அமீகோ கேரேஜ் விமர்சனம்

3/5

People Production House சார்பில் முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், NV Creations நாகராஜன் இணைந்து தயாரிக்க இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘அமீகோ கேரேஜ்’. அனைவரும் ரசித்து மகிழும் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தை Action Reaction நிறுவனம் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் தமிழகமெங்கும் இப்படத்தினை வெளியிடுகிறார்.

கேங்ஸ்டர் வாழ்வை சுற்றிய ஒரு இளைஞனின் சுவாரஸ்யமான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது அமீகோ கேரேஜ்.

இப்படத்தில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன், நாயகனாக
நடிக்க, GM சுந்தர், தசரதி, அதிரா ராஜ், ஶ்ரீக்கோ உதயா, முரளிதரன் சந்திரன், மதன் கோபால், சக்தி கோபால், முரளி கமல் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனைவரின் நடிப்பு நன்றாக இருக்கிறது

இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை முரளி ஶ்ரீனிவாசன் தயாரித்துள்ளார். ராமசந்திரன் பெருமாள், பிரியா கதிரவன், அஷ்வின் குமார் VG இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார்
பாடல்களும் பின்னணி இசையும நன்றாக இருக்கிறது

விஜய குமார் சோலைமுத்து ஒளிப்பதிவு செய்துள்ளார்
படத்தில் வரும் எல்லா காட்சிகளும் ஒளிப்பதிவு சிறப்பு

ரூபன் எடிட்டிங் செய்துள்ளார்.கச்சிதமான தொகுப்பு

கதைக்களம்

நாயகன் மகேந்திரன் பள்ளி பருவத்தில் இருந்து நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு ஜாலியாக இருக்கிறார். ஒரு நாள் ஆசிரியர் மகேந்திரனை அடித்து விடுகிறார்
அதே ஏரியாவில் கேரேஜ் வைத்துக் கொண்டு போதை பொருள் விற்று வரும் ஜி எம் சுந்தரிடம் சொல்லுகிறார் ஜி.எம் சுந்தர் அந்த ஆசிரியரையை தூக்கி வந்து அடிக்கிறார் அதிலிருந்து ஜி எம் சுந்தர் உடன் மகேந்திரனுக்கு பழக்கம் ஏற்படுகிறது அடிக்கடி அவரது கேரேஜ்க்கு வருகிறார் அதே ஊரில் பெரியதாதாவுக்கு அடையாளமாக இருக்கும் தாசரதி நரசிம்மன் மதுபோதையில் மகேந்திரன் பைக்கை எட்டி உதைக்கிறார் இதை பார்த்த மகேந்திரன் தாசரிதி நர்சிம்மணை அடித்து விடுகிறார் இதனால் கோபமடையும் தாசரி நரசிம்மன் மகேந்திரனை பழிவாங்க திட்டம் போடுகிறார் இறுதியில் தாசரி திநரசிம்மன் மகேந்திரனை பழிவாங்கினாரா தாசரதி நரசிம்மினடமிருந்து மகேந்திரன் தப்பித்தாரா என்பதை மீதி கதை
இதில் அப்பா அம்மா சென்டிமென்ட் நண்பர்கள் சென்டிமென்ட் காதல் மோதல், தாதா ,என எல்லாவற்றிலும் கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர்

நாயகன் மகேந்திரன் ஆக்ஷன்
சென்டிமென்ட் என அனைத்திலும் நன்றாக நடித்து இருக்கிறார்
நாயகியுடன் ரொமான்ஸ் செய்யும்போதும் அப்பா அம்மாவிடம் பணிந்து பேசும் போதும் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் போதும் தாசர்வதியுடன் மோதும் போதும் மகேந்திரன் நடிப்பு பளிச்சென்று இருக்கிறது விறுவிறுப்பாக இருக்கிறது

நாயகியாக நடித்திருக்கும் அதிிரா ராஜ் மற்றும் தீபா பாலு ஆகியோர்
அழகாய் இருக்கிறார்கள் நன்றாக நடித்திருக்கிறார்கள் இருவருக்கும் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது

