இடி மின்னல் காதல் படத்தின் விமர்சனம்

அறிமுக இயக்குநர் பாலாஜி மாதவன் இயக்கத்தில், பாவகி எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஜெயச்சந்தர் பின்னாம்னேனி, பாலாஜி மாதவன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘இடி மின்னல் காதல்’. இதில் ‘பிக் பாஸ்’ புகழ் சிபி நாயகனாக நடிக்க, பவ்யா த்ரிகா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் யாஸ்மின் பொன்னப்பா, ஜெகன், ராதாரவி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான எமோஷனல் டிராமாவாக உருவாகியுள்ளது இப்படம்
, “இடி மின்னல் காதல் பெயரிலேயே மிக பெரிய அர்த்தம் இருக்கிறது
பாலாஜி, பாலசுப்ரமணியம் இருவரும் சேர்ந்து திட்டமிட்டு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார்கள் நடிகர் சிபி மிக சிறப்பாக நடித்திருக்கிறார்

யாஸ்மின் மிக அழகாக நடித்துள்ளார். ஜெகன் நன்றாக நடித்துள்ளார் ஜெயச்சந்தர் ஒளிப்பதிவு அருமை மழையில் கார் வரும் காட்சிகள் காதல் காட்சிகள் சிறப்பு

இசை சாம் சி. எஸ் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையும் பாடல்களும் ரசிக்க வைக்கிறது

டி பாலசுப்ரமணியன் கலை இயக்கத்தை கவனிக்க, அந்த கேரேஜ்செட்டும் அபிஷேக் வீடு பாலியல் தொழிலாளிகள் ஹவுசிங் யூனிட் எல்லாமே கச்சிதமாக இருக்கிறது

படத்தொகுப்பு பணிகளை அந்தோணி கையாண்டிருக்கிறார். படம் எந்த இடத்திலும் லேக் ஆகாமல் விறுவிருப்பாக போகிறது கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க என்ன நடக்கும் என்ற ஆவலை தூண்டி இருக்கிறது படத்தின் படத்தொகுப்பு

நாயகன் சிபி யின் ஆக்சன் அவதார தோற்றம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
சிபி சந்திரன், ‘வஞ்சகர் உலகம்’ எனும் படத்தின் மூலம் கதையின் நாயகர்களில் ஒருவராக அறிமுகமானவர் என்பதும், விஜயின் ‘மாஸ்டர்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, அஜித்தின் ‘துணிவு’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர் என்பதும், இப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
சிறப்பான எதிர்காலம் அவருக்கு இருக்கிறது.

அப்பாவை தேடும் சிறுவன் அபிஷேக்க்கு அவருக்கு ஆதரவு கொடுக்கும் அஞ்சலியாக யாஸ்மின் பொன்னப்பா அபிஷேக்கை கடத்தும் கொடூர வில்லனாக கயல் படத்தில் நடித்தவர் அபிஷேக்கை காப்பாற்ற துடிக்கும் நல்ல போலீஸ் அதிகாரியாக கோவிந்தசாமி என்ற வேடத்தில் பாலாஜி சக்திவேல் ஆபத்திலிருந்து சிறுவன் அபிஷேக்கை காப்பாற்ற நினைக்கும் பவ்யதரிகா நாயகன் சிபி இப்படி எல்லோரும் ஒற்றை மைய புள்ளியாக சிறுவன் அபிஷேக்கை குறி வைத்து படம் நகர்கிறது

மெக்கானிக் செட் வைத்திருக்கும் காமெடி நடிகர் ஜெகன் இவரும் நாயகனுக்கு உதவுவதிலேயே கதை செல்கிறது

கதை களம்.

