அறிமுக இயக்குநர் ரமேஷ் கந்தசாமி இயக்கியுள்ள படம் ‘அரிமாபட்டி சக்திவேல்’ இதில் முக்கிய வேடத்தில் சார்லி நடித்துள்ளார். நாயகனாக புதுமுகம் பவன்.கே நடிக்க,
மலையாள நடிகை மேகனா எலன், இமான் அண்ணாச்சி, சூப்பர்குட் சுப்ரமணி, கராத்தே வெங்கடேஷ், ஹலோ கந்தசாமி உட்பட பலர் நடித்துள்ளனர். மணி அமுதவன் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஜேபி மேன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லைஃப் சைக்கிள் கிரியேஷன்ஸ் சார்பில் பவன் கே, அஜிஸ் பி தயாரித்து உள்ளனர்
திருச்சி அருகே உள்ள கிராமம் ஒன்றில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. ஒரு கிராமம் தங்களுக்கென ஒரு கட்டுப்பாட்டை வரையறுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதை ஒருவன் மீறும்போது நடக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து இதன் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.
அரிமாபட்டி சக்திவேல் கதை என்ன வாங்க பார்க்கலாம். . சென்னையில் உதவி இயக்குனராக இருக்கும் சக்திவேல், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த காதலை நினைத்துப் பார்ப்பது போல், பிளாஸ்பேக் காட்சிகள் வருகிறது கவிதா, என்ற பெண்ணை எட்டு வருடமாக காதலிக்கிறார் கவிதா வீட்டில் இந்த காதல் விஷயம் தெரிய ,வர கவிதாவுக்கு , மாப்பிள்ளை பார்க்கிறார்கள் இதனால் சக்திவேலும் கவிதாவும் ஊரை விட்டு ஓடி , திருமணம் செய்து கொண்டு ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்கிறார்கள் இந்த விஷயம் கவிதாவின் அண்ணனுக்கு தெரிய வர, கோபக்காரன கவிதா அண்ணன் அவர்கள் இருவரையும் தேடிக் கொண்டு சக்திவேல், வீட்டுக்கு வருகிறார் அங்கு இருக்கும் சார்லி மற்றும் உறவினர்களை அடித்து உதைத்து, சக்திவேல், கவிதா, எங்கே என்று கேட்கிறார்? அதற்குப்பின் ஊர் பஞ்சாயத்து கூடுகிறது அந்த ஊருக்குள் ஒரு கட்டுப்பாடு! காதலிக்கும் எந்த ஆணும் ,பெண்ணும், தங்கள் ஊருக்குள் வரக்கூடாதுவேறு ஜாதிக்காரர்கள், அந்த ஊருக்குள் வரக்கூடாது அப்படி காதலித்து வந்தால் அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்ற கட்டுப்பாடு, சக்திவேல் இதை மீறியதால் அவர் வாழ்க்கையில் , நடந்தது என்ன, இதை எல்லாம் மீறி வாழ்ந்து காட்டினாரா? சினிமாவில் சாதித்தாரா? கவிதாவின் அண்ணன் தங்கையை வாழ விட்டானா ?என்பது தான் அரிமா பட்டி சக்திவேலின் கதை
கதையின் நாயகனாக பவன், அறிமுக நாயகன் என்றாலும் இயல்பாக நடித்திருக்கிறார். உறவுகளிடம் சேர முடியாமல் ,காதலியை பிரிய முடியாமல், கடைசிக்காட்சியில், தன் பாட்டனை இழந்து தவிக்கும்போது என சிறப்பாக நடித்திருக்கிறார்
நாயகி எலன் அழகான கேரளா வரவு கதைக்கு ஏற்ற டீச்சர் வேடம் கிராமத்துக்கு கதைக்கு பொருந்தி போகிறார் எதார்த்தமான நடிப்பு இயல்பான டயலாக் டெலிவரி காதலனுடன் ரம்யமான உறவு அம்மா அண்ணனிடம் பயந்த சுபாவம் என நாயகி பொருந்தி இருக்கிறார்
படத்தில் நாயகனின் அப்பாவாக சார்லி, நடித்திருக்கிறார் வெகுலியான கதாபாத்திரம் ஊருக்குள் அதிர்ந்து பேசாதவர் தன் மகன் காதலித்து தன்னை ஊருக்கு முன்னால் தன்னை தலை குனிய வைத்து விட்டான் என்று அவர் புலம்பும் காட்சிகள் நன்றாக இருக்கிறது
நாயகியின் அண்ணனாக பிர்லா போஸ் சரியான வில்லத்தனம் படம் முழுக்க காதலுக்கு எதிர்ப்பாளராக வந்து கலக்கி இருக்கிறார். அரசியல்வாதி அண்ணாச்சியாக இமான் அண்ணாச்சி காமெடிக்கு இவர் கேரண்டி இவர் வரும் காட்சிகள் கலகலப்பாக இருக்கிறது . ஊருக்குள் கெத்து காட்டும் அரசியல்வாதியாக வெத்து பேர் வழியாக நடித்திருக்கிறார்.
