ஒயிட் ரோஸ் படத்தின் திரைவிமர்சனம்

(உளவியல், கிரைம் திரில்லர்) ரேட்டிங் 3/5 5

கணவனை இழந்த கயல் ஆனந்திக்கும் சைக்கோ வில்லன் ஆர்கே சுரேஷுக்கும் நடக்கும் ஒரு மகா யுத்தம் ஒயிட் ரோஸ்

: பூம்பாரை முருகன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கும் திரில்லர் படம் ’ஒயிட் ரோஸ்’

. இதில் நடிகர் ஆர்.கே. சுரேஷ் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் வில்லனாக மிரட்டி இருக்கிறார்
அவருடைய நடிப்பு எக்ஸ்ட்னாரி யாக அமைந்துள்ளது

விஜித், கயல் ஆனந்தியின் ஜோடியாக நடித்துள்ளார்
அஷ்ரப் என்ற கதாபாத்திரத்தில் ஆரம்பக் காட்சிகளில் அசத்தலாக வருகிறார் மனைவி மகள் இருவரிடம் கொஞ்சும் போதும் சமாதானம் செய்து கெஞ்சும் போதும் அழகாக நடித்திருக்கிறார்

இவர்களுடன் புதுமுகம் ரூசோ ஸ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்

இப்படத்தில் காவல் கட்டுபாட்டு மையம் முக்கிய பங்கு வகுக்கிறது. அது தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதற்காக, பல லட்ச ரூபாய் செலவில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு படமாக்கி இருக்கிறார்கள்
அந்த காவல் கட்டுப்பாட்டு மையம் படத்தில் ஒரு பத்திரமாக வருகிறது பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு அந்த காவல் கட்டுப்பாட்டு மையம் எப்படி தொடர்பு கொண்டு உதவுவது என்பது தெளிவாக படமாக்கபட்டிருக்கிறது செம டீட்டியல்

இப்படத்தின் மூலமாக சுசிகணேசனின் உதவியாளர் ராஜசேகர் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்
முதல் படத்திலேயே ஸ்கோர் செய்துள்ளார் ஒரு கிரைம் திரில்லர் படம் எப்படி இருக்க வேண்டும் எப்படி ரசிகர்களை சீட்டில் உட்கார்ந்து நகத்தை கடித்துக் கொண்டு அடுத்து என்ன நடக்குமோ என்று ஆவலாக பார்க்க வேண்டுமோ அந்த அளவுக்கு திரை கதையை செதுக்கி இருக்கிறார்

. இளையாராஜா ஒளிப்பதிவை கவனிக்கிறார்.
ஆர் கே சுரேஷ் வீட்டை காட்டும் போதும் கிளைமாக்ஸில் சுடுகாட்டில் அந்த சண்டை காட்சி ஆரம்ப பாடல் காட்சியும் ஒளிப்பதிவில் செம மிரட்டல்

கவிப்பேரரசு வைரமுத்து வரிகளுக்கு ’மெட்ரோ’ படப்புகழ் ஜோகன் செவனேஷ் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்

சுதர்ஷன் எம். குமார் பிண்ணனி இசை அமைக்கிறார்.
பின்னணி இசை செம மிரட்டலாக இருக்கிறது

டி.என். கபிலன் கலையை கவனிக்கிறார்
திகில் அரங்க அமைப்புகள் படத்திற்கு கை கொடுத்திருக்கிறது

இந்த படம் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி, சைக்கோ திரில்லர் பாணியில் விறுவிறுப்பான திரைக்கதையாக ‘ஒயிட் ரோஸ்’ உருவாக்கி உள்ளார் இயக்குனர்

நடிகை ‘கயல்’ ஆனந்தி தனது எளிமையான, இயல்பான, பக்கத்து வீட்டுப் பெண் போல நடிப்பு மூலம் மில்லியன் இதயங்களைக் கவர்ந்துள்ளார்
இந்த படத்திலும் அவ்வளவு அனுதாபங்களை அள்ளிக் கொள்கிறார் அழகான கயல் ஆனந்திக்கு இந்த படம் மூலம் ரசிகர்கள் அதிகம் சேர்வார்கள்

படத்தின் மையக்கதை

“ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் விலங்குகள் வாழ்கின்றன , அது நம்மைச் சுற்றியுள்ள உயிரினங்களை விட ஆபத்தானது என்றும் பலர் கூறுவதை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். இந்தப் படம், ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சாதாரணப் பெண், இப்படிப்பட்ட மனநோயாளியால் பிரச்சனை பற்றியது, நம்மை இறுதிவரை திருப்பங்களுடன் விளிம்பில் உட்கார வைக்கிறது கதை

. மற்ற தொழில்நுட்பக் குழுவினர்

கோபிகிருஷ்ணா (எடிட்டிங்), கவிப்பேரரசு வைரமுத்து (பாடல் வரிகள்), டிஎன் கபிலன் (கலை), ‘பீனிக்ஸ்’ பிரபு & ‘ராம்போ’ விமல் . சண்டைக்காட்சிகள்), லீலாவதி (நடன அமைப்பு), ஏ. சுபிகா (ஆடை வடிவமைப்பு), லக்ஷ்மி நாராயணன் ஏஎஸ் (ஒலி வடிவமைப்பு & கலவை), ஹோகஸ் போகஸ் (VFX), எஸ். மோகன் (ஸ்டில்ஸ்), சுரேஷ் சந்திரா-நாசர் டி’ஒன் (PRO),
ஜோ ஸ்டுடியோஸ் (பப்ளிசிட்டி டிசைன்), பி தண்டபாணி (நிர்வாக மேலாளர்), மற்றும் சேதுராமன் (வரித் தயாரிப்பாளர்.