: நவம்பர் 7 அன்று ஒரு இரவில் அபிஷேக் அப்பா கார் மோதி மரணம் அடைகிறார்
அது கொலையா? தற்கொலையா? ஏன் அந்த கொலை நடந்தது? அதன் பிறகு அப்பாவை இழந்து நிற்கும் சிறுவன் அபிஷேக் நிலை என்ன? விலைமாதுவாக வரும் அஞ்சலி யாஸ்மின் பொன்னப்பா அந்த சிறுவனை காப்பாற்றுவதற்கு எடுத்த நடவடிக்கைகள் என்ன?
ராதாரவி யிடம் காப்பகத்தில் ஒப்படைக்க நினைக்கிறார் பாலாஜி சக்திவேல் அவருக்கு நடந்த பிரச்சனைகள் என்ன? இது தான் கதை களம்

அருண்பாண்டியன் வரும் காட்சிகள் காட்டும் கொடூரம்

சிபி அழகாக இருக்கிறார் நன்றாக நடித்திருக்கிறார் கடைசி காட்சியில் குழந்தையை காப்பாற்ற பொங்கி எழுகிறார் நியாயத்திற்காக தன் உயிரையே கொடுக்கத் துணிகிறார் ஒரு வாரத்தில் அமெரிக்க செல்லவிருக்கும் சிபியின் வாழ்க்கையில் நடக்கும் அந்த விபரீத விளையாட்டு தான் கதை கதை
நாயகி அவருக்கு பக்கபலமாக இருந்து அவரை காப்பாற்றினாரா? இல்லையா? நண்பன் ஜெகன் அவருக்கு உதவி செய்தாரா? இல்லையா? இதுதான் படத்தின் மையக்கதை

: இயக்குனர் பாலாஜி மாதவன் ஒரு அற்புதமான படத்தை கொடுத்திருக்கிறார் ரசிகர்களுக்கு கமர்சியலாக இருக்க வேண்டும் எமோஷனலாக இருக்க வேண்டும் படம் பார்ப்பவர்களுக்கு ஒரு படிப்பினை ஏற்படுத்த வேண்டும் என்று எல்லா களத்திலும் புகுந்து விளையாடி படத்தை சிறப்பாக கொடுத்திருக்கிறார் ஒரு வெற்றி படமாக முதல் படத்திலேயே தலை நிமிர்ந்து நிற்கிறார் படத்திற்காக எடுக்கப்பட்ட லொகேஷன் மேக்கிங் காட்சிகள் கதை வசனம் ஒவ்வொன்றும் ரசிக்க வைக்கிறது

அபிஷேக் அப்பா குடியால் கடன் தொல்லை ஏற்பட்டு அவர்கள் குடும்பமே சீரழிவதை தத்துவமாக காட்டுகிறார் ஒரு நல்ல படத்தை கொடுத்ததற்காக இயக்குனரை எவ்வளவு வேண்டுமெல்லாம் பாராட்டலாம்
கடைசி காட்சியில் விலை மாதுவாக இருக்கும் அஞ்சலி மருத்துவ செக்கப்புக்கு சென்று விட்டு வெளியே வரும் போது ஒரு பேப்பரை வீசுகிறார் அந்த பேப்பரில் இருக்கும் எழுத்துக்கள் படத்தின் மிகப்பெரிய டிவிஸ்ட் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள் அப்படி ஒரு அற்புதமான காட்சி

கிளைமாக்ஸ் காட்சியில் நாயகன் சிபி அருள்பாண்டியனிடம் அடி வாங்கி கீழே விழுந்து கிடக்கும் போதும் அதற்குப் பிறகு எழுந்து வில்லனை துவம்சம் செய்யும் காட்சி சிறப்பாக இருக்கிறது திரையரங்கில் கைதட்டல் ஒரு ரொமாண்டிக் ஹீரோ ஆக்ஷன் செய்ய வந்து விட்டார் என்று வில்லன் கிண்டல் செய்யும் போது அடி வாங்கிக் கொண்டு சிங்கம் போல் சண்டை போடும் காட்சி சிறப்பாக இருந்தது மொத்தத்தில் இடி மின்னல் காதல் வெற்றி படமாக வந்திருக்கிறது மனிதநேயத்தை உணர்த்துகிறது குடியால் குடும்பம் சீரழிவதை உணர்த்துகிறது
குற்ற உணர்வில் தவிக்கும் காதலன் காதலியை பற்றி சொல்கிறது விலை மாதுவாக இருக்கும் பெண்களின் நிலை கடைசியில் என்னவாகும் என்பதை சொல்கிறது அருமையான படைப்பு பாராட்ட வேண்டிய படம் வாழ்த்துக்கள்