ஷெரிப்
இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஜீவா சுப்பிரமணியன், விலங்கு கிச்சா ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “ரணம் அறம் தவறேல்”. அர்ரோல் குரோலி இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாலாஜி கே ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். மது நாகராஜன் தயாரித்துள்ள ரணம் படத்தின் விமர்சனத்தை நாம் இங்கு காணலாம்.
படத்தின் கதை
“ரணம் அறம் தவறேல்” படம் குற்றமும், விசாரணையும் என ஒரு க்ரைம் த்ரில்லர் பட பாணியில் கதையானது அமைக்கப்பட்டுள்ளது திரில்லர் பாணியில்.
மிரட்டும் வண்ணம் உள்ளது.
சென்னையில் அடுத்தடுத்த இடங்களில் கால், கை, உடம்பு என தனித்தனியாக எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்படுகின்றன. காவல் நிலையத்தில் குற்றச் செயலுக்கான கிரைம் ஸ்டோரி எழுதுபவரும், குற்றவாளிகளை உருவங்களை ஸ்கெட்ச் செய்பவருமான வைபவ் விசாரணைக்கு உதவ வருகிறார். அவரின் முயற்சியில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் வெவ்வேறு நபர்களுடையது என தெரிய வருகிறது. அதேசமயம் இந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டரும் காணாமல் போகிறார். இதனால் வழக்கு தான்யா ஹோப் கைக்கு வருகிறது. இவரும் வைபவ் இருவரும் இணைந்து வழக்கின் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயல்கிறார்கள். ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளை நெருங்கும்போது அடுத்தடுத்து அதிர்ச்சியான சம்பவங்கள் காத்திருக்கின்றன. இறுதியாக உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்தார்களா? இந்த கொலைகளுக்கு எல்லாம் காரணம் என்ன? என்பதை இறுதியாக ரணம் அறம் தவறேல் படத்தின் கதையாகும்.
இடைவேளை வரை அப்படி ஒரு பரபரப்பு விறுவிறுப்பாக போகிறது
நடிப்பு எப்படி?
இப்படத்தில் வைபவ், தான்யா ஹோப், சுரேஷ் சக்கரவர்த்தி, நந்திதா, ஜீவா சுப்பிரமணியம் உள்ளிட்ட சில கேரக்டர்களை சுற்றி தான் கதையானது நகர்கிறது. சிவாவாக வரும் வைபவ் குற்றங்களை கண்டுபிடிக்க உதவுபவராகவும், ஸ்கெட்ச் செய்து ஒருவரின் உருவத்தை கண்டறியும் நபராகவும் சிறப்பாக நடித்துள்ளார். இது அவரின் 25வது படம் என்பதால் நடிப்பில் வெரைட்டி காட்ட முயற்சித்துள்ளார். இதேபோல் தான்யா ஹோப் போலீசாக வருவதால் எப்போதும் ஸ்ட்ரிக்டான நபராகவே வலம் வருகிறார். இவர்களை தவிர நந்திதா கேரக்டருக்கான நடிப்பு அவரது காட்சிகள் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்துகிறது அந்த ஃபிளாஷ் பேக் காட்சிகள் சூப்பர்
படம் தொடங்கி முதல் 20 நிமிடங்கள் அப்படி, இப்படி என சென்று கொண்டிருக்கும் நிலையில் கொலைக்கான விசாரணை காட்சிகள் தொடங்கி இடைவேளை வரை படம் பார்ப்பவர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக காட்சி அமைக்க ப்பட்டுள்ளது
அப்பகுதியில் காட்டப்படும் காட்சிகளின் சுவாரஸ்யம்,
அரோல் குரோலியின் பின்னணி இசை படத்துக்கு பலமாக அமைந்துள்ளது. மேலும் காவல்துறை விசாரணைக்கு உதவும் வைபவ் போலீசாரை விட க்ரைம் கண்டுபிடிப்பதில் காட்டும் தீவிரம் சிறப்பாக இருக்கிறது . ஆக மொத்தத்தில், க்ரைம் த்ரில்லர் படம் பார்க்க விரும்புவர்கள் நிச்சயமாக ரணம் படத்தை பார்க்கலாம்