படத்தின் கதைக்களம் என்ன?

மெடிக்கல் கல்லூரியில் படித்த திலீப் ,என்ற சைக்கோ கொலைகாரன் பெண்களை கடத்தி கொலை செய்து மகிழ்ச்சி அடைகிறான்

அதேசமயம் கயல் ஆனந்தியும் ,அவரது கணவர் மகளுடன், பிறந்தநாள் கொண்டாடிவிட்டு வரும்போது, போலீஸ் என்கவுண்டரில் கயல் ஆனந்தியின் கணவர் சுட்டு கொல்லப்படுகிறார்

கணவனை இழந்த கயல் ஆனந்தி வறுமை காரணமாக வாழ்க்கை இழக்க நேரிடுகிறது
இதனால் கயல் ஆனந்திக்கு கடன் தொல்லை ஏற்படுகிறது வீட்டு வாடகை கூட கட்ட முடியாமல் குழந்தைக்கு சரியான சாப்பாடு கூட போட முடியாமல் தவிக்கிறார். அவருடன் தங்கி இருக்கும் தோழி கொடுத்த ஐடியா படி கயல் ஆனந்தி ,கால் கேர்ள் ஆக மாறுகிறார்

அங்கு நடக்கும் விபரீதம் பெண்களை கொல்லத் துடிக்கும் சைக்கோ கொலைகாரன் ஆர். கே .சுரேஷ் கையில் கயல் ஆனந்தி சிக்குகிறார்

அதன் பிறகு என்ன நடந்தது?

ஆர் கே சுரேஷ் இடம் இருந்து கயல் ஆனந்தி தப்பினாரா?

கடன்காரர்கள் கடத்திக் கொண்டு போன தன் குழந்தையை மீட்டாரா? கயல் ஆனந்தி

ஆர்கே சுரேஷை காவல்துறை அதிகாரிகள் பொறி வைத்து பிடித்தார்களா?

தவறுதலாக சுட்டுக் கொண்ற கயல் ஆனந்தி யின்கணவர் கயல் ஆனந்திக்கு போலீஸ் செய்த உதவி என்ன,?

இதைத்தான் இந்த படம் சொல்கிறது படம் இரண்டு மணி நேரம் திகில், சஸ்பென்ஸ், சைக்கோ வில்லன் மிரட்டல் எனப்படம் ஜெட் வேகத்தில் பறக்கிறது

கயல் ஆனந்தியின் நடிப்பும் ஆர் கே சுரேஷின் வில்லத்தனமும் படத்தை இணைந்தே மிரட்டுகிறது
இந்த படத்தின் ஹைலைட்……

முதல் காட்சியிலேயே ஆர் கே சுரேஷ் ஒரு பெண்ணை கொலை செய்து கொடூரமாக மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்.
திகில்.. திகில்.. திகில்

அடுத்து கயல் ஆனந்தியும் அவரது கணவரும் குழந்தையும் சந்தோஷமாக பர்த்டே கொண்டாடிவிட்டு வெளியே வரும் போது என்கவுண்டர் ஆனந்தி கணவர் அஷ்ரப் சுட்டுக் கொல்லப்படுவது படம் பார்ப்பவர்களுக்கும் அதிர்ச்சி!

கால் கேர்ள் பெண்ணாக இருந்தால் என்னென்ன விபரீதங்களை சந்திக்க வேண்டும் என்று இந்த படம் தெளிவாக எடுத்துச் சொல்கிறது !

குடும்பத் தலைவன் இறந்துவிட்டால் அந்த குடும்பம் என்ன நிலைமைக்கு ஆளாகும் பொருளாதாரம் சீரழியும் அந்த குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு எத்தகைய விபரீதம் ஏற்படும் என்பதையும் இந்த படம் சொல்கிறது.

காவல்துறை அதிகாரிகளாக நடித்திருக்கும் லயா, மற்றும் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

காவல்துறை மனிதநேயத்தோடு நடந்து கொண்டிருப்பது ஆறுதலாக இருக்கிறது.

கயல் ஆனந்தி எப்படியாவது தப்பி விட மாட்டாரா ?என ஏங்க வைக்கும் திரைக்கதை அதுதான் இந்த படத்தின் வெற்றி!

இயக்குனர் ராஜசேகர் ஒரு நல்ல கதையை தேர்வு செய்து விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து இந்த படத்தை கொடுத்திருக்கிறார் அவர் உழைப்பு வீண் போகாது வெள்ளை ரோஜா என்றால் விதவை பெண்ணா? அல்லது வேறு பொருளா? என்பது இயக்குனர் சொன்னால் தான் தெரியும்

அடுத்து என்ன? அடுத்து என்ன ?என்று கேட்கும் அளவுக்கு ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக இருக்கிறது.

பார்ட் 2வருமா இயக்குனர் அவர்களே?