ஜோஸ்வா (இமை போல் காக்க) – – திரை விமர்சனம் ( ஆக்ஷன் )

ஜோஸ்வா, குந்தவை சிதம்பரம், இருவரும் ஒரு விழாவில் சந்தித்து காதலர்களாக மாறுகிறார்கள் குந்தவை நியுயார்க் போகும் போது ஜோஸ்வா, தான் யார் என்பதை காதலியிடம் சொல்கிறார்
கூலிக்கு கொலை செய்யும் கொலைகாரன். நான் இதுவரை இப்படி நடந்து கொண்டேன் இனி உன் மீது சத்தியமாக இப்படி செய்ய மாட்டேன் நீ மட்டும் போதும் என்கிறார்
காதலி இப்படிப்பட்ட கொலைகாரனையா காதலித்தோம் !என்று விலகி நியுயார்க்சென்று விடுகிறார் .
அதன் பிறகு ஜோஸ்வா மன உளைச்சலுக்கு ஆளாகிறார் டி டி யான மாதவியிடம், இருந்து ஜோஸ்வாவுக்கு ஒரு போன் வருகிறது. அந்த போன் கால் உன் காதலி நியூயார்க் நகரில் போதை கடத்தல் கும்பல் இடம் மாட்டிக் கொண்டு உயிருக்கு ஆபத்தான சூழலில் இருக்கிறார் அவரை காப்பாற்றும் பொறுப்பு எனக்கு வந்திருக்கிறது உன்னைத்தான் நான் செலக்ட் செய்து இருக்கிறேன் என்கிறார்.
. முதலில் மறுக்கும் ஜோஸ்வா தன் காதலியை காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார் அதன் பிறகு ஒரு மாதம் நியூயார்க்கில் இருந்து சென்னைக்கு பாதுகாப்பு தேடி வருகிறார். குந்தவை ஒரு மாதம் தங்கி இருக்கும் தன் காதலியின் பாதுகாப்பை ஜோஸ்வா, ஏற்கிறார் அதன் பிறகு என்ன நடந்தது? ஜோஸ்வாவை,குந்தவை மீண்டும் காதலித்தாரா குந்தவையை, ஜோஸ்வா, காப்பாற்றினாரா? தன் காதலிக்கு ஏற்பட்ட அபாயகரமான சூழ்நிலையை எதிர்த்துப் போரிட்டு வெற்றி வாகை சூடினாரா? தன் நண்பன் கிருஷ்ணாவான கோட்டியை சந்தித்து இருவரும் என்ன பிரச்சனைகளை மேற்கொண்டார் கள் குந்தவையின் உயிருக்கு, அச்சுறுத்தலாக வரும் டான் சிவா உள்பட, கும்பல் கும்பலாக வரும் கூலிப்படைகளை தூள் தூளாக்கினாரா? துவம்சம் செய்தாரா? என்ன நடந்தது? படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை அவ்வளவு பரபரப்பு, அவ்வளவு விறுவிறுப்பு, சரியான திரைக்கதை, அடுத்து என்ன நடக்கும் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பை, ஏற்படுத்தி படம் ராக்கெட் வேதத்தில் பயணிக்கிறது.

நாயகி ஒரு பணக்கார பெண் போதை மருந்து கடத்தும் கும்பலுக்கும் இவருக்கும் நடக்கும் அந்த யுத்தத்தில் இவர் எப்படி பாதிக்கப்படுகிறார் எப்படி தொடர்பு படுத்தப்படுகிறார்
அந்த சர்வதேச கடத்தல் மன்னனை பற்றி கோர்ட்டில் சாட்சியம் சொன்னால் அவருக்கு தண்டனை உறுதி 52 பேரில் தப்பியது இவர் மட்டும்தான் அதனால் இவர் சாட்சி மிக முக்கியமானது ஆனால் அந்த கடத்தல் மன்னன் இவரை சாட்சி சொல்ல விடுவானா? உலகம் எங்கும் கடத்தல் சாம்ராஜ்ஜியம் வைத்திருக்கும் அவன் இந்த நாயகி யைஅழித்து விட்டால் சிறையில் இருந்து வெளிவந்து விடலாம் என்பதால் நாயகியை குறி வைக்கிறான்
இப்பொழுது நாயகியையும், தர்மத்தையும், காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஜோசுவாவுக்கு ஜோஸ்வா நியாயத்தை காப்பாற்றினாரா? நாயகியை காப்பாற்றினாரா? எதிரிகளை வீழ்த்தினாரா? என்பதுதான் இப்படத்தின்கதை, திரைக்கதை

கோர்ட்டில் சாட்சியம் சொன்னால் எதிராளிக்கு கிடைக்கும் இது தமிழ் சினிமாவுக்கு புதுசு இன்டர்நேஷனல் லெவலில் ஒரு கதையை சரி செய்து அதனை வருண் மூலம்நடிக்க வைத்திருப்பது சிறப்பு

