டான்ஸிங் ரோஸ்’ஐ ஷபீர் கல்லரக்கல், மிர்ணா, தீப்தி, இந்திரஜித் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘பர்த்மார்க்’. ஸ்ரீராம் சிவராமன் தயாரித்துள்ள இந்தப் படத்தை விக்ரம் ஸ்ரீதரன் இயக்கியுள்ளார். உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். புதுமையான, வித்தியாசமான, திரைக்களத்துடன் களம் இறங்கி இருக்கிறது “பர்த் மார்க்”.
தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதை என்றே சொல்லலாம். சஸ்பென்ஸ் திரில்லர் தாய்மை உணர்வு ,என கலந்து கட்டி இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஒவ்வொரு காட்சியும் கவிதைத்தனமாக ஏதோ ஒன்று சொல்ல வருகிறது அது என்ன என்பது சஸ்பென்ஸ் நாயகன் நாயகி, இருவரும் சொல்ல முடியாத மௌனத்தால் கடந்து போகும் அந்த பயம் படம் பார்ப்பவர்களுக்கும் தொற்றிக் கொள்கிறது. உற்சாகமாக தொடங்கிய படம் பீதியில் ஆரம்பித்து பிரசவ வலிகளை, உணர வைத்து, கோபம் சண்டை என வேலைக்காரனுக்கும் நாயகனுக்கும் மூட்டிவிட்டு ,அடுத்து என்ன நடக்கப்போகிறதோ, என்கிற பயத்தை நமக்குள் விதைக்கிறது நயமான படைப்பு புதுமையான தமிழ் சினிமா விரும்பும் அத்தனை ரசிகர்களுக்கும் இப்படம் தேனாக இனிக்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என எல்லா மொழிகளுக்கும் இப்படம் பொருந்தி போகும்.
நாயகியின் நடிப்பு, ஒவ்வொரு காட்சியிலும் விழிகளை விரிய வைக்கிறது ,வழியே இல்லாமல் பயத்துடன் பயணிக்கும் அவரது பிரசவ வலி படம் பார்ப்பவர்களை தொற்றிக் கொள்ளும்.
இயற்கை முறை பிரசவம் பற்றி பேசும்படம் இது. அறுவைசிகிச்சை இல்லாமல் இயற்கையான பிரசவத்துக்கு இந்தியாவில் சில கிராமங்கள் பெயர் பெற்றதாக இருக்கின்றன. அதன் பின்னணியில் கற்பனையான கதையாக இதை உருவாக்கி இருக்கிறார் கள் 90-களில் நடக்கும் கதைக் களத்தைக் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பை, தமிழ்நாடு – கேரளா எல்லையில் அமைந்துள்ள மறையூர்பகுதியில் நடத்தியுள்ளார் இயக்குனர் லொகேஷன் அருமையான இருக்கிறது.
கார்கில் போருக்குப் பிறகு தாயகம் திரும்பும் டேனியல் என்ற ராணுவ வீரராக ஷபீர் நடித்திருக்கிறார். அவர் மனைவி ஜெனிஃபராக மிர்ணா நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்துக்கு அவர் பொருத்தமாக இருக்கிறார், வழக்கமான படமாக இல்லாமல் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும்.
’பர்த்மார்க்’. இந்த படம் மிஸ்ட்ரி-டிராமாவாக இரண்டு முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் கதை. மிர்னாவின் குழந்தை பிறப்பு எப்படி நடக்கிறது? என்பதை த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
த்ரில்லர் பாணி..? கதை திரைக்கதை எப்படி?
படத்தின் முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை படபடப்புடன் பார்க்கிற அளவுக்கு படத்தில் எதாவது ஒன்று நடந்துகொண்டே தான் இருக்கும். அது என்ன? என்ற எதிர்பார்ப்புடன் பார்க்க வைக்கும்படி தான் திரைக்கதை அமைத்திருக்கிறார்.
படத்தில் சில மர்மங்கள் மற்றும் சஸ்பென்ஸ் உள்ளன.ஆனால், அதைவிட எமோஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. அது தான் படத்தின் சிறப்பு பக்கங்கள்

இந்தப்படம் மூலம் சொல்ல வருவது என்ன?
