சத்தமின்றி முத்தம் தா திரை விமர்சனம்

சஸ்பென்ஸ், திரில்லராய், ‘சத்தமின்றி முத்தம் தா.’

படம் ஆரம்பித்த உடன் ஆயுதத்துடன் முகக்கவசம் அணிந்த நபர் ஒருவர், நாயகி யை கொலைவெறியோடு துரத்த, அவள் அவளுடைய வீட்டுக்குள்ளிருந்து அலறியடித்து வெளியே ஓடிவருகிறாள். ஆரம்ப காட்சிகளில் திகில் அந்த நேரமாகப் பார்த்து கார் ஒன்று சீறிவந்து மோதுகிறது.

அடிபட்டு ரத்தம் சொட்டச் சொட்ட துடிக்கிற அவரை நம்ம ஹீரோ தூக்கிச் சென்று, அவளை தன் மனைவி என்று சொல்லி மருத்துவமனையில் சேர்க்கிறார் அன்பாக கவனித்துக் கொள்கிறார் சில நாட்கள் கடந்துபோக காயங்கள் ஆறி குணமாகிறாள்; தலையில் அடிபட்டதால் பழைய நினைவுகளை இழக்கிறாள். அப்படியே டிசார்ஜ் ஆகி வீட்டுக்குத் திரும்பி, கணவன் அரவணைப்பில் அவளது நாட்கள் நகர்கிறது. அந்த இளைஞன் தான் நம்ம ஹீரோ

இது ஒரு பக்கமிருக்க, அந்த காரில் அடிபட்டு கடந்த காலத்தை மறந்துவிட்ட அந்த பெண்ணை தன் மனைவி என்றும், அவளை காணவில்லை என்றும் சொல்லி இன்னொரு இளைஞன் போலீஸில் புகார் தருகிறான். விசாரணை துவங்குகிறது.

அந்த பெண்ணுக்கு, தன்னுடன் இருப்பவன் தன் கணவன் இல்லையென்பது தெரியவருகிறது.

அப்படியெனில் கணவனாக உடனிருப்பது யார்? அவனது நோக்கம் என்ன? அவளுடைய கடந்த காலத்தில் நடந்தது என்ன? அவளை கொலை செய்ய முயற்சித்தது யார்? படத்தின் நாயகன் நாயகியை கொள்ள நினைக்க வரும் இரண்டு பேரை சரமாரியாக கொலை செய்து தோட்டத்தில் புதைக்கிறார் அது ஏன் ?கொள்ள வந்தவர்கள் யார்? அதன் பிறகு நாயகி இங்கு என்ன நடக்கிறது என்று கேட்கிறார் நான் அவர்களை கொல்லா விட்டால் அவர்கள் உன்னை கொன்று இருப்பார்கள் என்று சொல்கிறார் அதுவும் புரியாத புதிராக இருக்கிறது திடீரென காருக்குள் இருக்கும் ஆனந்த் என்ற வாலிபரை நமது ஹீரோ கொலை செய்கிறார் அது ஏன் அவர் தந்தை புலம்புகிறார் ஹீரோவை கொள்ள ஆள் அனுப்புகிறார் அது ஏன்? நாயகி தன் தோழி வானியை சந்திக்கிறார் அப்போது வாணி whatsappபில் அவரது கணவர் புகைப்படத்தை அனுப்புகிறார் அப்போது அதிர்ச்சி அடைகிறார் அங்கு நடந்தது என்ன?