அச்சம் பயம் எல்லாம் கலந்த வெளிநாட்டு பெண்ணாக நன்றாக நடித்திருக்கிறார் நாயகி, கொலைகாரன் என்று காதலனை உதாசீனப்படுத்துவது பிறகு தன் உயிருக்கு உத்திரவாதம் தன் காதலனால் தான் கிடைக்கும் என்று அவரை தேர்வு செய்வது என்று நடிப்பில் பாஸ் மார்க் வாங்குகிறார் ராகி

படத்தில் ஆக்சன் காட்சிகள் அதிகம் என்பதால் பட முழுக்க ஸ்டண்ட் மாஸ்டரின் ராஜாங்கம் தான்

ஒரு கட்டத்தில் இருவரும் காதல் வசப்படுகிறார்கள் . ஆனால் நாயகன் நல்லவன் அல்ல , கொலை காரன்தான் என்ற உண்மை தெரிய வரும்போது நாயகி நாயகனை வெறுக்கிறாள் . இவர்கள் காதல் கை கூடியதா ? என்பது மீதி திரைக்கதை

நாயகி ராஹே நன்றாக நடித்துள்ளார் ,. அவரது அழகான முகமும், களையான ஹேர் ஸ்டைலும் , கண்ணியமான ஆடை வடிவமைப்பும் அவருக்கு பெரிய பிளஸ்

நாயகன் வருண் அர்விந்த்சாமி போல மாதவன் போல ஏ செண்ட்டர் ஆடியன்சுக்கான நாயகன் ஆக சாக்லேட் பாயாக இருந்த வருண் ஆக்சன் நாயகனாக அதிரடியாக களம் இறக்கியிருக்கிறார் இயக்குனர்
இதற்காக கடும் பயிற்சி எடுத்துக் கொண்டு முறையான, சண்டை கற்றுக்கொண்டு, உடலை, வருத்திக்கொண்டு, ஜிம் பாடியாக கும்வென்று வருகிறார்
வருண் அவருக்கு நடிப்பதற்கு நிறைய காட்சிகள் இருக்கிறது காதலி போகும்போது சோகமாக இருப்பது, டிடியிடம் பேசும் போது தெனாவட்டாக பேசுவது, மீண்டும் தன் காதலி வந்த பிறகு மனசுக்குள் குதுகலிப்பது, எதிரிகளை பறந்து பறந்து பந்தாடுவது, என எல்லாவற்றிலும் பாஸ் மார்க் வாங்குகிறார்
கிருஷ்ணாவிடம் தோழமைக் காட்டும் போது, அவரை பகையாளியாகநினைக்கும்போது, பாசம் காட்டும் போதும், நடிப்பில் பாஸ் மார்க் வாங்குகிறார்
தன் காதலியை காப்பாற்ற வேண்டும் என்று உயிரைக் கொடுத்து போராடுவது, அவரின் கதாபாத்திரத்தின் மேல் ஒரு மரியாதை ஏற்படுத்துகிறது. கூலிக்கு கொலை செய்பவன் தான் இருந்தாலும் அதில் ஒரு நியாயம் இருந்தால் நிச்சயம் செய்து முடிப்பேன் என்று அவர் வசனம் பேசும்போது கைதட்டல் கிடைக்கிறது கிளைமாக்ஸ் காட்சியில் நாயகி நான். நியூயார்க் சென்ற பிறகு என்ன வேண்டும் என்றாலும், நடக்கலாம் என்று சொல்லும் போது நான் இருக்கிறேன் என்று வருண சொல்கிறார் என்னை கோர்ட்டுக்கு போக விட மாட்டார்கள் என்றுநாயகி சொல்கிறார். நான் இருக்கிறேன் என்று சொல்கிறார், நான் இப்பொழுது ஒரு குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறார்நாயகி அதற்கும் நான் இருக்கிறேன் ,என்று சொல்கிறார் அந்த காட்சி அருமையான காட்சி, நான் இருக்கிறேன் என்று ஒற்றை வார்த்தையில் நாயகிக்கு நம்பிக்கையூட்டி நன்றாக நடித்தி ருக்கிறார்
இனி ஜோஸ்வா வருண் என்றே சொல்லும் அளவுக்கு அவருக்கு இந்த படம் சரியான படமாக அமைந்திருக்கிறது. இனி அதிரடி சண்டை காட்சிகள் படத்தில் இவருக்கு அழைப்பு நிறைய வரும் பேசப்படுவார் என்பது உறுதி

நாயகியின் அப்பா , கிட்டி மற்றும் டி டி , ஆக்டிங் . குட் மற்ற கதாபாத்திரங்கள் தங்களுக்குக்கொடுக்கப்பட்ட பாத்திரத்தைக்கச்சிதமாக செய்திருக்கிறார்கள்

