சிங்கப்பெண்ணே திரை விமர்சனம்

ஜெ.எஸ்.பி பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜெ.எஸ்.பி சதீஷ் தயாரித்து, கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘சிங்கப்பெண்ணே’. ட்ரயத்லான் (Triathlon) என்று சொல்லப்படும் நீச்சல், சைக்கிள் மற்றும் ஓட்டம் ஆகிய மூன்று விளையாட்டுகளையும் ஒரே நேரத்தில் விளையாடும் போட்டியை மையமாக கொண்டு உருவாகியுள்ள முதல் திரைப்படமான இதில், நிஜமான தேசிய ட்ரயத்லான் வீராங்கனை ஆர்த்தி கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவரது பயிற்சியாளர் வேடத்தில் ஷில்பா மஞ்சுநாத் நடித்திருக்கிறார். ஒரு அருமையான தன்னம்பிக்கை ஊட்டும் “சிங்க பெண்ணே” திரைப்படம்

மறைந்த பழம்பெரும் வில்லன் நடிகர் எம்.என்.நம்பியாரின் பேரன் தீபக் நம்பியார் இத்திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமாகியுள்ளார். இவர்களுடன் பசங்க சிவகுமார், ஏ.வெங்கடேஷ், சென்ராயன், பிரேம், பாய்ஸ் ராஜன், ஜானகி, இந்துமதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரகனி கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

கபிலன் வைரமுத்து வசனம் எழுதியுள்ள இப்படத்திற்கு என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். குமரன் சிவமணி இசையமைக்க, கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இப்படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம். தென்காசியில் உள்ள ஒரு சின்ன கிராமம் அந்த கிராமத்தில் அப்பா அம்மாவை இழந்து, பாட்டியின்உறவில் வாழும் ஒரு அழகான சின்ன பெண் தேன் அவளது தாய் மாமன் குடிகாரன், (சென்ராயன் )தினமும் குடித்துவிட்டு வந்து தேன் எனக்குத்தான், அவளை திருமணம் செய்து கொள்வேன், என்று அடம் பிடிக்கிறார்

தேன் கிணற்றில் நன்றாக நீச்சல் அடிக்கிறார் ,
சைக்கிள் நன்றாக ஓடுகிறார், ஓட்டப்பந்தயத்தில் நன்றாக ஓடுகிறார், இதையெல்லாம் சென்னையில் இருந்து தென்காசிக்கு வந்த சில்பா மஞ்சுநாத்
கண்டு பிடிக்கிறார்
ஒரு கட்டத்தில் தேன் பாட்டி இறந்து விட, சென்ராயன் அங்கு வந்து கலாட்டா செய்கிறார்.
அவரை போலீஸில் பிடித்துக் கொடுத்துவிட்டு தேனை சென்னைக்கு கூட்டி வருகிறார் ஷில்பா கூட்டி வந்து நீச்சல் வீராங்கனையாக மாற்றிக் காட்டுகிறேன் என்று சபதம் செய்கிறார்

முதலில் தயங்கும் தேன், எனக்கு இதெல்லாம் ஒத்து வராது என் கிராமம் தான் எனக்கு உலகம் என்கிறார் இந்த உலகமே கிராமமாக மாறும் என்று சில்பா மஞ்சுநாத் ஆதரவு தருகிறார் அவருக்கு நீச்சல் கற்றுத் தருகிறார்
அவருக்கு தொல்லை தர ஒரு மாவட்ட ஆட்சியர் வருகிறார்(பிரேம்) அவரது மகள் நீச்சல் போட்டியில் முதலிடம் பிடித்தால் ஸ்டேட் லெவலில் அவரது மகளுக்கு வேலை கிடைக்கும் நான் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிடுவேன் என்று கனவு காண்கிறார் இதற்காக காய் நகர்த்துகிறார் அப்படி காய் நகர்த்தும் போது
பிரேம் மகளுக்கு போட்டி தேன்

