பொள்ளாச்சியில் நடந்த பாலியல் தமிழ்நாட்டையே உலுக்கியது அந்த கதையை தான் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் நேசம் முரளி
அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைத்ததா? பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியும் உரிய நிவாரணங்களும் கிடைத்தனவா ? என்கிற கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது .
இந்த படம் அந்த வன்கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்று இயக்குனர் நேசம் முரளி அறிமுகம் செய்த பொழுது , ஐயய்யோ, இதையெல்லாம் படமாக எடுக்க போகிறார்களா? என்று யோசிக்க வைத்தது.
ஆனால், கற்பு பூமியில் சில கருப்பு ஆடுகள் என்கிற தலைப்பில் முழு படமாக பார்த்தபோது, வக்கிரமான காட்சிகள் எதுவுமே இல்லாமல் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கதற்காக வகையில் இந்த படத்தை எடுத்திருக்கிறார்.
எந்த இடத்திலும் ஆபாசம் இல்லாமல் இருப்பது ஒரு ஆறுதல்
குறிப்பாக, ஒரு ஐஏஎஸ் படிக்கும் மாணவன் கதாபாத்திரத்தை வைத்து தவறு செய்தவர்களை இறுதியில் காவல் துறை தண்டிப்பதாக காட்சிப்படுத்திருப்பது பாராட்டத்தக்க திரைக்கதை.
அந்த ஐஏஎஸ் மாணவன் சிவனேசன் காவல்துறை அதிகாரியி விசாலாட்சி என்ற காவல்துறை அதிகாரியிடம் சிக்கி சின்னா பின்னாவாவது தனி கதை இடைவேளைக்குப் பிறகு அதுதான் கதையாக இருக்கிறது பொள்ளாச்சி பாலியல் சம்பந்தப்பட்ட கதையும் சிவனேசன் கதையும் ஒன்றாக இணைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் வெல்டன்
ஒரு சில மாணவிகள் பெல்ட்டில் அடி வாங்கி ஆடைகளைகளையும் காட்சிகள் மீடியாவில் வந்த நிலையில், அதே காட்சியை துளி ஆபாசம் இன்றி கிளைமாக்ஸ் காட்சியில் வைத்து ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் நேசம் முரளி.
பெண் குழந்தைகளை கவனமாக வளர்க்க வேண்டும் என்கிற அறிவுரையை மட்டும் வணங்காமல், ஐஏஎஸ் படிக்கும் சிவ நேசன் மூலம் ஆண் குழந்தைகளை இப்படி பொறுப்பாக வளர்க்க வேண்டும் என்கிற கருத்தையும் சேர்த்தே விதைத்திருக்கிறது இந்தப் படம்.
பட ஆக்கத்தில் குறைகள் இருந்தாலும், காவல்துறை நீதித்துறை ஆகியவற்றை அரசியல் செல்வாக்கினால் எப்படி அதிகார வர்க்கத்தினர் தங்கள் இஷ்டத்திற்கு வளைக்கிறார்கள் என்பதையும் தவறு செய்தவளை காப்பாற்ற சமூகத்தின் பெயரில் பாதிக்கப்பட்டது தனது சமூகப் பெண்கள் என்றாலும் அவர்களிடம் சமரசம் செய்யும் விதமாக பேசும் கொடுமையையும் காட்டிய விதத்தில் இந்த படம் நிச்சயம் பாராட்டத்தக்கதே!
படத்தின் ப்ளஸ்
ஐஏஎஸ் படிக்கும் சிவனேசன் போலீஸ் அதிகாரியை அடிப்பது பொதுமக்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது தவறு செய்தால் போலீசையே அடிக்கலாம் என்ற புதிய கருத்தை சொல்லி இருக்கிறார்
ஆளுங்கட்ச்சியாக அதன் எம்எல்ஏவாக இருந்தால் அவர்கள் சம்பந்தப்பட்ட புதல்வர்கள் எந்த பெண்ணை வேண்டுமானால் தொடலாம் சீரழிக்கலாம் என்று இருப்பதை மாற்ற வேண்டும் என்று இந்த படம் சொல்கிறது
கஞ்சா கருப்பு படம் முழுக்க போலீசாக சட்டையை கழட்டிக்கொண்டு பனியனோடு வருவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல
ஆரம்பத்தில் வையாபுரி வரும் காட்சிகள் எதற்காக இயக்குனர் வைத்தார் என்று புரியவில்லை
எந்த கல்லூரியில் புகை பிடிக்கும் மாணவர்களை தொடர்ந்து சென்று அறிவுரை வழங்கு என்று சொல்கிறார்கள் என்று புரியவில்லை
கிளைமாக்ஸ் காட்சி யையும் சிவ நேசனையும் ஒப்பிட்டு போலீஸ் அதிகாரி விசாலாட்சி செய்யும் பித்தலாட்டம் இன்றைய போலீஸ் அதிகாரிகளின் முகமூடியை கிழிக்கிறது
துணை நடிகையாக தேர்வு செய்யப்பட்ட நடிகைகளைஇன்னும் கொஞ்சம் கவனமாக இயக்குனர் தேர்வு செய்திருக்கலாம்
பொள்ளாச்சி சம்பவத்தில் மாணவர்கள்தான் தவறு செய்தார்கள் என்று எல்லா மீடியாக்களும் கதறியது இதில் கராத்தே ராஜாவை வைத்து எப்படி படம் எடுத்தார் என்று தெரியவில்லை அவர் மாணவரா?
சில பிளஸ் சில மைனஸ் இருந்தாலும் இந்த சமூகத்திற்கு தேவையான கருத்தை சொல்லி இருக்கிறார் நேசம் முரளி அவர் சென்சார் அதிகாரிகளிடம் சிக்கி சின்னாபின்னமாகி ஆகி மூன்று தலைப்புகளை மாற்றி இந்த படத்தை கொடுத்திருக்கிறார் இப்படிப்பட்ட சமூக புரட்சிகளை அவர் தொடர்ந்து படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார் அதனால் இவர் வெற்றி பெற வேண்டும் அப்போது தான் நல்ல கருத்து உள்ள மெசேஜ் உள்ள படங்கள் வெளிவரும்
