காணாமல் போகும் நண்பர்களும், பின்னணியில் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள நேற்று இந்த நேரம், விமர்சனம் பார்க்கலாம் வாங்க
கிளாப்-இன் ஃபில்மோடெயின்மென்ட் சார்பில் நவீன் குமார் தயாரிப்பில், சாய் ரோஷன் கே.ஆர். எழுதி, இயக்கி இருக்கும் திரில்லர் திரைப்படம் “நேற்று இந்த நேரம்”.
பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஹரிதா மற்றும் மோனிகா ரமேஷ் என இரண்டு பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை நித்தின் ஆதித்யா மற்றும் சாய் ரோஷன் கே.ஆர். இணைந்து எழுதியுள்ளனர
மர்மமான முறையில் காணாமல் போன நண்பர்களும், அதன் பின்னணியில் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்களும் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். கிரைம் திரில்லர் பாணியில் சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் படமாக்கி இருக்கிறார்கள்
கெவின் என் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷால் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கோவிந்த்.ந மேற்கொண்டுள்ளனர்.
நேற்று இந்த நேரம் படத்தின் இசை உரிமத்தை ஜீ மியூசிக் சவுத் வாங்கியுள்ளது. படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், அறிவு, ஆதித்யா ஆர்.கே., ரவி ஜி ஆகியோர் பாடியுள்ளனர்.
படத்தின் கதை களம்
ரித்விகா நிகில் இருவரும் காதலிக்கிறார்கள் மூன்று வருடங்களாக இந்த காதலை செலிபிரேட் செய்ய நண்பர்களுடன் ஊட்டியில் கொண்டாட திட்டமிடுகிறார்கள் நிகில் அங்கு வேண்டாம் சென்னையில் கொண்டாடலாம் என்கிறார் ஆனால் ரித்விகா ஊட்டி போக வேண்டும் என்று அடம் பிடித்து ஊட்டி போகிறார்கள்
அங்கு ரோஹித் ஸ்ரேயா நித்யா என ஆறு பேர் தங்கி இருக்கிறார்கள் ஒரு நாள் நிகில் காணாமல் போகிறார் அது போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறது அதை கண்டுபிடிப்பதற்காக ஒரு இன்ஸ்பெக்டரும் கான்ஸ்டபிளும் ஊட்டியில் அவர்கள் தங்கி இருந்த ரெஸ்டாரண்டுக்கு வந்து விசாரணை துவங்குகிறார்கள் அந்த விசாரணையில் நிகில், ரோகித், இருவருக்கும் நடந்த சண்டை
சிரேயா, நிகில், இருவருக்கும் இருந்த காதல் அவர்கள் படுக்கை அறையில் இருந்ததை நிகில் வீடியோவாக எடுத்துக் கொண்டு மிரட்டுவது ரோகித்தும் நிகிலும் சீட்டு விளையாடி பணத்தை இழப்பது ரித்விகா தன் காதலன் தன்னுடன் சேராமல் இருக்கிறான்
என்று தவிப்பது எல்லோரும் போதை பொருள் உட்கொள்வது தம் அடிப்பது குடிப்பது என்று இளைஞர்கள் செய்யக்கூடாத எல்லா வேலையும் செய்கிறார்கள் இன்ஸ்பெக்டர் ஒவ்வொன்றாக துருவித் துருவி அதை கண்டுபிடிக்கிறார் ஒவ்வொன்றாக முடிச்சு அவிழும் போது அவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது இடைவேளைக்குப் பிறகு விறுவிறுப்பாக இருக்கிறது நிகிலை கொலை செய்தது யார்?
