பாம்பாட்டம் திரை விமர்சனம்

ஐந்து மொழிகளில் ஜீவன் நடிக்கும் பாம்பாட்டம் படத்தை V.C. வடிவுடையான் இயக்கியுள்ளார் 6.2, ஓரம்போ, வாத்தியார் போனற படங்கள்ற தயாரித்த V.பழனிவேல் தனது வைத்திய நாதன் பிலிம் கார்டன் என்ற பட நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலை யாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் ” பாம்பாட்டம் “.

காக்க காக்க, திருட்டுப்பயலே, நான் அவனில்லை போன்ற வெற்றி படங்களில் நடித்த ஜீவன் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் இதுதான் இவர் நடிக்கும் முதல் ஹாரர் படம் என்பது குறிப் பிடத்தக்கது
இதுவரை ஹாரர் படங்களில் பார்த்திராத திரைக்கதையை இந்த படத்தில் பார்க்கலாம். அந்த அளவிற்கு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை இயக்கியுள்ளார் . .சி.வடிவுடையான். ஐந்து மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் ஐந்து மொழிகளிலும் இருந்து முன்னணி நடிகர்கள் நடிக்க வைத்துள்ளார் இந்த படத்தின் கதையை கேட்ட நடிகர் ஜீவன் உடனே நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.என்பது குறிப்பிட்ட தக்கது முன்னணி கிராபிக்ஸ் நிறுவனமொன்று இந்த படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்து இருக்கிறார்கள்.
சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள்

வசனம் – பா.ராகவன்
ஒளிப்பதிவு – இனியன் J. ஹரீஸ்
ஒளிப்பதிவு பிரமாண்டம் அரண்மனையை காட்டுவதிலும், பாம்பை காட்டும் விதத்திலும், பிரமிக்க வைத்திருக்கிறார்.

இசை – அம்ரீஷ்
பின்னணி இசை படத்திற்கு, மிகப்பெரிய பலம்

பாடல்கள் – யுகபாரதி
எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ் சரியான முறையில் வழங்கி இருக்கிறார்
ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன்
சன்டை பயிற்சி நன்றாக இருக்கிறது

இணை தயாரிப்பு – A.பன்ணை இளங்கோவன்
தயாரிப்பு – V.பழனிவேல் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், மும்பை போனற இடங்களில் படமாக்கியுள்ளனர்

மற்றும் இந்த படத்தில் சலில் அன்கோலா, ரமேஷ் கண்ணா, ஆண்ட்ரியா குருநாதன், லிவிங்ஸ்டன், கராத்தே ராஜா, ரிக்கின், சரவணன், சக்தி சரவணன், ரித்திகா சென், மல்லிகா ஷெராவத், சுமன் என பலர் நடித்துள்ளார்கள்

ஜீவன் இந்த படத்தில் அப்பா மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்த இந்த படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது

கதை என்ன ?

சுதந்திரத்திற்கு முன்னால் நடக்கும் இந்த கதையில் ராணி மகாதேவி தனது சமஸ்தானத்தை ஆட்சி செய்து வருகிறார். அந்த சமயத்தில் ஒரு ஜோசியர் நீங்கள் பாம்பு கடித்து இறந்து விடுவீர்கள் என்று கூறுகிறார். இதனால் அந்த சமஸ்தானத்தில் உள்ள அனைத்து பாம்புகளையும் கொள்ளுமாறு உத்தரவிடுகிறார் ராணி மகாதேவி. அதிலிருந்து ஒரு பாம்பு தப்பித்து அவரை கொன்று விடுகிறது, மேலும் ராணி மகா தேவியின் மகளுக்கும் இதே ஆபத்து உள்ளது என்று ஜோசியர் கூறுகிறார். இதனால் அவர்கள் ஊரை விட்டு வெளியேறுகின்றனர். அதன் பின்பு ராணியின் ஆவி அந்த அரண்மனையை சுற்றுவதாக ஊர் முழுக்க பேசப்படுகிறது. இந்நிலையில் இதனை விசாரிக்க போலீஸ் அதிகாரியாக ஜீவன் வருகிறார், அவரது மகன் அப்பாவுக்காக கொலை செய்துவிட்டு சிறையில் இருக்கிறார் மகன் மீது கோபப்படும் அப்பா ஜீவன் அதன்பிறகு மகனின் பக்கம் இருக்கும் நியாயத்தை கண்டு மகன் மீது பாசம் கொள்கிறார்

