போர் திரை விமர்சனம்

பிஜாய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடித்த போர் படத்தின் விமர்சனம்… பார்க்கலாம் வாங்க

வித்தியாசமான சிந்தனை உள்ள பிஜாய் நம்பியார், இந்த முறை இந்த காலத்து கல்லூரி மாணவர்களுக்குள் இடையே நடக்கும் சீனியர் – ஜூனியர் பிரச்னையை படமாக எடுத்திருக்கிறார். ரசிக்க வைக்கிறது. ருசிக்க வைக்கிறது இளசுகள் சுவைக்க சுவைக்க…

. அர்ஜூன் தாஸ் (பிரபு) – காளிதாஸ் ஜெயராம் ஆகிய இருவருக்குள் இடையே, சிறுவயதில் ஏற்படும் கசப்பான சம்பவத்தால் தற்போது (கல்லூரி காலத்தில்) மீண்டும் களேபரம் உண்டாவது படத்தின் ஒன் லைனர் கதையாக இருந்தாலும், இவர்களை சுற்றி பல கதாபாத்திரங்களும், அவர்களுக்கான பின்னணி கதைகளும் ஒரே கோட்டில் நகர்கிறது.
இருவருக்குள் மோதல் எப்போது நடக்கும் என்பதை இறுதிவரை கொண்டு வந்து படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர்.

இப்படம் இளைஞர்களை குறி வைத்து எடுக்கப்பட்டுள்ளது முழுக்க முழுக்க இளைஞர்களை சார்ந்து இக்கதை எழுதப்பட்டுள்ளது காதல் ,காமம் ,மோகம் விரகதாபம் ,டிரக்ஸ் அடிப்பது, காதலுக்கு தூது போவது என எல்லாமே இருக்கிறது

அர்ஜுன் தாஸின் ஜோடியாக டி.ஜே பானு (காயத்ரி) கல்லூரியில் நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேக்கும் போராளி பெண்ணாக வருகிறார்.

அவரின் தீர்க்கமான பார்வையும் தீர்க்கமான பேச்சும் கம்பீரமான உடல் கட்டும் அடடா என ரசிக்க வைக்கிறது அவர் வரும் காட்சிகளில் அவரையே பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு முக வசீகரம்

அக்கல்லூரி பேராசிரியர் ஒருவர் சாதி பெயரை வைத்து மாணவர் ஒருவரை இழிவுபடுத்துவதை தட்டி கேட்கிறார். இவருடன் இருக்கும் நித்யஸ்ரீ(வெண்ணிலா) என்பவர், கல்லூரி பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார்.
ஆனால் அவர் கிருபா என்ற அரசியல்வாதியால் கையில் ஆசிட் விட்டு பயந்து போய் விடுகிறார்
வெண்ணிலா

இதில் சத்யா என்பவரும் (அரசியல் கட்சித்தலைவர், கல்லூரி அறங்காவலரின் மகள்) அரசியல் எதிர்காலத்தை நினைத்து வாழ்ந்து வருவதால் கல்லூரி பொதுச்செயலாளர் பதவிக்கும் ஆசைப்படுகிறார். வெண்ணிலா – சத்யா ஆகிய இருவரும் தன்பாலின ஈர்ப்பாளர்களாக இருக்கின்றனர்.

அவர்களுக்குள் பிரேக்கப் உண்டு. பிரேக்கப்பும் உண்டு

முன்னாள் காதலர்களான இவர்களுக்கு பதவியால் மோதல் ஏற்படுகிறது. இதில் சாதி அரசியலும் நடக்கின்றது. வெண்ணிலவை தேடிச்சென்று காயத்ரியும் காளிதாசும் சமாதானம் பேச வெண்ணிலாவின் தந்தை என் மகளை விட்டு விடுங்கள் என்று கெஞ்சுகிறார் காயத்ரி குரல் என்ற அமைப்பின் மூலம் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார் அது அவருக்கு ஆபத்தாக முடிகிறது.