ரோகித்தை கொலை செய்தது யார்? என்று தெரிய வரும் போது
திகில்
சீரியல் கில்லர் அல்லது ஆறு பேரில் ஒருவரா? என்ற பாணியில் துப்பு துலக்குவது சூப்பராக இருக்கிறது
கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பாராதது அருமையான விறுவிறுப்பான திரைக்கதை ரசிக்க வைக்கிறது
ரித்விகாக வரும் ஹரிதா நடிப்பு இயல்பாக இருக்கிறது அழகாக இருக்கிறார் அவரது காஸ்ட்யூம் அழகாய் இருக்கிறது அவர் கிரைம் நாவல் எழுதுகிறேன் என்று துப்பறியும் பாணியில் அவர் எடுக்கும் செயல் நடவடிக்கை எல்லாமே நன்றாக இருக்கிறது அவர் வரும் காட்சியில் அழகு அழகு
: இன்னொரு நாயகி மோனிகா ஸ்ரேயா பாத்திரத்தில் அழகாக வந்து அற்புதமாக நடித்திருக்கிறார் நாயகன் உடன் படுக்கையை பகிர்ந்து விட்டு வீடியோவாக எடுத்து மிரட்டும் பொழுது அவர் கண்ணீர் சிந்தும் காட்சிகள் இன்றைய பெண்களின் அலங்கோல நிலையை எடுத்துக்காட்டுகிறது
ஹாரிக் ஹாசன் வில்லனாக நடித்திருக்கிறார் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்திருக்கிறார் எதிர்காலம் சிறப்பாக இருக்கிறதுஒரு துப்பறியும் படத்துக்கு என்ன தேவையோ அதைக் கச்சிதமாக எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குனர்
படத்தின் வசனங்கள் சிறப்பாக இருக்கிறது
: 10 கேரக்டர்களை சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது
கிளாப்-இன் ஃபில்மோடெயின்மென்ட் சார்பில் நவீன் குமார் தயாரித்துள்ளார்
அவருக்கு வாழ்த்துக்கள்
சாய் ரோஷன் கே.ஆர். எழுதி, இயக்கி இருக்கிறார் அவருக்கு பாராட்டுக்கள்
பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார்.நடிப்பு சிறப்பு
ஹரிதா, மோனிகா ரமேஷ் நாயகிகளாக நடித்துள்ளனர்.
இருவரும் அழகு
கதை, திரைக்கதை, வசனத்தை நித்தின் ஆதித்யா, சாய் ரோஷன் கே.ஆர். இணைந்து எழுதியுள்ளனர்.
புத்திசாலித்தனமான திரைக்கதை ரசிக்க வைக்கிறது
கெவின் என் இசையமைத்துள்ளார்
பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்
இந்தப்படத்துக்கு விஷால் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஊட்டி அழகை அள்ளி வந்து உள்ளார்
பாடல்களை, ஜி.வி.பிரகாஷ், அறிவு, ஆதித்யா ஆர்.கே., ரவிஜி பாடியுள்ளனர்
எல்லாம் இனிமை
“இது மர்டர் மிஸ்டரிதிரைப்படம். சென்னையில் இருந்து ஊட்டிக்கு ஏழு நண்பர்கள் செல்கிறார்கள். அங்கு ஒருவர் திடீரென காணாமல் போகிறார்.
அங்கு ஏற்கெனவே சீரியல் கில்லர் ஒருவரும் இருக்கிறார். காணாமல்போனவர் என்ன ஆனார்? அதற்குக் காரணமானவர்கள் யார் என்பதுதான் கதை. ஏழு கேரக்டருக்குமே ‘நெகடிவ் ஷேட்’ இருக்கும் என்பதால், ஒவ்வொருவர் மீதும் சந்தேகம் வருவது போலஇதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 10 கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் கதை.
தமிழ் சினிமாவில் இதுவரை சொல்ல படாத கதை களம் இளைஞர்கள் நிச்சயம் ரசிப்பார்கள்
சென்னை மற்றும் ஊட்டியில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார் கள்
லோகேஷன் அருமையாக இருக்கிறது மொத்தத்தில் இந்த படம் விறுவிறுப்பான சஸ்பென்ஸ் கிரைம் த்ரில்லர் விரும்பு ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்