அரண்மனையில் நடக்கும் கொலைகளைக் கண்டு அந்த பகுதிக்கு ஜீவனை ட்ரான்ஸ்பர் செய்கிறார்கள் அப்பா அங்கு சென்றால் அவருக்கு ஆபத்து என்று மகன் அவரை கடத்தி ஒரு அறையில் பூட்டி விட்டு அரண்மனைக்கு சென்று அங்கு என்ன நடக்கிறது என்பதை கண்டறிய புறப்படுகிறார் மகன் ஜீவா அதன் பின்னர் என்ன நடந்தது ?அந்த அரண்மனையில் இருப்பது ஆவியா? பூதமா ?அனகோண்டா போன்ற பாம்பா? அல்லது மனிதர்கள் செய்யும் சூழ்ச்சியா? இதையெல்லாம் சரவணன் என்கிற ஜீவன் கண்டுபிடிக்கிறார்.

இந்த படத்தின் கதை
விறுவிறுப்பாக இருக்கிறது
ஆக்சன், அட்வென்ச்சர் மற்றும் பேண்டஸி நிறைந்த படமாக பாம்பாட்டம் உருவாகியுள்ளது. ஜீவன் அப்பா மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். போலிஸ் அதிகாரியாக அவர் வரும் காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டிருந்தது. ராணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள மல்லிகா ஷெராவத் நல்ல ஒரு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். போலீஸ் அதிகாரியாக வரும் சுமன், ரித்திகா சென், லிவிங்ஸ்டன், சக்தி சரவணன் ஆகியோரும் அந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
ரமேஷ் கண்ணா நன்றாக நடித்துள்ளார்.

படம் முழுக்கவே நிறைய இடங்களில் சிஜி காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அவை நன்றாக இருக்கிறது இது படம் பார்க்கும்போது ஒரு பெரிய ஆறுதலாகவே இருக்கிறது. முதல் பாதி சற்று மெதுவாக சென்றாலும், இரண்டாம் பாதி நிறைய திருப்பங்களுடன் உள்ளது. இரண்டு மணி நேரம் பத்து நிமிடம் மட்டுமே இருக்கும் இந்த கதையில் பலம் அம்ரிஷ் இசையில் பின்னணி இசை நன்றாக இருக்கிறது. படத்தில் ஒவ்வொரு காட்சியும் பிரமாண்டமாக இருக்கிறது ஐந்து மொழி படம் என்பதால் அஸத்தலான அரண்மனை கண்ணுக்கு கவர்ச்சியான, காஸ்டியூமர், விறுவிறுப்பான திரைக்கதை ,நடித்த நடிகர்களின் நடிப்பு, சிஜி ஒர்க் ,கலர் கரெக்ஷன், ஒளிப்பதிவு ,இசை பாடல்கள் ,சண்டை காட்சி என எல்லாமே சிறப்பாக இருக்கிறது

இயக்குனர் வி சி வடிவுடையான் காளி என்ற காவல்துறை அதிகாரி வேடத்தில் அருமையாக நடித்திருக்கிறார்
தன் அம்மா ஓடிப் போய்விட்டதால் எல்லா பெண்களும் அப்படித்தான் இருப்பார்கள் என்று தன் மனைவியை பூட்டி வீட்டுக்குள்ளே வைத்திருப்பது, அவரது மகன் வந்து அம்மாவை கொல்வது என டிவிஸ்ட்

