‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ படத்தின் திரைவிமர்சனம்

இயக்குநர் பிரசாத் ராமர். இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படத்துக்கு. “தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது. அதற்காக, ஆபாசமான காட்சிகள் நிறைந்த படம் அல்ல . இந்த சமூகத்தில் இளைஞர்கள் மீதான பார்வை எப்படி இருக்கிறது, சமூகத்தை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள், என்பதை சொல்லும் வகையில் தான் இந்த படத்தின் கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், இதன் திரைக்கதை ஒரு ரோட் டிராவல் பாணியிலும் அமைந்துள்ளது

படத்தில் முத்தக்காட்சிகள் வைத்திருக்கிறார் இயக்குனர் எல்லை மீறாமல்..

மதுரையிலிருந்து செந்தூர் பாண்டி தன் கேர்ள் பிரண்ட் பார்ப்பதற்காக. கும்பகோணம் வழியாக மாயவரத்தை அடைகிறார் தன் நண்பருடன் அவர்கள் மாயவரத்தில் இருக்கும் அரசி, பிறந்த நாளுக்கு கிப்ட் வாங்கிக்கொண்டு புறப்படுகிறார்கள் வழி எங்கும் பேசிக்கொண்டு பைக்கில் பயணிக்கிறார்கள் நாயகன் ரவி இவருக்கு அந்த பெண்ணை எப்படியாவது அடைய வேண்டும் என்பது நாயகனின் லட்சியம் நண்பன் காந்தி பைக்கும் பணமும் கொடுத்து உதவுகிறான் இவர்கள் இருவரும் மாயவரம் சென்ற பிறகு அரசி ,போன் செய்து வீட்டுக்கு அழைக்கிறாள் அப்பா, அம்மா ,வீட்டில் இல்லை என்று இதனால் நாயகன் அவளை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று லட்சியத்தோடு வீட்டுக்கு போகிறான் கதவை திறந்தால் பாட்டி ,நிற்கிறார் அதிர்ச்சி அடையும் நாயகன் ,அரசியிடம் பேசி அவளை வெளியே கூட்டி செல்ல முற்படுகிறான் அப்பொழுது அரசி எப்படியாவது அவனுடன் பைக் சவாரி செய்ய வேண்டும் என்று விருப்பப்பட்டு பூம்புகார் வரை செல்கிறார்கள் இருவரும்.

பூம்புகார் சென்றதற்கு பின்னால் நடக்கும் விபரீதம் என்ன? பைக் ரிப்பேர்ஆகிறது அதுக்கு உதவி செய்யும் மாரி, என்ற இளைஞர் பெட்ரோலுக்கு பதிலாக டீசல் போடும் பெட்ரோல் பங்க் ஊழியர், இப்படி கதை பயணிக்கிறது கிளைமாக்ஸ் காட்சியில் இயக்குனர் ஒரு டுவிஸ்ட், வைத்திருக்கிறார் அது படத்திற்கு மிகவும் திருப்பு முனையாக அமைந்தது என்று சொல்லலாம் அரசியின்,அம்மா யார் நாயகனின் தங்கை என்ன செய்கிறார், நாயகன், இதிலிருந்து என்ன பாடம் கற்றுக் கொண்டார் என்பது படத்தின் கதை . நாயகன் நோக்கம் ஒன்றாக இருக்க, அந்த பெண்னின் எதிர்பார்ப்பு வேறாக இருக்கிறது. இறுதியில் இருவரது
எண்ணங்கள் ஒன்று சேர்ந்ததா? இல்லையா?

சமூகத்தின் புரிதல் எப்படி இருக்கிறது, என்பதை பற்றி தான் படம் பேசுகிறது.

