வெப்பம் குளிர் மழை படத்தின் விமர்சனம்

தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ படத்தில் உதவி இயக்குநராகவும், ‘மகளிர் மட்டும்’ மற்றும் ‘சுழல்’ வெப் சீரிஸில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய பாஸ்கல் வேதமுத்து இயக்கி உள்ள”வெப்பம்குளிர் மழை”இன்னொரு பதினாறு வயதினிலே .

படத்தின் தயாரிப்பாளரான திரவ், கதையில் முதன்மையான கதாபாத்திரமான பெத்தபெருமாளாக நடித்திருக்கிறார். திரவ், இதற்கு முன்பு நடிகர் கிஷோர் குமார் மற்றும் சுபத்ராவை வைத்து இசை சார்ந்த ’மெல்லிசை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அது விரைவில் வெளிவர இருக்கிறது
அந்த அனுபவம் தானோ அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார் தயாரிப்பாளருக்கும் வாழ்த்துக்கள்

. ‘அசுரன்’, ‘பொம்மை நாயகி’ படத்தில் நடித்த இஸ்மத் பானு இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்
பாண்டி என்ற கிராமத்து அச்சு அசலான வெள்ளந்தியான வெகுளி தனமான கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார்

எம்.எஸ்.பாஸ்கர், ‘திரி அய்யா’ என்ற ஜாலியான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
கிராமத்து பெருசாக கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் அவர் வரும் இடம் எல்லாம் கலகலப்பாக இருக்கிறது

கோபமான மாமியார் பாத்திரத்தை ரமா ஏற்று நடித்துள்ளார்.
குழந்தை பெற்றுக் கொடுக்காத மருமகளை வறுத்தெடுக்கும் கிராமத்து மாமியார் வேஷத்துக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்

படத்தின் கதை தற்போதைய சூழலில் சொல்லப்பட வேண்டிய ஒன்று கிராமத்தில் குழந்தையின்மை அந்த காலத்தில் எப்படி பார்க்கப்பட்டது அந்த பெண் 5 வருடமாக குழந்தை பெற்றுக் கொடுக்கா விட்டால் அவளை மலடிஎன மாமியார் பேசுவதும் தாலி கட்டிய கணவன் சலித்துக் கொள்வது என அந்த பெண்ணுக்கு வாழ்க்கையே நரகமாகிவிடும் அப்படி நரகமாகி போன ஒரு பெண்ணின் உள்ள குமுரல்தான் இந்த வெப்பம் குளிர் மழை

நாயகி இஸ்மத் பானு.
நடிப்பு உச்சம் தொட்ட நடிப்பு
இந்தப் படத்தில் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கணவன் – மனைவி இடையே இருக்கும் நெருக்கமான காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார்

நெருக்கம் என்பது, தம்பதிக்குள் இருக்கும் அந்நியோன்யம் எதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகதான் முதலிலேயே அதை சொல்லிவேலை வாங்கி இருக்கிறார் கள் போல….
அதன்படி, மனைவி கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்!”

இசையமைப்பாளர் சங்கர், “இவர் குற்றம் கடிதல் படத்துக்கு இசை அமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் ரசிக்க வைக்கிறது

இப்படத்தின் நட்சத்திரங்களோடு சேர்ந்து கிராமத்து மக்கள் பலரும் நடித்திருக்கிறார்களாம். குறிப்பாக இயக்குநரின் அம்மா, சகோதரி என்று அவரது உறவினர்கள் சிலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள் அனைவரும் நடிப்பு இயல்பாகவும் நன்றாகவும் இருக்கிறது
இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து இந்தப் படம் மூலம் இயக்குநராக ஒரு வெற்றி படத்துக்கு தேவையான கதையை எழுதி தந்து இருக்கிறார்

இயக்குனர் பாரதிராஜாவுக்கு பிறகு கிராமத்து வானில் படத்தை இயல்பாக காட்டி ரசிக்க வைத்திருக்கிறார் ஒப்பாரி பாடலாகட்டும் பண்டிகை காட்சியாகட்டும் எம் எஸ் பாஸ்கரின் வசனம் ஆகட்டும் நடிகை ரமா மாமியார் ஏச்சி பேச்சாக்கட்டும் எல்லாமே இயல்பாக இருக்கிறது இயக்குனருக்கு வாழ்த்துக்கள்

