# இது ஒரு காதல் கதை. இளமையான படம் ரசிக்க வைக்கும் ஒரு தலை ராகத்தில் மற்றும் ஒரு காதல் படம்
# நாயகனின் அம்மா அப்பா பேசி ஒரு வருடம் ஆகிறது
# நாயகனுக்கு காதல் தோல்வி எப்படியாவது இந்த ஊரை விட்டு எஸ்கேப்பாக நினைப்பது
# அப்பொழுது நண்பன் ஹைதராபாத்தில் இருக்கிறான் அவனுடன் ரூம் சேர் கூப்பிடுகிறான்
# இந்த பக்கம் நாயகி ஐடி கம்பெனியில் ஜாயின் செய்கிறார் ஆதி என்ற ஹெச் ஆர்
என்ற வித்யாசமான கதாபாத்திரம் அறிமுகம்
#நாயகன் நாயகி இவர்கள் இருவரும் எப்படி சந்திக்கிறார்கள் இவர் கள் இருவரும் சந்தித்துக் கொள்ள ஒரு திருமணம் விழா என ஆரம்பமே அசத்தல் ரகம்
நாயகி . படம் முழுக்க இவருக்குத்தான் அதிக ஸ்கோப் , நாயகன், வில்லன் இருவரை விட இவருக்கே அதிக காட்சிகள்
₹ 5 கோடி பட்ஜெட்டில் உருவாகி 100 கோடியை கடந்து வசூல் செய்து கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை இமாலய சாதனை என்று சொல்லலாம்
# இப்படதை. . கிரீஷ் ஏ.டி இப்படத்தை இயக்கியுள்ளார். மமிதா பைஜு மற்றும் நஸ்லென் கே கஃபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஒரு நடிப்பு அருமை இருக்கிறது இவர்களுடன் ஷியாம் மோகன், மீனாக்ஷி ரவீந்திரன், மேத்யு தாமஸ் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளார்கள். அனைவரும் இயல்பாகவும் நகைச்சுவை காமெடி உடன் கலந்து படத்தை வெகுவாக ரசிக்க வைத்திருக்கிறார்கள் ஃபகத் ஃபாசில் இப்படத்தை தயாரித்துள்ளார்.
# முக்கிய கதாபாத்திரங்களின் இயல்பு கூச்ச சுபாவம் கொண்ட பெரியளவில் சாமர்த்தியங்களை வெளிப்படுத்தாதவர்களே இப்படத்தின் கதாபாத்திரங்கள். இவர்களுக்கு தெரியாமல் தங்களுடைய இயல்பில் இருந்து செய்யும் பல செயல்கள் நமக்கு நகைச்சுவையானதாக சிரிக்க வைக்கும் நாயகன் ஒவ்வொரு காட்சியிலும் கூச்ச சுபாவம் கொண்டு வெள்ளந்தியாக நடித்திருப்பது படத்திற்கு மிக பிளஸ் பாய்ண்டாக அமைந்திருக்கிறது அந்த கதாபாத்திரம் மிகவும் ரசிக்க வைக்கிறது
# அடிக்கடி தவறு செய்பவர்களாகவும் தங்களுடைய நண்பர்களால் கேலி செய்யப்படுபவர்களாக நமது நட்பு வட்டத்தில் ஓரமாக இருப்பவர்களையே தனது படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக மாற்றுகிறார் இயக்குநர் கிரீஷ்.