இத்தனை கேள்விகளுக்கும் திரைக்கதையில் பதில் தருகிறார் இயக்குநர் ராஜ் தேவ். ‘ஒரு சஸ்பெண்ட் திரில்லரை எப்படி கொடுக்க முடியுமோ அப்படி கொடுத்திருக்கிறார் இயக்குனர் கதை ஜிவ்வென்று பறக்கிறது ஸ்ரீகாந்த் யார் என்பதை படத்தின் கடைசி வரை சஸ்பென்ஸ் ஆக கொண்டு சென்று முடித்து வைத்திருப்பது புத்திசாலித்தனம்

பணத்துக்காக கொலை செய்வதுதான் முழு நேரத் தொழில் என்றாலும், நல்லவர்கள் மீது கனிவு காட்டும் விதத்தில் அமைந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீகாந்த். தான் கொலை செய்ய வேண்டிய பெண் காரில் அடிபட உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்ற முயற்சிப்பது, கணவனாக உடனிருந்து ஆபத்திலிருந்து அவளை பாதுகாப்பது என நீளும் காட்சிகளில் மனிதாபிமான முகம் காட்டுபவர், ஸ்ரீகாந்த் ஆரம்பத்தில் வில்லத்தனமாக கொலைகள் செய்தாலும் அவர் மீது நமக்கு நெகட்டிவ் சேட் ஏற்படவில்லை ஏனென்றால் அவர் சாக்லேட் பாய்முகம் கொடூரமாக தெரியவில்லை
மற்றும்
சண்டைக் காட்சிகளிலும், சரமாரியாய் கொலை செய்வதிலும் ஆக்ரோஷ அவதாரமெடுத்திருக்கிறார்.

தான் யார், தனக்கு என்ன நடந்தது, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என எதுவும் தெரியாமல், உண்மையிலேயே தன் கணவன் யார் என புரியாமல் தவிப்பவராக பிரியங்கா திம்மேஷ். தமிழுக்கு புதுவரவு; நல்வரவு. அம்மணி பயம், பதட்டம், கோபம், ரொமான்ஸ் என அத்தனை உணர்வையும் அட்டகாசமாக டெலிவரி செய்கிறார். அவரது இளமைக்கும் அதன் செழுமைக்கும் போனஸ் மார்க் போடலாம். ஒரு காட்சியில் தனது கணவர் ரகுவுடன் ஒரு மாளிகையில் இருப்பார் அப்பொழுது ரகு கட்டிலில் அமர்ந்து அவ்வளவு செழிப்பான உடலைக் கண்டு ரசிப்பார் அந்த காட்சி இளைஞர்களுக்கு தீனி

இரு பெண்களைத் தேர்ந்தெடுத்து ஆசைக்கு ஒருத்தி, ஆஸ்திக்கு ஒருத்தி என கட்டம் கட்டி வாழ்கிற வியான், வில்லத்தனத்தை கொஞ்சமாகவும் உடற்கட்டை முழுமையாகவும் காட்டியிருக்கிறார். வித்தியாசமான வில்லனாக வருகிறார் என்னுடைய டேஸ்ட்டே தனி என்று அவர் கடைசியில் சொல்லும் பொழுது அடடே இப்படி ஒரு வில்லனா? என்று ஆச்சரியப்பட வைக்கிறது!

கவர்ச்சிக்கு உகந்த தனது கச்சிதமான வளைவு நெளிவுகளை, ஆண்ட்ரியாவின் கிக்கான குரலில் ஒலிக்கிற ‘செம்பரம்பாக்கம் ஏரியளவு’ பாடலில் முடிந்தளவு பந்தி வைத்திருக்கிறார் நிஹாரிகா. அந்த பாடல் வரும் பொழுது தியேட்டரில் கரகோஷம் முனு முனுப்பு சத்தம் ஊ என்று கூக்குரல் செம ஹிட் ஆனா பாடல் அது

சென்னை அபிராமபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்துகொண்டு, இ.சி.ஆர். சாலை வரை பறந்து சென்று கடமையாற்றுகிறவராக ஹரீஷ் பெராடி. கொலை காரனை குறி வைத்து கண்டுபிடிப்பது புத்திசாலித்தனமாக இருந்தாலும் கொலைகாரனால் நாயகி க்குபிரச்சனை ஏற்படும் என்று தெரிந்தும் ஏன்? பாதுகாப்பு கொடுக்கவில்லை? என்ற கேள்வி எழுகிறது விறுவிறுப்பை உணர்ந்து பின்னணி இசை தந்திருக்கிறார் ஜுபின். பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம்

