இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி யுள்ள “நினைவெல்லாம் நீயடா”. லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரமாண்டமாக தயாரித்துள்ளார் இந்த படத்திற்கு, சிலந்தி, ரணதந்த்ரா, சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட “அருவா சண்ட” படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை திரைக்கதை வசனங்களை எழுதி இயக்கியிருக்கிறார்.
பள்ளிப் பருவத்தில் உருவாகும் முதல் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு இதயம் வருடும் 5 பாடல்களை இசைத்துக் கொடுத்திருக்கிறார் இசைஞானி. அந்த பாடல்களை ஆதிராஜன் மிகுந்த ரசனையுடன் படமாக்கி இருக்கிறார்.
கண்களுக்கும் செவிகளுக்கு அவ்வளவு இனிமை குளுமை
பழனி பாரதியின் பாடல் வார்த்தை ஜாலங்களில் கார்த்திக்கின் மயக்கும் குரலில் உருவான “மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்…” என்ற பாடல் அவ்வளவு அருமையாக உள்ளது
தீனா நடன வடிவமைப்பில் உருவான இந்த பாடல் காட்சியில் ரோகித், யுவா ஜோடி நடிப்பு இளமை துடிப்புள்ள காட்சிகள் ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஒளிப்பதிவு அருமை கலர் கரெக்ஷன் அருமையாக இருக்கிறது இளமை ததும்பும் அழகு குவியல்களை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலம்
பிரஜன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக மனீஷா யாதவ் நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சினாமிகா நடித்துள்ளார்
மற்றும் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, அபிநட்சத்திரா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி எல் தேனப்பன்,ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்
படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம். மலர்விழி ,கௌதம் இருவரும் சின்ன வயதில் பள்ளியில் படிக்கிறார்கள். மலர் விழிஅப்பா அமெரிக்காவில் இருக்கிறார் கௌதமுக்கு ஆனந்தி என்ற ஒரு முறை பெண் ஒரு தலையா
காதலிக்கிறார் கௌதமமும் மலர்விழியும் நட்போடு பழக அது காதலாக மாறுகிறது அந்த காதல் வரும் காட்சிகள் அவ்வளவு அற்புதமாக இருக்கிறது மீண்டும் ஒரு 96 படத்தை ஞாபகப்படுத்துகிறது திடீரென ஒரு நாள் கௌதம் மலர்விழிக்கு காதல் கடிதம் கொடுக்க ஒன்றும் சொல்லாமல் மலர்விழி அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று அமெரிக்கா புறப்பட்டு போய் விடுகிறார் மலர்விழியை தேடி கௌதம் அவர் வீட்டுக்குப் போகும்போது அங்கு வாட்ச்மேனால், விரட்டப்பட்டு கௌதம் மனம் உடைந்து போகிறார் .
அதன் பிறகு பல நினைவுகளால் சூழ்ந்து கொண்டு உடைந்து போகிறார் கௌதம். மலர்விழியிடமிருந்து எந்தவித போன் காலோ, தொடர்பு இல்லாமல் அவர் நினைவாக வாழ்கிறார் கௌதம் திடீரென கௌதம் அத்தை மகள் ஆனந்தி கௌதமை திருமணம் செய்து கொள்ள முடியாமல் போக, தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார். இதை அடுத்து கௌதமன் அம்மாகண்டிக்க மற்றும் நண்பர்கள் எல்லோரும் வற்புறுத்தலால் கௌதம்மனம் முடிக்க சம்மதத்துடன் ஒற்றை வார்த்தை கண்டிஷன் போடுகிறார் மலர் விழி.
மீண்டும் வந்தால் நான் இறந்து போவேன் என்று இப்போது மலர்விழி என்ட்ரி……
அடுத்து என்ன நடக்கப் போகிறது? கௌதம், ஆனந்தி, வாழ்க்கையில் அன்பு வளர்ந்ததா ?அல்லது இன்னல் தொடர்ந்ததா? கௌதமமும் மலர்விழி ஒன்றாக இணைந்தார்களா? என்ன நடந்தது இப்படி ஒரு முக்கோண காதலை வித்தியாசமாக இன்றைய காலத்திற்கு ஏற்ப லாஜிக் மீறாமல் படமாக்கி இருக்கிறார் இயக்குனர்.