# அதே சமயம் நாயகி மிகவும் மெச்சூரிட்டியாக படித்த பெண்ணாக தன்னைவிட மெச்சூரிட்டியாக இருக்கும் ஆணை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று குறிக்கோளாக இருக்கிறார் அவருடைய கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது
பெண்ணியம் பேசும் கண்ணியமான கதாபாத்திரம் இப்படிப்பட்ட பெண் கதாபாத்திரங்களை இயக்குனர் கே. பாலச்சந்தர் படங்களில் பார்த்திருக்கிறோம்
கதை என்ன வாங்க பார்க்கலாம்
# நாயகன் கல்லூரியில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டில் சேலத்தில் ஒரு சுமாரான கல்லூரியில் தனது படிப்பை முடித்துச் செல்கிறான் சச்சின். நான்கு ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து வந்த பெண்ணிடம் ஒருவழியாக தைரியத்தை வரவழைத்து காதலை சொல்லி அவளால் நிராகரிக்கப்படுகிறான். எப்போதும் முட்டிக்கொண்டே இருக்கும் பெற்றோர்கள், சலிப்படைந்த தனது ஊரை விட்டு எப்படியாவது லண்டனுக்குச் சென்று தனது இந்த மிடில் கிளாஸ் வாழ்க்கையில் இருந்து விடுபட நினைக்கிறான். ஆனால் விதி அவனை விஸா கிடைக்காமல் தனது நண்பனுடன் கேட் பரீட்சைக்கு ஹைதராபாதில் கோர்ஸ் சேர வைக்கிறது. நாயகனின் அறிமுகம் அவர்கள் குடும்ப பின்னணி இயல்பாக இருக்கிறது ஆரம்பக் காட்சியிலேயே நம்மை ரசிக்க வைத்து ஹேப்பி மூடில் கொண்டு போகிறார் இயக்குனர்
கட் பண்ணினால்
மறுபக்கம் ஹைதராபாதில் பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார் ரீனு. புதிதான வேலை, நண்பர்கள், கை நிறைய சம்பளம் என வாழ்க்கையை புதிதாக தொடங்கும் ரீனுவுக்கு ஒரே ஆசைதான். நல்ல பொறுப்பான, செட்டில் ஆன ஒரு ஆணை திருமனம் செய்துகொண்டு 30 வயதிற்குள் குழைந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த
லட்சியத்தோடு இருக்கும் ரீனுவும் இலக்கற்று சுற்றும் சச்சினும் சந்தித்துக் கொள்கிறார்கள். பார்த்த மாத்திரத்தில் ரீனு மீது காதல் வயப்படுகிறான் சச்சின். இவர்கள் இருவரும் சேர்ந்தார்களா? இல்லை யா ?இந்த முறையும் ஒன் சைட் லவ்வராகவே இருந்தானா சச்சின்? என்பதே பிரேமலு படத்தின் கதை.
திரைக்கதையில் புதுமை இளமை ரசிக்க வைக்கிறது இயல்பான வசனம் மிக நெருக்கமாக இருக்கிறது நாம் தினந்தோறும் சந்திக்கும் கேரக்டர்களே படத்தில் வந்து போவது போல் இருப்பதால் நம் மனதுக்கு இந்த படம் மிக நெருக்கமாக அமைகிறது நாயகிக்கு தோழியாக வருபவரும் சரி நாயகனுக்கு தோழனாக வருபவரும் சரி படத்தின் கதைக்கு மிக முக்கியமாக அமைந்திருக்கிறார்கள்
# உலகமெங்கும் ஒரே மொழி அது கண்கள் பேசும் காதல் மொழி என்று கவிஞர் கூறியது போல உலகத்தின் எல்லா மொழிகளிலும் சொல்லப்பட்ட. . ஒன் சைட் லவ்வர்ஸூக்கு இருக்கும் ஏக்கம், எல்லாவற்றையும் கூடவே இருந்து சகித்துக் கொள்ளும் நண்பன், மிடில் கிளாஸ் வாழ்க்கை, காதலிக்கும் பெண்ணின் அலுவலகத்தில் கூட வேலை செய்யும் பாய் பெஸ்டி, என இதுவரை நாம் பார்த்த எல்லா எமோஷன்களும் இப்படத்தில் இருக்கின்றன. அவைகள் தான் ரசிக்க வைக்கிறது
#இயல்பாக கதை களம் ,கலகலவென சிரிப்பொலி நகைச்சுவையிலும் துணுக்குகளாக இல்லாமல் எதார்த்த வாழ்க்கையில் வெளிப்படும் அபத்தமான உணர்ச்சிகளை, தருணங்களையே நகைச்சுவையாக மாற்றியிருக்கிறார்கள். இடையிடையில் செல்வராகவன் , யுவன் ஷங்கர் ராஜா மீது இயக்குநருக்கு இருக்கும் ஆதர்சமும் வெளிப்படுவது தமிழ் ரசிகர்களை படத்துடன் இன்னும் ஒன்ற வைக்கிறது.
# நடிகர்கள் ஒவ்வொருவரும் கதையின் இயல்போடு ஒன்றி தங்களது கேரக்டருக்கு நியாயம் சேர்க்கிறார்கள். ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பப் பார்ப்பது சில இடங்களில் சலிப்பாக இருக்கும் காட்சிகளில் கூட சிரிப்பிற்கு குறைவிருக்கவில்லை. #)பின்னணி இசையும் பாடல்களும் நம்மை ரசிக்க வைக்கிறது .