படத்தின் தயாரிப்பாளரான திரவ், பெத்தபெருமாளாக நடித்திருக்கிறார். திரவ் தெனாவட்டான நடிப்புஊர் மக்களிடம் அம்பலத்தார் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது என்று சொல்லும் பொழுது அந்த ஊரில் இருக்கும் காந்தி என்பவர் ஒரு புழு பூச்சி பெற்றுக் கொடுக்க முடியவில்லை நீ எல்லாம் ஊருக்கு நாட்டாமை யா என்று கேட்டதும் கேலிக்கு ஆளாகி மனைவியிடம் என் பிள்ளை உன் வயிற்றில் வளர்கிறான் என்று இரவில் தனியாக பேசும் போதும் அம்மாவிடம் மனைவியை விட்டுக் கொடுக்காமல் பேசும்போது அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார் சண்டை காட்சிகளுடன் இயல்பாக நடித்திருக்கிறார் மனைவியை மதுரை ஆஸ்பத்திரி கொண்டு சென்று பரிசோதிப்பது அதன் பின் அந்த குழந்தை தன்னுடைய இல்லை என்று அந்த குழந்தை வெறுப்பது பின்பு பாசம் காட்டுவது மாட்டு கொட்டாயில் உட்கார்ந்து அழுவது என எல்லா வகையிலும் நாயகனாக உயர்ந்து நிற்கிறார் இந்த பெத்த பெருமாள்

திரவ் என்ற நடிகனை தெரியவில்லை பெத்த பெருமாள் ஆக வாழ்ந்திருக்கிறார்
அந்த அளவுக்கு இயக்குனர் வேலை வாங்கி இருக்கிறார் இவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்

இஸ்மத் பானு இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அவர் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார்
தன் கணவனுக்கு குழந்தை பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்று வருத்தப்படுவதும் மாமியாரிடம் ஆஸ்பத்திரிக்கு சென்று ரிசல்ட் பார்த்துவிட்டு நான் மலடியா மலடியா என்று பாத்திரங்களை உடைப்பதாகட்டும் அம்மாவிடம் பேசும் அந்த இயல்பான காட்சிகள் ஆகட்டும் கிளைமாக்ஸ் கட்சியில் கணவனுடன் நெருக்கமாக இருக்கும் அந்த காட்சியாகட்டும் எம் எஸ் பாஸ்கருக்கு முதுகு தேய்த்து விடும் காட்சி ஆகட்டும் எல்லாமே பாண்டி சிறப்பான நடிப்பு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர், ‘திரி அய்யா’ என்ற ஜாலியான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளார். கிராமத்து பெரியவராக குசும்பு பேசும் மனிதராக ஆரம்ப காட்சியில் மடிக்கல் தூக்கி வாங்கி வரச் சொல்லி அந்த சிறுவனை ஊரெல்லாம் அலைய செய்து கேளிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்கி அவர் பார்த்து ரசிப்பது மடிக்கல் தூக்கி என்றால் என்னவென்று புரிந்து சிரிப்பது எம் எஸ் பாஸ்கருக்கு
அற்புதமான வருடம் வெளுத்து வாங்கி இருக்கிறார் கோபமான மாமியார் பாத்திரத்தை ரமா ஏற்று நடித்துள்ளார். அசல் கிராமத்து மாமியாராக கத்துவது புலம்புவது இந்த வீட்டுக்கு ஒரு பேரப்பிள்ளை வேண்டுமென்று அழுவது மகனிடம் சிடுசிடு என நடந்து கொள்வது மருமகளிடம் எடுத்தெறிந்து பேசுவது தன் மகனை காந்தி அடித்துவிட்டார் என்று புறப்படுவது
வீட்டுக்கு போவது வரும் வழியில் கருவேப்பிலை பிய்த்துக் கொண்டு திட்டு வாங்கிக் கொண்டு வருவது என்று ரமா இந்த படத்தில் அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார் பொட்டமாவாக வந்து தன் பொட்டு பற்றி பெருமையாக பேசும் போது தன் கணவர் இறந்த பிறகு அந்த பொட்டு தான் எனக்கு எல்லாம் என்று சொல்லி மருமகளிடம் தன் மகன் திட்டியதற்காக வருத்தப்பட வேண்டாம் சரியாய் போகும் என ஆறுதல் செல்லும் இடம் அற்புதம்

தொழில்நுட்ப குழு:

இசையமைப்பாளர்: ஷங்கர் இசையில் இன்னும் ஒரு இளையராஜா என்று சொல்லலாம் கிராமத்து பாடலுக்கு அற்புதமாக இசையமைத்திருக்கிறார்

எடிட்டர்: ரங்க ராஜன் கச்சிதமாக படத்தை செதுக்கியிருக்கிறார் இரண்டு மணி நேரம் என்றாலும் எந்த இடத்திலுமே படம் விறுவிறு புரியாமல் அனுப்ப தட்டாமல் கொண்டு சென்றிருப்பதில் பங்கு அசாத்தியமானது திரவ்,
ஒளிப்பதிவாளர் ஒளிப்பதிவு அருமை நாயகன் வீட்டு கட்டில் அறையும் கவிதை பேசுகிறது பாண்டியன் தாய் வீடு கோயில் காட்சிகள் சண்டை காட்சிகள் மதுரை ஆஸ்பத்திரி என ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்:

பிருத்வி ராஜேந்திரன்,
ஒலி வடிவமைப்பாளர்: ஒலி வடிவமைப்பு கச்சிதமாக இருக்கிறது சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள்