கேரேஜ் ஓனராக வரும் ஜி எம் சுந்தர் ஜாலியாக நடித்திருக்கிறார் இவரது நடிப்பு படத்திற்கு மிக பெரிய பலம்
இயல்பாக நடித்திருக்கிறார் நாயகனுக்கு துணையாக இருக்கிறார் படத்தின் முடிவில் துரோகியாக மாறி கதையில் திருப்பத்தை ஏற்படுத்துகிறார்

வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் தாசரதி நரசிம்மன் இவரது உடல் அமைப்பு பார்க்கும் பார்வை பிளாஸ் ஆக இருக்கிறது
மகேந்திரனை பழிவாங்க வேண்டும் என்று துடிக்கும் துடிப்பு இந்த குரூரமான பார்வை சரியான வில்லத்தனம்

மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள படத்தை இயக்குனர் பிரசாந்த் நாகராஜன்
ரசித்து ருசித்து இயக்கி இருக்கிறார்
ஒரு வெற்றி படத்துக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக வழங்கி இருக்கிறார்

மகேந்திரன் பள்ளிப் பருவம் கல்லூரிபருவம் வாலிபர் என வித்தியாசம் காட்டி இருக்கிறார்
இருப்பது
படத்தின் சிறப்பு அம்சங்கள்

#ஒவ்வொரு மனிதனும் ஒரு முடிவு எடுக்கும் பொழுது அந்த முடிவு தவறாக போய்விட்டால் அதன் விளைவு என்னாகும் என்று கடைசியில் முடித்தவிதம் சிறப்பாக இருக்கிறது. பைக் கை வில்லன் உதைக்கும் பொழுது குடிகாரன் தானே என்று மகேந்திரன் ஒதுங்கிப் போய் இருந்தால் எப்படி இருந்திருக்கும் முத்துவை மகேந்திரன் கொலை செய்யும்போது கொலை செய்யாமல் விட்டிருந்தால் முடிவு என்ன ஆயிருக்கும் இப்படி ஒவ்வொன்றையும் நினைத்து பார்க்கும் இடம் இன்று இளைஞர்கள் உணர வேண்டிய கட்டம் விட்டுக்கொடுத்து பொறுமை யாக இருந்தால் இன்று சில பிரச்சினைகள் தவிர்க்கலாம் என்பதை அருமையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்

#ஒவ்வொரு அப்பா அம்மாவும் ,தங்கள் மகன் சின்ன தவறு செய்யும்பொழுதே அதை தட்டி கேட்டு திருத்த வேண்டியது அவசியம் என்பதை இப்படம் வலியுறுத்துகிறது

#எல்லா தவறுகளுக்கும் காரணம் போதை தான் அந்த போதைப் பழக்கம் இன்று நிறைய இளைஞர்களின் வாழ்க்கையில் சீரழிக்கிறது எனவே போதை இருக்கும் இடத்தில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது என்பதை இப்படம் சொல்கிறது

#பள்ளியில் ஆசிரியர் அடித்துவிட்டார் என்பதற்காக கஞ்சா விற்கும் ஒருவரிடம் போய் சென்று முறையிட்டால் அதன் பிறகு வாழ்க்கை என்னாகும் என்று உணர்த்தும் அந்த கட்டம் அருமை

#கேங்ஸ்டர் முத்து தனக்கு கீழே வேலை செய்யும் குரு சூது செய்து அவரை உசிப்பி விட்டு வீண் சிக்கலில் மாட்டி வைக்கும் அந்த வில்லத்தனம் ரசிக்க வைக்கிறது

#இயக்குனர் யாரிடமும் உதவியாளராக இல்லாமல் ஒரு குறும்படம் எடுத்து விட்டு நேராகப் படத்தை இயக்கி இருக்கிறார் இன்று இளைஞர்களுக்கு என்னென்ன அம்சங்கள் பிடிக்குமோ அது எல்லாம் படத்தில் வைத்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள் நிச்சயம் படம் ரசிக்கலாம் கேரேஜ் பலமாக இருக்கிறது