#)இத்திரைப்படம் நகைச்சுவை கலந்த இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு நெருக்கமாக இருக்கிறது
:# விஷ்ணு விஜய்யின் இசை மனதை நெகிழ வைக்கிறது. பாடல்கள் பார்ப்பவர்களுக்கு இனிமையான உணர்வை தருவதுடன், அழகாக படமாக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா பொம்மாலு பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது.
#அஜ்மல் சாபு தனது ஒளிப்பதிவால் படத்தை காட்சிப்படுத்தியிருக்கிறார். இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை அவர் இயற்கையாகவும் கவர்ச்சியாகவும் படம் பிடித்து ள்ளார்
# ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் எடிட்டிங் நன்றாக உள்ளது.
பிரேமலு திரைப்படம்:
வேடிக்கையான காட்சிகள்
இளமைக் கால வசந்தம்
# யூத்ஃபுல் என்டர்டெயின்னர். கிரிஷ் AD ஒரு எளிமையான கதையுடன் வந்தாலும், பல பொழுதுபோக்கு மற்றும் நகைச்சுவை காட்சிகளை உள்ளடக்கி, நடிகர்கள் மற்றும் குழுவினரிடமிருந்து வேலை வாங்கி இருக்கிறார் திரைக்கதை மற்றும் இயக்கம் உயர்தரமானது. இந்த அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு, உருவாக்க பட்டஇந்தப் படத்தின் மூலம் தென்னிந்திய மொழிகளில் வெற்றி வாகை சூடி உள்ளது
# படத்தில் சிறப்பான அம்சங்கள் வசனங்கள் தான் ஒவ்வொரு காட்சிகளும் வசனங்கள் ரசிக்க வைக்கிறது ஆபாசம் இல்லாமல் “துணியை தூக்கி காட்டுற பார்” என் நண்பன் சொல்லும் பொழுது தியேட்டரே குலுங்கி குலுங்கி சிரிக்கிறது
# ஹெச் ஆர் ஆக வரும் ஆதி என்ற கேரக்டர் ஜே கே என்ற வார்த்தையை சொல்லி சொல்லி சமாளிப்பதும் நாயகி எரிச்சல் அடைவதும் ரசிக்க வைக்கும் காட்சிகள்
#நண்பனை வெறுப்பேற்ற நாயகி தன்னை காதலிப்பதாக கூறும் போது நண்பன் முகத்தை குளோபஸ் க்ளோசப்பில் காட்டுகிறார்கள் அப்படி ஒரு கடுப்பு
# நாயகியிடம் நாயகன் ஜோக் சொல்லும் போதெல்லாம் ஆதி எரிச்சல் படுவதும் அவர் முகபாவனை செல்வதும் சிரிக்க வைக்கிறது
# ஹைதராபாத்தை தெலுங்கு படங்கள் கூட இப்படி காட்டி இருப்பார்களா என்னும் சந்தேகம் அந்த அளவுக்கு வளைத்து வளைத்து ஹைதராபாத்தை அழகாக காட்டி இருக்கிறார்கள்
# தமிழ்நாட்டிலும் சென்னை ,சேலம், நெய்க்காரன்பட்டி, என்று நம்மூரை காட்டும் போதும் ரசிக்க வைக்கிறது
# நகைச்சுவை என்ற பெயரில் எதையும் திணிக்காமல் இயல்பாக கதை போகிற போக்கிலேயே காமெடி அள்ளித்தந்திருப்பது ரசிக்கவைக்கும் காட்சி
# பப்புக்கு செல்லும் பொழுது அங்கு பாடல் பாடிக் கொண்டிருக்கும் பெண்மணி பால் மணக்குது பழம் மணக்குது என்ற பாடலை இழுத்து பாட கடைசியில் நாயகனின் தோழன் நீ முதல் நிறுத்தறியா என்று சொல்லும் பொழுது தியேட்டரே குலுங்கி குலுங்கி சிரிக்கிறது
#ஒரு நல்ல படம் அதற்கான வாய்ப்பு தானே தேடிக் கொள்ளும் எல்லா மொழிகளிலும் எல்லா வயதினரும் ரசித்து சிரிக்கும்படி படத்தை இயக்குனர் சபாஷ் பெருகிறார் மலையாளத்திலும் தெலுங்கிலும் வெற்றிவாக சூடியப்படும் தமிழிலும் மிகப்பெரிய வெற்றிவாகை சூடும் மஞ்சிமேல்பாய்ஸ் போல இதுவும் தமிழில் வசூலை அள்ளிக் கொடுக்கும் என்பது சந்தேகம் இல்லை