பாலாஜி கே. ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்
காட்சிகள் மிரட்டலாக இருக்கிறது இறந்து போன உருவத்தை திரையில் காட்டும் பொழுது பீதி, அச்சம்
ஒளிப்பதிவு மாயாஜாலம். ஆரோல் கரோலி இசையமைத்திருக்கிறார்.பின்னணி இசை வெல்டன் இன்வெஸ்டிகேட்டட் க்ரைம் த்ரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மிதுன் மித்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் மது நாகராஜன் தயாரித்திருக்கிறார்.அவருக்கு வாழ்த்துக்கள் நல்ல படத்தை தந்ததற்கு. நாயகனான வைபவ், குற்ற சம்பவங்களில் துப்பு துலக்கும் புலனாய்வு காவல் துறையினருக்கு உதவி புரியும் முக புனரமைப்பு ஓவிய கலைஞர் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தமிழ் ரசிகர்களுக்கு புதிய கதாபாத்திரமான இதில் வைபவ் வழக்கமான முக பாவனை (?) உடன் நடித்திருப்பது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. மேலும் புலனாய்வு தொடர்பான காட்சிகள் படத்தை என்பதால் கூடுதல் கவனத்தை
இப்போதெல்லாம் திகில், மர்மம் கலந்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதிலும் தொடர் கொலைகள் சம்பந்தப்பட்ட இன்வேஸ்டிகேஷன் படங்கள் அதிக அளவில் வெளிவர ஆரம்பித்துள்ளது. அந்த வரிசையில் வெளிவந்த ராட்சசன், சைக்கோ ஆகிய படங்கள் மிகப்பெரிய கவனம் பெற்றது.
அதேபோன்று தற்போது வைபவ் நடிப்பில் அவருடைய 25வது படமாக உருவாகி இருக்கும் ரணம் அறம் தவறேல் இடம் பெறும்
ஷெரிப் இயக்கம்
செம சார்ப்பான, புத்திசாலித்தனமான, திரைக்கதை வேட்டையாடப்பட வேண்டிய மனித மிருகங்கள் இந்த நாட்டிலே உலவி கொண்டிருக்கிறார்கள் பத்திரிகை செய்தியாக பார்த்த நமக்கு வெளியில் திரையில் பார்க்கும்போது அதிர்ச்சி,
நந்திதா ஸ்வேதா,
அதிதி என்ற பெண் குழந்தைக்கு அம்மாவாக வருகிறார். கல்கி என்ற கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்துகிறது. டாக்டராக இருக்கும் அவரது மகளுக்கு இந்த நிலைமை என்றால் சாதாரண மனிதர்களுக்கு என்ன நிலைமை ஏற்படும் என்று அவர் கொதித்து எழுந்து நியாயத்தை நிலை நாட்ட புறப்படுகிறார் நந்திதா இந்த படத்தில் பெஸ்ட்
தன்யா, மிடுக்கான போலீஸ் அதிகாரியாக, கம்பீரமாக பொருந்தி போயிருக்கிறார் கடுகடுவென, சிடு சிடுவென, குற்றவாளிகளை கண்டுபிடிக்க ,அவர் காட்டும் தீவிரம் கதைக்கு பலம்.
சுரேஷ் சக்கரவர்த்தி
காவல்துறை அதிகாரி யார் வந்து கடமையை சரியாக செய்கிறார் சரியான கதாபாத்திரம்
படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்
மாதவரம் ஏரிக்கரையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் காவல்துறையினரால் கண்டெடுக்கப்படுகிறது. அதை தொடர்ந்து நடக்கும் விசாரணையில் கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸ் சிவா என்ற கேரக்டரில் வரும் வைபவ்வை உதவிக்கு அழைக்கின்றனர்.
உருக்குலைந்த முகத்தை கூட அப்படியே அச்சு அசலாக வரையும் திறமை கொண்ட இவர் தீர்க்கப்படாத வழக்குகளை க்ரைம் கதையாக எழுதும் எழுத்தாளராகவும் இருக்கிறார். அவர் கைக்கு வரும் இந்த வழக்கு அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது.
