இந்தியாவுக்காக ஒலிம்பிக் விளையாட்டில் வெற்றியைப் பெற வேண்டும் என்று ஆர்வத்தோடு உழைத்த “ரஹீம்” என்ற கோச் அவரின் கதை தான் இந்த மைதான் முதல் பாதி விளையாட்டுத்தனமாக இருந்தாலும் இரண்டாவது பாதி மனதை உருக்கி விடுகிறது.
படத்தின் கதைக்களம் என்ன?
: 1951 முதல் 1962 வரை இந்திய கால்பந்து அணியில் பல்வேறு வீரர்களை உருவாக்கி இந்தியாவிற்கு உலக அரங்கில் பெயர் வாங்கி தந்தவர் ரஹீம். இந்த ரஹீமின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் பாலிவுட் படமாக வந்துள்ளது அஜய் தேவ்கன்
அவர் நடிப்பு அற்புதமாக இருக்கிறது தீர்க்கமான பார்வை உருக வைக்கும் நடிப்பு சபாஷ் பெறுகிறார் அஜய் தேவ்கன்
கல்கத்தாவை மையமாகக் கொண்டு இயங்கும் கால்பந்தாட்ட அணியின் கோச்சாக இருக்கிறார் ரஹீம். ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப் என பல மாநிலங்களிலிருந்து வறுமையில் வாடும் கால்பந்தாட்ட வீரர்களுக்கு பயிற்சி தந்து இந்திய கால் பந்தாட்ட அணியில் விளையாட வைத்து பல்வேறு வெற்றிகளை குவிக்கிறார் ரஹீம். அவர் ஒவ்வொரு வீரராக தேர்வு செய்யும் பாணி ரசிக்க வைக்கிறது
அவ்வளவு திறமையான இளைஞர்களை தேர்வு செய்த
ரஹீம் மீது பொறாமை கொள்ளும் கால்பந்தாட்ட சங்கத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் மாநில ரீதியான பாலிடிக்ஸ் செய்து ரஹீமை கோச் பதவியிலிருந்து நீக்குகிறார்
அப்போது அவரின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது
இந்த இரண்டையும் ஒருசேர….
.ரஹீம் சந்திக்கும் பிரச்னைகளும், சவால்களும்தான் ‘மைதான்.’படத்தின் கதை
படத்தில் ரசிக்கும்படியான மேஜிக் இருக்கிறது. இந்த மேஜிக் நிகழ நடிப்பு, ஒளிப்பதிவு,எடிட்டிங், கலை, இயக்கம் என பல துறைகளின் பங்களிப்பும் இருக்கிறது.
அதுதான் படத்திற்கு மிக பெரிய வெற்றியை வாங்கி கொடுத்திருக்கிறது
படத்தின் ஆரம்பத்தில் ரஹீம் கிக் செய்த பந்து, டிராமை தாண்டி வளைந்து சிறுவர்களிடம் சென்று சேரும் அந்த காட்சியிலேயே அவர் எப்பேர்ப்பட்ட வீரராக இருந்திருப்பார் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
பின்னர் தோல்வி குறித்து கால்பந்து கூட்டமைப்பு குழுவில் அதிகரிகள் கேள்விகள் எழுப்ப, அதற்கு ரஹீம் தனக்கே உரித்தான மிடுக்குடன் பதில் கொடுப்பதில் கவனம் ஈர்க்கிறார். படத்தில் காட்டப்படும் ஒவ்வொரு கால்பந்து போட்டியும் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.
பியோடோர் லியாஸின் ஒளிப்பதிவு அந்த அளவிற்கு மிரட்சியாக உள்ளது. அதேபோல் பிற காட்சிகளை துஷார் கண்டி ராய் அழகாய் காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, அஜய் தேவ்கன் தனது மகனிடம் பேசும் ஒரு காட்சியில் தூரத்தில் கூட்ஸ் ரயில் செல்வதை காட்டியிருப்பதன் மூலம் இயக்குநரின் நேர்த்தி தெரிகிறது.
1951இல் இருந்து 1957 வரை ஒவ்வொரு மாநிலமாக சென்று வீரர்களை தேடி கண்டுபிடிக்கும் காட்சியில் கருப்பு வெள்ளையாக வந்து கவர் செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர்
பயோபிக் படம் தான் என்றாலும் ஆவணப்படம் போல் இல்லாமல் கமர்ஷியல் படம் விறுவிறுப்பாக திரைக்கதை நகர்கிறது.
பிரியாமணி வரும் காட்சிகள் அவ்வளவு இயல்பாக இருக்கிறது ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் வீட்டு பெண்மணியாக கணவனுக்கு அறிவுரை சொல்லும் நல்ல மனைவியாக அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார்
பிரான்ஸ் அணியை எதிர்கொள்ளும் இந்திய அணி, வெற்றிக்கு அருகில் சென்று டிராவில் முடியும்போது, ஒட்டுமொத்த பிரான்ஸ் ஆதரவாளர்களும் ”Well Play, india” என எழுந்து நின்று கோஷமிடும் காட்சி Goosebumps மொமெண்ட்டிற்கு ஒரு சாம்பிள். அப்போது அஜய் தேவகன் ஒரு பார்வை பார்ப்பது விரக்தியின் உச்சம்
அதேபோல் கால்பந்து வீரர்களாக நடித்திருக்கும் அமர்த்தியா, சைதன்யா உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் சிறப்பு. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் நன்றாக இருந்தாலும், பின்னணி இசையில் நம்மை அதிகம் கவர்கிறார்.
50, 60களின் காலகட்டத்திற்கே நம்மை அழைத்துச் சென்று, கால்பந்து விளையாட்டை பற்றி அறியாதவர்களையும் ரசிக்க வைக்கும் வகையில் படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார்கள். அமீர்கானுக்கு ‘லகான்’, ஷாருக் கானுக்கு ‘சக் தே இந்தியா’ போல, அஜய் தேவ்கனுக்கு மைல்கல் படமாக அமைந்துள்ளது இந்த ‘மைதான்’.
(1) பிளஸ் பாயிண்ட்
படத்துடன் ஒன்ற வைக்கும் திரைக்கதை மாயாஜாலம்
(2) அஜய் தேவ்கன் உட்பட அனைவரின் தேர்ந்த நடிப்பு நன்றாக இருக்கிறது
(3)இசை மற்றும் காட்சியமைப்பு உயிரோட்டமாக இருக்கிறது
(4)மொத்தத்தில் ஒரு சிறந்த திரைப்பட அனுபவத்தை பெறவும், 60 ஆண்டுகளுக்கு முன் இந்திய கால்பந்து அணி கஷ்டப்பட்டு தங்கம் வென்றதை அறியவும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்தான் இந்த ‘மைதான்’.
(5) மகன் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்று விரும்பும் பிரியாமணி , மகன் கால்பந்தாட்ட வீரனாக வர வேண்டும் என்று நினைக்கிறார் அப்பா மகனின் ஆசையை நிறைவேற்றும் அஜய் தேவகன்
(6) கால்பந்தாட்ட காட்சிகளை அருமையாக விறுவிறுப்பாக படமாக்கப்பட்டுள்ளது படத்திற்கு சிறப்பு
(7) அஜய் தேவகனுக்கு, தயாரிப்பாளர் போனி கபூருக்கு இயக்குனருக்கு, இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கு ,மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு,நடித்த நடிகர் நடிகைகளுக்கு இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்திருக்கிறது தேசிய விருது பட்டியலில் இந்த படம் இடம்பெறும் என்று நம்பலாம்
