J: பேபி திரை விமர்சனம்

இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கத்தில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ், லொள்ளுசபா மாறன் என பலர் நடித்திருக்கும் திரைப்படம். தயாரிப்பாளர்களான பா.ரஞ்சித், அபே ஆனந்த் சிங், பியூஸ் சிங், ஸுரப் குப்தா மற்றும் அதிதி ஆனந்த் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் டோனி ப்ரிட்டோ இசையமைத்துள்ளார்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஷண்முகம் வேலுசாமி எடிட்டிங்
செய்து உள்ளார்

வடசென்னையை களமாக கொண்ட படம். ஐந்து குழந்தைகள் ஒரு அம்மா. அவர்களுக்குள் நடக்கும் பாசம் ,மோதல்களே கதை.

ஒரு அம்மா ,அவருக்கு மூன்று மகன்கள். இரண்டு பெண்கள் தன் கணவன்ஹார்ட் அட்டாக் கில் இறந்து போக ஊர்வசி மனம் நலம் பாதிக்கப்பட்ட அம்மாவாக ஆகிறார் அண்ணன் மாறனுக்கும் அட்டகத்திதினேஷ்க்கு ஒரு பகை
அந்த பகையால் இருவரும் பேச முடியாமல் போகிறது
இவர்கள் இருவரும் இணைந்து அம்மாவை எப்படி கண்டுபிடித்தார்கள் ஒன் லைன்

அம்மா பாசத்தை இதைவிட வேற எந்த படமும் இப்படி சொல்லி விட முடியாது மனநல பாதிக்கப்பட்ட அம்மா அதனால் சங்கடப்படும் மகன்கள் சென்னையை விட்டு வெளியேறும் அம்மா அருமையான திரைக்கதை
காமெடி, எமோஷனல், இரண்டும் கலந்து சொல்லபட்ட உண்மை கதை

இந்தப் படத்தின் இயக்குநர் சுரேஷ் மாரி நன்றாகவே இயக்கியிருக்கிறார். இவரின் அடுத்தப் படத்தை ஆர்வமாக எதிர்நோக்கலாம். நாயகனாக அட்டகத்தி தினேஷ், மாறன், இருவரும் இணைந்து அம்மாவை தேடும் காட்சி செம கலகலப்பு அதுவும் மாறன் நடிப்பு செம அவர் நடிக்க வில்லை வட சென்னை மக்கள் எப்படி இருப்பார்களோ அப்படி வாழ்ந்து காட்டி இருக்கிறார் சபாஷ் அதோடு எல்லோர் கதாபாத்திரங்களும் நினைவில் நிற்பது சிறப்பு
.

பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இதுவரை வெளிவந்த படங்கள் சமூக கருத்துக்களை உள்ளடக்கிய படங்களாகவே
வெளிவந்திருக்கிறது.

‘ஜெ பேபி ‘ படம் குடும்ப உறவுகளைப்பற்றி பேசுகிற படமாகவும், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது.

குடும்பத்தோடு பார்க்கவேண்டிய படம் , சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். படம் பார்க்க தியேட்டர் வருபவர்கள் அவசியம் தங்களது அம்மாக்களையும் அழைத்து வாருங்கள். இது எல்லோருக்குமான படம்

‘ஜெ பேபி’ படத்தை சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது. மக்கள் தொடர்பாளர் குணா
: நாயகனுக்கு இணையான இன்ட்ரோவில் ஊர்வசி அடுத்தடுத்து அவர் செய்யும் அட்டகாசங்கள் கடிதங்களை எடுத்து வைத்துக்கொள்வது, ஃப்யூஸ் கேரியரை பிடிங்கி வைப்பது, போலீஸ்காரரை கலாய்ப்பது, ‘நான் யார் தெரியுமா… ஜெயலலிதா ஃபிரெண்டு’ என ஊர்வசி பேசும் வசனங்கள் கவனம் பெறுகின்றன. ஊர்வசியின் செயல்களால் ஏற்படும் தொல்லைகளை தாங்க முடியாமல் அக்கம் பக்கத்தினர் குடும்பத்தினர் முறையிடுவது.