ஏன் உயிருக்கு ஆபத்தாக முடியப் போகிறது என்பது முதலில் நமக்கு தெரிந்து விடுகிறது

ஏகப்பட்ட விஷயங்களை விவரிக்கும் இப்படம் அழுத்தமாக இருக்கிறது. எல்லா கதாபாத்திரங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்தி இருப்பது சிறப்பு ஒரு காட்சி முடிவதற்குள் அடுத்த காட்சிக்கான லீடுகொடுத்து வாய்ஸ் ஓவரை கொண்டு வருகிறார் இயக்குனர் இது புதுமையான விஷயம்

அர்ஜுன் தாஸின் இந்த பிரபு கதாபாத்திரம் சற்று வித்தியாசமாகவே இருக்கும். அத்துடன், அர்ஜுன் தாஸையும் காளிதாஸ் ஜெயராமையும் இளங்கண்ணிகள் பார்த்து ரசிக்கலாம். ஆண்களுக்கு டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், வெண்ணிலா, ஸ்ரீமா உபாத்யாயா என தேவதைகள் கூட்டமே காத்திருக்கிறது. இவர்கள் அனைவரும் சிறப்பாகவே நடித்துள்ளனர்.
கவர்ச்சியிலும் வஞ்சம் வைக்கவில்லை பெட் ரூம் சீன், லிப் லாக் சீன், எனப் படத்தில் நிறைய இருக்கிறது

படம் முழுவதும் ட்ரிப்பியான இசையும் காட்சிகளும் நிறைந்துள்ளது. இதில் இருக்கும் பாடல்கள் அடுத்த சில நாட்களுக்கு இன்ஸ்டா ரீல்ஸில் ட்ரெண்ட் ஆகும் என்பது உறுதி
ஒரு சில இடங்களில் இப்படத்தின் இசை இரைச்சலை கொடுக்கும் என்பதையும் நினைவில் கொள்ளலாம்

படத்தொகுப்பு, ஒளிப்பதிவு ப்ரெஷ்ஷாக இருந்தது

அர்ஜுன் தாஸ் அந்த பேஸ் வாய்ஸ் குரலில் அழுத்தமாக பேசி நடித்திருக்கிறார் தீர்க்கமாக பார்க்கிறார் ஓரிரு வார்த்தைகள் என்றாலும் அவர் பேச்சிலே கம்பீரம், நடிப்பிலே கல்லூரி மாணவனின் அடக்க முடியாத திமிர் இப்படி ரசிக்க வைக்கிறார் அர்ஜுன் தாஸ்

காளிதாஸ் ஜெயராம் இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட ரகடையான கதாபாத்திரம் வம்புக்கு இழுப்பதற்கு என்று வளர்த்து விட்டவர் போல ஒரு தோற்றம் கல்லூரியில் சீனியர்கள் ராக்கிங் செய்யும்போது வெகுண்டு எழுவது எந்த பெண்ணை பார்த்தாலும் ஜொள்ளு விட்டு வழிவது அர்ஜுன்தாஸ் உடன் மோதல், என கச்சிதமாக பொருந்தி யிருக்கிறார்.

இருவரும் ஒருவருக்கொருவர் மோதி கொள்கிறார்கள். படம் முழுக்க பிளேபாயாக வலம் வந்திருக்கிறார் காளிதாஸ் ஜெயராம். மேலும் படத்தில் காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு கெட்ட வார்த்தைகளையும் பேசி இருக்கிறார்.

அர்ஜுன் தாஸ் எப்போதும் போல நடிப்பில் மிரட்டி இருக்கிறார். இன்றைய கலாச்சாரம் எவ்வாறு ஒரு மோசமான நிலையில் செல்கிறது என்பதை காட்டும் விதமாக போர் படம் அமைந்துள்ளது. பிளஸ் என்னவென்றால் இப்போது உள்ள இளைய தலை முறையினருக்கு பிடிக்கும்படி இருக்கிறது என்பது கூடுதல் போனஸ்

அதோடு முதல் பாதியை விட இரண்டாவது பாதி நன்றாக உள்ளது.

கல்லூரிக்குள் சாதி மோதல் காதல் கலகலப்பு என படம் இன்று இளைஞர்களின் கோபத்தையும், காதலையும், சொல்கிறது

ஒரு மருத்துவக் கல்லூரி இப்படியா இருக்கும் எந்த ஊரில் இப்படி இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது

சோசியல் மீடியாக்களின் வளர்ச்சி என்று அசுர வேகத்தில் இருக்கிறது மூச்சு விட்டால் கூட எட்டு திசையும் கேட்டுவிடும் மருத்துவ கல்லூரியில் நடக்கும் இந்த அட்டூழியங்களை சோசியல் மீடியாக்கள் மோப்பம் வைத்து கண்டுபிடிக்காமளா போய்விடுவார்கள் என்று கேள்வியும் எழுகிறது

ஆயிரம் கேள்விகளை எழுப்பினாலும் படம் அசல் ரகம் இளைஞர்களுக்கு பிடித்த படம் ரசிக்கலாம் படத்தைப் பார்த்து வரவேற்கலாம்