சூப்பர் குட் சுப்பிரமணி ,ஹலோ கந்தசாமி ,தவசி, இவர்களெல்லாம் ஊரின் நாட்டாமைகள் இவர்கள் வைத்து தான் சட்டம் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டு ஊருக்கு வந்தால் சாகடிக்கவும் தயங்க மாட்டார்கள் அப்படி ஒரு கொடூரமான சிந்தனை உள்ளவர்கள் இந்த கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்து இருக்கிறார்கள் சென்னையில் நாயகன் பேக்கரி ஷாப் ஒன்றில் வேலை செய்கிறான் அதன் முதலாளியாக தயாளன் நடித்திருக்கிறார் காதலுக்கு உதவும் கதாபாத்திரம் இவர் நடிப்பு சிறப்பாக இருக்கிறது.
நாயகன்அம்மாவாக செந்தி நடித்திருக்கிறார் . நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்புகள் குறைவு என்றாலும், அந்த நடிப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்
மணி அமுதவன் இசையமைத்து இருக்கிறார் பாடல்கள் ரசிக்கும் படி இருக்கிறது காதல், பாடல் சோகப் பாடலும் மனதிற்கு இதமாக இருக்கிறது பின்னணி இசை உயிரோட்டமாக இருக்கிறது
ஜேபி மேன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கிராமத்து அழகை அழகாக அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார் சென்னையில் கதை நடக்கும் போது அந்த காட்சிகளும் நன்றாக இருக்கிறது
படத்தொகுப்பு நன்றாக இருக்கிறது சில இடங்களில் மேக்கப் அதிகமாக இருக்கிறது ஒப்பனை யாளர் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்
ரமேஷ் கந்தசாமி இப்படத்தை இயக்கியிருக்கிறார் இன்னமும் கிராமத்துக்குள் சாதியின் வண்மம் தலை விரித்து ஆடுகிறது அதை ஒன்றுமே செய்ய முடியாது என்பதை வலியுறுத்தி படம் எடுக்கப்பட்டிருக்கிறது படம் முடிந்த பிறகு காதலித்து ஓடி வந்தவர்கள் எட்டு ஆண்டுகளாக இன்னும் அந்த ஊருக்குள் போக முடியவில்லை யானை பட்டி என்ற ஒரு கிராமம் இருக்கிறது நாயகனே கூட அதில் பாதிக்கப்பட்டு இருக்கிறார் 20 வருடமாக நான் அந்த ஊருக்குள் போக முடியவில்லை என்கிறார் தந்தையின் இறப்புக்கு கூட போக முடியவில்லை என்று சொல்கிறார் இப்படிப்பட்ட தீண்டத்தகாத கிராமத்தை, யாருமே ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது ஜீரணிக்க முடியாத நிலையில் உள்ளது.
பெரியாரும், அம்பேத்கரும், இன்னமும் சிறை கம்பிகளுக்குள் தான் இருக்கிறார்கள் என்று சொல்வதைப் போல ,சாதிய வன்மம் இன்னும் தலை தூக்கி ஆடுகிறது, என்பது உண்மை சாதிப் பெருமை பேசும் அனைவருக்கும் சவுக்கடி, இந்த படம் தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட கிராமங்கள் இருப்பதை ஆளும் அரசாங்கம் கண்டுபிடித்து தடை செய்ய வேண்டும் அப்போதுதான் கிராமத்தில் இளைஞர்கள் நிம்மதியாக காதலிக்க முடியும் அருமையான படமாக வந்திருக்கிறது படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், டெக்னிக்கல் குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள்
