காடு வெட்டி : திரை விமர்சனம் 3/5

இயக்குனர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் ஆர் கே சுரேஷ், சுப்பிரமணிய சிவா, ஆடு களம் முருகதாஸ், JSK கோபி என பலர் நடித்திருக்கும் அதிரடி – குடும்ப திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரா போஸ், சோலை ஆறுமுகம் (இப்பட இயக்குனர்) இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் சாதிக் (வணக்கம் தமிழா) மற்றும் ஸ்ரீகாந்த் தேவா இணைந்து இசையமைத்துள்ளனர்.
‘காடுவெட்டி’ திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் புகழேந்தி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஜான் ஆப்ரஹாம் எடிட்டிங் செய்துள்ளார்

.குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைத்து ஒற்றுமையை குழைத்து அவர்களின் வீட்டுப் பெண்களை நாடக காதல் வலையில் சிக்க வைத்து சூறையாடும் சில சமூகத்தினரின் வெறிச்செயலை எதிர்த்து நிற்கும் நாயகனின் கதை.
.

# படத்தில் நகரத்தில் காதலை மக்கள் எவ்வாறு அணுகுகின்றனர், கிராமத்தில் எவ்வாறு அணுகின்றனர் என்பதை மையமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டுள்ளது. நகரத்தில் உள்ள மக்களுக்கு போதுமான கல்வி அறிவும் பொருளாதார மேம்பாடும் இருப்பதால் நகரத்தில் பெற்றோர்கள் காதலை ஏற்றுக்கொள்கின்றனர் எனக் கூறி நகரத்து காதல் கதையை முடிக்கின்றார்.

# ஆனால் கிராமத்து காதல் கதையில் காதலர்கள் எதிர்கொள்ளும் சிக்கல், காதலர்களின் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை விளக்க முயற்சிக்கின்றார். குறிப்பாக நகரத்து காதல் கதையில் பெற்றோர்கள் மட்டும் கலந்து பேசி தங்களது குழந்தைகளின் காதல் திருமணத்தில் முடிய பக்கபலமாக நிற்கின்றனர். ஆனால் கிராமத்து காதல் கதையில், காதலுக்கும் காதலர்களுக்கும் சம்பந்தமில்லாத ஊர்கார்களால் அந்த காதலும் காதல் செய்யும் பெண்ணின் குடும்பமும் எவ்வாறு சிரமங்களை எதிர்கொள்கின்றது என்பதை காட்டியிருக்கிறார் இயக்குனர்

#படத்தின் கதாநாயகனான சுரேஷ் தான் சார்ந்த சமூகத்தில் நடைபெறும் பிரச்னைகளை தீர்க்கும் நபராக வருகின்றார்.

₹ சுரேஷின் அறிமுக காட்சிகள் அதிரடியாக ஆரம்பித்த போது அங்கு உதவி செய்கிறார் குறிப்பாக காதல் திருமணம் செய்து அவதிப்படும் ஒரு பெண்ணை அழைத்து வருவதற்கான காரணமும், அவர் நடந்துகொள்வதைப் போல் வெளியில் காட்டிக் கொள்ளும் காரணமும் ’சபாஷ் இதுமட்டும் இல்லாமல் அவரது சமூகத்தை சார்ந்தவருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்தார் எனக் கூறி ஒரு காட்சி வருகின்றது.
அந்த காட்சி விஸ்வாசத்தின் உசங

#சாதிச் சங்கத் தலைவராக இருக்கும் ஆர்.கே. சுரேஷால் எப்படி அரசு வேலை வாங்கித் தரமுடியும் என்ற கேள்வி எல்லாம் கேட்க கூடாது
சென்சார் போர்ட் பல இடங்களில் வசனங்களை மீயூட் செய்தும் சில இடங்களில் வசனங்களை கட் செய்தும் உள்ளது.ஏன்இயக்குனருக்கு இவ்வளவு கொலை வெறி

# படத்தில் பாராட்டுக்குரிய விஷயங்கள் என்றால் அதில் இசைக்கு முதல் இடம் கொடுக்கலாம். பின்னணி இசையை பாராட்டலாம். அறிமுக இசையமைப்பாளர் சாதிக் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுடன் இணைந்து, அறிமுக படத்திலேயே பெயர் பெற்றுத்தரும் அளவிற்கு இரண்டு பாடல்களைக் கொடுத்துள்ளார்.
சுரேஷ்க்கு கோவமாக நடந்து வரும்போது சாமி புள்ள சாமி புள்ள என்று சிரி காந்த் தேவா சிறப்பான விஷயம் கொடுத்திருக்கிறார்

# புகழேந்தியின் ஒளிப்பதிவு படத்தில் இருக்கும் ப்ளஸ் பாய்ண்டுகளில் ஒன்று.
அந்த வாய்க்கால் ஒரம் காதல் காட்சி சிறப்பாக இருக்கிறது