ஒளிப்பதிவு , ஆர்ட் டைரக்சன் , லொக்கேஷன் , இசை , பின்னணி டெக்னிக்கள் அம்சங்கள் குட் இரண்டு மணி நேரம் 10 நிமிடங்கள் டைம் டியூரேஷன் வரும்படி டிரிம் செய்யப்பட்டு இருக்கிறது

கௌதம வாசுதேவ மேனன் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார்

சபாஷ் டைரக்டர்

1 காக்கா உட்காரப்பனம்பழம் விழுவது போல நாயகிக்கு தானாகவே அதிர்ஷடம் தேடி வருகிறது காதலனே பாதுகாவலன் என்பதை திரை கதையில் நிரூபித்த விதம்

2 நாயகன் – நாயகி இருவருக்குமிடையே ஆன கான்வர்சேஷன் , கெமிஸ்ட்ரி , காதல் குட்

எப்ப வேணா எதிரிகள் எங்கே இருந்து வேணுமானாலும் வரலாம், தயாரா இருக்கனும் என்று ஜோஸ்வா துடிப்புடன் செயல்படுவதுமற்றும் பணம் 5 கோடி போச்சு என்று புலம்பும் கிருஷ்ணாவுக்கு அதெல்லாம் இல்லை மறந்திடு என கூலாக ஜோஸ்வா ஹேண்டில் செய்வது, நண்பனானகோட்டியை, ஜோஸ்வா கொல்வதா வேண்டாமா என தவிப்பது, கிருஷ்ணா நல்லவரா கெட்டவரா என்று நாம் தவிப்பது திரைக்கதை மாயாஜாலம்.

டான்சி வாவாக
வந்து வெள்ளை தோலை பார்த்து ஜொள்ளு விட்டு ஜோஸ்வா கையால் மண்டையை போடுகிற மன்சூர் அலிகான் வரும் கட்சி கலகலப்பு அவர் மனைவியாக விசித்திரா கதறும் அந்த காட்சி ரிவெஞ்ச்
நடிகர் கிட்டி ஒரு காட்சிக்கு தான் வருகிறார் என்றாலும் ஜீவன் உள்ள காட்சி ஜோஸ்வா விடம் இருந்து மகளை காப்பாற்ற அவர் போடும் நாடகம் மகள் எடுக்கும் விபரீதம் முடிவு பரபரப்பான காட்சி அது

டிடி கௌரவமான நடிப்பை வழங்கி இருக்கிறார் கச்சிதமாக பேசி கட்டளையிடும் அந்த நடிப்பு பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார்

வெளிநாட்டு சிறையில் இருந்து கொண்டு நாயகியை கொல்ல இந்தியாவுக்கு ஆள் அனுப்பும் வெளிநாட்டு வில்லன் ஒரு காட்சி வந்தாலும் படம் முழுக்க அவரே பேச வைத்து விடுகிறார்.
நாயகன் – நாயகி இருவரிடமும் யதார்த்தமான நடிப்பை வாங்கிய இயக்குநர் நாயகனின் ஜோஸ்வாவை கடுமையாக வேலை வாங்கி இருக்கிறார் அது படத்தின் வெற்றிக்கு துணை நிற்கிறது.

நாயகியின் உயிரைக் காப்பாற்ற ஜோஷ்வாவோடு வந்த சக கூட்டாளிகளான மெய் காப்பாளர்கள் ஒவ்வொருவராக இறந்து போவது பரிதாபம்

உளவியல் ரீதியாக பெண்கள் நல்லவர்கள் தான்
ஆனால் பொதுவாக எந்த ஆண்களும் காதலி நன்றாக வாழ் ந்தால்போதும் என்று தான் நினைப்பார் கள் நாயகி உயிருக்கு பிரச்சனை என்பது தெரிந்து அவருக்கு உதவ நினைக்கும் ஜோஸ்வா மனித நேயத்தை வலியுறுத்துகிறது .

லிப் லாக் காட்சியில் ஜோஸ்வா நான் இன்னும் பல்லு விளக்கலே என்று நாயகியிடம் சொல்லும் பொழுது தியேட்டரில் கலகலப்பு