காவல்துறை வரை பிரச்சினை சென்ற நிலையில் கோபத்தில் அவரை தாக்கி திட்டி மகன் அட்டகத்தி தினேஷ் வெளியே தள்ளி விடுகிறார். இதனால் வீட்டை விட்டு வெளியேறும் ஊர்வசியை மீண்டும் அழைத்து வர வேண்டும் என காவல்துறை தரப்பில் சொல்லப்படுவது
தன் அம்மாவை தேடி இரு மகன்கள் அலைவதும், அதன் பரிதவிப்பும் என ஜே.பேபி படத்தின் கதை போகிறது

குடும்ப உறவுகளை மையப்படுத்திய கதையில் நகைச்சுவையை புகுத்தி இப்படத்தின் மூலம் இயக்குநராக சுரேஷ் மாரி அசத்தியிருக்கிறார் சென்சாரில் ‘யு’ சான்றிதழ் பெற்றிருக்கும் ஜே.பேபி படம் மூலம் சுரேஷ் மாரியையும், இயக்குநர் பா.ரஞ்சித்தும்
உச்சம் தொட்டுள்ளார்கள்

சமீபத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ப்ளூ ஸ்டார் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அவரின் தயாரிப்பில் அடுத்த சிறந்த படைப்பாக ஜே.பேபி வந்து உள்ளது
தரமான படைப்புகளை தந்து கொண்டு இருக்கும் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு
வாழ்த்துக்கள்

பிரிட்டோவின் இசை அம்மாவின் பாடல்கள் மனதை உருக்குகிறது

ஒளிப்பதிவாளர் வட சென்னையை அச்சு அசலாக காட்டி கல்கத்தாவையும் அதன் ஒப்பீடாக காட்டி இருக்கிறார் படகு, ரயில்வே, என ஒளிப்பதிவில் அதிக சிரமம் எடுத்து படமாக்கி இருக்கிறார் வாழ்த்துக்கள்

படத்தொகுப்பு கச்சிதமாக இருந்தது பாராட்டுக்கள்

கல்கத்தாவில் ஊர்வசியை கண்டுபிடித்துக் கொடுக்கும் மூர்த்தியின் கதாபாத்திரம் மனதை தொடுகிறது

மாறன் ,அட்டைக்கத்தி தினேஷ் ,இருவரும் கிளைமாக்ஸ் காட்சியில் சண்டை போட்டுக் கொள்வதும் மாறன் ,தனியாக புலம்பி என்னை ஏன் யாரும் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் என்று அழுது புலம்பும் அந்த காட்சி தினேஷ் அண்ணன் தானே இப்படி இருக்கறாயே என்று சொல்லும் அந்த காட்சி மனதை தொடுகிறது

ஊர்வசி படிக்க முடியாதவர்களுக்கு உதவுவது, கர்ப்பிணி பெண்களை கண்டால் முத்தமிட்டு கொஞ்சுவது ,என பாசம் மிகுந்த தாயாக மனதில் பச்சென்று ஒட்டிக் கொள்கிறார்

மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் இயல்பாக நடித்து தங்களுக்குரிய பங்கை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்

ஒரு நல்ல திரைப்படம் அதற்கான வரவேற்பை தானே பெற்றுக்கொள்ளும் அந்த வகையில் இந்த திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெரும் பெற வேண்டும் இப்படிப்பட்ட படங்கள் வெற்றி பெற்றால் கேரளாவில் வெளியாகி சக்கை போடு போடும் மஞ்சமல் பாய்ஸ் போன்ற படங்கள் தமிழகத்தில் உருவாகும் அதற்கு ரசிகர்கள் ரசனை மாற வேண்டும் இப்படம் அனைவரையும் மாற்றும்