நியூசிலாந்து செல்லும் நாகமதி அங்கு ஒரு ஆக்சிடெண்டில் மாட்டி தன் முகத்தை கோரமாக்கிக் கொள்ள, அங்கு வரும் டாக்டர் தர்ஷன் அவர் முகத்தை சரி செய்து, அவரை பெண் கேட்பது நாகமதியின் அப்பா ராஜா,
தர்ஷன் யார்? அவர் பின்னணி என்ன? என்று ஆராய்ச்சியில் ஈடுபடுவது, தர்சனின் உண்மையான கோரமுகம் வெளிப்படுவது, எல்லாமே விறுவிறுப்பான காட்சிகள் துப்பறியும் பாணியில் இயக்கப்பட்டு, இருக்கிறது மல்லிகா ஷெராவத் க்கு,
அதிக வேலை இல்லை இவரின் சம்பளம் ஒரு கோடி நாகமதியாக நடித்திருக்கும் இவரின் நடிப்பு நன்றாக இருக்கிறது ஊர் மக்களுக்காக சொத்துக்களை எழுதி வைப்பது ,கல்வி சாலைகள் கட்டுவது, ஏரி குளம் அமைப்பது, நகைகளை அள்ளிக் கொடுப்பது, என அவர் கதாபாத்திரம் சிறப்பாக வடிவப்பட்டிருக்கிறது தர்ஷனாக வரும் இவரின் வில்லன் நடிப்பு செம கச்சிதமாக இருக்கிறது .
படத்தில் அதிக டூயட் இல்லை என்றாலும் விறுவிறுப்பான காட்சிகள் ஏராளம் அரண்மனையில் நகையை திருட வரும் ஒவ்வொருவரும் மரணத்தை தழுவி கொள்வது திகில் லிவிங்ஸ்டன் பாம்பின் வாய்க்குள் சென்று சவப்பெட்டியில் இருப்பது அனகோண்டா படத்தை ஞாபகப்படுத்துகிறார் குட்டி புலி சக்தி சரவணன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள் ஜீவனின் காதலியாக வரும் அவரின் நடிப்பு நன்றாக இருக்கிறது தன் காதலனுக்காக உயிரே கொடுக்கும் அந்த கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது ஜீவன் போடும் சண்டைக் காட்சிகளில் ஜீவன் இருக்கிறது படம் முழுக்கவே காசை அள்ளி தெளித்து இருக்கிறார்கள் ஐந்து மொழிகளிலும் இப்படம் பேசப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர் பணத்தை அள்ளி கொட்டி இருக்கிறார் அதற்கேற்ற, கதைக்களத்தையும், இயக்குனர் சரியாக தேர்வு செய்துள்ளார் அரண்மனையும் பாம்பும், சூப்பர் பருத்திவீரன் சரவணன் தர்ஷனின் பின்னணி என்ன?என ஆராயும் இடம் நன்றாக இருக்கிறது சுமன் காவல்துறை அதிகாரியாய் வந்து ஜீவனுக்கு உதவி செய்கிறார் இரண்டு கெட்டப்புகளில் ஜீவன் நன்றாக நடித்திருக்கிறார் அதுவும் வயதான அந்த காவல்துறை டிஎஸ்பி வேடம் நன்றாக இருக்கிறது மொத்தத்தில் இந்த பாம்பாட்டம் படையெடுக்குமா? ரசிகர்களை கவருமா? இந்த சந்தேகம் வேண்டாம் படம் பேசப்படும் ரசிகர்களுக்கு பிடித்த திகில் படமாகவும் ஐந்து மொழிகளில் வெற்றி வாகை சூடும் தரமான படமாகவும் வந்திருக்கிறது இதுவரை சொல்லாத தமிழ் சினிமா கதைகளில் இதுவும் ஒன்று ஹாரர் மூவி மட்டுமல்ல, சஸ்பென்ஸ் திரில்லர் மூவி ,பெண்ணடிமை தனத்தை ஒழிக்கவும் இந்த படம் வந்திருக்கிறது
வாழ்த்துக்கள்