ஸ்பாட்டில் கறிச் சோறு கன்ஃபாமாகி விடுவது திரைக்கதையிலிருக்கிற 2-வது முக்கிய விஷயம். ஹூம்… எத்தனை பேருக்கு இப்படி அமையும்?

‘அயலி’ அபி நட்சத்திரா அவ்வப்போது மின்னல்போல் எட்டிப் பார்த்துவிட்டு, கிளைமாக்ஸில் ஷாக்கடிக்கும்படி எக்குத்தப்பான இடத்திலிருந்து என்ட்ரி கொடுப்பது எதிர்பாராதது!
படத்தின் கிளைமாக்ஸ் நிச்சயம் நாம் எதிர்பார்க்காத தான் இப்படி ஒரு குண்டை இயக்குனர் தூக்கி போடுவார் என்று யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார் கள்

மயில்சாமி தான் நடித்தவற்றில் கடைசியாக டப்பிங் பேசிய படமாம் இது. நடிப்பில் எந்த வித்தியாசமும் காட்டாமல் வழக்கம்போல் குடிகாரராக வந்து, தள்ளாடி நடந்து ‘ஹே…ய், ‘ஹோ…ய்’ என குரல் கொடுக்கிறார். ‘நல்லவன் குடிச்சா குழந்தை, கெட்டவன் குடிச்சா கொலைகாரன்’ என அவர் பேசும் வசனம் ஈர்க்கிறது!
மனைவியிடம் வடிவேலு அடி வாங்குவது போல்
மயில்சாமி அடிவாங்கிக் கொண்டு தெருவில் வந்து மனைவியை அடிக்கும் இடம் கலாட்டா

துபாயில் சம்பாதித்து திரும்பி, கிராமத்து காடு மேடுகளில் கோட் சூட்டுடன் பந்தாவாக வலம் வருகிற சாம்ஸ்

பெண் பார்க்க வருகின்ற அந்தக் காட்சி செம காமெடி டீ குடுக்கும் கை பால் சொம்பு கொடுக்குமா என்று கேட்க மணமகள் கொடுப்பேன் என்று சொல்ல தியேட்டரில் சிரிப்பொலி

குடிகாரர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக அவர்களுடன் பழகி, அவர்களைவிட மகா மெகா குடிகாரராக மாறிப்போகிற டி எம் கார்த்திக் அநியாய கதாபாத்திரம் ஒரு டாக்டரா ? கடை எப்படா திறப்பார்கள் என்று காத்திருப்பார்?

அருள்தாஸ், மீனாள்
வருகின்ற காட்சிகள் படத்திற்கு கலகலப்பு அதுவும் மீனாள்
இருவர் மீதும் அன்பு காட்டி சாதம் பரிமாற அருள் தாஸ் தலையில் கையை வைத்து உட்கார்ந்து நொந்து போய் டயலாக் பேசி சிரிக்க வைக்கிறார்

மற்ற கதாபாத்திரங்களில் வருகிறவர்களின் பங்களிப்பு நிறைவு!

‘வாடா மச்சி கட தொறந்தாச்சு’, ‘அடிக்கிற பொண்டாட்டி தெருவுல நிப்பாட்டி’ பாடல்களை ரகளையாக தந்திருக்கிறார் பிரித்வி!
பாடல்கள் ரசிக்கும் வகையில் உள்ளது பின்னணி இசை நன்றாக இருக்கிறது

ஒளிப்பதிவு நேர்த்தி!

சொல்ல வந்த கருத்து வரவேற்புக்குரியது
குடியை கெடுக்கும் என்பதை

மதுபழக்கம் ஒருவரது நல்வாழ்வை சீரழித்து சிந்திக்கும் திறனை சிதைத்து தவறான பாதையில் அந்த நபரை இட்டு செல்ல வழிவகுக்கும் என்பதை கதைக்களமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்கள்

இன்று மதுப்பழக்கம் ஒரு நாகரிகமாக பார்க்கப்படுவது வேதனை தருவதாக இருக்கின்றது.
குடித்தவுடன் மூளை செயல்படும் திறனும் உடனடியாகக் குறைவதோடு நிரந்தரப் பாதிப்புகளுக்கும் உள்ளாகும். மதுவின் தாக்கத்தில் கார் அல்லது பைக் ஓட்டுகிறவர் தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாக இதுவே காரணம்.