படம் முழுக்க கவிதைத்தனமான காட்சிகள் ரசிப்பதற்கு ஏராளம் இருக்கிறது பிரஜின் நாயகனாப்பின் அந்த காதலை 15 வருடமாக நினைத்து ஏங்குவது, மலர்விழியை சந்தித்து விடமாட்டோமோ, என்று அவர் வீட்டுக்கு சென்று மீண்டும் வாட்ச்மென் விரட்டப்படுவது இப்படி படம் முழுக்கவே அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார் நாயகன் பிரஜின்.
இயக்குனர் ஆதிராஜன் அருமையான காதல் படத்தை முழுமையான காட்சிகளோடு திரைக்கதை எழுதி செதுக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா 5 பாடல்களை இனிமையான போட்டுத் தந்திருக்கிறார் மீண்டும் இளையராஜா சார் அவர்களின் பாடல்கள் ரசிக்க வைக்கிறது இதில் சினாமி கா ,நிலா யுவா ,மூவருக்கும் திருஷ்டி சுத்தி போட வேண்டும் அவ்வளவு அழகான நாயகிகள்
சினாமிகாநடிப்பில் பட்டய கிளப்புகிறார். யுவனாவின் அழகு சிரிப்பு இளமை அற்புதம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று சொல்லத் தோன்றும் அளவுக்கு அந்த பள்ளி பருவத்தில் அழகு ஓவியமாக கட்சி தருகிறார்.
நிலா ஓரிரு காட்சிகள் வந்தாலும் மனதை தொடுகிறார் மற்றும் மதுமிதா படத்தின் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி தன் நண்பனுக்காக காதலை சேர்த்து வைக்க அவர் வாட்ச்மேன் இடம் பத்திரிகை கொண்டு வந்து வைத்து மலர்விழியின் நம்பரை வாங்கிக் கொண்டு வந்து நாயகனுக்காக கொடுத்து உதவுவது மற்றும் தன் தங்கையின் திருமணத்திற்கு மலர்விழி வந்ததை கண்டு சந்தோஷப்படும் மதுமிதா கௌதம் வந்துவிட்டால் என்ன ஆகுமோ என்று பதைத்து போய் நிற்பதுஎன அந்த காட்சியில் நன்றாக நடித்து இருக்கிறார் வாழ்த்துக்கள் நண்பனாக வரும் ரெடின் நன்றாக நடித்திருக்கிறார் அவர் வரும் காட்சிகள் கலகலப்பாக இருக்கிறது அவர் தத்துவார்த்தமாக பேசி பேசி ரசிகர்களை சிரிக்க வைக்கிறார் சிந்தனையும் தூண்டுகிறார்
பிரஜன் ஜோடியாக மனிஷா யாதவ்!!
ஜோடி நன்றாக இருக்கிறது ஒரு குத்துப்பாட்டுக்கு இருவரும் வெளுத்து வாங்குகிறார்கள்
இசைஞானி இளையராஜாவின் மயக்கும் இசையில் 1417-வது படமாக
இசை கடவுள் அவர் பாடலைப் பற்றி சொல்லவா வேண்டும்
சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார். மனதுக்கு நெருக்கமான நல்ல ஒரு காதல் படம் தர வேண்டும் என்ற சிந்தனையில் அருமையாக கதை எழுதி திரைக்கதை வடிவம் அமைத்து படத்தை சிறப்பாக இருக்கிறார் கடைசியில் அவர் வைத்திருக்கும் டிவிஸ்ட் ரசிகர்களை, கண்கலங்க வைக்கிறது . எழுந்து நின்று கைதட்ட வைக்கிறது வாழ்த்துக்கள் இயக்குனரே
கதாநாயகனாக பிரஜன் இதுவரை அவர் ஏற்றிடாத ஒரு சிறப்பான வேடம் காதலுக்காக உருகுவதும் காதலி எண்ணி வாழ்வதும் என மனுஷன் வாழ்ந்து இருக்கிறார்
கதாநாயகியாக, வழக்கு எண் 18 /9 மனிஷா யாதவ்
பிரஜின் மீது ஒருதலையாய் காதலித்து அந்த காதலுக்காக எதை வேணாலும் செய்யும் என்ற கதாபாத்திரம் மனதை தொடுகிறார் பாடல் காட்சியில் அழகாக வந்து போகிறார் கடைசியில் காட்சியில் இவர் செய்யும் தியாகம் இவருக்கு உயிர் கொடுத்திருக்கிறது.