சண்டைக்காட்சிகளை ஸ்டன்னர் சாம், அமைத்திருக்கிறார் கிராமத்து எதார்த்தமான சண்டை காட்சி சிலம்பு சண்டை காட்சி ஆகட்டும் பஞ்சாயத்து சண்டை காட்சி ஆகட்டும் காந்தியின் ஆட்கள் நாயகனை தாக்க வரும்போது அந்த சண்டை காட்சி ஆகட்டும் விறுவிறுப்பாக இருக்கிறது

கலை இயக்குநராக பாலச்சந்தர், பணி புரிந்திருக்கிறார் நாயகனின் வீடு மாட்டு தொழுவும் நாயகியின் அம்மா வீடு கோயில் செட் சந்தை கடை எம் எஸ் பாஸ்கரின் வீடு என எல்லா இடத்திலுமே அவர் கைவண்ணம் அற்புதமாக இருக்கிறது

ஆடைவடிவமைப்பை கீர்த்தனா, வடிவமைத்திருக்கிறார் இயல்பான கதைக்களத்துக்கு தேவையான காஸ்ஷ்டுமர் கண்ணை உடுத்தாமல் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது

பாடல் வரிகளை: திரவ், எழுதியுள்ளார் பாடல் வரிகள் அற்புதம் ரசிக்க வைக்கிறது

டிஐ: ஸ்ரீகாந்த் ரகு படத்தில் கலர் கரெக்ஷன் அருமையாக இருக்கிறது பணிபுரிந்தவருக்கு வாழ்த்துக்கள்

ரசிக்க வைத்த வசனங்கள்& காட்சிகள்

இயக்குனர் இந்த கதை : 2014 நடந்த உண்மை சம்பவம் மையமாக வைத்து எடுத்து உள்ளார்

ரமா மேக்கப் அதிகமாகிருந்தாலும்
பொட்டம்மா
பேசும் வசனம் கிராமத்தில் உள்ள மாமியார் பேசுவது போல் இருந்தது

சந்தோஷமாக இருந்தா தான் குழந்தை
: உயிரணு உண்டாகும் என்று ஒரு விரிவான விளக்கம் இதில் உள்ளது

ஐபிஎப் ஊசி போட்டு குழந்தை உருவாகும் என்பதை
கிராமத்தில் அறியாமல் இருக்கும் மக்கள் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற கோணத்தில் இயக்குனர் கதை சொல்லி இருப்பது ஆச்சரியமூட்டுகிறது:

ஆணும் பெண்ணும் சந்தோஷமாக இருந்தால் மூன்றாவது உயிரினம் தோன்றும்
என்று அந்த கிளைமாக்ஸ் வசனம் கைதட்டல் பெருகிறது

பெத்த பெருமாள் பாண்டி என்ற இரண்டு கேரக்டர்கள் படம் முழுவதும் நம் மனதுக்கு நெருக்கமாகிவிட்டார்கள்
கணவன் மனைவியாக விட்டுக் கொடுக்காத பாசம் குழந்தை இல்லாத தவிப்பு ஊரார் முன் தலைகுனிவு அதற்கு எடுக்கும் தீர்வு என அருமையான நடிப்பை இந்த இரண்டு கதாபாத்திரத்தின் முன் இயக்குனர் வடிவமைத்து இருக்கிறார்

தண்ணீரில்
குழந்தையை தள்ளி விட்டுவிட்டு குற்ற உணர்வில் பெத்த பெருமாள் ஓடி வந்து குழந்தையை காப்பாற்றும் போது பாண்டி என் குழந்தையை தொடாதே என்று சொல்லும் அந்த காட்சி உணர்வு பூர்வமானது

இடைவேளைக்கு முன் அம்மா இறந்த பிறகு அழாமல் இருக்கும் பாண்டி கணவனும் தன்னை விட்டுப் போகிறேன் என்று சொல்லும் பொழுது எல்லாம் போகிறதே என்ற கதறி அழும் அந்த காட்சி அற்புதமான கைத்தட்டல் வாங்கும் இடம்

காந்தி கேரக்டரில்
வில்லனாக வருபவர் வெளுத்து வாங்கி இருக்கிறார்

நாயகன் நண்பர் கருப்பு
நடிப்பு நன்றாக நடித்திருக்கிறார்

மழை வருவது போல் உயிர் உருவாகும் ஆண்மை வெப்பம் பெண்மை குளிர் என்ற அந்த விளக்கம் அருமை

மொத்தத்தில் இந்த வெப்பம் குளிர் மழை படம் இன்னொரு பாரதிராஜா இயக்கத்தில் படம் பார்த்த உணர்வைத் தருகிறது எஜமான் படத்தில் சாயல் இருந்தாலும் கூட அதிலே ஸ்டார் வேல்யூ அதிகமாக இருந்தது இந்த படத்தில் எதார்த்தம் அதிகமா இருக்கிறது இதில் நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்து ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள

 :