இதில் கொலை நடந்த விதமும், வழக்குகளின் கோணமும் சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
போலீஸ் துறை ஒவ்வொருவராக கண்டுபிடிக்க கண்டுபிடிக்க குற்றவாளி தப்பித்துக் கொண்டே போகிறார் ஒரு கட்டத்தில் கைலாசம் தான் குற்றவாளி என்ற தீவிரமாக நம்பும்போது அவரும் இறந்து கிடக்கிறார் இப்போது இன்ஸ்பெக்டர் நாகேந்திரனை கொன்றது யார்? இதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக இரண்டாம் பாகம் இருக்கிறது
நந்திதா வந்த பிறகு கதையில் ஒரு தெளிவு பெறுகிறது அவருக்கும் அவர் மகளுக்கும் என்ன நடந்தது என்பது யூகிக்க முடியாத, திரை க்கதை ,
இப்படியாக பெரும் எதிர்பார்ப்பை, ஏற்படுத்தி இருக்கும் இந்த படம் நிச்சயம் வைபவ்வுக்கு திருப்புமுனையை, ஏற்படுத்தும் ,என்றும் எதிர்பார்க்கப்படுகிறது,
இந்த நாட்டிலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, என்பதை தெள்ளத் தெளிவாக சொல்லும் இப்படம். குற்றவாளிகள் எந்த உயரத்தில், இருந்தாலும், அவர்கள் தப்பிக்க முடியாது ,என்ற கருத்தையும், சொல்கிறது.
ஒரு கிரைம் திரில்லர் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் இந்த ரணம் மகள் மீது, கொண்ட பாசம் ஒரு தாய் எடுத்து முடிவு அதை சரியான கோணத்தில், இயக்குனர் சொல்லி இருப்பது புத்திசாலித்தனம்
படம் எந்த இடத்திலும் லேகாகவில்லை சளிப்பு தட்டவில்லை சரசரவென தீப்பந்தம் போல் பத்த வைக்கப்பட்ட திரைக்கதை இறுதியில் முடியும் வரை அந்த விறுவிறுப்பு இருக்கிறது
வைபவுக்கும் நந்திதாவுக்கும் என்ன சம்பந்தம் கொலைகாரனுக்கும் வைபவருக்கும் என்ன சம்பந்தம் என்பதை அற்புதமாக முடிச்சு போட்டு இயக்கி இருக்கிறார் இயக்குனர்
வைபவ் உதவி இயக்குனராக இருக்கும் போது அங்கு உதவி இயக்குனராக வந்த சேரும் சரஸ்வதி கண்டு விழிகள் விரிய அவர் மீது காதல் கொண்டு இருவரும் காதலித்து தம்பதியாக வலம் வருகிறார்கள் அந்த காட்சிகள் அவ்வளவு அழகாக இருக்கிறது
வைபவுக்கு சண்டைக் காட்சி இந்த படத்தில் நன்றாக வருகிறது இனி ஆக்ஷன் காட்சியில் அவரை பார்க்கலாம்
வைபவுக்கு டென்ஷன் ஏற்படும் போது ஒரு நிமிடம் அதிர்ச்சியில் கண் தெரியாமல் போய்விடும் அதனால் குற்றவாளிகள் தப்பித்து விடுவார்கள் என்ற புதுமையான விஷயத்தையும் இயக்குனர் கூறியுள்ளார் . அது கதைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.
ரோட்டில் ஆக்சிடென்ட் ஆகிவிட்டால், ஆக்சன்ட் ஆனவரை
எந்தமருத்துவமனை கொண்டு போகிறோம் என்பதில் கவனம் தேவை. பொதுமக்களுக்கு,
மொத்தத்தில் இந்த ரணம் பல உண்மைகளை சொல்கிறது பத்திரிக்கை செய்திகளாக, பார்த்து வந்த நமக்கு இது ஒரு பாடமாக இருக்கிறது பெண் குழந்தைகள் செத்து சுடுகாடு போய் சேரும் வரை கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் இந்த படம் சொல்கிறது. வாழும் போது அவர்களுக்கு நல்ல வழி காட்ட வேண்டும் அப்படி ஆக்ஸிண்டினால் இறந்து விட்டால் அவர்கள் எப்படி அடக்கம் செய்யப்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும். என்பதையும் சொல்லி இருக்குது இந்த படம் நிச்சயம் இந்த படம் வெற்றி பட்டியலில் இடம் கிடைக்கும் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் வாழ்த்துக்கள்