மற்றொரு நாயகியாக சினாமிகா அமெரிக்க ரிட்டர்ன் ஆக வந்து எல்லோர் மனதிலும் இடம் பிடிக்கிறார் பல இடங்களில் நடிகை ராதா சாயலும் இருக்கிறது நல்ல நடிப்பு உயிரோட்டமான கண்கள் வாழ்த்துக்கள் சினாமிகா இவர்களுடன் மாஸ்டர் பட புகழ் ரோகித்,
இவர் நடனத்தில் வெளுத்து வாங்குகிறார் இளமை ததும்பும் நல்ல நடிப்பு அருமையான ஜோடி
யுவஸ்ரீ, அழகான கதாநாயகி அழகான தீர்வு கதைக்கு அம்சமாய் பொருந்தி போகிறார்
மனோபாலா, ஆண்ட்ரியா என்னும் டீச்சரை காதலித்து அது நிறைவேறாமல் மனம் உடைந்து போகும் கதாபாத்திரம் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் லவ் லெட்டர் கொடுத்து டார்ச்சர் செய்யும் அந்த காமெடி ரசிக்க வைக்கிறது
படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது
ஆர்ட் டைரக்டரின் கைவண்ணம் பளிச்சிடுகிறது மலர்விழியின் வீடு நாயகனின் வீடு மதுமிதாவின் தங்கை கல்யாணம் மற்றும் மனநல மருத்துவமனை எல்லா இடங்களிலும் ஆர்ட் டைரக்டர் அழகாக பணிபுரிந்து இருக்கிறார்
காஸ்ட்யூமரின் கைவண்ணம் பாராட்டியாக வேண்டும். இளம் காதலற்கான பொருத்தமான உடையும் சீனாமிகாவின் டீசன்டான உடையும் மனிஷா யாதவ் கவர்ச்சி கலந்த உடையும் ரசிக்க வைக்கிறது
படத்தின் கலர் கரெக்ஷன் கண்களுக்கு முழுமையாக இருக்கிறது
வாட்ச்மேன் ஆக வரும் முத்துராமன் அவர்களின் நடிப்பு பண்பட்ட நடிப்பு
மனநல மருத்துவராக ஓரிரு காட்சிகள் வந்தாலும் இயக்குனர் ஆர் வி உதயகுமார் நன்றாக தன் வேடத்தை செய்திருக்கிறார்
மனிஷா யாதவ் வின் தந்தையாக தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் வருகிறார் மகளுக்காக உருகும் அந்த கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது
மற்றும் நாயகன் பிரஜின் நண்பர்களாக பத்திரிகை துறையை சார்ந்த அமலன் போன்றவர் நடித்துள்ளனர் சிறப்பாக இருக்கிறது
மொத்தத்தில் இந்த நினைவெல்லாம் நீயடா காலத்திற்கும் நின்று பேசும் காதலர்கள் விழிகள் பேசும் மௌன பாஷையில் ,இந்த காதலும் வென்று பேசும் நல்ல காதல் என்றும் வாழும் பல வருடங்கள் ஆனாலும் நினைவில் ஆளும் என்பதை இயக்குனர் ரசித்து ருசித்து எழுதி படமாக்கி இருக்கிறார். தேவதாஸ் ,வாழ்வே மாயம் ,வசந்த மாளிகை போன்ற காதல் படங்களில் இந்த படமும் சேரும் கிளைமாக்ஸ் காட்சியில் கண்கலங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது அப்படிப்பட்ட கிளைமாக்ஸ் நிச்சயம் படம் பார்ப்பவர்களை உருகச் செய்யும். காதல் நினைவுகளை மலரச் செய்யும் .இது ஒரு வெற்றி படமாக அமைந்திருக்கிறது படத்தை வாங்கி வெளியிடும் விநியோகஸ்தருக்கு லாபமாக அமையும் வாழ்த்துக்கள்