இப்படத்திலும் நாயகன் மனைவி மீது சந்தேகப்பட்டு காரில் பயணிகளை ஏற்றிகொண்டு போகும் பொழுது சரக்கு அடிக்கிறார் இதற்கு பயனிகளை இறக்கி விட்டு விட்டு மனைவி வீட்டில் இருக்கிறாரா இல்லையா என்று பார்த்திருக்கலாமே!

2000-ம் ஆண்டுகளுக்கு முன்பே மது அருந்துவதின் தீமை பற்றி நமது வள்ளுவப் பெருந்தகை தனது ‘கள்ளுண்ணாமை’ அதிகாரத்தில் மிக அழகாக குறிப்பிட்டுள்ளார்.

உட்கப் படாஅர்; ஒளி இழப்பர்; எஞ்ஞான்றும்
கள்காதல் கொண்டு ஒழுகு வார்.

குறள் விளக்கம்: போதைப்பொருள் மீது எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார்; வாழும் காலத்து,மரியாதையும் இழந்து போவார்கள்.

நாண் என்னும் நல்லாள் புறம்கொடுக்கும்,
கள் என்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு

குறள் விளக்கம்: போதைப் பொருளைப் பயன்படுத்துதல் என்னும் பெருங்குற்றத்தைச் செய்வார்க்கு, நாணம் என்னும் நல்ல பெண் முதுகு காட்டிப்போய் விடுவாள். பண்பில்லை என்றால் எவ்வளவு அறிவிருந்தும்பயனில்லை என குறிப்பிட்டுள்ளார்

இப்படத்தின் நிறை என்ன?

மதுவின் தீமையை கருத்துக்களாய் சொல்லாமல் கலகலப்பாய் சொல்லியிருப்பது ரசிகத் தக்கது

சாம்ஸ் கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது அவர் திருமணம் மது குடிப்பதால் நின்றுபோகிறது என காட்டியிருப்பது அருமை

நாயகன் அங்கையர்கண்ணண் நடிப்பு இயல்பாக இருக்கிறது போதையில் தள்ளாடும் அந்த நடிப்பும், தவறு செய்து விட்டோமே, என்று குற்ற உணர்வில் அழுது புலம்பும் அந்த நடிப்பு, சரவணன் இடம் நட்பு பாராட்டும்அந்த பாந்தமும் மனைவி தன்னை பிரியும்போது ஏற்படும் துக்கமும் என மனுஷன் வாழ்ந்து காட்டி இருக்கிறார்.

குட்டி புலி சரவணன் போதையில் அடிக்கும் லூட்டி தியேட்டரே குலுங்கி குலுங்கி சிரிக்கிறது
மனுஷன் இயக்கத்திலும் சரி நடிப்பிலும் சரி பட்டையை கிளப்பி இருக்கிறார் கடைசி காட்சியில் மனம் வருந்தி மனம் திருந்தி மழையில் நின்று கொண்டிருக்கும் பொழுது தன் மகள் வந்து குடை பிடிக்கும் போது கண்கலங்கி அழும் காட்சி
சிறப்பாக இருக்கிறது

மறைந்த மயில்சாமி அவர்கள் எவ்வளவு அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார் வீட்டுக்கு போதையில் வந்து தன் மனைவியிடம் அவர் செய்யும் ரகளை நன்றாக இருக்கிறது மகளை ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற அவருடைய கனவு அவருடைய போதை குடியால் என்ன ஆகிறது என்பது பகீர் தகவல்கள்