தேன் இருக்கும் வரை நமது மகள் ஸ்டேட் பர்ஸ்ட் வர முடியாது என்று தேனை, போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது என்று சில்பா மஞ்சுநாத்திடம் தூது அனுப்புகிறார் பிரேம், சில்பா மஞ்சுநாத். அதற்கு ஒத்துக்கொள்ள மறுக்கிறார் இதனால் தேன் இந்த போட்டியில் கலந்து கொள்ளாமல் இருக்க சதிசெய்து பெங்களூர் அனுப்புகிறார் பெங்களூர் சென்று போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் செய்து
தேனை போட்டியிலிருந்து தோற்கடிக்க வைக்கிறார் அதற்குப் பிறகு தேன் எப்படி நீச்சல், சைக்கிள், மற்றும் ஓட்டப்பந்தயத்தில், ஜெயித்தார் ?என்பது கதை
இந்த படம் முழுக்க முழுக்க பெண் குழந்தைகளின், தன்னம்பிக்கையை, பறைசாற்று விதமாக எடுக்கப்பட்டுள்ளது

யார் எங்கே பிறந்தாலும் ,எந்த சூழ்நிலையில் இருந்தாலும், முயற்சி செய்தால் முன்னுக்கு வரலாம் என்ற கோட்பாடு படி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது

சிங்க பெண்ணாக தேன் எப்படி உருவாகிறார் அவரை உந்து சக்தியாக ஷில்பா மஞ்சுநாத், எப்படி மாற்றுகிறார் இவர்கள் இருவருக்கும் ஏற்படும் தடையை எப்படி இருவரும் முறியடித்து வெற்றி காண்கிறார்கள் என்பது கதை,

கதைக்களம் ஒரு கிராமத்திலிருந்து சென்னைக்கு வருவது போல் எடுக்கப்பட்டிருக்கிறது ,கிராமத்து அழகையும் சென்னையின் ரிச்னஸ் ஒளிப்பதிவாளர் அருமையாக எடுத்திருக்கிறார் ஏகாம்பரம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

கிளைமாக்ஸ் காட்சியில் பல மணி நேரம் படமாக்கி அதை 12 நிமிஷமாக எடிட் செய்திருக்கும் எடிட்டர் அவருக்கு வாழ்த்துக்கள்.
இது ஒரு அவர்னஸ் படம் தான் கமர்சியல் மசாலா படம் அல்ல, இந்த படத்தை தயாரித்து இருக்கிறார் சதீஷ் சாதிக்க துடிக்கும் பெண் குழந்தைகளுக்கு மேலும் ஊக்கத்தை கொடுக்கும் படமாக எடுத்துள்ளார் படத்தை தயாரித்தும், இயக்கியும் ,சிறப்பாக வடிவமைத்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்

: ஷில்பா மஞ்சுநாத், “ தான் சிங்கப்பெண் என்பது புரிகிறது எல்லோர் வீட்டிலும் ஒரு சிங்கப்பெண் இருப்பார்கள் அந்த மாதிரியான ஒரு சிங்கப்பெண்ணாக,.
இதில் சிறப்பாக நடித்திருக்கிறார் அவர் முகபாவனை, உடல் மொழி, ஊக்கப்படுத்தும் விதமும் நன்றாக இருக்கிறது

படப்பிடிப்பில் உண்மையான போட்டிகளை நடத்தி அப்படியே எடுத்து உள்ளார் கள் வெகு நேர்த்தியாக இருக்கிறது

. ஆர்த்தி எந்த ஒரு சிறு ஓய்வும் இல்லாமல், மிக உற்சாகமாக நடித்துள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள் பெண்களின் விளையாட்டைப் பற்றி நாம் நிறைய பேசுவதில்லை
இது போன்ற படங்களை பார்க்கும் போது நம் வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளையும் இப்படி ஊக்கப்படுத்த வேண்டும் அவர்களை சாதிக்க வைக்க வேண்டும் என்றும் நம் மனதில் எண்ணம் ஏற்படுகிறது

படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஜெ.எஸ்.பி.சதீஷ் மூன்று வருட போராட்டங்களுக்குப் பிறகு, இப்படத்தை எடுத்துள்ளார். விளையாட்டை மையப்படுத்திய ஒரு அழகான படைப்பு. இப்படம் எடுக்க நிறைய சிரமங்கள் இருக்கின்றன அவருக்கு. படத்தில் உண்மையான நேஷனல் அளவிலான போட்டிகள் எல்லாம் வருகிறது. அதை எடுக்க அதிகாரிகளை தொடர்பு கொண்டு உண்மையான விளையாட்டு நடக்கும் வரை காத்திருந்து படம் பிடித்துள்ளனர். உண்மையான விளையாட்டு வீராங்கனை நடித்துள்ளார் முழுக்க லைவ்வாக இருக்கிறது
ஆர்த்தி உண்மையாகவே அந்த நேஷனல் மேட்ச்சில் கோல்ட் மெடல் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது அது படத்திலும் வருகிறது, நாம் பார்க்கும் போது, அதை நம்பவே முடியல அத்தனை உண்மையாக இருக்கிறது காட்சிகள் அதன் தன்மை படமாக்க பட்ட விதம் எவ்வளவு கடினமான உழைப்பு திறமையாளர்களை கண்டுபிடித்து நேரங்களை ஒதுக்கி பொருளாதாரத்தை செலவு செய்து ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார்

எல்லா அப்பா அம்மாவும் படிக்க சொல்வார்கள், இல்லை கல்யாணம் செய்து வைப்பார்கள், ஆனால் ஆர்த்தி பெற்றோர் இவரை விளையாட போகச் சொல்லி ஊக்கம் தந்து இருக்கிறார்கள் அவர்கள் தந்த ஆதரவால் தான் இன்று வீராங்கனை ஆக இருக்கிறார். பெண் குழந்தைகளை தன்னம்பிக்கையாக வளர்க்கவும் விளையாட்டு துறையில் சாதிக்க வைக்கவும் பெற்றோர்கள் நினைத்தால் முயற்சி செய்தால் நடக்கும் ஆதரவற்ற பெண் குழந்தைகள் சில்பா மஞ்சுநாத் போல யாராவது ஒருவர் ஊக்கம் தந்து உதவினால் அந்த குழந்தைகள் சாதிப்பார்கள்

இப்படத்தில் உழைத்திருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். படத்தை மிகவும் கஷ்டப்பட்டு எடுத்துள்ளார்கள் என்பது தெரிகிறது. உண்மையான விளையாட்டை எடுத்து வந்து காட்டியிருக்கிறார்கள்.

நடிகர் பிரேம் மாவட்ட ஆட்சியராக நடித்திருக்கிறார் தன் மகளுக்காக திறமை உள்ள ஒரு குழந்தையை போட்டியில் இருந்து வெளியேறும்படி அவர் செய்யும் சதி இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள் மனிதர்கள் என்று எண்ணத் தோன்றுகிறது நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார் பிரேம் “ விளையாட்டுத்துறை இன்றைய நிலையில் எப்படி இருக்கிறது, அதிலிருக்கும் அரசியல் பேசுகிறது படம்

நடிகர் செண்ட்ராயன் “இப்படத்தில் குடிகாரன் ஆக நடித்திருக்கிறார் பாடவும் வைத்திருக்கிறார் இசை அமைப்பாளர்.

இசையமைப்பாளர் குமரன் சிவமணி, படத்தின் பாடல்கள் மட்டும் பின்னனி இசை உயிரோட்டமாக கொடுத்திருக்கிறார் அனிருத் பாடிய ஓபனிங் சாங் வெகு பிரமாதமாக இருக்கிறது கண்ணே கனியே ,என்ற பாடல் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது

தேசிய அளவில் பல வெற்றிகளை பெற்று தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வரும் ஒரு விளையாட்டு வீராங்கனை கதையின் நாயகியாக நடித்திருக்கும் முதல் திரைப்பட்ம என்ற பெருமையை பெற்றிருக்கும் ‘சிங்கப்பெண்ணே’ திரைப்படம் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 ஆம் தேதி, அன்று, வெளியாகிறது அனைவரும் காண வேண்டிய படம்