நன்றாக தூங்க வேண்டும் என்று நினைக்கும் நாயகன். குறட்டை விட்டு தூங்கும் நாயகி, இருவரும் இணைந்து திருமண பந்தத்தில் ஈடுபட்டு வாழ்ந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் இது தான் கதை ..
டியர் படம் மூலம்
இயக்குனர் வெற்றி பெற்று இருக்கிறார்
படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்….
ஜி.வி.பிரகாஷ் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கிறார். இவர் தூங்கும் போது சின்ன சத்தம் கேட்டால் கூட எழுந்து விடுவார். இவருக்கு பெரிய சேனலில் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு முயற்சி செய்து வருகிறார். இவரது அண்ணன் காளி வெங்கட் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.
நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் குன்னூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவர் தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது. இதனால் பல திருமண வரன்கள் நின்று போகிறது.ஜீ வி யிடம் இந்த விஷயம் சொல்லாமல் இவருக்கும் ஜி.வி.பிரகாஷுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் குறட்டையால் பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் ஜி.வி.பிரகாஷுக்கு வேலை போகும் அளவிற்கு பிரச்சனை ஏற்படுகிறது
அதன் பிறகு என்ன நடந்தது….
.ஐஸ்வர்யா ராஜேஷ் இயல்பாக நடித்திருக்கிறார் கணவன் மனைவி இருவருமே அன்பு இருக்கிறது ஆனால்
குறட்டை யால்
ஐஸ்வர்யா ராஜேஷிடம் ஜீ வீ விவாகரத்து கேட்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் விவாகரத்து தர மறுக்கிறார்.இறுதியில் ஜி.வி.பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷிடம் இருந்து விவாகரத்து பெற்றாரா? இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
இதில் ரோகிணி, தலைவாசல் விஜய், இவர்கள் பிரிந்து வாழ்கிறார்கள் இவர்கள் இருவரும் இணைந்து வாழ்ந்தார் களா? இல்லை யா? என்பதும் மையகதை
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் வழக்கமான நடிப்பை கொடுத்து இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் உருக வைத்து விடுகிறார்
நியூஸ் ரீடராக வந்து இளமை ததும்ப அழகாக காட்சி தருகிறார்
நாயகியாக நடித்து இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், நடிப்பில் வித்தியாசம் காண்பித்து இருப்பது சிறப்பு. கணவருக்காக ஏங்குவது, தன் பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்வது என நடிப்பில் பளிச்சிடுகிறார். கணவன் தன்னோடு சேர்ந்து விட மாட்டானா என்று ஏங்கும் போதும் டைவர்ஸ் வேண்டாம் என்று கெஞ்சும் போதும் குறட்டை சத்தம் வருவதால் இன்று நான் தூங்காமல் இருக்கிறேன் என்று ஜிவி பிரகாசிடம் கூறும் போதும் அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார் அழகான நாயகி அருமையான நடிப்பு ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் நடிப்பில் முதலிடம் பெறுகிறார்.
நடிப்பு நன்றாக இருக்கிறது
காளி வெங்கட் நடிப்பு படத்திற்கு பலம். தந்தை குடும்பத்தில் கடன் ஏற்படுத்திவிட்டு ஓடிப் போகிறார் பெரிய மகனான இவர் மீது அந்த சுமை விழுகிறது தம்பியை காப்பாற்றி, அந்த குடும்பத்தை காப்பாற்றி ஒரு நல்ல அண்ணனாக நடித்திருக்கிறார் அவர் கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறது
அவரது மனைவியாக வரும் பிளாக் ஷீப் நந்தினி கவனிக்க வைத்து இருக்கிறார். அவர் வரும் காட்சிகள் அவ்வளவு குடும்பப்பாங்காக இருக்கிறது கணவனிடம் அதிர்ந்து பேசாமல் சொன்ன வேலை தான் செய்து கொண்டு ஜீவி பிரகாசுக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ், ரோகிணிக்கும், பாலமாக இருந்து கொண்டு தான் எழுதிய சிறுகதையை கணவர் படித்து பாராட்ட மாட்டாரா? என்று ஏங்கும் நந்தினியின் நடிப்பு அருமை
ரோகிணி, ஜிவி பிரகாஷின் அழகான அம்மா தன் மக்கள் இருவரும் சண்டை போட்டுக் கொள்ளும் போது கலங்குவது, தன் கணவர் தன்னை வந்து பார்க்கும்போது காளி வெங்கட் அதை கண்டிக்கும் பொழுது ரோகிணி பொங்கி எழுந்து தன் கணவனுக்காக பரிந்து பேசும் இடம் சிறப்பாக இருக்கிறது
அதேபோல ஜிவி பிரகாஷ் குடித்து குட்டிச்சுவராய் கிடக்கிறான் என்று வருந்தும் ஒரு தாயின் நடிப்பு நன்றாக இருக்கிறது
தலைவாசல் விஜய், கடன் சுமையால் ஓடிப்போன ஒரு கணவனின் தவிப்பை ஒரு தந்தையின் நடிப்பை நன்றாக செய்து இருக்கிறார்
இளவரசு, கீதா கைலாசம் இருவரும் அன்னியோன்யமிக்க தம்பதிகளாக வருகிறார்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் தன் தாய் தந்தையின் அன்பை பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு இருவரும் நடிப்பு அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள் வெல்டன்..