# படத்தில் அரசியல் குறியீடுகள் சமகால அரசியலை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது. இது சமகால அரசியல் குறித்த இயக்குநரின் பார்வையை எடுத்துரைக்கின்றது.
க்ளைமேக்ஸ் காட்சிகள்,படு அபத்தமான காட்சிகள்
நம்ப முடியாத காட்சிகள் அப்படி ஒரு சாதி தலைவரை கொலை செய்ய முடியுமா கற்பனை வக்கிரம்

# ஒரு நகரத்து காதல் ஒரு கிராமத்து காதல் கிராமத்து காதலின் அப்பவே தன் சாதிசனம் ஊர் மரியாதை பஞ்சாயத்து இது எல்லாம் தாண்டி தன் மகன் நன்றாக வாழ வேண்டும் என்று இரவோடு இரவாக உயர் ஜாதிக்காய் பயனோடு தன் மகளை அனுப்பி வைக்கிறார் உருக்கமான அந்த காட்சி அதோடு கிளைமாக்ஸ் முடித்து இருந்தால் பொதுவாக எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி இருப்பார்கள் அதற்குப் பிறகு காடுவெட்டியை வெளியே கொண்டு வந்து ஒரு ஜாதி கட்சி தலைவரை அடித்து நொறுக்குவது இன்னொரு தெலுங்கு பேசும் ஜாதி கட்சி தலைவரை அடித்து நொறுக்குவதும் இது சினிமாவுக்கு வேண்டுமென்றால் நன்றாக இருக்கலாம் பொதுவான பார்வையாளர்களுக்கு ஒரு அச்சத்தையே ஏற்படுத்துகிறது இந்த போக்கு எதில் போய் முடியும் என்று
கேட்க தோன்றுகிறது

#.ஒ ரு கவிதை போல படம் அழகாக இருந்தது சொன்ன விதம் ரசிக்க வைத்தது கிளைமாக்ஸ் காட்சி மட்டும் சரி செய்து இருந்தால்…

#. கிராமத்து காதலர்கள் ஊரை விட்டு செல்வது போல் முடித்து இருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும்
[ரசித்த
காட்சிகள்

# ஜாதி பேதம் இல்லாமல் இன்றைய சமுதாயம் தலித் பெண்மணி கொடுத்த கோழி குழம்பு சாப்பாட்டை பகிர்ந்து கொள்ளும் காட்சி சிறப்பாக இருந்தது

# கிராமத்தில் ஒரு அப்பா தன் மகள் காதலித்து விட்டார் என்பதற்காக கொலை செய்யும் அளவுக்கு இந்த சமூகம் அவரை எப்படி வற்புறுத்துகிறது என்ற அந்த சூழ்நிலை உண்மையாக இருந்தது

# நீ இங்கிலீஷ் அம்மா நான் தங்கிலீஷுமா என்று அந்த பாடல் செம குத்தாட்டம் போட வைத்தது இளைஞர்களை

# காடுவெட்டி, அய்யா அவர்களுடன் எந்த அளவுக்கு இணக்கமாக இருந்திருக்கிறார் அவர் எப்படி மாவீரன் என்று மக்களால் போற்றப்பட்டார் என்று சொல்லும் அந்த காட்சிகள் சிறப்பு

# இயக்குனர் ஒவ்வொரு காட்சியும் உணர்ந்து கவனமாக படமாக்கி இருக்கிறார் காதல் பொதுவானது தான் ஆனால் அது சில குறிப்பிட்ட மக்களை நோக்கி இருக்கக் கூடாது பொதுவான காதல் என்று இருந்தால் நல்லது என்று சொல்லி இருக்கிறார்

படத்தின் சண்டைக் காட்சிகள் அதிரடியாக இருக்கிறது அதுவும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி அனல் பறக்கிறது

# ஆரம்பத்தில் நாயகி இல்லாதப்பட்ட ஏழைகளுக்கு உதவுவதற்கு மீதமான உணவுப் பொருட்கள் மற்றும் துணி பொருட்களை வாங்கி சேகரித்து எல்லோருக்கும் கொடுப்பது புது முயற்சி பாராட்ட வேண்டியவை

# படத்தில் நடித்த சுப்பிரமணிய சிவா பெஸ்ட் மார்க் வாங்குகிறார் ஆர் கே சுரேஷ், கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் தாட்சாயினியாக நடித்திருக்கும் நாயகியின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது நாயகன் நகரத்துக்கு பொருந்தி கிராமத்துக்கும் பொருந்தி இருக்கிறார் ஆடுகளம் முருகதாஸ், அந்த கதாபாத்திரமாக மாறி இருக்கிறார் மொத்தத்தில் இந்த காடுவெட்டி அவர் சார்ந்த சமூக இளைஞர்களை தட்டி எழுப்பும் மற்றவர்களை காயப்படுத்தும். அந்த கோழி குழம்பில் விஷம் செம டிவிஸ்ட்