: வருண் தனது பாத்திரத்திற்குத் தயாராக, பாரிஸில் யானிக் பென் மற் றும் அவரது ஸ்டண்ட் இயக்குநர்கள் மற்றும் பார்கர் நிபுணர்கள் குழுவிடம் பயிற்சி பெற்று படத்தில் அதை சரியாக பயன்படுத்தி உள்ளார் பாராட்டுக்கள். கடின உழைப்புக்கு நிச்சய வெற்றி காத்திருக்கிறது. . கிருஷ்ணா யானிக் பென்னின் கீழ் ஸ்டண்ட் காட்சிகளைப் பயிற்சி எடுத்துள்ளார் அவர் போடும் சண்டைக் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது
: கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற புகழ்பெற்ற இயக்குநருடன் இணைந்து வருண் பணியாற்றி உள்ளார் எந்தவொரு ஆர்வமுள்ள நடிகருக்கும் இந்த கனவு. நிச்சயமாக இருக்கும் அது அவருக்கு நிறைவேறி இருக்கிறது. எல்லா ஹீரோக்களையும் அவரது இயக்கத்தில் உருவாகும் ஸ்டைலிஷான காதல் கதையில்தான் நடிக்க வைப்பார் ஆனால், அவர் வருணை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது சர்ப்ரைஸாக இருக்கிறது.

தமிழ் சினிமாவின் ஐகானிக் கதாநாயகர்களை இயக்குனர் கெளதம் திரைப்படங்களில் பிரமிப்புடன் பார்த்திருக்கிறோம். இந்தப் படத்தில் ஆக்‌ஷன் கதாநாயகனாக வருணை நடிக்க வைத்தார் என்பதே பெருமை .’ஜோஷ்வா இமை போல் காக்க’ ஆக்‌ஷன் பிரியர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆக்‌ஷன் டைரக்டர் யானிக் பென் மற்றும் அவரது குழுவினரின் பணியை ஒவ்வொரு ஃப்ரேமிலும் பார்க்க முடிகிறது பத்து சண்டை காட்சிகள் பத்தும் பரபரப்பு என இருக்கிறது
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே கணேஷ் படத்தைத் தயாரித்து இருக்கிறார்.அவருக்கு நமது வாழ்த்துக்கள்

தொழில்நுட்ப குழு:

ஒளிப்பதிவு: எஸ்ஆர் கதிர் ஐஎஸ்சி, அற்புதமான ஒளிப்பதிவு கண்ணுக்குள் நிற்கிறது சண்டை காட்சிகளில் விறுவிறுப்பு படமாக்கப்பட்ட ஒவ்வொரு காட்சியும் ஒளிப்பதிவாளர் கைவண்ணம்

எடிட்டிங்: ஆண்டனி, படத்தை விறுவிறுப்பு குறையாமல் அருமையாக செதுக்கியிருக்கிறார் எந்த இடத்திலும் படம் லேக் ஆகாமல் பி அன் சி ரசிகர்களுக்கும் பொருந்தி போகும் சண்டை காட்சிகளில் படத்தொகுப்பாளரின் கைவண்ணம் நன்றாக பணி புரிந்திருக்கிறது

இசை: கார்த்திக், பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது ஒவ்வொரு பாடலும் முணுமுணுக்க வைக்கிறது

கலை இயக்குநர்: குமார் கங்கப்பன், இவரின் கைவண்ணத்தால் ஒவ்வொரு காட்சியிலும் அரங்க அமைப்புகள் பிரமாதம் என்று சொல்ல வைக்கிறது

ஆடைகள்: உத்தாரா மேனன், ஜோஸ்வா கோட் சூட்டோடும் காட்சி தருவதாகட்டும் குப்பத்தை சேர்ந்த கிருஷ்ணாவுக்கு கொடுத்த காஸ்ட்யூம் ஆகட்டும் வெளிநாட்டு பெண்ணான நாயகிக்கு கொடுத்த காஸ்ட்யூமும் டிடி அணிந்து வரும் காஸ்டியூம் எல்லாமே கவரும்படி இருக்கிறது

பாடல் வரிகள்: மதன் கார்க்கி, விவேக், விக்னேஷ் சிவன், சூப்பர் சுபு, கானா குணா, எல்லா பாடலும் ரசிக்கும் படி இருக்குது சிறப்பாக இருக்கிறது

ஆக்‌ஷன்: யானிக் பென், சிறப்பாக இருக்கிறது வருண், கிருஷ்ணா, மற்றும் கூலிப்படைகளுக்கு கடுமையான பயிற்சி கொடுத்து சண்டை காட்சிகளில் விறுவிறுப்பாக பயிற்சி சொல்லி கொடுத்திருக்கிறார் வாழ்த்துக்கள்

நிர்வாக தயாரிப்பாளர்: கே அஸ்வின் குமார்,

கலரிஸ்ட்: ஜி பாலாஜி,
ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி & அழகியகூத்தன்,
ஒலிக்கலவை: சுரேன் ஜி.
ரேட்டிங்3.5/ 5

மொத்தத்தில் இந்த ஜோஸ்வா, வீரமானவன், விவேகமானவன், காதலியை காக்கும் தைரியமானவன், ரசிகர்களை கவரும் வசீகரம் ஆனவன், வெற்றிகரமானவன்