ஒவ்வோர் குடும்பத்தில் நிகழும் குழந்தை பிறக்கும் செயல்முறை ஆண்கள் நினைப்பது போல் எளிதானது அல்ல. உடல் ரீதியான சவால்கள் தாண்டி மனரீதியாகப் பெண்கள் அனுபவிக்கும் மன உளைச்சல்கள் குறித்தும் பேசப்பட வேண்டும். இது போன்றதொரு காலகட்டத்தில் தன் மனைவியுடன் கணவன் வரும்போது அவன் மீண்டும் பிறக்கிறான்.இது தன் தாய் மீதும் பெண்கள் மீதும் மரியாதையை அவனுக்கு ஏற்படுத்தும். இதைத்தான் உணர்த்தி யிருக்கிறார் இயக்குனர் பிரசவ வலியின் போது மனைவி துடிக்கும் போது கணவன் ஆதரவாக இருக்க வேண்டும் வளரும் அந்த குழந்தையிடம் பேச வேண்டும் அன்பு காட்ட வேண்டும் மனைவி அதிர்ச்சி அடையாமல் இருக்க வேண்டும் அப்போதுதான் சுகப்பிரசவம் ஏற்படும் சில பயிற்சிகள் எடுக்க வேண்டும் அது கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் அது சுகப்பிரசவத்திற்கு வழிகாட்டும் என்பது போன்ற நல்ல திரைக்கதை
படத்தில் ஒவ்வொரு காட்சியும் உயிரோட்டமாக இருக்கிறது ரசிக்க வைக்கிறது இரண்டு கதாபாத்திரங்கள் தான் படத்தில் இருக்கிறார்கள் என்று உணவை நமக்கு ஏற்படுத்தாமல் கடத்துகிறார் இயக்குனர்.
இந்தப் படம் முழுவதும் நிறைமாத கர்ப்பிணியாகவே திரையில் வலம் வந்துள்ளார் நாயகி மிர்ணா மேனன். எனவே அவரது தோற்றம், கர்ப்பிணிக்கான உடல்மொழி உள்ளிட்ட அனைத்துமே கச்சிதமாக இருக்கிறது
“ஏழு மாதக் குழந்தையைச் சுமக்கும்போது வயிறு என்ன கனம் இருக்குமோ அதைக் கணித்து மிர்ணாவின் வயிற்றில் ஒரு பேடு (PAD) கட்டப்பட்டு பிரசவத்திற்கு முன்பு வரை வயிற்றில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பதையும் கவனத்தில் கொண்டு படமாக்கி இருக்கிறார் இயக்குனர்
மிர்ணா வெளிப்படுத்தும் நடிப்பு, முகபாவங்கள், உடல் மொழி உள்ளிட்ட அம்சங்கள் சிறப்பாக வெளிப்படுகிறது
“மிர்ணாவும் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளார் ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பு அபாரமானதாக இருக்கிறது
“இப்படத்தின் கதாநாயகனான, ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்த ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர் நிறைவான நடிப்பை வழங்கி உள்ளார். மேலும் சில முக்கியமான கலைஞர்களும் உள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருப்பது இப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.இசைமிரட்டல்
“ இனியவன் பாண்டியன் படத்தொகுப்பை கவனித்துள்ளார், சூப்பர்
அறிமுக இயக்குநர் விக்ரம் சந்திரசேகரன், இயக்கி உள்ள இந்தப் படத்தை பார்ப்பவர்களுக்கு தங்களது உடலில் உள்ள குறிகள், அடையாளங்கள் குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் நிச்சயம் யோசிக்கத் தோன்றும்
மொத்தத்தில் ஒரு வித்தியாசமான திரில்லர் ஜானர் படத்தை பார்த்து அனுபவம் நமக்கு ஏற்பட்டது, தாய்மையின் தவிப்பு, அதன் வலி ,எல்லாமே இந்த படத்தில் இருக்கிறது, குடும்பத்தோடு பார்க்கலாம் வெற்றி நிச்சயம்
