மைனா சாட்டை போன்ற தரமான சமூக அக்கரையுள்ள மிக உன்னதமான திரைப்படங்களை எடுத்த ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் & சசிகலா புரொடக்சன்ஸ் அவர்களின் தயாரிப்பில் படைப்பாக “கா” திரைப்படம் வெளி வந்துள்ளது.
இதில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் காட்டுக்குள் சென்று பறவைகள், விலங்குகளை புகைப்படம் எடுக்கும் புகைப்பட கலைஞராக முதன் முறையாக ஆக்சன் அவதாரம் எடுத்திருக்கிறார்.
அவரின் கடுமையான உழைப்பு படத்தில் தெரிகிறது ஒவ்வொரு காட்சியிலும் சிரமப்பட்டு காட்டுக்குள் நடத்தி இருக்கிறார் ஆண்ட்ரியாவை தவிர இந்த கதாபாத்திரத்தில் யாரையும் நினைத்துப் பார்க்க முடியாது அந்த அளவுக்கு அவருடைய நடிப்பு சிறப்பாக இருந்தது ஆக்சன் காட்சிகளில் ரோப் கட்டி அற்புதமாக நடித்திருக்கிறார்
விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்த சலீம் கவுஸ் வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார்.
மனசன் என்னமா டயலாக் பேசுகிறார்
நடிப்பில் மிரட்டுகிறார் அவர் வரும் காட்சிகள் சூப்பர் சூப்பர்
இவர்களுடன் சின்னத்திரை புகழ் கமலேஷ், காற்றுக்கென்ன வேலி புகழ் அக்ஷிதா, சூப்பர் டீலக்ஸ் பட புகழ் நவீன், கும்கி பட புகழ் மூணார் சுப்பிரமணியன் ஆகியோருடன் அர்ஜுன் சிங் என்கிற புதுமுக நடிகரும் நடித்துள்ளனர்.
அனைவரும் சிரமப்பட்டு காட்டுக்குள் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
முழுக்க முழுக்க காட்டின் பின்னணியில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாஞ்சில் இயக்கியுள்ளார்.
இயக்குனர் இப்படத்தை ஒரு ஹாலிவுட் தரத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார் அவரை பாராட்டலாம்
கத்தால கண்ணாலே பாடல் புகழ் சுந்தர் சி பாபு இசை அமைத்துள்ளார்
படத்தில் பின்னணி காட்சிகள் ஹாலிவுட் தரம்
அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்
அடடா என்ன பிரமாண்டம் ஒவ்வொரு காட்சிகளும் காட்டின் அத்தனைய பிரமாண்டங்களையும்
ஒளிப்பதிவாளர் அள்ளிக் கொண்டு வந்துள்ளார்
எலிசா படத்தொகுப்பை செய்துள்ளார் கச்சிதமான படத் தொகுப்பு பாராட்ட வேண்டிய படத்தொகுப்பு
. மேலும் சேது அவர்களின் சிறப்பு சப்தமும், தரணி அவர்களின் மிரட்டல் ஒலி கலவையும் இப்படத்தின் சிறப்பம்சமாக பேசப்படும். படம் பார்ப்பவர்களை ஒரு அடர்ந்த காட்டுக்குள் சென்று வந்த திகில் அனுபவத்தை நிச்சயமாக கொடுக்கும். மேலும் ஷாலோம் ஸ்டுடியோஸ் தங்களது ஏழவது படைப்பாக ஸ்ரீகாந்த், தினேஷ் மாஸ்டர் நடிப்பில் “சம்பவம்” என்கிற திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது.
இப்படத்தில் நாயகி ஆண்ட்ரியா
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘கா’ என்ற திரைப்படத்தின் டிரைலர் இணையதளங்களில் வெளியாகி வரவேற்பு கிடைத்தது
‘கா’ என்றால் காடு என்று அர்த்தம் உள்ள இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா வைல்ட்லைஃப் போட்டோகிராபராக நடித்துள்ளார். அடர்ந்த காட்டில் அவர் போட்டோக்கள் எடுக்கும் போது ஏற்படும் அசம்பாவித சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை
ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் சலீம் கெளஸ் வில்லனாக நடித்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த ’வேட்டைக்காரன்’ விஜயகாந்த் நடித்த ’சின்ன கவுண்டர்’ உள்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘எமன் வந்து என்கிட்டே எமலோகத்திற்கு மரணம் வேண்டும் என்று கேட்கும்போது நான் என்ன செய்ய முடியும் என்ற வசனத்தில் இருந்தே இவரது கொடூரமான கேரக்டர் தெரிய வருகிறது.
சினிமாவில் பாடல், நடிப்பு இரண்டிலும் அசத்தி வரும் ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், இயக்குநர் நாஞ்சில் இயக்கும் ‘கா’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியா காட்டுக்குள் சென்று பறவைகள், விலங்குகளைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக் கலைஞராக ஆக்ஷன் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆக்ஷன் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது இப்படம்
முன்னொரு காலத்தில் நடந்த சம்பவத்திற்கு படிப்பினையாக ஃபாரஸ்ட் ஆபிஸர் சலீம் கவுஸ் தன் உயிரை மாய்த்துக் கொள்கிறார் அவர் யார்? ஆன்டிரியா யார்? இந்த காட்டுக்குள் இவ்வளவு கலாபாரம் எல்லாவற்றையும் இந்த படம் அவ்வளவு சுவராசிமாக சொல்லி இருக்கிறது ஹாலிவுட் படங்களில் பார்த்த திருப்தி நமக்கு கிடைத்திருக்கிறது தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என எல்லா மொழிகளிலும் இந்த படம் வெற்றிவாகை சூடும் அதிக வசனம் இல்லை எமோஷனல் காட்சி இல்லை ஆண்ட்ரியா நடிப்பில் வில்லன்கள் நடிப்பில் செம மிரட்டலாக இருக்கிறது இந்த படம் கமர்சியல் ஆகவும் இந்த படம் வெற்றி பெற்றிருக்கிறது எல்லோரும் ரசிக்கலாம் ஆண்ட்ரியாவுக்கு என்று ஒரு கூட்டம் இருக்கிறது சலீம் கவுசிக் என்று ஒரு கூட்டம் இருக்கிறது அவர்களுக்கு எல்லோருக்குமே இந்த படம் நிச்சயம் பிடிக்கும்