இந்த படத்தில் , இது சரி, அது தவறு என்று அறிவுரையும் சொல்லவில்லை, எந்த ஒரு தீர்வையும் சொல்லவில்லை. இப்படிப்பட்ட விசயங்களை இளைஞர்கள் எப்படி பார்க்கிறார்கள், என்பதை பற்றி மட்டுமே பேசியிருக்கிறார் இயக்குனர்.
படம் முழுக்க லைவ் லொக்கேஷனில் படமாக்கப்பட்டு இருக்கிறது
ரோட் டிராவல் பூம்புகார் மாயவரம் பஸ் என்று வித்தியாசமான லொகேஷன் காட்டப்பட்டிருக்கிறது ஒளிப்பதிவு, படம் முழுக்க டிராவல் ஆகவே பயணத்திற்கிருக்கிறது. இசை ரசிக்க வைக்கிறது படத்தில் நான்கு கேரக்டர்கள் தான் நாயகன் ரவி, நாயகி அரசி, நண்பன் மாலிக் ,நண்பன் காந்தி, அரசியின் தோழி சோபி என இந்த கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு இரண்டு மணி நேரம் ஜாலியான மூடில் ஒரு டிவிஸ்ட் வைத்துக்கொண்டு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். இதில் நடித்த நடிகர்கள் அனைவருமே இயல்பாக எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்
இளைஞர்களும், இளம் பெண்ணும் நட்பாக பழக முடியுமா என்ற கேள்வி எழுகிறது

சி.வி.குமார் தயாரிப்பில் சித்தார்த் நடித்த ‘எனக்குள் ஒருவன்’ திரைப்படம் மூலமாக சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கியவர், இயக்குநர் பிரசாத் ராமர். ‘அருணகிரி பெருமாளே’ என்ற ஆன்மிக ஆவணப்படத்திற்காக அறியப்பட்ட பூர்வா புரொடக்ஷன்ஸ் என்ற தனது சொந்த பேனரில் ’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ படத்தைப் பிரபல பாடகர்,இசையமைப்பாளர் பிரதீப் குமார் தயாரித்துள்ளார்.வாழ்த்துக்கள்

. சாலையை மையமாகக் கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் நகர்கின்றது வேகமாக மாறிவரும் சமுதாயத்தில் இளம் தலைமுறையினர் படும் அவலத்தையும், அவர்கள் மீதான அணுகுமுறையையும் இந்தப் படத்தில் நச் என்று சொல்லும் படமாக வந்து உள்ளது .
இதன் படப்பிடிப்பு
மாயவரம் பூம்புகார் ஆகிய இடங்களில் 42 நாட்கள் எடுக்க பட்டுள்ளது. செந்தூர் பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாக, ப்ரீத்தி கரனும் இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்கள் தவித்து சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே.தாஸ், எம். அமுதாராணி, மினு வாலண்டினா மற்றும் பலர் நடித்துள்ளனர். அனைவர் நடிப்பு இயல்பான நடிப்பு.

இயக்குநர் பிரசாத் ராமர் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார். படத்திற்கு இசையமைத்து, தயாரித்து, பாடல்களையும் பிரதீப் குமார் எழுதியுள்ளார். உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். , அனைவரும் நன்றாக பணி புரிந்துள்ளார் கள். தமிழ் சினிமாவில் மாற்றத்திற்கான நேரம் . கேரளாவில் எளிமையான திரைக்கதையில், வெளிவந்து வெற்றி நடை போடும் மஞ்சு மால் பாய்ஸ், திரைப்படம் போல இந்த நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே படமும் அந்த பட்டியலில் இடம் பிடிக்கும் சினிமா ஃபார்முலாவை உடைத்து இருக்கிறது இப்படியும் கதை சொல்லலாம் என்ற புதுமையான பாணியில் இயக்குனர் படத்தை கொடுத்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள் அரசியாக நடித்த பிரீத்திகரன் அவர் பேசும் டயலாக் டெலிவரி, அவர் முகபாவமும், வெகுவாக ரசிகர்களை ரசிக்க வைக்கிறது.செந்தூர் பாண்டியன் அவரது கோணத்தில் அவருக்கு நியாயம் என்று நினைப்பது மற்றவர்களுக்கு அது தவறு என்று புரிவதை கிளைமாக்ஸ் காட்சியில் காட்டப்பட்டு ஒரு அருமையான திருப்பத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நற்சான்றிதழ் வாங்கும்