ஒவ்வொரு வீட்டிலும் இன்று குடிமகன்களால் தினம் தினம் பெண்கள் செத்த சுண்ணாம்புகிறார்கள் அவர்கள் எப்போது விடிவுகாலம் கிடைக்கும் எப்ப இந்த குடிகாரன் திருந்துவான் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் இப்படிப்பட்ட சமுதாய சிந்தனை உள்ள திரைப்படத்தின் மூலம் படம் பார்த்து திருந்தினால் நிச்சயம் நாட்டுக்கு நல்லது நடக்கும் செவி கொடுத்து கேட்க வேண்டிய அரசாங்கம் கண்மூடிவாய் மூடி
மௌனமாய் இருக்கிறது எனவே இது போன்ற திரைப்படங்கள் நாட்டுக்கு தேவை வீட்டுக்கும் தேவை

படத்தின் ஆரம்பத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அருமை பெருமைகளை இயக்குனர் சொல்ல ஆரம்பிக்கிறார் அப்படி அருமையும் பெருமையும் வாழ்ந்த அந்த ஊரில் இன்று தெருவுக்கு தெரு சாராயக்கடை நிரம்பி வழிகிறது இனி எங்கே ஐயா அப்துல் கலாம் போன்ற சாதனை மனிதர்கள் பார்ப்பது

45 நாளில் படத்தை எடுத்து முடித்து இருக்கிறார்கள் தரமான படம்
சிந்திக்க வேண்டிய படம்

படத்தின் இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, நடித்த நடிகர்கள்
தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பங்காற்றி உள்ளனர்

படத்தில் வரும் நாயகனின் அண்ணன், அண்ணி, மாமனார், நடிப்பு நன்றாக இருக்கிறது

மயில்சாமி மனைவி படத்தில் முக்கிய திருப்புமாக அமைந்துள்ளார் அவர்தான் கதையின் டிவிஸ்ட் ஆக இருப்பார் என்று எதிர்பார்த்தால்அது மாறிப்போனது
அதிர்ச்சி தான்

அயலி படத்தில் நடித்த அபி நட்சத்திரா விழிகளால் பேசும் போது கண்கலங்கி போகிறோம்
வன் குடிகாரர்களுக்கு மகளாக பிறந்தால் ஐஏஎஸ் ஆக முடியாது ________தான் ஆக முடியும் என்று சொல்லும் பொழுது ஒவ்வொரு குடிகாரன் கண்ணத்தில் அறைந்தது போல இருந்தது

மொத்தத்தில் இந்த கிளாஸ்மேடஸ்
சிந்திக்கவும் சிரிக்கவும் நல்ல படிப்பினை தரும் தரமான படைப்பாக வந்திருக்கிறது கருத்து சொல்கிறேன் என்று ஒரே அட்வைஸ் மழை பொழியாமல் கலகலப்பாக பணத்தை கொண்டு சென்றிருப்பது இயக்குனரின் சிறப்பு ஒரு நல்ல படத்தை தயாரித்திருப்பது தயாரிப்பாளரின் சமூக அக்கறை இந்த இருவரும் கதாநாயகன் நடித்திருப்பது கலகலப்பு குடித்து விட்டால் மனைவி மீது எப்படிப்பட்ட ஆணுக்கும் சந்தேகம் வந்துவிடும். என்று நெற்றி பொட்டில் அறைந்தது போல் சொல்லி இருக்கிறார்கள் குடும்பம் வழி மாறி போகும் ,குழந்தைகள் வலி மாறி போவார்கள் பொருளாதாரம் மிகவும் கடன் நிலைக்கு தள்ளப்படும் .ஊருக்கு ள்மரியாதை கொஞ்சம் இருக்காது நம்மை தேடிநாலு பேர் வீட்டுக்கு வர மாட்டார்கள் என்பதை அற்புதமாக சொல்லி உள்ள இந்த படம் அனைவரும் காண வேண்டிய படம் பார்த்தால் மட்டும் போதாது பார்த்து திருந்த வேண்டிய படம் குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு என்ற பழமொழிக்கு ஏற்ப குடி குடியை கெடுக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப குடிகாரர்களின் வாழ்வை திருத்த வந்திருக்கும் இப்படத்திற்கு டாஸ்மார்க் இல்லை பாஸ் மார்க்