எல்லோரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
வாழ்த்துக்கள் குறட்டை சத்தத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன். படம் ஆரம்பத்திலேயே கதைக்குள் சென்றுவிட இயக்குனர் எந்த ஒரு காட்சியும் பிசிறு தட்டாமல் கதைக்குள்ளே பயணித்திருப்பது அவருக்கு நல்ல இயக்குனர் என்ற பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது
குன்னூரில் இருக்கும் அந்த குழுமையும் சென்னையில் இருக்கும் அந்த வெப்பமும் இரண்டும் ஒன்று சேர்ந்தால் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரிவு என்று சொல்ல வைக்கிறது
ஒரு குடும்பப்பாங்கான படத்தை எல்லோரும் ரசிக்கும் வண்ணம் ஆபாசமில்லாமல் அனைவரும் பார்க்கும் வண்ணம் கொடுத்ததற்காக இயக்குனரை பாராட்டலாம். கணவன் மனைவி இருவரும் இடையே வரும் பிரச்சனை அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை சொல்ல முயற்சி செய்துவெற்றி பெற்றுள்ளார். இசை ஜி.வி.பிரகாஷ் இசையில் அத்தனை பாடல்களும் கேட்கும் படி உள்ளது. நடிப்பில் கவனம் செலுத்தி இசையிலும் கவனம் செலுத்தி பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார் ஜீ வீ. பின்னணி இசையில் ஸ்கோர் செய்து இருக்கிறார். ஒளிப்பதிவு ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவு ரசிக்கும் படி உள்ளது. ஊட்டியின் அழகை அழகாக படம் பிடித்து இருக்கிறார்.”,
படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது காஸ்டியூம் டிசைனர் அழகான வண்ண வண்ண உடைகளை தந்து கண்களுக்கு விருந்தளித்து இருக்கிறார் லைவ் சவுண்ட் இந்த படத்திற்கு மிக கச்சிதமாக பொருந்தியிருக்கிறது இடுக்கி சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுப்பாக இருக்கிறது
நாயகன் – நாயகி தங்களின் வாழ்க்கை தொடக்கத்திலேயே குறட்டை காரணமாக பாதிக்கப்படுகின்றனர். தூக்கத்தில் நாயகி எழுப்பும் குறட்டை சத்தத்தால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அதற்கான தீர்வை இவர்கள் எப்படி அறிகின்றனர், என்பதே இப்படத்தின் மையக்கதை… அதை எந்த இடத்திலும் பிசகாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் கதைக்களம் வேறு எங்கும் நகர வில்லை திரைக்கதை அதை சுற்றி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது கவனமாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர்
மொத்தத்தில் இந்த டியர் அன்பு, பாசத்துடன் கணவன் மனைவி, இருந்தால் வேற எதுவும் தவறாக தெரியாது
மனைவி படித்தவராக, இருக்கிறார் பண்புள்ளவராக இருக்கிறார்
குறட்டை விடும் சத்தம் கணவனுக்கு தாலாட்டாக கேட்க வேண்டும் இதற்காகவெல்லாம் கோர்ட்டுக்கு சென்று டிவோர்ஸ் கேட்பது நியாயம் இல்லை என்று புரிய வைக்கிறது இன்னொரு கதை ரோகிணி யும், தலைவாசல் விஜயும் முன்கோபியாக இருக்கும் தலைவாசல் விஜய் எடுப்பதற்கெல்லாம் மனைவியை கோபப்பட்டு கத்தி சன்டை போட்டு,கடன் சுமை ஏற்பட்டு வீட்டை விட்டு ஓடி விடுகிறார் காலம் போன பின் கணவனும் மனைவியும் சேர துடிக்கிறார்கள் அதை வாழும்போதே பக்குவமாக வாழ்ந்திருக்கலாமே என்று சொல்கிறது இந்த படம். இன்னொரு ஜோடி காளிவெங்கட், நந்தினி ,அவர்கள் இருவரும் பேருக்கு கணவன் மனைவியாக இருக்கிறார்களே தவிர, மனைவியை புரிந்து கொள்ளாத சின்ன சின்ன செயல்களை பாராட்டாமல் கண்டிஷன் பேர் வழியாக இருக்கிறார் எனவே வீட்டில் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து வாழ வேண்டும் என்று கதை சொல்கிறது இந்த மூன்று ஜோடிகளும்நமக்கு நெருக்கமானவர்கள் நம்மோடு வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் கதாபாத்திரங்கள் தான் இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு ஒரு அருமையான வித்தியாசமான புதுமையான இன்றைய இளம் தலைமுறையினருக்கு தேவையான வாழ்க்கை கதையை எடுத்திருக்கிறார் இயக்குனர் கிளைமாக்ஸ் கட்சியில் கண்கலங்க வைத்துவிட்டார் ஜீவீ ஐஸ்வர்யா ராஜேஷ் அனுதாபத்தை அள்ளிக்கொண்டு அம்சமாக நடித்திருக்கிறார். மொத்தத்தில் இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது டியர் படத்தில் உழைத்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், இயக்குனருக்கும்,நடிக நடிகையர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
எழுத்து & இயக்கம் – ஆனந்த் ரவிச்சந்திரன்
ஒளிப்பதிவு – ஜெ கதீஷ் சுந்தரமூர்த்தி
இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்
படத்த தொகுப்பு – ருக்கே ஷ்
தயாரிப்பு – NUTMEG PRODUCTIONS
தயாரிப்பாளர்கள் – வருண் த்ரிபுரனெ னி,அபிஷே க் ராமிஷெ ட்டி , G பிருத்விராஜ்
வெ ளியீடு – ROMEO PICTURES
மக்கள் தொடர்பாளர்
யுவராஜ்