எளிமையான கதைக்களத்தின் நீள அகலங்களை குறையின்றி தன் கேமராவில் சுருட்டியிருக்கிறார் யுவராஜ். காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் லொகேஷன் எல்லாமே நன்றாக இருக்கிறது கண்களுக்கு குளிர்ச்சியா இருக்கிறது அந்த இரவு நேர திகில் பங்களாவை காட்டும் பொழுது அச்ச உணர்வு ஏற்படுகிறது பாடல்கள் கவர்ச்சியை கேமரா அள்ளி கொண்டு வந்திருக்கிறது ஆண்ட்ரியா பாடும் அந்த பாடலுக்கு கேமராமேனும் இயக்குனரும் டான்ஸ் மாஸ்டர் அருமையாக படமாக்கி இருக்கிறார்கள்

சஸ்பென்ஸ் திரில்லருக்கேற்ற நல்லதொரு கதையை கையிலெடுத்த இயக்குனரை பாராட்டியாக வேண்டும் இன்றைய காலகட்டத்திற்கு சஸ்பென்ஸ் ,திரில்லர், மனித நேயம் மற்றும் இது போன்ற படங்கள் தேவைப்படுகிறது அந்த வகையில் வெற்றியை அடைந்திருக்கிறது இந்த படம்
சத்தம் இன்றி முத்தம் தா ” படத்தில் உழைத்த நடிகர் நடிகைகள் டெக்னிஷன்கள்

நடிகர், நடிகை :

ஸ்ரீகாந்த் – விக்னேஷ்
பிரியங்கா திம்மேஷ் – சந்தியா ஹரிஷ் பேராடி – இன்ஸ்பெக்டர் எட்வர்ட்
வியான் – ரகு
நிஹாரிகா – ஷீலா

தொழிலநுட்ப கலைஞர்கள் :

இசை : ஜுபின்
( திரௌபதி, ருத்ரதாண்டவம் )

பாடல்கள் : விவேகா

ஒளிப்பதிவு : யுவராஜ்.M

நடனம் : தினேஷ்

ஸ்டண்ட் : மிராக்கிள் மைக்கேல்

மக்கள் தொடர்பு : மணவை புவன்

தயாரிப்பு மேற்பர்வை : AJ.P. ஆனந்த்

தயாரிப்பு நிறுவனம் : செலிபிரைட் புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் : கார்த்திகேயன்.S

தயாரிப்பு மேற்பார்வை – ஆனந்த்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் – ராஜ் தேவ்.

இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் உலகத் திரைப்பட விழாவில் பத்து விருதுகளுக்கு மேல் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு ஆனந்த விகடன் மற்றும் சாவி இதழ்களில் சிறுகதைகள் எழுதியுள்ளார். மேலும் அவர் அமெரிக்காவில் நடைபெற்ற திரைக்கதை போட்டியில் அனைத்து நாடுகளும் கலந்து கொண்ட நிலையில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு கதைகளான ‘KISS DEATH மற்றும் A STRANGER IS WALKING BY’ஆகியவற்றிற்கு சொந்தக்காரர் ஆவார். ஒரு வெற்றிப் படத்துக்கு தேவையான, கதையை எழுதி, அதில் குழப்பம் இல்லாமல் திரைக்கதை, உருவாக்கி, நல்ல தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்து, நடிகையின் நடிகைகளை தேர்வு செய்து படமாக்கி இருக்கும் விதம் அருமை நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இயக்குனராக வருவார் பாராட்டுக்கள் கிடைக்கும்

பாடல்கள் :

1. செம்பரம்பாக்கம் ஏரி அளவு ( பாடியது – ஆண்ட்ரியா )

2.ஆசை மழை – (பாடியவர்கள் M.M.மானசி – ஜித்தின் ராஜ்)

3.கடந்து நீயும் போகும் போது – (பாடியவர் ரவி.G ). என முத்தான பாடலாக மூன்று பாடல்கள் மனசுக்குள் ரீங்காரமாக இருக்கிறது சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கிறது